September 15, 2011

தில்லை ஈசனை நம்பிகெட்டவர் எவரைய்யா?

கோபலகிருஷ்ண பாரதியார் தனது நந்தானார் சரித்திரத்தில் பல அருமையான பாடல்களில் தில்லை நடராஜனின் குணங்களையும் நந்தனாரது எளிமையான திட பக்தியையும் போற்றிப் பாடியுள்ளார். இவர் தியாராஜஸ்வாமிகளின் சமகாலத்தவர்.நந்தன் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர்.நடராஜனை ஆருத்ராதரிசனத்தன்று பார்க்கவேண்டும் என்று பல வருடங்களாக காத்திருப்பவர்.அவருடைய எஜமான் உத்தரவு தரவில்லை.அப்படிப்பட்ட வரை நடராஜன் தன் கருணையால் இந்த ஆருத்ரா அன்று ஆட்கொண்டு தன்னோடு ஐக்கியமாக்கிக் கொள்கிறான். தில்லைவாழ் அந்தணர்களுக்கும் கிடைக்காத பேரின்பத்தை வழங்குகிறான்.உண்மையான பக்தி ஒன்றுக்கு மட்டும்தான் அவன் வசப்படுவான் என்ற உண்மையையும் நமக்கு புலப்படுத்துகிறான்
நந்தன் கனவில் கனகசபேசன்வந்து நான் உன்னை பொன்னம்பலத்திற்கு வரச்செய்து தரிசனம் தருகிறேன் என்று உறுதி மொழிகொடுத்தும் நந்தனுக்கு சந்தேகம் தீரவில்லை.ஏனென்றால் இத்தனை நாள் தன்னை கோவிலுக்குள் நுழையவிடாத சமூகமும் எஜாமனரும் அனுமதிபார்களா என்ற பயம். அதைப் பாட்டாக வெளிப்படுத்துகிறான். கோபலகிருஷ்ண பாரதியாரும் ஒரு அடிமையின் உணர்ச்சிகளுக்கு ஏற்றவாறு கருணாரசம் பொங்கும் மாஞ்சி ராகத்தை சமயத்திற்கு ஏற்ற மாதிரி அமைத்துள்ளார்.
ராகம்:- மாஞ்சி தாளம் :- மிஸ்ர சாபு
பல்லவி
வருகலாமோ ஐய்யா--- நான் உந்தன் அருகில்நின்று கொண்டாடவும் பாடவும் நான் அங்கே வருகலாமோ
அனுபல்லவி
பரமகிருபாநிதி அல்லவோ----நீஇந்த நந்தன் உபசாரம் சொல்லவோஉந்தன் பரமானந்த தாண்டவம் பார்க்காவே நான் அங்கே (வருகலாமோ)
சரணம்
பூமியில் புலையனாய் பிறந்தேனே--
நான்ஒரு புண்ணீயம் செய்யாமல் இருந்தேனே
என் ஸ்வாமி உந்தன் சந்நிதி வந்தேனே
பவசாகரம் தன்னையும் கடந்தேனே
கரை கடந்தேனே
சரணம் அடைந்தேனே
தில்லை வரதா பரிதாபமும் பாவமும் தீரவே -----(வருகலாமோ)
கண்களில் கண்ணீரை பெருகச்செய்யும் பாடலை திருமதி. நித்யஸ்ரீ மகாதேவன் உருகி உருகி பாடியிருப்பதை.

இடது பதம் தூக்கி ஆடும் நடராஜன் அடி பணிவையே நெஞ்சே!!!


இடது பதம் தூக்கி ஆடும் நடராஜன் அடி பணிவையே நெஞ்சே

படவரவு ஆட புலி அதள் ஆட
பக்தர்கள் ஜய ஜய எனவே புலி பதஞ்தலி கண் குளிர
தில்லையிலே (இடது)

திருவடிச் சிலம்புகள் கலீர் கலீர் என
திருமுடி இளமதியொளி பளீர் பளீர் என
திகுதிமிதகுதோம் என திருமால் மத்தளம் அதிர
சிவகாமி மணாளன் திருச்சிற்றம்பலம் தனிலே புன்னகையொடு (இடது)

காதலாகிக் கசிந்து




நமச்சிவாய வாழ்க.சிவனடியார்களில் சரித்திரத்தில் உள்ளத்தை உருகவைப்பவர் நந்தனார்.வாழ்க்கையில் எப்படியாவது ஒருதரம் சிதம்பரத்தில் நடமாடும் நடராஜனை கண்டுவிடவேண்டும் என்பதில் ஆழ்ந்த பற்றுள்ளவர்.பல்வேறு இடையூறுகளை தாண்டி சிதம்பரம் வந்து விடுகிறார். தூரத்தில் இருந்தபடியே தில்லைக்கூத்தனின் கோயிலின் கோபுரத்தை பார்த்து பரவசமாகி கண்டறியாதன கண்டேன் என்று மனதில் உவகை பொங்க மெய்சிலிர்த்து கணகளில் ஆனந்த வாரி சொறிய பாடுகிறார்.இதுதானோ தில்லைத் தானம் என்ற ஊர்.ஆஹா இத்தனை நாள் தெரியாமல் வழ்க்கையை வீணடித்து விட்டேனே. அந்தத்தெயவம் இந்தத்தெய்வம் என்று ஒரு நிலை கொள்ளாமல் அலையும் நேயனை இதோ பிடி உனக்கு கதிஎன்று கைகாட்டி அழைத்திடும் கருணாநிதி அவன்

இந்த உலகத்தில் கயிலை என்று சொன்னால் அது சிதம்பரம் என்று எல்லோரும் கூறுகிறார்கள் ஆனால் நான் இதுவரை அதை ஒருதடவை கூட சிறப்போடு பார்த்ததில்லை. அப்பேற்ப்பட்ட தில்லையா இது இங்கேயா என் ஈசன் இருக்கிறான் என்று பாடுகிறார்.திருமதிகள். ரஞ்சனி காயத்ரி குரலில் கேட்டு, பார்த்துதான் பாருங்களேன். குரலின் குழைவும் ராகங்களின் பங்கீடும் மிக நேர்த்தியாக உள்ளது

கோபலகிருஷ்ண பாரதியின் பாடல் இது. பக்தியும் பணிவும் தாபமும் வெளிப்படும் விதம் கேட்பவர் மனதை உருகவைக்கும். திருவாசகத்துக்கு உருகாதவர்கூட நந்தனின் பாட்டுக்கு உருகுவார்கள்

ராகம்;- ஷ்ண்முகப்பிரியாகாதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி

ஓதுவார் தமை நல்நெறிக்கு உய்ப்பது

வேதநான் கினும் மெய்பொருள் ஆவது

நாதன் நாமம் நமச்சிவாயமே

ஆடிய பாதனாய் நின்ற அம்பலத்தானை

நாடிய நேசற்கு நற்கதி நல்கியானை

கூடிய கரமும் நாவில் துதியுமாய்

தேடிய வந்தேன் புகல்


ராகம்:- பெஹாக் தாளம்:-ஆதி


பல்லவி

இதுதனோ தில்லைத்தலம்

இத்தனை நாளும் அறியேனே.....(இதுதானோ)

அனுபல்லவி

அதுவோ இதுவோ என்று அலைந்திடும் நேயனை

கதிதருவேன் என்று கைகாட்டி அழைத்திடும்...(இதுதானோ)

சரணம்

காசினியில் இதை கயிலை என்று எல்லோரும்

பேசக்கேட்டதே அன்றி பேணிப் பார்த்ததில்லை ....(இதுதானோ)

வாசி வாசி, மரா மரா! ஒன்றானவன், உருவில் இரண்டானவன்!

சிவபெருமானுக்கும் இராமபிரானுக்கும் ஒரு பெரிய ஒற்றுமை இருக்கு! என்னான்னு சொல்லுங்க பார்ப்போம்! ஒன்றானவன், உருவில் இரண்டானவன் தான் அவர்கள் இருவரும்!
அவர்கள் இருவரையும் குறிக்கும் மந்திரத்தில் தான் அந்த ஒற்றுமை இருக்கு! ஓசையில் தலைகீழாக மாற்றினாலும், திரும்பவும் விட்ட இடத்திற்கே வந்து சேரும் ஒற்றுமை அந்த இரண்டு மந்திரங்களுக்கும் உண்டு!

வால்மீகி முனிவர் முன்பு கள்வனாய் இருந்தார். அப்போது நாரத முனிவர் அவருக்கு மந்திர உபதேசம் செய்த கதை செவி வழியாக வழக்கில் நிலவுகிறது! நம்மில் பலருக்கும் தெரிந்த கதை தான் அது!
"ராம" என்று சொல்ல முடியாமல் நாக்குழறிய வால்மீகிக்கு, "மரா" என்று தலைகீழாகச் சொல்லத் தான் எளிதாய் வந்தது.

மரா மரா மரா என்பதே ராம ராம ராம என்று ஆயிற்று!
அதே போல் வாசி வாசி வாசி என்பதும் சிவா சிவா சிவா என்று உருப்பெறும், மனதில் கருப்பெறும்!

சிவ என்பதற்கும் ராம என்பதற்கும் ஒரே பொருள் தான்! அது தான் மங்களம்! மங்களகரமானது சிவ என்னும் திருநாமம்!
"நமசிவாய" என்பதைத் தான் திருவைந்தெழுத்து என்று தமிழிலும், பஞ்சாட்சரம் என்று வடமொழியிலும் சொல்கிறார்கள்!

நாம் கோயிலுக்குப் போனா, பொதுவா நமசிவாய-ன்னு வாயால் சொல்லிட்டு, நடையைக் கட்டி விடுவோம்! ஆனால் அதன் பொருள் என்ன, அதை ஆழ்ந்து உணர்ந்து ஜபித்தால், மனதில் விளையும் ஆனந்தம் என்னன்னு யோசித்திருக்கோமா?
வாங்க இன்னிக்கு மிகவும் எளிமையாகப் பார்க்கலாம்! நுட்பமான பொருளை மாதவிப்பந்தலில் பின்னர் சொல்கிறேன்!


ஐந்து எழுத்துக்கள் (அட்சரங்கள்) அமையப் பெற்றிருக்கும் மந்திரம்!
ந + ம + சி + வா + ய!
மேலோட்டமான பொருள்: நம (வணங்குகிறேன்), சிவாய (சிவனை)!
நுட்பமான பொருள்: (முன்பு அடியேன் ஓம் நம நாராயணாய என்னும் திருவெட்டெழுத்துக்குச் சொன்னது போலத் தான்...)
ந+ம = இல்லை+எனது=எனதில்லை
சிவாய = (அனைத்தும்)சிவனுடையதே!


பஞ்சாட்சர தத்துவம் மிகவும் பெரிது! திருமூலர் திருமந்திரத்தில் இதைப் பலவாறு விளக்குவார்! பஞ்சாட்சரமே மொத்தம் ஐந்து வகையாய் இருக்கு!
ஆமாம் மொத்தம் ஐந்து வகையான ஐந்தெழுத்து! இதோ.....

நமசிவாய = ஸ்தூல பஞ்சாட்சரம்
சிவாயநம = சூட்சும பஞ்சாட்சரம்
சிவாயசிவ = கரண பஞ்சாட்சரம்
சிவாய = மகா கரண பஞ்சாட்சரம்
சி = முக்தி பஞ்சாட்சரம்

எங்கும், எப்போதும், எந்தக் காலத்திலும், ஆண் பெண் பேதமின்றி, சாதி மத பேதமின்றி, தீட்டு/பூட்டு என்றெல்லாம் பேசிக் கொண்டிராமல், யார் வேண்டுமானாலும் துதி செய்யவல்லது இந்தத் திருவைந்தெழுத்து!
குளித்தோ, குளிக்காமலோ, உடுத்தியோ உடுத்தாமலோ, உண்டோ, உண்ணாமலோ எப்போது வேண்டுமானாலும் ஜபிக்க வல்ல மந்திரம் இது!

இதன் பெருமையைப் பலரும் போற்றி உள்ளனர். திருமூலர் சிவசிவ என்று சிந்தித்து இருந்தால் தீவினை எல்லாம் தீரும் என்கிறார்.
சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே


சம்பந்தப் பெருமான், "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை, நன் நெறிக்கு உய்ப்பது, நாதன் நாமம் நமசிவாயவே", என்று இசைக்கிறார்!
அப்பர் சுவாமிகள், "இல்லக விளக்கது இருள் கெடுப்பது, நல்லக விளக்கது நமச்சி வாயவே" என்று பஞ்சாட்சரத்தைப் பாடுகிறார்.

இப்படி, இறைவனைக் காட்டிலும், அவன் திருநாமம் மிகவும் பெருமை வாய்ந்த ஒன்று!
அன்றொரு நாள் அந்தப் பெண்ணுக்கு நடுச்சபையில் இறைவன் வந்து கைகொடுக்கும் முன்னரே, அவன் திருநாமம் தானே வந்து கைகொடுத்தது!

இனிய தமிழில், சம்பந்தரும் அப்பரும் நமச்சிவாயத் திருப்பதிகம் அருளினார்கள்!
அதே போல் ஆதிசங்கரரும் சிவ பஞ்சாட்சரம் என்ற ஒன்றினை வடமொழியில் அருளிச் செய்துள்ளார்!
நாகேந்திர ஹாராய திரிலோசனாய என்று தொடங்கி, நம சிவாய, நம சிவாய என்று முடியும்!
முதல் சுலோகத்தில் தஸ்மை ’ந’ காராய நமசிவாய என்று முதலெழுத்தைச் சொல்லுவார்! இதே போல் ஒவ்வொரு சுலோகத்திலும் பஞ்சாட்சரத்தின் ஒவ்வொரு எழுத்தையும் விளக்கிச் சொல்லுவார் ஆதி சங்கரர்!

இது சிவன் பாட்டில் அடியேன் முதல் பதிவு!
அதனால் எளிமைக்காக இத்துடன் நிறுத்தி, ஒரு அழகான பாட்டைப் பார்க்கலாம் வாங்க!



திருவிளையாடல் படத்தின் இறுதியில் இதைக் கேட்டிருப்பீங்க! சிவபெருமான் ஒளவையாரைப் பாடச் சொல்லுவார்! உடனே அன்னை உமையவள், "ஒன்று இரண்டு மூன்று" என்று எண்களால் இறைவனை வரிசைப்படுத்திப் பாடச் சொல்ல,
நம்ம கேபி சுந்தராம்பாள் தன் கணீர்க் குரலில் எடுக்கும் எடுப்பு இருக்கு பாருங்க, அப்படியே நம்மிடம் ஒட்டிக் கொள்ளும்! சிறிது நேரத்தில் பாட்டும் நமக்கு மனனம் ஆகிவிடும்!
இது தான் இசையால் துதிப்பதால் வரும் பெருமை! நீங்களே பார்த்து விட்டுச் சொல்லுங்கள்!
வாசி வாசி என்று வாசித்த தமிழ் இன்று
சிவா சிவா என சிந்தை தனில் நின்று
அவாவினால் இந்த ஒளவைத் தமிழ் கொண்டு
கவிபாடினான் உன்னைக் கண் குளிரக் கண்டு!
ஒன்றானவன், உருவில் இரண்டானவன்,
உருவான செந்தமிழில் மூன்றானவன்,
நன்றான வேதத்தில் நான்கானவன்,
நமச்சிவாய என ஐந்தானவன்,
இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன்,
இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன்,
சித்திக்கும் பொருள்களில் எட்டானவன்,
தித்திக்கும் நவரச வித்தானவன்!
பத்தானவன், நெஞ்சில் பற்றானவன்!
பன்னிருகை வேலவனைப் பெற்றானவன்!
முற்றாதவன்! மூல முதலானவன்!
முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்!
ஆணாகிப் பெண்ணாகி நின்றானவன்!
அவை ஒன்று தான் ஒன்று சொன்னானவன்!
தான் பாதி உமை பாதி கொண்டானவன்!
சரி பாதி பெண்மைக்குத் தந்தானவன்!
காற்றானவன், ஒளியானவன்! நீரானவன் நெருப்பானவன்!
நேற்றாகி இன்றாகி என்றைக்கும் நிலையான
ஊற்றாகி நின்றானவன்! அன்பின் ஒளியாகி நின்றானவன்!
குரல்: கே.பி.எஸ்
வரி: கவியரசர் கண்ணதாசன்
இசை: கே.வி.மகாதேவன்
படம்: திருவிளையாடல்


ஐந்து எழுத்து என்ன? அதன் பொருள் என்ன? என்று பதிவில் சொன்னேன்!
பாட்டில் வருவது போல், மற்ற எண்களுக்கு....
மூன்று தமிழ் என்ன?
நான்கு வேதம் என்ன?
ஆறு சுவை என்ன?
ஏழு சுரம் என்ன?
எட்டு பொருள் என்ன?
ஒன்பது (நவ) ரசம் என்ன?
இதை எல்லாம் பின்னூட்டத்தில் நீங்க சொல்லுங்க பார்க்கலாம்! :-)

ஓம் நம சிவாய!
சிவ சிவ!!
சிவோஹம்!!!

ஆடல் காணீரோ! திருவிளையாடல் காணீரோ!



சொக்கேசர் மதுரையம்பதியில் நடத்திய திருவிளையாடல்களை கூறும் பாடல் அடியேனுக்கு மிகவும் பிடித்த பாடல். சக்கரைப் பந்தலில் தேன் மாரி பொழிந்தது போல பத்மினியின் நடனம் அருமை.



படம்: மதுரை வீரன்

பாடல் : கண்ணதாசன்

இசை: G.இராமநாதன்




ஆடல் காணீரோ!
விளையாடல் காணீரோ!

ஆடல் காணீரோ
திருவிளையாடல் காணீரோ!

ஆடல் மதுரையின் ராஜ தம்பிரனாம் எங்கள்
ஆண்டவன் திருவிளையாடல் காணீரோ (ஆடல்)


ஊற்றுப்பெருக்காலே உவப்பூட்டும்
ஆற்று வெள்ளம் தடுக்கவே
வீட்டுக்கொரு ஆள் தந்து
வேந்தனின் ஆணை தன்னை
ஏற்று விணை முடிக்கவே
பேற்றடையாத ஒரு வந்தியின் கூலியாளாய்


பிள்ளைப் பேற்றடையாத ஒரு வந்தியின் கூலியாளாய்
பிட்டுக்கு மண் சுமக்கவே வந்து பித்தனைப் போலே

கைப்பிரம்பாலே பட்ட அடி பேசிடும் சகல் ஜீவராசிகள்
முதுகிலும் பட்டு வடுவுற்ற ஈசன் திருவிளையாடல் காணீரோ ( ஆடல்)

நரிதனை பரியக்கி பரிதனை நரியாக்கி
நாரைக்கு முத்தி கொடுத்து
உயர் நால்வேத பொருள் சொல்லி
நாகத்தையும் வதைத்து நக்கீரர்க்கு உபதேசித்து
வர குணப்பாண்டியர்க்கு சிவ லோகம் காட்டி
வலை வீசி மீன் பிடித்து
வாய் திறவாத கல்யாணைக்கு கரும்பூட்டி
வைர வளை முத்து வளை ரதன வளை விற்ற




திருவிளையாடல் காணீரோ
ஆடல் காணீரோ! திருவிளையாடல் காணீரோ!
ஆடல் மதுரையின் ராஜ கம்பீரனாம் எங்கள்
ஆண்டவன் திருவிளையாடல் காணீரோ .

அப்பர் தேவாரம்: கடவுளைத் தம்பதிகளாகத் தான் துதிக்கணுமா?

பல வீட்டு விசேடங்களில் தம்பதி சமேதரா வாங்க-ன்னு சொல்லுவாய்ங்க! ஏன்? சில-பல பூசைகளில் தம்பதிகளாக மட்டுமே செய்ய முடியும்! இல்லீன்னா, "sorry, you are disqualified"- தான்! ஏன்??
வீட்டுல தங்கமணி வெளியூர் போயிருக்காங்களா? அப்போ நான் மட்டும் தனியா இதைச் செய்யக் கூடாதா? அட, என்னை விட்டுவிட்டு இப்போ தம்பியும் அவன் மனைவியையும் மனையில் உட்காரச் சொல்றாங்களே! என்னாங்க இது அநியாயமா இருக்கு? :)

சென்ற பதிவில் சம்பந்தரின் முதல் பாட்டைப் பார்த்தோம். இன்று அப்பரின் (கிட்டத்தட்ட) இறுதிப் பாட்டை, அவர் உறுதிப் பாட்டைப் பார்ப்போம், வாங்க!

அப்பர் சுவாமிகள் தொண்டில் பழுத்த சைவர்!
வெறுமனே வாயால் மட்டுமே பாடிக் கொண்டு இருக்காமல், கைகளாலும் உழவாரத் தொண்டு செய்தவர்! திருநாவுக்கரசர், அப்பர், வாகீசர், தருமசேனர் (சமணர் தந்தது) போன்ற பல பெயர்கள் அவருக்கு!
தன்னுடைய இறுதிக் காலத்தில், திருக்கயிலாயத்தில் வீற்றிருக்கும் ஈசனைக் காண, ஆவல் வந்து விட்டது! கிளம்பி விட்டார் வடநாட்டுக்கு!
அவருக்கு முன்பே காரைக்கால் அம்மையார் பட்ட கஷ்டங்கள், பாவம் தெரியலையா என்ன?

சென்னையில் திருமயிலை, திருவான்மியூர், திருக்காளத்தி, திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) எல்லாம் கடந்து ஒரேயடியாக, வடக்கே காசி வரை வந்து விட்டார்!
கூட வந்தவர்களால் முடியவில்லை! அப்பரின் மனமோ ஒடியவில்லை!
அனைவருக்கும் விடைகொடுத்து விட்டு, தான் மட்டும் தனியாகக் கயிலை யாத்திரைக்கு நடக்கத் தொடங்கி விட்டார்!

இந்தக் காலத்தில் கைலாஷ்-மானசரோவர் யாத்திரை-ன்னு பல பேர் செல்கிறார்கள்; அவர்களைக் கேட்டால் முதலில் சொல்லுவது, "எக்காரணம் கொண்டும் தனியாகச் செல்லாதீர்கள்" என்பது தான்! - இத்தனைக்கும் பேருந்து, ஹெலிகாப்டர், உணவு கட்டித் தர ஆட்கள், ராணுவம் என்று சகல வசதிகள் இருக்கும் போதே நிலைமை இப்படி! ஆனால் அந்தக் காலத்தில் அப்பரின் நிலையைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்!

பங்கயம் புரை தாள் பரட்டளவும், பசைத் தசை தேயவும்
கைகளும் மணி பந்து அசைந்துறவே, கரைந்து சிதைந்து அருகவும்,
மார்பமும் தசை நைந்து, சிந்தி வரிந்த என்பு முரிந்திடவும்,
உடம்பு அடங்கவும், ஊன் கெடவும்,
சேர்வரும் பழுவம் புரண்டு புரண்டு செல்லவும்....
என்று ஓடாய்த் தேய்ந்தார் நாவுக்கரசர்!


பாவம்! நால்வரில், நாவுக்கரசர் மட்டுமே உடலால் அதிகம் வருந்த வேண்டி இருந்தது! மற்ற மூவருக்கும் இப்படி இல்லை! இது குறித்து அடியேன் பல முறை யோசித்தது உண்டு!
வயிற்று வலி, அதன் பின், சுண்ணாம்புக் காளவாய், விஷம் இட்டது, ஆனை இடறியது, கடலில் போட்டது....பின்பு உழவாரப் பணி என்று ஆரம்பம் தொட்டே இவருக்கு மட்டும் இப்படி உடலால் பாடுபடுதல் ராசியானது போலும்!

கால்களால் நடக்க முடியாது, கைகளால் தவழ்ந்தார்!
அதுவும் முடியாது, தலையால், உடலால் ஊர்ந்தார்!
அதுவும் முடியாது, என்ன செய்வதென்றே தெரியவில்லை! கயிலை நாதனே முனிவனாய் அப்பரை ஆற்றுப்படுத்த வந்து விட்டான்!
"மானிடர்கள் உடலோடு திருக்கயிலாயம் சென்று ஈசனைக் காண்பது மிகவும் அரிது அப்பரே! உங்கள் தொண்டே போதும்! யாத்திரையைக் கைவிட்டு விடுங்கள்!" - நாவுக்கு அரசர்! இப்போது செவிக்கும் அரசர் ஆகி விட்டார் போலும்! செவி மடுத்தாரில்லை!

"அப்பரே, இப்படி ஒரு உறுதியா? கயிலை அடிவாரத்தில் வாழும் முனிவன் நான்! எனக்கே ஈசன் தரிசனம் அவ்வளவாகக் கிடைப்பதில்லை!"

"அப்பர் என்ற அடியேனின் பெயர், என் அப்பனை அல்லால், உமக்கு எப்படித் தெரியும்?"
வாக்கு ஈசரிடம் வகையாகச் சிக்கிக் கொண்டார் சிவபெருமான்! சிக்கெனப் பிடித்தேன் அல்லவா? சிக்கினான் சிவன்!

"அப்பரே, நான் திரிகால ஞானி! ஈசனே எம்மை உம்மிடம் அனுப்பி வைத்தார்! இதோ சூல-ரிஷப முத்திரை! இப்போதாவது நான் சொல்வதைக் கேட்பீர்களா?
இதோ, இந்தத் தூய ஏரியில் மூழ்குங்கள்! பஞ்ச நதி க்ஷேத்திரம் என்னும் திரு-ஐ-ஆற்றில் (திருவையாறு) எழுவீர்கள்! அது தட்சிண கைலாசம்! அங்கு இறைவனைத் திருச்சபை சூழக் காண்பீர்கள்!"
திருவையாற்றில், அப்பர் குளம்
அப்பர் மான சரோவரத்தில் மூழ்கினார்! ஊன உடற் புண்கள் எல்லாம் மறைந்தன! உடல் சிவ மங்களமாய் மின்னியது!
வட மலையில் மூழ்கியவர், தென் வயலில் எழுந்தார்!
காயங்கள் உடலில் ஆறின! கானங்கள் வாயில் ஊறின!


மாதர் பிறை கண்ணியானை மலையான் மகளொடும் பாடி
போதொடு நீர் சுமந்து ஏத்தி, புகுவார் அவர் பின் புகுவேன்!
யாதும் சுவடு படாமல், ஐயாறு அடைகின்ற போது
காதல் மடப் பிடியோடு, களிறு வருவன கண்டேன்!
கண்டேன் அவர் திருப்பாதம்!
கண்டறியாதன கண்டேன்!!

காந்தாரம் என்னும் அழகிய தமிழ்ப் பண்ணில் இந்தப் பாட்டு! அடியேன் குரலில் என்பதால் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க! :)
Gabcast! MadhaviPanthal #41


இதாங்க எளிமையான பொருள்:
தலையில் கங்கை, தலையில் பிறை, தலையில் கண்ணி என்னும் தலைமாலை!
இவனை இமவான் புதல்வியான பார்வதியோடு அடியேன் பாடினேன்!
கால் சுவடே படாமல் எப்படி இங்கு வந்தேன்? ஆகா, இது திருவையாறு என்னும் தலம் அல்லவா!
பூவும், நீரும் சுமந்து கொண்டு கோயிலுக்குச் செல்கிறார்கள் அடியார்கள்! அவர்கள் முன் புக, அடியேன் பின் புகுவேன்!

காதல் செய்யும் பிறவிகள் எல்லாம் இணை இணையாய், ஜோடி ஜோடியாய் வருகின்றனவே!
அதோ...இறுதியில்...பிடியும், களிறுமாய் (பெண் யானையும, ஆண் யானையுமாய்) அசைந்து அசைந்து...ஈஸ்வரியும், ஈசனும்!
கண்டாலும் அறிந்து கொள்ள முடியாத ஒன்றையும் இதோ காண்கிறேனே!
கண்டேன் அவர் திருப்பாதம்!!!
மும்மூர்த்திகளும் சூழ்ந்திருக்க, தேவரும், மூவரும், ஏவரும் துதிக்க,
நடன மாதர் நடங்கள் புரிய, கங்கை முதலான ஆறுகள் வணங்க,
நந்தி தேவர் திருக்கடைக்காப்பில் நிற்க,
மின்னிடும் வெள்ளிப் பனி மலையாய் அம்மையும் அப்பனும்...அப்பருக்குத் திருக்கைலாயம் காட்சி ஆகிறது!


பாடலைக் கொஞ்சம் பிரிச்சி மேயலாமா? :)
மாதர், பிறை, கண்ணி = மூன்றையும் தலையில் காண்கிறார் முதலில்!
திருப்பாதம் காண்கிறார் முடிவில்! கேசாதி பாத சேவை என்பார்கள்! முடி-அடி சேவை!

மாதர் பிறை கண்ணியானை மலையான் மகளொடும் பாடி =
கண்ணி என்பது ஒரு விதமான மாலை தொடுப்பு! ஒத்தை ஒத்தையாத் தான் கட்டுவாங்க! வீட்டில் அம்மாவோ இல்லை மனைவியோ தொடுக்கும் போது பார்க்கலாம்!
(இப்பல்லாம் யாராச்சும் பூ தொடுக்கறாங்களாப்பா? இல்லை flower gripping techniques-ன்னு அதுக்கும் online tutoring இருக்கா? :))

பொதுவாகப், பூவை ரெண்டு ரெண்டா தான் எடுத்துத் தொடுப்பாய்ங்க! ஒரு காம்பு, இன்னொரு காம்பின் மேல் படும்! வாழை நார் இரண்டையும் கட்ட, பூக்கள் வெளியில் இரு பக்கமும் துருத்திக் கிட்டு நிக்கும்! பூ இரு பக்கமும் இருந்தால் தான் மாலைக்கு அழகு!

ஆனால் கண்ணியில் அப்படி இல்லை! ஒரு பக்கம் மட்டும் காம்பு சேரும்படி கட்டுவாங்க! அதனால் பொதுவா கண்ணியைத் தலைக்கு மட்டுமே சூடுவார்கள்! பராபரக்-கண்ணி, கண்ணி-நுண்-சிறுத்தாம்பு எல்லாம் கண்ணி என்று வரும் தமிழ் நூல்கள்!

கண்ணி, மாலை, தொங்கல், தொடையல் எல்லாம் விதம் விதமான மாலை அமைப்புகள்!
இன்னிக்கி சூடிக் கொடுத்தாள் ஆண்டாளின் பிறந்த நாள்! திரு-ஆடிப் பூரம்! கோதையின் நாள் அதுவுமா, மாலை விளக்கம் தானா வந்திரிச்சி பாருங்க! பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு! :)


போதொடு நீர் சுமந்து ஏத்தி, புகுவார் அவர் பின் புகுவேன் =
போது=அரும்பு மலர்! முழுக்க விரியாத மலர்! அதாச்சும் வண்டின் எச்சில் படும் முன்னரே மலரைப் பறிப்பது தான் பூசைக்கு வழக்கம்! அரும்பாகவே மாலை தொடுத்து விடுவார்கள்! சார்த்தும் போது, அது அழகாய் மலர்ந்து இருக்கும்!

ஈசனுக்கு அரும்பும், அபிடேக நீரும் கொண்டு செல்கின்றார்கள் அடியவர்கள்! அடியவர் முன் புக, அடியேன் பின் புகுவேன்! இது தான் பக்திக்கு அடிப்படை! தன்னையும், தன் டாம்பீகத்தையும் முன்னிறுத்திப் புகுவது இறைவனுக்குப் பிடிக்காத ஒன்று! ஏன்? இங்கே!

யாதும் சுவடு படாமல், ஐயாறு அடைகின்ற போது =
வட கயிலை அடிவாரத்தில் இருந்து, கால் சுவடே படாமல், இதோ திருவையாற்றுக்கு வந்தாகி விட்டது!
திருவையாறு மிகப் பழமையான சிவத்தலம்!
இறைவன்: பஞ்ச-நதீஸ்வரர் = ஐயாறப்பர்!
இறைவி: தர்ம சம்வர்த்தினி = அறம் வளர்த்த நாயகி!


திருவையாறு மொத்தம் ஐந்து ஆறுகள் பாயும் தலம்! = காவிரி, குடமுருட்டி, வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு!
சத்குரு தியாகராஜ சுவாமிகளின் இசை ஆறும் இப்போது பாய்கிறது அல்லவா? ஐயாறு, ஆறாறு ஆகி விட்டது! :)


திருவையாறு, அறம் வளர்த்த நாயகி-ஐயாறப்பர் ஆலயம்
காதல் மடப் பிடியோடு, களிறு வருவன கண்டேன்!=
களிறு=ஆண் யானை=களித்திருப்பதால் களிறு!
பிடி=பெண் யானை=களிறைத் தன் பிடியில் பிடித்து வைத்திருப்பதால் பிடி! :)
இப்படி இறைவனே காதல் மயமாகத் தான் காட்சி அளிக்கின்றான்! சிவ-சக்தி தத்துவமாய் நிற்பதால் தான் சிருஷ்டி-சங்கார ரகசியங்கள்!

சக்தி இல்லையேல் சிவம் என்னும் பதமே இல்லை! அன்னை இல்லையேல் அப்பன் என்னும் பதமே இல்லை!
மான், மயில், கிளி, அன்னம், மனிதர், என்று ஜோடி ஜோடியாக வருவதைப் பார்க்கிறார் அப்பர்! இறுதியில் பிடியோடு, களிறுமாய், அம்மையும் அப்பனும் ஜோடியாகவே வருகிறார்கள்!

பதிவின் முதல் பத்தியில் கேட்ட கேள்விக்கு, //சில-பல பூசைகளில் தம்பதிகளாக மட்டுமே செய்ய முடியும்!// இப்போது விடை சொல்லப்போவதில்லை! அறிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!:)
கண்டேன் அவர் திருப்பாதம்! = முக்தி நிலையில் இருந்த அப்பருக்கு ஒன்றே ஒன்று மட்டும் தான் தெரியுதாம்? மோட்சத்தைத் தருவது எது? ஒன்றே ஒன்று தானே! எம்பெருமானின் திருவடி! = கண்டேன் அவர் திருப்பாதம்!
கண்டறியாதன கண்டேன்!! = கண்டாலும் அறிய முடியாதது எது?
அதான் கண்டாச்சே! கண்டால், அறிந்த மாதிரி தானே-ன்னு கேட்டா, இல்லை! கண்டாலும் அறிவுக்கு எட்டாது! அன்புக்கு ஒட்டும்!
கண்டு, அறியாதன "கண்டேன்"-ன்னு தான் சொல்லுறார்! கண்டு, அறியாதன "அறிந்தேன்"-ன்னு சொல்லலை பாருங்க!

திருவடிகள் அறிவுக்கு எட்டுமா? ...அன்புக்கு ஒட்டுமா?
கண்டு அறியாதன "கண்டேன்"! அவ்வளவு தான்! நாடினேன்! நாடி நான், "கண்டேன்", "கண்டு" கொண்டேன்! சிவ சிவ! திருச்சிற்றம்பலம்!!

(அடுத்த திங்கட்கிழமை, சுந்தர நண்பனின் தேவாரத்தைப் பார்ப்போமா?....)

ஓம் நமசிவாய மங்களம்

மலையரசன் பொற்பாவை சமேத திருக்கயிலை நாதரின் மாப்பெரும் கருணையினால் அவரை அவர் நித்ய வாசம் செய்யும் திருக்கயிலாய மலையில் சென்று தரிசித்து வரும் பேறு கிட்டியது. அப்போது சிவபெருமானின் மூல மந்திரமான ஓம் நமசிவாய மந்திரத்திற்க்கும் அதன் மூலமாக அந்த ஆண்டவனுக்கும் மங்களம் பாடும் விதமாக அமைந்த பாடல். (ஹிந்தியில் அமைந்திருந்தாலும் யாவரும் எளிதாக புரிந்து கொள்ளலாம்).



திருவைந்தெழுத்து - ஓம் நமசிவாய

பரம கருணா மூர்த்தி, தியாகராஜன், மங்களங்களை அருளும் சிவபெருமானது மூல மந்திரம் " ஓம் நமசிவாய " மந்திரம். வேதங்களில் முதன்மையானது யஜுர் வேதம் அந்த வேதத்தின் நடு நாயகமானது சிவபெருமானுக்கு மிகவும் பிரீதியானதும் அவர் புகழ் பாடுவதும், சிவ பெருமானுக்கு அபிஷேக காலங்களில் ஓதப்படுவதுமான ஸ்ரீ ருத்ரம், அதன் நடு நாயகம் "ஒம் நமசிவாய " மந்திரம். தாயை சேய் அழைப்பது போல ஓம் நமச்சிவாய மந்திரத்தால் அந்த முக்கண் முதல்வனை, கொடிமேல் இடபமும், கோவண ஆடையும், ஒரு கொக்கிறகும், அடி மேல் வீரக்கழலும், உடல் முழுவதும் பால் வெண்ணிணிறும், நாகாபரணமும், முடி மேல் மதியும், மங்கையும், கொன்றையும், திருக்கரங்களில் திரிசூலமும் தாங்கிய தேவ தேவனை, முழு முதற் கடவுளை, அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனை அழைக்க உடனே அவர் ஓடி வந்து நம் துன்பம் தீர்க்கும் மந்திரம்.

கற்றுணை பூட்டியோர் கடலினில் பாய்ச்சினும் நற்றுணையாகும் மந்திரம். வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆன மந்திரம். நம்முடைய காரிய சித்திக்காக இறைவன் அருளிய மந்திரம். பல கோடி வருடங்களில் கூட இந்த மந்திரத்தின் மகிமையை உரைக்க முடியாது. வேத சாரமாக விளங்குவது இந்த ஐந்தெழுத்து மஹா மந்திரம். மோட்சம் அளிக்கும் மந்திரம். சிவனுக்கும் சக்திக்கும் உரிய மந்திரம். மந்திரகளுக்கெல்லாம் தாயகமாக விளங்குகின்றது பஞ்க்ஷாரம். காயத்ரி தேவி தோன்றிய மந்திரம். இம்மை பலன்கள் மட்டும் அல்ல முக்தியும் அளிக்கும் மந்திரம். இந்த மந்திரத்தின் அதிர்வலைகள் அண்டம் முழுவதும் பரவி உள்ளதால் ஒரு தடவை ஜபித்தால் கூட அருமையான பலன் அளிக்கும் மந்திரம்.


சிவபுராணத்தில் இந்த மஹா மந்திரத்தின் தொடக்கம் பற்றி இவ்வாறு கூறப்பட்டுள்ளது. எம்பெருமானது வடக்கு திருமுகமாம் வாமதேவ முகத்தில் இருந்து 'அகாரம்' தோன்றியது. மேற்கு நோக்கிய சத்யோஜாத திருமுகத்திலிருந்து 'உகாரம்' தோன்றியது, தெற்கு நோக்கிய திருமுகமாம் அகோர முகத்திலிருந்து 'மகாரம்' தோன்றியது. கிழக்கு முகமாம் தத்புருஷ முகத்திலிருந்து பிந்துவும், மேல் நோக்கிய திருமுகமாம் ஈசான முகத்தில் இருந்து நாதம் தோன்றியது. ஐந்தும் இணைந்து ஓம் என்னும் பிரணவமாயிற்று. இந்த பிரணவத்துடன் சிவனை வணங்குகின்றேன் என்று பொருள்படும் சிவாய நம: சேர்ந்து இந்த சிவபெருமானுக்கும் சக்திக்கும் உரிய இந்த அற்புத மந்திரம் உருவானது.
ஜபிக்கும் முறை : உடல் முழுதும் திருநீறணிந்து, ருத்ராக்ஷம் அணிந்து பத்மாசனத்தில் அமர்ந்து எம்பெருமானை தாமரையில் அமர்ந்த கோலத்தில் . ஜடாமுடியில் கங்கை, சந்திரனுடன், வாம பாகத்தில் ஆதி சக்தி பகவதி உமையம்மையுடன், பூத கணங்கள் புடை சூழ, மான், மழு, திரிசூலம், அபய வரத கரங்களுடன் தியானம் செய்து இந்த மஹா மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

108 ன் எண்ணிக்கைகளில் ஜபிப்பது உத்தமம். விரல்களால் என்ணி ஜபிப்பது ஒரு மடங்கு பலம் தரும் என்றால், சங்கு மாலைகளால் ஜபிப்பது பத்து மடங்கு பலனையும், பவள மாலையால் ஜபிப்பது நூறு மடங்கு பலனையும், ஸ்படிக மாலையால் ஜபிப்பது ஆயிரம் மடங்கு பலனையும், முத்து மாலையால் ஜபிப்பது லக்ஷ மடங்கு பலனையும், ருத்ராக்ஷ மாலையால் ஜபிப்பது அனந்த மடங்கு பலனையும் அளிக்கும். கட்டை விரலால் உருட்டி ஜபிப்பதால் மோட்சம் கிட்டும், ஆள் காட்டி விரலால் ஜபிப்பதால் சத்ரு விநாசனம், நடுவிரலால் தனம் கிடைக்கும், மோதிர விரலால் ஜபிப்பதால் சாந்தி கிட்டும் சுண்டு விரலை பயன் படுத்தக்கூடாது.

இம்மையில் எல்லா செல்வங்களையும் வழங்குவதுடன் மோக்ஷத்தையும் அளிக்கும் இந்த மந்திரத்தை ஜபிக்க நாள், நட்சத்திரம், லக்னம், திதி, வாரம், யோகம் எதுவும் பார்க்க வேண்டியதில்லை. நடந்து கொண்டோ , ஏதாவது செயல் செய்து கொண்டோ, நின்று கொண்டோ கூட ஜபிக்கலாம். ஐந்து கோடி முறை ஜபிப்பதால் சிவாலயம் நிர்மாணம் செய்த பலன் கிட்டும். ஒன்பது கோடி முறை இம்மந்திரத்தை ஜபிப்பதால் மனது தூய்மை அடையும், 18 கோடி முறை ஜபிப்பதால் நீரில் நடக்கலாம், 27 கோடி முறை ஜபிப்பதால் அக்னி தத்துவத்தையும், 36 கோடி முறை ஜபிப்பதால் வாயு தத்துவத்தையும், 45 கோடி முறை ஜபிப்பதால் ஆகாய தத்துவத்தையும், 54 கோடி முறை ஜபிப்பதால் ஐந்து குணங்களை வெல்லலாம், அகங்காரம் மாறும், 63 கோடி முறை ஜபிப்பதால் காரியத்தில் வெற்றி, 72 கோடி முறை ஜபிப்பதால் கோபத்தை வெற்றி கொள்ளலாம், 81 கோடி முறை ஜபிப்பதால் மோகத்தை வெல்லலாம், 90 கோடி முறை ஜபிப்பதால் லோபத்தை வெல்லலாம், 99 கோடி முறை ஜபிப்பதால் மதத்தை வெல்லலாம் 108 கோடி முறை ஜபிப்பவர் மோட்சம் அடைவர்.

இல்லத்தில் செய்யும் ஓம் நமசிவாய மந்திர ஜபம் ஒரு மடங்கு பலனையும், கோசாலையில் செய்யும் ஜபம் நூறு மடங்கு பலனையும், வனம், நந்தவனம் ஆகியவற்றில் செய்யும் ஜபம் ஆயிரம் மடங்கு பலனையும், பவித்ர மலைகளில் செய்யும் ஜபம் பத்தாயிரம் மடங்கு பலனையும், நதிக்கரைகளில் செய்யும் ஜபம் லக்ஷ மடங்கு பலனையும், சிவாலயத்தில் செய்யும் ஜபம் பத்து லக்ஷ மடங்கு பலனையும் எம்பருமானுக்கு அருகில் செய்யப்படும் ஜபம் அனந்த கோடி பலனையும் தரும். ஓம் நமசிவாய மந்திரம் எழுதுவது ஜபிப்பதைப் போல நூறு மடங்கு பலன் தரும். இவ்வாறு இம்மந்திர ஜபம் செய்வதால் மோக்ஷம் கிட்டும்.



திருநல்லூர் திருத்தலத்தில் நம்பியாண்டார் நம்பிகளின் திருமகளைத் திருமணம் செய்து கொண்டபின், மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு அங்குள்ள அனைவரையும் அழைத்துக்கொண்டு 'நல்லூர் பெருமணம்' என்ற பதிகத்தைப் பாடிக் கொண்டே கோயிலுக்குள் நுழைந்தவுடன், ஈசன் அருளால் கர்ப்பகிரகத்தில் ஒரு ஜோதி தோன்றியது . அப்பொழுது இந்த 'காதலாகிக் கசிந்து' என்ற நமச்சிவாயப் பதிகத்தைப் பாடிக்கொண்டே எல்லோரையும் அந்த ஜோதியில் இரண்டறக் கலக்கச் செய்தார் அப்போது ஆளுடையப்பிள்ளையாம் அம்மையின் ஞானப்பாலுண்ட திருஞான சம்பந்தர் பாடிய நமசிவாயப்பதிகம் .




காதல் ஆகிக் கசிந்து கண்ணிர் மல்கி ஓதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே. (1)


நம்புவார் அவர் நாவில் நவிற்றினால்
வம்பு நாண் மலர்வார் மது ஒப்பது
செம்பொனார் திலகம் உலகுக்கு எலாம் நம்பன் நாமம் நமச்சிவாயவே. (2)

நெக்குள் ஆர்வம் மிகப் பெருகி நினைந்து அக்கு மாலைகொடு அங்கையில் எண்ணுவார் தக்க வானவராத் தருவிப்பது நக்கன் நாமம் நமச்சிவாயவே. (3)


இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால் நயம் வந்து ஓத வல்லார்தமை நண்ணினால் நியமந்தான் நினைவார்க்கு இனியான் நெற்றி நயனன் நாமம் நமச்சிவாயவே. (4)


கொல்வார் ஏனும் குணம் பல நன்மைகள்
இல்லார் ஏனும் இயம்புவர் அயிடின் எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் நல்லார் நாமம் நமச்சிவாயவே. (5)


மந்தரம் அன்ன பாவங்கள் மேவிய
பந்தனை யவர் தாமும் பகர்வரேல் சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால் நந்தி நாமம் நமச்சிவாயவே. (6)

நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும்
உரைசெய்வாயினர் ஆயின் உருத்திரர் விரவியே புகுவித்திடும் என்பரால்
வரதன் நாமம் நமச்சிவாயவே. (7)

இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல் தலங்கொள் கால் விரல் சங்கரன் ஊன்றலும் மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை நலங்கொள் நாமம் நமச்சிவாயவே. (8)

போதன் போதன கண்ணனும் அண்ணல்தன் பாதம் தான்முடி தேடியப் பண்பராய் யாரும் காண்பதரிதாகி அலந்தவர்
ஓதும் நாமம் நமச்சிவாயவே. (9)
கஞ்சி மண்டையர் கையில் உண் கையர்கள்
வெஞ்சொல் மிண்டர் விரவிலர் என்பரால்
விஞ்சை அண்டர்கன் வேண்ட அமுதுசெய் நஞ்சுண் கண்டன் நமச்சிவாயவே. (10)

நமச்சிவாயப்பதிகத்திற்க்குப்பின் ஓம் மங்களம் பாடல் கேட்டு இன்புறுங்கள் அன்பர்களே.
இனி பாடல் வரிகள் தமிழில்
ஓம் மங்களம் ஓங்கார மங்களம்
ஓம் நமசிவாய மங்களம்

மங்களம் நகார மங்களம்
நாத பிந்து கலா தீத வேத மங்களம் (ஓம்)

மங்களம் மகார மங்களம்
மஹா தேவ தயா சிந்து ஈச மங்களம் (ஓம்)

சி மங்களம் சிவாய மங்களம்
சித்த புத்தி ஆத்ம ரூப வேத மங்களம் (ஓம்)

மங்களம் வகார மங்களம்
வாத பேத ரஹ’த் பர பிரம்ம மங்களம் (ஓம்)

மங்களம் யகார மங்களம்
யதா தத்வ பரிக்ஞான வேத மங்களம் (ஓம்)

தேவாரம்: தமிழ் ஈழம் பற்றிப் பாடிய நாயன்மார்கள்!

இன்றைய சூழ்நிலையில், ஈழத்தில் வாழும் நம் சகோதர சகோதரிகளை அலைகழிக்கும் அல்லல்கள் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து.
ஈழ மக்களின் அமைதிக்கு உடன்பாடில்லாத எந்தவொரு செய்கைக்கும் பாரத தேசம் துணை செய்யாது என்று வாயால் சொல்லக் கூட இம்புட்டு தயக்கமா? இத்தனை அரசியலா? ஈழ அரசியல்/படையியல் ஒரு விநோதம் என்றால், இந்திய அரசியலும் எந்த வகையிலும் சளைத்தது இல்லை போலும்.

பக்தி இலக்கியங்களிலும் பெளத்த அரசியலை, அதுவும் ஈழத்து பெளத்த அரசியலைச் சிலர் கிழி-கிழின்னு கிழிச்சிருக்காங்க! :) யாருன்னு சொல்லுங்க பார்ப்போம்?
நம்ம சிறு பிள்ளை, ஆளுடைய பிள்ளை, நாளும் இன்னிசையால் நற்றமிழ் பரப்பும் ஞான சம்பந்தன் தான்! "புத்தராய்ச் சில புனை துகில் உடையவர், அவர்கள் எத்தராகி நின்று உண்பவர், அவர்கள் பேச்சைக் கேட்காதீங்க" என்று சீறுகிறார்!

சிவன் பாட்டு வலைப்பூவில், தேவாரப் பதிவுகளின் தொடர்ச்சியாக, இன்று ஈழத்து தேவாரங்கள்...
நாயன்மார்களால் தேவாரப் பாடல் பெற்ற தலங்கள், ஈழ நாட்டிலும் உண்டு! இரண்டே இரண்டு அழகிய தலங்கள்!
1. மாதோட்டம்-திருக்கேதீஸ்வரம்
2. திருக்கோண மலை

பாடியவர்களும் இரண்டே இரண்டு பேர் தான்!
1. ஞான சம்பந்தர்
2. சுந்தர மூர்த்தி நாயனார்

இவர்கள் இலங்கைக்குச் சென்று அங்கு ஈசனைச் சேவித்துப் பாடினார்களா, இல்லை இராமேஸ்வரம் திருக்கரையில் இருந்தவாறே தொழுது ஏத்தினார்களா என்பது குறித்து சைவ நூல்களில் வெவ்வேறு கருத்துக்கள் உள்ளன. ஆனால் ஈழத்துத் தேவாரங்கள், ஈழம் போலவே அத்துணை அழகு! பார்க்கலாம் வாரீயளா?
ஓம் ஓம் ஓம் ஓம் நமசிவாயா

ஓம் நமசிவாயா தங்க நிலாவினை அணிந்தவா
ஆடுகின்றேன் பூர்ணோதயா அருள் இல்லையா?

ஓம் நமசிவாயா ஓம் நமசிவாயா

பஞ்ச பூதங்களும் உன் முக வடிவாகும்
ஆறு காலங்களும் உன் ஆடைகள் ஆகும்

பஞ்ச பூதங்களும் உன் முக வடிவாகும்
ஆறு காலங்களும் உன் ஆடைகள் ஆகும்

மலை மகள் பார்வதி உன்னுடன் நடக்க
ஏழு அடிகளும் சுரங்கள் படிக்க

உன் பார்வையே எட்டு திசைகளே
உன் சொற்களே நவரசங்களே

கங்கையின் மணவாளா ஆ ஆ ஆ......

உன் மௌனமே...

ஓம் நமசிவாயா ஓம் நமசிவாயா


மூன்று காலங்களும் உந்தன் விழிகள்
சதுர் வேதங்களும் உந்தன் வழிகள்

கணபதி முருகனும் பிரபஞ்சம் முழுதும்
இறைவா உன்னடி தொழுதே துதிக்கும்

அத்வைதமும் நீ ஆதி அந்தம் நீ
நீ அங்கு இல்லை புவனம் முழுவதும்நீ

கயிலாய் மலை வாசா கலையாவும் நீ
புவிவாழ்வு பெறவே அருள் புரி நீ.

ஓம் நமசிவாயா ஓம் நமசிவாயா.
 

சிவபெருமானின் ஆயிரம் திருப்பெயர்கள்


லலிதா சஹஸ்ரநாமத்தையும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தையும் படித்திருக்கிறேன்; மற்றவர் சொல்லியும் கேட்டிருக்கிறேன். சிவ சஹஸ்ரநாமத்தைப் படித்தது மட்டும் உண்டு. இன்று அந்த குறையும் தீர்ந்தது. சிவபெருமானுடைய ஆயிரம் திருப்பெயர்களைக் கூறும் 'சிவ சஹஸ்ரநாமத்தை' இன்று கேட்டேன். அதனை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க!
துவங்குவதே திருவைந்தெழுத்தில் தான்! பஞ்சாட்சரம்! = நமசிவாய!
திருவாசகமே ஐந்தெழுத்தில் தான் துவங்குகிறது! வேறெந்த திருமுறைக்கும் இப்படி அமையவில்லை! இது தான் திருவாசகத்தின் சிறப்பு!

அதனால் தான் வாதவூரன் சொல்ல, நாம் எழுதியது என்று ஈசனே தன் கைப்படத் திருக்கடைக்காப்பிட்டு அருளினான்! அவனுக்கே தெரியும் தன்னை விடத் தன் நமசிவாய நாமம் தான் உயர்ந்தது என்று!
முன்னம் அவனுடைய நாமம் கேட்டேன்! மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டேன்! என்பார் அப்பர் சுவாமிகள்!
முதலில் நாமம், அப்புறம் தான் மூர்த்தி! அன்று நடுச்சபையிலே பெண்ணுக்குக் கை கொடுத்தது திருநாமம்! வராத இறைவனையும், வர வைத்தது திருநாமம்!

அடுத்து நாதன் தாள் வாழ்க = இறைவனின் திருவடிகள்! அதற்குத் தான் வாழ்த்து!
இன்னும் இறைவனை இவர் வாழ்த்தவே இல்லை பாருங்க! திருநாமமும், திருவடியும் தான் பாடிக்கிட்டு இருக்காரு!
திருப்பல்லாண்டில் பெரியாழ்வாரும் இப்படியே அருளிச் செய்துள்ளார்! பல்லாண்டு, பல்லாண்டு,...உன் செவ்வடி செவ்வித் திருக்காப்பு! - உனக்குக் காப்பு இல்லை! உனது திருவடிகளுக்குத் திருக்காப்பு!

பெரியாழ்வாரும் மாணிக்கவாசகரும் வெவ்வேறு கால கட்டங்கள்! இருந்தும் ரெண்டு பேரும் எப்படி ஒரே மாதிரி சிந்திக்க முடிந்தது?


கோகழி=திருப்பெருந்துறை என்னும் ஊர்! அங்கு தான் இறைவன் மெளன குருவாய் மாணிக்கவாசகருக்கு உபதேசம் காட்டி அருளினார்! நன்றி மறவாமல் ஊரைப் பாடுகிறார்! இநத ஊரு எங்கே இருக்கு, இக்காலப் பேரு என்னான்னு சொல்லுங்க பார்ப்போம்! இந்த ஊரில் லிங்கம் கிடையாது, அம்பாள் கூட சிலை இல்லை! பாதங்கள் மட்டுமே! எல்லாப் பூசையும் மாணிக்கவாசகருக்குத் தான்!

ஆகமம் ஆகிநின்று = ஆகமம் என்பதெல்லாம் தேவையா? என்று இன்னிக்கி மெத்தப் படித்தவர்கள், படிக்காமலேயே கேள்வி எழுப்புவார்கள்! :)
ஆனால் மணிவாசகர் அப்படியில்லை! இறைவன் எங்கும் இருக்கிறான் தான்! ஆனால் விளிம்பு நிலை மாந்தர்களான நாம் அவனை எப்படித் தரவிறக்கம் செய்து கொள்வது?

* அணுக்கள் எங்கும் இருக்குது தான்! ஆனா அணு உலையில் தானே மின்சாரம் வரும்?
** பசுவின் உடலில் பால் எங்கும் இருக்கு தான்! ஆனால் காம்பில் மட்டும் தானே பால் வரும்?

வீட்டில் இருக்கும் தெய்வமும், கருவறைத் தெய்வமும் ஒன்னு தான்! ஆனால் கருவறைத் தெய்வம், நாம் மட்டும் அல்லாது, பல அடியார்கள் சேவித்து உருகிய சான்னித்யம்! அதனால் தனிநலத் தெய்வ உருவத்தை விட, பொதுநல தெய்வ உருவத்துக்குச் சாந்நித்யம் அதிகம்!
அடுத்த முறை ஆகமங்களைக் கேலி செய்யாதீர்கள்! கருவறையில் ஃபோட்டா புடிக்க விடாத ஆகமம் எங்களுக்கு வேணாம்-னு எல்லாம் பேசாதீங்க! ஆகமத்தைப் புரிந்து கொண்டு அப்புறம் பேசுங்கள்!

அண்ணிப்பான் = இனிப்பான்! அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவினுக்கே என்பார் மதுரகவியாழ்வார்! அப்படி ஆகமம் ஆகி நின்று இனிப்பவன் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் = ஒன்றாய், பலவாய் இருப்பவன் ஈசன்! அந்த இறைவன் அடி வாழ்க!



வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க!
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க!
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங் கழல்கள் வெல்க!
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!


வேகமாய் அலைபாயும் மனத்தை அடக்கி ஆண்ட வேந்தன் அடி வெல்க!
பிஞ்ஞகன் = பீலி அணிந்தவன்! பினாகம் என்னும் வில், பிஞ்ஞகமானது என்றும் எடுத்துக் கொள்ளலாம்! பினாகம் வில்லை உடையவன் ஈசன்! அருள் பெய்யும் கழல்கள் வெல்க!

புறத்தார்க்குச் சேயோன் = அண்மை x சேய்மை = அருகில் x தொலைவில்!
புறத்தார்க்குத் தொலைவில் தான் நிற்பானாம்! இது மணிவாசகர் கருத்து!
கை குவித்து வணங்குபவர்! கைகளைத் தலை மேல் குவித்து வணங்குபவர்! இவர்கட்கு மகிழ்வும், ஓங்கு பெருமையும் தரும் திருவடிகள் போற்றி!

ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி!
தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!

தேசன்=தேசு/ஒளி பொருந்தியவன்! நிமலன்=குற்றமில்லாதான்!
ஆராத இன்பம்=பசி ஆறிடும்! செல்வமும் ஒரு நாள் ஆறிப் போகும்! எது ஆறாது? சிவ மங்கள இன்பம் ஆறாது! ஏன்? அது ஆராத ஒன்று! அதாச்சும் தெவிட்டாத ஒன்று! அது நித்ய விபூதி!

மாணிக்கவாசகர் இந்த அர்ச்சனைப் பாட்டை, வெண்பாவில்-செப்பல் ஓசையில் அமைக்காமல், கலிப்பாவில்-துள்ளல் ஓசையில் அமைத்துள்ளார்! மந்திரம் ஓதுவதற்கு என்றே இப்படி!
இதை விட என்னாங்க ஒரு அர்ச்சனை பண்ணிற முடியும்! பேசாம இதையே அரசு எடுத்து வெளியிட்டு இருக்கலாம்!

எங்கே, கோயில் அர்ச்சனை போலவே, நல்லா நீட்டி முழக்கி, ஒரு முறை ஓதுங்கள் பார்ப்போம்!
நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! வாழ்க!!
ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி!
தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி! போற்றி!


சீரார் பெருந்துறை சிவபெருமான் திருவடிகளே சரணம்! - திருச்சிற்றம்பலம்!

Sunday, August 10, 2008

சுந்தரர் தேவாரம்: நண்பனை மறந்தாயோ? பொன்னியின் செல்வனில் எங்கே வருகிறது?

ஒருத்தர் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு, திடீரென்று சென்னை வருகிறார்! வேலை மிகுதி! சென்னையில் இருக்கும் தன் ஆருயிர் நண்பனைக் கூப்பிடக் கூட முடியவில்லை! ஆனால் சென்னை நண்பருக்கோ ஞான மூக்கு இருக்கு! :)
நண்பன் நம்ம ஊருக்குத் தான் வந்துள்ளான் என்பதை எப்படியோ ஞான மூக்கில் மோப்பம் பிடித்து விட்டார்! உடனே என்ன செய்வார், சொல்லுங்க?

"டேய், எங்களை எல்லாம் கண்டுக்க மாட்டீங்களோ?" என்று கெஞ்சலாம் - இது ஒரு வழி!
நண்பன் வீட்டுக்குப் போயி "பளார்" என்று கன்னத்தில் கொஞ்சலாம் - இது இன்னொரு வழி! :)
ஆனால் சங்கரன் அன்று ஏனோ கொஞ்சவில்லை! கெஞ்சிக் கொண்டு இருந்தான்!
எந்த சங்கரனா? ஹிஹி! தஞ்சை மாவட்டம், திருமழபாடி என்னும் ஊரில் குடியிருக்கும் ஒரு சங்கரன் தான்!
ஈசனுக்கே தோழன், அந்தரங்க விஷயங்களைக் கூட ஈசனிடம் பேசக் கூடிய பக்தர்! அடிச்சுக்குவாங்க, அணைச்சிக்குவாங்க!
இப்படி எல்லாம் நட்பு கொள்ளக் கூடிய தம்பிரான் தோழர்கள் = சிவபெருமானும்-சுந்தர மூர்த்தியும்!
சுந்தரர் அப்போது கொள்ளிடக் கரையின் சிவத் தலங்களை எல்லாம் தரிசிக்கப் பயணம் மேற்கொண்டு இருந்தார். திருவையாறு மற்றும் அதன் சுற்றியுள்ள ஊர்கள்.
அன்று இரவு திருவாலம்பொழில் என்னும் ஊரில் ராத்தங்கல் (நைட் ஸ்டே)! அடுத்த நாள் கொள்ளிடக் கரையைக் கடந்து போக வேண்டும்! சுந்தரருக்கு ராத்தூக்கம் வரவே இல்லை!



நள்ளிரவில் திடீர் என்று ஒரு குரல்! கெஞ்சு குரல்!
"சுந்தரா, என்னை மறந்தனையோ? மழபாடிக்கு வர மறந்தனையோ??"
சுந்தரர் அலறி அடித்துக் கொண்டு எழுந்து விட்டார். உடன் வந்த பக்தர்கள் குழாம் எல்லாம் என்னவோ ஏதோ என்று விழித்துக் கொண்டனர்.
"இங்கே மழபாடி என்று ஏதாச்சும் ஊர் இருக்கா?" - ஊர் மக்களிடம் சுந்தரர் வினவுகிறார். மக்கள் திருமழபாடியில் உள்ள வயிரத்தூண் நாதரைப் பற்றிச் சொல்கிறார்கள்!

ச்சே நண்பனையா மறந்தோம்? வெட்கம் பிடுங்கித் தின்கிறது! பொழுது பொல பொலவென்று புலர்கின்றது...நண்பனைக் காண ஓடோடிச் செல்கிறார் சுந்தரர்!

"டேய், உன்னை மறப்பேனாடா? என்ன பேச்சு பேசற நீயி? வைரத்தூண்-னு உனக்குப் பேரு! உன் வைராக்கியமும் வைரம் போலவே தான் இருக்கு!
என் மேலே கோபம்-ன்னா, இந்தா, நாலு அறை அறைஞ்சிரு! அதுக்காகப் பேசாம எல்லாம் இருக்காதே!
ஒரு முறை என்னை நேருக்கு நேராத் தான் பாரேன்! அப்புறம் தெரியும் உன் வீம்பு எல்லாம்!
உன்னை அல்லால் வேறு யாரைடா நினைக்கப் போகிறேன்? அன்னே உன்னை அல்லால், இனி யாரை நினைக்கேனே?"

திருச்சிற்றம்பலம்!
பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கு அசைத்து
மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மா மணியே மழ பாடி உள் மாணிக்கமே
அன்னே உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே!
திருச்சிற்றம்பலம்!

இதாங்க எளிமையான பொருள்:பொன் போல் சிவப்பா இருக்கும் என் சிவப்பா!
புலிதோலை இடையில் கட்டிக்கிட்டு இருக்காய்! உன் தலையில் உள்ள சடாமுடியில், கொன்றைப் பூ மின்னுகிறது!
வாராது வந்த நட்பின் மாமணியே! மழபாடியில் குடியிருக்கும் மாணிக்கமே!
உன்னை அல்லாமல் வேறு யாரை நினைக்கப் போகிறேன்? எந்நாளும் என் மனத்துக்கினிய நண்பன் நீ தான்! நீ தான்!



சரி, புதிருக்கு வருவோம்!1. பொன்னார் மேனியனே என்ற பாடல், கல்கியின் பொன்னியின் செல்வனில், பல இடங்களில் வரும்! எந்தக் கதாபாத்திரத்தின் அறிமுகப் படலத்தில் இந்தப் பாடல் வருகிறது?

2. இந்த "மழபாடி மறந்தனையோ" கதையும் பொன்னியின் செல்வனில் வரும். யார் யாருக்குச் சொல்வாங்க? எந்தக் கட்டத்தில்?

திருமழபாடியை ஒரு ரவுண்டு வரலாமா?
பாடி என்றால் தங்குமிடம்; பாசறை!
கங்கபாடி-ன்னு ஊரு இருக்குல்ல? அதே போல், மழபாடி = மழவர்கள் தங்கும் பாடி! காவிரியின் வடகரைத் தலங்களுள் ஒன்று! திருவையாற்றுக்கு அருகில்!
இறைவன்: வயிரத் தூண் நாதர், வஜ்ர ஸ்தம்ப ஈஸ்வரர் இறைவி: அழகம்மை
நந்திகேஸ்வரர் திருமணம் நிகழ்ந்த தலம்! சுயசை என்னும் நங்கை நல்லாளுக்கும் நந்தியம்பெருமானுக்கும் இன்றும் பங்குனி மாதம் திருமண விழா எடுப்பிக்கிறார்கள்!

பாடலுக்கு நன்றி: பாலராஜன் கீதா (பாகீ இன்னும் சில தலங்களுக்கு தேவாரப் பாடல் ஒலிப்பத்திகளை அனுப்பியுள்ளார்) ; சில படங்களுக்கு நன்றி: சதீஷ் குமார்

திருமழபாடி ஆலயம்
பதிகத்தைக் கொஞ்சம் பிரிச்சி மேயலாமா?
நண்பன் நம்மிடம் கோபித்துக் கொண்டால் முதலில் என்ன செய்வோம்?
மன்னிச்சோக்கோ என்று முதலில் கெஞ்சல்!
சூடு தணிந்தவுடன், அவனையே கலாய்த்து சிறு கொஞ்சல்!
அதே தான் இங்கும் நடக்கிறது!

அன்னே......உன்னை அல்லால், இனி யாரை நினைக்கேனே?
அன்னே = அன்னையே, அம்மா, அம்மே!
சில நெருங்கிய நண்பர்கள் ஒருவொருக்கொருவர் பேசிக் கொள்ளும் போது பார்த்திருக்கலாம்; "என்னம்மா, சொல்லும்மா, அப்பிடி இல்லம்மா" என்றும் பேசிக்குவாங்க! நண்பன் எப்படி அம்மா ஆக முடியும்? ஆக முடியுமா?
வீட்டுல அன்னிக்கி சங்கரா மீன் வறுவல்; மதியம் சாப்பிட்டாச்சி; இன்னும் ரெண்டு மூனு துண்டு தான் பாக்கி இருக்கு! அப்பாவுக்கு ஒரு துண்டை வைத்த அம்மா, தனக்கு மட்டும் படக்கென்று மோர் ஊத்திக்கறாங்க!
அட, என்னாம்மா-ன்னு கேட்டா, ஏதோ ஒரு சாக்கு போக்கு சொல்லுறாங்க! அப்படியே ரெண்டு மீன் துண்டையும் பையனுக்கு வச்சிடறாங்க! நீ ஒன்னு வச்சிக்கோம்மா-ன்னு சொன்னா, அடடா நான் மோர் ஊத்திக்கிட்டேனே! சரி, நீயே சாப்பிடுப்பா-ன்னு ஒரு பொய் நாடகம்! இதே மாதிரி நாடகங்கள் சில நெருங்கிய நட்பிலும் உண்டு! :)

அம்மாவிடம் ஆயிரம் சண்டை போட்டாலும், திரும்பியும் போயி அங்கேயே தான் நிற்போம்! பேசிக்க மாட்டோம், ஆனால் ஏதோ ஒரு இழை மட்டும் ஓடிக் கொண்டே இருக்கும்!
நாம தப்பே செஞ்சாலும் கூட, அம்மா மட்டும் நம் பக்கம் தான் இருக்கணும் என்கிற ஒரு கண்மூடித்தனமான எண்ணம்! இது போல சில நட்பும் உண்டு!
இவர்கள் தான் "என்னம்மா, சொல்லும்மா, அப்பிடி இல்லம்மா" என்று பேசிக் கொள்பவர்கள் :)

சுந்தரர்-ஈசன் நட்பும் அப்படித் தான்! ஈசனையே பொய் சாட்சி சொல்ல அழைப்பார்! அதான் அன்னே! அம்மா! என்று நண்பனை விளிக்கிறார்!டேய், உன்னை விட்டா வேற யாரும்மா? அன்னே, உன்னை அல்லால், இனி யாரை நினைக்கேனே!


ஓதுவா மூர்த்திகள், தேவாரம் இசைக்கிறார்கள்!
பொன்+ஆர்+மேனியனே = ஆர்-ன்னா அழகு!
சிவபிரான் தகதக என்று காய்ச்சின பொன் நிறத்தைக் கொண்டவன்! செம்பொன் மேனி என்பார்கள்! அதாச்சும் சிவப்பாகவும் இருக்கும், பொன் போலவும் இருக்கும்!

காய்ச்சின பொன்னை எப்படி வேண்டுமானாலும் உருக்கி விடலாம்! எந்த வடிவத்திலும் தட்டி நகை செய்து விடலாம்!
அதே போல் சிவபிரானைத் தவத்தால் உருக்கி விடலாம்! வரப் பிரசாதி! பக்த கோலாகலன்! தவத்தில் சோதனைகள் கொடுத்தாலும், உருகி விடுவதில் எளியன்! வரங்களை அள்ளி அள்ளிக் கொடுத்து விடுவான்!

அதனால் தான் அசுரர்கள் சிவபிரானை நோக்கியே பெரும்பாலும் தவம் இருப்பார்கள்! மாறாகப் பெருமாளோ தேவனாகட்டும் சரி, அசுரனாகட்டும் சரி...ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய் தான்! அவ்வளவு சீக்கிரம் கறந்து விட முடியாது! :)

புலித்தோலை அரைக்கு அசைத்து = அரை என்றால் இடை, இடுப்பு
(அரை-ஞாண் கயிறு-ன்னு சொல்றோம்-ல! எத்தினி பேரு இந்தக் காலத்திலும் அரைஞாண் கயிறு கட்டிக்கிட்டு இருக்கீங்க? கையைத் தூக்குங்க! :)
புலித்தோலை இடையில் அசைத்துக் கொண்டு உள்ளான்! ஒழுங்கா மடிப்பு எல்லாம் வச்சிக் கட்டினா, அதுக்குப் பேரு கட்டுதல்! ஆனால் இங்கோ பரபரவென்று புலித்தோலை ஒரு இழுத்து இழுத்து இருக்கான்; அம்புட்டு தான்! அதனால் அசைத்து என்கிறார்!

கர்மங்களைச் செய்தாலே போதும்; இறைவனைத் தனியாகப் பணிய எல்லாம் தேவையில்லை என்ற கொள்கை உடையவர்கள் கர்ம மீமாம்சை ரிஷிகள்!
தாருகா வனத்தில் அவர்கள் சிவபெருமானை எதிர்த்து ஆபிசார ஹோமம் என்ற ஒன்றினைச் செய்கிறார்கள்! அப்போது ஏவி விடப்பட்டவை தான் புலி, மான் போன்றன! புலியைக் கொன்று அதன் தோலை அரைக்கு அசைத்துள்ளான் ஈசன்!
மின்னார் செஞ்சடை மேல், மிளிர் கொன்றை அணிந்தவனே =
செம்மையாக இழுத்துக் கட்டப்பட்ட ஜடாமுடி! அது மின்னுகிறது! எதனால்? சந்திர மெளலி அல்லவா? கறையில்லாப் பிறையால் மின்னுகிறது! அதான் மின்னார் செஞ்சடை!

சடையின் மேல் கொன்றை மலர் சூடி உள்ளான்! கொன்றை மலர் ஈசனுக்கு மிகவும் உகந்த மலர்! மஞ்சள் நிறத்தில் அதுவும் தததக-ன்னு மின்னும்!
தாழம்பூ அவனுக்கு ஆகவே ஆகாது! கொன்றையோ அவனை விட்டுப் போகவே போகாது!
கொன்றை பற்றி யோகன் அய்யா இட்ட சிறு பதிவு இங்கே!

மன்னே, மாமணியே, மழபாடி உள் மாணிக்கமே =
மன்னுதல் = நிலைத்து இருத்தல்! மன்னும் இமயமலை என்பார்களே, அது மாதிரி!
மற்ற செல்வங்கள் எல்லாம் செல்வம், செல்வம், செல்வோம்...என்று சென்று விடும்!
ஆனால் சிவச்செல்வம் எப்போதும் மன்னி நிற்கும்!

விபூதி என்பதற்கே செல்வம் என்று தான் பொருள்!
நித்ய விபூதி என்று வைணவமும் விபூதியைப் பேசும்! அது போல, நட்புச் செல்வமும் என்றும் நிலைத்து இருக்க வேண்டித் தான் மன்னே என்கிறார்!

டேய், உன்னை விட்டா வேற யாரும்மா? அன்னே! உன்னை அல்லால், இனி யாரை நினைக்கேனே?

உயிர் நண்பர்கள் யாரேனும் பிரிந்து இருந்தால், அவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து மகிழ, இந்தத் தோழமைத் திருப்பதிகத்தை அடியேன் வாசித்து அர்ப்பணிக்கிறேன்!

அடுத்த திங்கட்கிழமை, ஒரு வாசகத்துக்கும் உருகாதவர்கள், திருவாசகத்துக்கு உருகப் போறோம்! அதுக்கு முன்னாடி பொன்னியின் செல்வன் புதிருக்குப் பதில் சொல்லுங்க மக்கா! :)


நான் இலங்கைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியதே கதிர்காமமும், கோணேஸ்வரமும், கேதீஸ்வரமும் தான்.

திருச்செந்தூரைத் தானே அலைவாய் என்கிறோம்?
ஆனால் உண்மையில் ஒரு மலையையே அலைத்து அலைத்துத் தாலாட்டும் இயற்கை அழகு, திரிகோணமலைக்கு உண்டு. படங்களில் பார்க்கும் போதே சொக்கிப் போவீர்கள்.
காபி அண்ணாச்சி சொல்லி இருக்காரு, என்னை அங்கிட்டு அழைத்துப் போகிறேன்-ன்னு. ரிஷான் ஷெரீப்பும் சொல்லி இருக்கார். பார்க்கலாம். ஈழத்துக்கு ஒரு சிறு விடிவு காலமாச்சும் தோன்றி, இறைவன் திருவுள்ளம் கனிய, பாலாவிக் கரையில் கேதீஸ்வரரையும், கதிர்காமத்து முருகனையும் அடியேன் கண்ணாரக் கண்டு சேவிக்க வேண்டும்!

திருக்கேதீஸ்வரம் என்னும் திருக்கேதீச்சரம், மன்னாருக்கு அருகே பாலாவி ஆற்றின் கரை மேல் உள்ளது. மாதோட்டத்துக்கு அருகில்.

கேதீச்சரத்துக்குக் காசிக்கு இணையான சிறப்பு! சிவ பெருமானுக்குக் காவடி எடுப்பது இங்கு மட்டுமே! தீர்த்தக் காவடி!
சிவலிங்கத்துக்கு நாமே திருமுழுக்காட்ட (அபிஷேகம்) முடியும்!
எப்படிக் காசியில் கங்கை நீரை முகந்து உலகநாதரை முழுக்காட்டலாமோ, அதே போல் பாலாவியில் நீர் முகந்து, தீர்த்தக் காவடி எடுத்து, கேதீஸ்வரருக்குத் திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யலாம்!

படத்துக்கு நன்றி: சிவத்தமிழோன் ஐயா; அவரின் திருக்கேதீஸ்வரம் பதிவு இங்கே!
இறைவன் = கேதீசுவரர். இறைவி = கெளரியம்மை.சம்பந்தர் பதிகம் ஒன்று. அதில் பதினோரு பாடல்கள்! சுந்தரர் பதிகம் ஒன்று. அதில் பத்து பாடல்கள்! ஆக மொத்தம் இருபத்தியோரு பாடல்கள்!

தீபாவளிக்கு மறுநாள் கேதார-கெளரி விரதம் என்று எங்கள் ஊர் வாழைப்பந்தல் பக்கமும், இன்னும் வடார்க்காடு முழுதும், அதிரசம் சுட்டு, நோன்பு எடுப்பார்கள். இந்தக் கெளரி-கேதார தம்பதிகளைத் தான் இருத்தி நோன்பெடுக்கும் வழக்கம்!

எப்படி ராகு தோஷங்களுக்கு கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோயில் அருகில் உள்ள திருநாகேஸ்வரமோ, அதே போல் கேது தோஷங்களுக்கு, திருக்கேதீஸ்வரம்!

பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஆறுமுக நாவலர் அவர்களின் முயற்சியில், தமிழர்கள் பலரை ஒன்று திரட்டி, ஆலயம் மீண்டும் செப்பனிடப்பட்டது!
போரில், இலங்கை அரசின் சிங்களப் படைகள் கோயிலைக் கையில் எடுத்துக் கொண்ட பின், மீண்டும் வழிபாடுகள் நின்று போயின. கோயிலும் நாசமடைந்து இருந்தது!
தமிழர்கள் மீட்புக் குழுவினரின் முயற்சியால், இப்போது ஓரளவுக்கேனும் வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஆனால் படைகள் இன்னும் முழுமையாக அங்கிருந்து வெளியேறவில்லை போலும்!
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த இடத்துக்குத் தொல்பொருள் ஆராய்ச்சி என்னும் மரியாதை கூடவா இல்லை ஒரு அரசுக்கு? :((



சரி, தேவாரத்தைப் பார்க்கலாமா?
புத்தராய்ச் சில புனை துகில் உடையவர் புறன் உரைச் சமண் ஆதர்
எத்தராகி நின்று உண்பவர் இயம்பிய ஏழைமை கேளேன் மின்
மத்த யானையை மறுகிட வுரி செய்து போர்த்தவர் மாதோட்டத்
தத்தர் மன்னு பாலாவியின் கரையிற் கேதீச்சரம் அடைமின்னே!

- சம்பந்தர்

மேலோட்டமான பொருள்:
புனைந்த துகிலை ஆடையாய்க் கொண்ட பெளத்தர்கள் புறம் பேசுவதே கொண்டுள்ளார்கள். அவர்களுடன் சில சமணர் ஏமாற்று வேலையும் செய்கிறார்கள். அவர்கள் நின்று கொண்டே உண்பவர்கள். அவர்கள் பேச்சை யாரும் கேட்கவே கேட்காதீர்கள்!
மத யானையைத் தோலுரித்துப் போர்த்தியவர் ஈசன். அவர் மாதோட்ட நகரிலே, பாலாவியின் கரையில் கேதீச்சுரத்தில் அருள் செய்கின்றார். அங்கு சென்று அடையுங்கள்!

என்ன பெளத்தர் மீதும், சமணர் மீதும், சின்னப் பிள்ளையான சம்பந்தர் இப்படி வார்த்தையைக் கொட்டுகிறாரே-ன்னு தோனும்! ஆனால் அந்தக் காலகட்டத்துக்குச் சென்று வந்தால் தான் சற்றே உண்மை புலப்படும்.

அரசாங்கத்தைக் கைக்குள்ளே போட்டுக் கொண்டு, சமயம் வளர்க்காமல், சமயம் பார்த்து சமயம் வளர்க்கும் வித்தையில் பெளத்தர்கள் மித மிஞ்சினார்கள்.
அரசு அலுவல்களில் நேரடி ஈடுபாடு. மக்கள் பிரச்சனைகளில் குளறுபடிகள்.
இவர்கள் துறந்தவர்களின் கடமைகளைச் செய்வதால், அதையே அரசாணை மூலமாக அனைவரும் செய்ய வேண்டும் என்ற கட்டளைகள் சரி வருமா? அதான் ஒரு கட்டத்தில் இவ்வளவு வெறுப்பு தலை தூக்கியது!

பாலகுமாரனின் உடையார் நாவலில், இராஜராஜனின் மகள் சந்திரமல்லிலையை, மருத்துவம் செய்கிறேன் பேர்வழி என்று, நாகைப் புத்த விகாரத்தில் மூளைச் சலவை செய்து, அரசியல் காய்களை எப்படியெல்லாம் நகர்த்தினார்கள்-னு வரும். அது போல ராஜரீக விஷயங்களில் ஏற்பட்ட பல கசப்புகள் தான் சம்பந்தரை இப்படிப் பேச வைத்தது போலும்!

மகான் புத்தரை வெறுத்தாரில்லை! சமயங்களுக்குள் என்றைக்கும் பிணக்கு இருந்ததுமில்லை! சமயத்தைப் பின்பற்றுவதாக கூறிக் கொள்ளும் மக்களின் அடாவடிகளால் தான் சமயப் பிரச்சனைகளே தலைதூக்குகின்றன!
இறைவன் தங்களைக் காப்பாற்றும் நிலை போய், மானிட ஜென்மங்கள் தாங்களே, தங்கள் தங்கள் இறைவனைக் காப்பாற்ற வேண்டும் என்று மடமையால் தோன்றுவது தான் இத்தனை அடாவடிகளும்!

சுந்தரமூர்த்தியும் திருக்கேதீஸ்வரத்தைப் பாடுகிறார். ஆனால் சம்பந்தர் காலத்தில் இருந்தது போல் இவ்வளவு பெளத்த வெறுப்பு அவர் காலத்தில் இல்லாமல் போனது! நல்லது தான்!
இதோ சுந்தரரின் ஈழத்து தேவாரம்!

மூவர் என இருவர் என
முக் கண்ணுடை மூர்த்தி
மாவின் கனி தூங்கும் பொழில்
மாதோட்ட நன் னகரில்
பாவம் வினை அறுப்பார் பயில்
பாலாவியின் கரை மேல்
தேவன் எனை ஆள்வான் திருக்
கேதீச்சரத் தானே!


மேலோட்டமான பொருள்:
முத்தொழில் என்றாலும் அதில் நீ உள்ளாய்! இரு தெய்வங்கள் என்றாலும் அதில் நீ உள்ளாய்! முக்கண்ணப்பா!
மாம்பழங்கள் தூங்கும் சோலைகள் நிறைய உள்ள மாதோட்டம்!
அங்கு பாவங்களைப் போக்க வல்ல நெறியாளர்கள் பல பேர் பயில்கிறார்கள், புழங்குகிறார்கள்.
பாலாவியின் கரை மேல் இருக்கும் தேவரே! என்னை ஆட்கொள்வீர் கேதீஸ்வரா!

மாவின் கனி தூங்கும் பொழில் = மாதோட்டத்தில் மாம்பழங்கள் பிரபலமா என்ன?

சரி, அது எப்படி மாம்பழம் தூங்கும்?
நல்ல தூக்கத்தில் அசைவே இருக்காது. அடித்து போட்டது போல் தூங்குவார்கள்.
மாதோட்ட மாம்பழங்கள் ஒவ்வொன்னும் பெரிது பெரிதாகப் பழுத்து இருக்கு! அதனால் காற்றில் ஆடக் கூட முடியாமல், அப்படியே அசைவில்லாமல் தொங்குகின்றனவாம்.
அதான் மாவின் கனி தூங்கும் பொழில் (சோலை) என்றார் சுந்தரமூர்த்தி நாயனார்!


அடுத்து என் உள்ளம் கவர்ந்த கோணேஸ்வரம்; திரு கோணமலை, திரிந்து திரிகோணமலை ஆனது. கடலோர மலையில் உள்ள அழகான ஆலயம்!

திருகோணமலை வடகிழக்கு மாகாணத்தின் தலைநகர். கிழக்குக் கரைத் துறைமுகம். தட்சிண கைலாசம்-தென் கயிலாயம் எனவும் சிறப்பு உண்டு!
இறைவர் = கோணேசுவரர். இறைவி = மாதுமையாள்.

சுடுநீர்ச் சுனைகள் உள்ள தலம். ஆலயத்தின் தீர்த்தமான மகாபலி கங்கை, குகையில் சுரந்து, மலையைப் பிரதிட்சணமாகச் சுற்றி, கடலில் விழுகிறது.
மகாபலி கங்கை திருகோணேஸ்வரத்திலும், மாணிக்க கங்கை திருக்கேதீஸ்வரத்திலும், காவிரிக் கங்கை கதிர்காமத்திலும் பாய்கிறது.

ஈசனின் ஆணையின் பேரில், கயிலை போன்ற மாதிரி மலையை, நான்முகன் உருவாக்கித் தர, அங்கு ஈசன் குடி கொண்டான்! வாயு, ஆதிசேடன் மேல் கொண்ட பொறாமையில், இம்மலைகளை அபகரிக்க...ஈசன் தண்டித்து, திருத்தி அருளினார். மும்மலைகளை காளத்தி, திருச்சிராப்பள்ளி, திரிகோணமலை என்று மூவிடங்களில் வைக்கச் சொன்னார் என்பது தல வரலாறு! இதனால் இது தட்சிண கைலாசம் ஆனது!

இராவணன் வணங்கிய ஈசனும் திருகோணமலை ஈசன் தான்!
தன் தாயாருக்குப் பூசை செய்ய ஒரு சிவலிங்கம் தேவைப்பட்ட போது, கயிலையில் இருந்தே நேரடியாக உங்களுக்கு எடுத்துத் தருகிறேன் என்று ஆணவம் பொங்கப் பேசினான்.
தவத்தால் கயிலை லிங்கம் பெறாது, பலத்தால் பெற்று விடலாம் என்று இறுமாந்தான்.

நந்தியம்பெருமானைக் குரங்கே என்று எள்ளி நகையாடி குரங்கால் நகர் அழியச் சாபம் பெற்றான். அப்போதும் பணியாது, பலத்தால் மலையைத் தூக்க எண்ணிய போது தான், ஈசன் தன் கால் சுண்டு விரலால் அவனை செருக்கைச் சற்றே அடக்கினார். சிவலிங்கமும் கொடுத்து அனுப்பினார். அப்போதும் கர்வம் விட்டபாடில்லை!

அந்த லிங்கத்தை வைத்து, மற்ற சிவாலயங்களை எல்லாம் திருகோணமலைக்குக் கீழ்ப்படிய வைக்க எண்ணினான். விநாயகப் பெருமான் சற்றே விளையாட, அது பாரதத்தில் திருக் கோகர்ணத்திலேயே தங்கி விட்டது! பெயர்த்து எடுக்க முடியாமல் வெறுங்கையுடன் இலங்கை திரும்பினான்.

பின்னர் அன்னையின் அறிவுறுத்தல் பேரில், சாட்டை சொடுக்கி, சிவாலயம் அமைக்க முடியாது என்று உணர்ந்து வேண்ட, ஈசன் அவனுக்கு மூன்று லிங்கங்களைக் கொடுத்து அருளினார். திருகோண மலையின் மூன்று கோணங்களிலும் நிறுவிட, இராவணன் நிறுவிய சிவலிங்கங்கள் ஆனது!

இதோ சம்பந்தர் திருகோணமலையைப் பாடும் தேவாரம்:
குற்றம் இலாதார் குரைகடல் சூழ்ந்த, கோண மாமலை அமர்ந்தாரைக்
கற்றுணர் கேள்விக் காழியர் பெருமான், கருத்துடை ஞான சம்பந்தன்
உற்ற செந்தமிழார் மாலை ஈர்-ஐந்தும் உரைப்பவர் கேட்பவர் உயர்ந்தோர்
சுற்றமும் ஆகித் தொல் வினை அடையார் தோன்றுவர் வானிடைப் பொலிந்தே.

மேலோட்டமான பொருள்:
குற்றம் இல்லாத குடிமக்கள் வாழ்கின்ற ஊர். ஒலிக்கும் கடல் சூழ்ந்த ஊர். கோணேஸ்வரம் என்னும் இந்தத் திருக்கோணமலை. அங்கு அமர்ந்துள்ள சிவ பெருமானை, கற்ற ஞானமும், கேள்வி ஞானமும் கொண்ட இருவருமே வந்து வணங்குகிறார்கள்.

அவர்களின் தலைவனான காழியர் கோன் ஞானசம்பந்தன் என்னும் நான், செந்தமிழில் பதிகம் பாடினேன். கோணமலை என்பது செந்தமிழ் மலை! அந்த மலை மீதான இப்பதிகத்தை உரைப்பவர், கேட்பவர் என்று அத்தனை பேரும் உயர்வு காண்பார்கள்! அவர்களுடைய சுற்றமும் நலம் பெறும்! தொல் வினை நீங்கப் பெறுவர். பொலிவுடன் விளங்குவார்கள்!
கேதீஸ்வரர்-கெளரி அம்மை
சம்பந்தர் நற்றமிழால் பதிந்த இந்த பதிகம் பொய்யாகாமல், ஈழத்தில் பொலிவு தோன்றும் நாள் எந்நாளோ?

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா என்பதால்....
இலங்கைக்கும் இறைவா போற்றி!

சிவோஹம்!
திருச்சிற்றம்பலம்!



இந்த ஆலயங்களுக்கு நான் நேரில் சென்றதில்லை. சென்றவர்கள் சிலாகித்துச் சொல்லக் கேட்டிருக்கேன். தேவாரம் படித்துள்ளேன். அவ்வளவே! அதனால் ரசித்துச் சொல்ல முடியுமா என்ற தயக்கம்.
உடனே பல விவரணங்களையும், படங்களையும் இந்தப் பதிவுக்காகத் தந்துதவினாள் என் தோழி! தமிழ்நாட்டு மருமகள் ஆகும் சதாயினி நடேசபெருமானுக்கு என் நன்றி! :)


ஓம் நமசிவாயா

நாம் எல்லோரும் உய்ய அம்மையும் அப்பனும் திருக்கயிலை மலையிலே யோகத்திலே அமர்ந்து புவனம் முழுவதையும் இயக்கிக்கொண்டிருக்கின்றனர். அவரது மந்திரமே திருவைந்தெழுத்தாகிய ஓம் நமசிவாய மந்திரம், இம்மந்திர உச்சாடனத்துடன் துவங்கும் இப்பாடல் அவனே எல்லாம் ஆனவர் என்பதை சுட்டிக் காட்டுகின்றது.

மூன்று காலங்கள் அவரது முக்கண்கள்.

நான்கு வேதங்களும் அவரது வழி

ஐந்து பூதங்களும் ஐயனின் முகங்கள்,

ஆறு காலங்கள் அவரது ஆடைகள்.

திருக்கயிலாய் மலையில் மலையரசன் பொற்பாவையை ஐயன் மணந்த போது எடுத்த எழு அடிகளும் ஏழு சுரங்கள்.

எட்டு திசைகளும் ஐயனின் பார்வை.

ஐயன் சொற்களே நவ ரசங்கள்.

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருந்ஜோதியான திருக்கயிலை நாதரை கணபதி, முருகன்முதல், முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பதெண்ணாயிரம் ரிஹிகளும், மற்றுமுள்ள எண்பத்து நாலு லெட்சம் ஜீவராசிகளும் அவரது திருவடிகளில் விழுந்து அவர் அருள் பாலிக்க வேண்டுகின்றது என்பதை அருமையாக சொல்லும் பாடல்.


பாடல் இடல் பெற்ற திரைப்படம் சலங்கை ஒலி , பாடலையும் கேட்டும், சைலஜாவின் நடனத்தையும் பார்த்து மகிழுங்கள் அன்பர்களே.

பெண் ஒருத்தி பாடிய தேவாரம்!

 

மக்களே, நால்வர் பாடிய தேவாரப் பாடல்கள் சிலவற்றைச் சிவன் பாட்டில் இது வரை பார்த்தோம்! அத்தனை பேரும் ஆண்கள்! இன்னிக்கி ஒரு பெண் பாடிய தேவாரத்தைப் பார்க்கலாமா?
நாயன்மார்கள் 63 பேரில் மூன்று பேர் பெண்கள்! ஆனால் ஒரே ஒரு பெண் மட்டும் தான் வாய் திறந்து பாடியுள்ளார்! அதுவும் ஆண்களை விட மிக நுட்பமாகத் தோண்டி துருவி, தத்துவ விசாரணை செய்துள்ளார்!

மூன்று பெண் நாயன்மார்களில்...
* இசை ஞானியார் = சுந்தர மூர்த்தி சுவாமிகளின் அம்மா!
* மங்கையர்கரசியார் = பாண்டியன் மனைவி!
ஆனால் இவர்கள் இருவரும் பாட்டாக எதுவும் எழுதவில்லை! நல்லடியார்கள்! தொண்டில் சிறந்தவர்கள்! அவ்வளவு தான்!

ஆனால் இது போன்ற பின்புலம் ஏதும் இல்லாமல் ஒரு பேதைப் பெண் நாயன்மார் ஆனார்!
கணவன், "இன்னொரு மாம்பழம் எங்கே என்று கேட்டால்", "அதாங்க இது" என்று நகைச்சுவையாகவோ, இல்லை "ருசியா இருந்தது; அதான் நானே தின்று விட்டேன்" என்றோ பொய் சொல்லக் கூடத் தெரியாத பேதை!

"சிவனடியார்க்கு கொடுத்து விட்டோமே, இப்போது கணவன் இன்னொன்றும் கேட்கிறாரே, என்ன செய்வது?" என்று கலங்கிய ஒரு சாதாரண வீட்டுப் பெண்மணி இவள்!
கணவன் முகக் குறிப்புக்கு நடப்பவள்! ஆனால் கணவன் இவளின் அகக் குறிப்புக்கு நடந்தானா? வெட்கக்கேடு! :(


மனைவி புனிதள் என்றால், கணவன் தள்ளிக் கொள்வானா?
கணவன் புனிதன் என்றால், மனைவி தள்ளிக் கொள்வதில்லையே!


அவன் யோகம், வேள்வி, சரியை, கிரியை என்று எல்லாம் செய்து முடித்த பின்னர், அவளுடன் "அதுவும்" செய்கிறானே! அவளும் குடும்பம் நடாத்திக் குழந்தை பெற்றுக் கொடுக்கிறாளே?

இங்கே மனைவி புனிதள் என்று ஆனவுடன், சொல்லாமல் கொள்ளாமல் வேற்றூருக்குச் சென்று விட்டான் பரமதத்தன்! போதாக்குறைக்கு அவள் பேரே புனிதவதி!
இவனோ இன்னொருத்தியைக் கட்டிக் கொண்டு, குழந்தையுடன் வந்து நிற்கிறான்! கேட்டால், அந்தக் குழந்தைக்கும் புனிதவதி என்றே "பய-பக்தியுடன்" பெயரும் இட்டானாம்!

உற்றார், உறவினர், சமூகம் யாரும் எதுவும் கேட்க முடியாது! கேட்கப் போனாலும், இளம்பெண் புனிதவதி தான் புனிதள் ஆயிற்றே! குடும்பம் நடத்த முடியுமா? கும்பிடத் தானே முடியும்? எல்லாரும் காலில் வீழ்ந்து கும்பிடுங்கள்! :(

தில்லைச் சிற்றம்பலத்து இறைவனின் மனைவியும் ஒரு புனிதள் தான்! அந்தப் புனிதள் தான் சிவ-"காமி" ஆகவும் இருக்கிறாள்! குடும்பமும் நடத்துகிறாளே!
அதைப் பாடிப்பாடிக் கும்பிடும் ஒரு சமூகத்துக்கு, புனிதவதியின் நியாயம் மட்டும் தெரியாமல் போனது ஏனோ? ஆனால் இன்றும் காரைக்காலில் "மாங்கனி உற்சவம்" மட்டும் வெகு ஜோராக நடத்துகிறார்கள்! :(

புனிதளக்குத் தான் மண வாழ்வு ஒவ்வாதே! அவளும் வேண்டிக் கொண்டாள்! ஈசனும் உடன்பட்டு விட்டான்! பேயாய் மாறி விட்டாள்!
ஒரு இளம்பெண், இன்னும் அம்மா கூட ஆகவில்லை...
அவள் பேயாக மாறித் திரிகிறாள் என்றால்?....

பதிகத்தைப் படிச்சிப் பாருங்க! அந்தக் காலப் பேய் மகளிர் பற்றி அம்மையார் பாட்டில் சொல்லுவாங்க! கண்ணுல தண்ணி தான் வரும்!

* ஆண்டாளின் துணிவு, இந்தப் பேதைப் பெண் புனிதவதிக்கு இல்லாமல் போனது ஏன்?
* ஆண்டாளின் வித்தியாசமான எண்ணத்தை ஏற்றுக்கொண்ட சமூகத்தின் ஒரு பகுதி, புனிதவதியை மட்டும் புறம் தள்ளியது ஏன்?
ஆசாரமான குடும்பங்களின் கட்டுக் கோப்பா? ஆணாதிக்கமா? சமூக விதியா? எது? எது?

* ஆணின் வயது ஆன்மிகத்துக்குத் தடை இல்லை என்று குழந்தை சம்பந்தரால் காட்ட முடிகிறது!
* பெண்ணின் வயது ஆன்மிகத்துக்குத் தடை இல்லை என்று பேதை புனிதவதியால் காட்ட முடியாதோ?

ஆண்டாளின் கவிதைகளைச் சுவைத்துச் சுவைத்து மகிழும் அடியேன், புனிதவதியின் கவிதைகளில் நனைந்து நனைந்து கண்ணீர் வடித்தும் உள்ளேன்!
வைணவ இலக்கியத்தின் மொழி, சாதி, பெண்மை, சமூகம் என்று மதிக்கும் சாதாரண நடைமுறைக் கோட்பாடுகள்! - இவை தான் சைவக் குடும்பத்தில் பிறந்து ஊறிய என்னை, நாலாயிர ஈர்ப்புக்கும் ஒரு காரணமாகப் போய் விட்டது!



நாம் அம்மையாரிடம் வருவோம்!
யம்மா புனிதவதி, இனிக் காரைக்கால் "அம்மையார்" என்றே உன்னை அழைக்கிறோம்! ஈசனே உன்னை "அம்மா" என்று அழைத்து விட்டானே! நாங்கள் எம்மாத்திரம்?

காரைக்கால் அம்மையார் = சிறந்த கவிதை, மாறுபட்ட சிந்தனை!
தமிழ் இலக்கியத்துக்கு அந்தாதி என்ற புதுமையை முதலில் பிரபலப்படுத்திவர்களில் அம்மையாரும் ஒரு முன்னோடி!

ஆனால் அந்தக் குறியீட்டுக் கவிதைகளை அம்மையார் எப்போதோ தமிழில் செய்து விட்டார்! என்ன..... அது தேவாரம் என்னும் பக்தி இலக்கியத்துக்குள் ஒளிந்து கொண்டது! இன்னிக்கி அதில் ஒன்றைத் தான் நாம் தேவாரப் பதிவில் பார்க்கப் போகிறோம்!

அம்மையார் அத்தனை நாயன்மார்களிலும் காலத்தால் மிகவும் மூத்தவர்! சொல்லப் போனால், முதல் தேவாரமே அம்மையாருடையது தான் எனலாம்!
ஆனாலும் அம்மையாரின் நூல்கள், நூல் அமைப்பு கருதி, பதினோராம் திருமுறையில் தான் வைக்கப்பட்டுள்ளது!
* அற்புதத் திருவந்தாதி
* திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்
* இரட்டை மணிமாலை

அம்மையார் பாடல்களில் தில்லை பற்றிய குறிப்புகள் எல்லாம் இல்லை!
பிள்ளையார், முருகன் என்ற மற்ற தெய்வங்களைப் பற்றியும் அவர் எங்கும் குறிக்கவில்லை!
திருவாலங்காட்டைப் பற்றி மட்டுமே சில குறிப்புகள் வருகின்றன!
அதுவும் கோயில் போன்ற அமைப்பு எல்லாம் அப்போது இல்லை போலும்! உள்ளே போய் தான் கும்பிட வேண்டும் என்று இல்லாத நிலை!
ஆல மரக் காடான ஆலங்காட்டிலேயே ஈசனைத் தரிசித்து மகிழ்கிறார் அம்மையார்!

மாதொரு பாகன் வடிவத்தைத் தான் அம்மையார் மிகவும் போற்றுகிறார்! பெண்மைக்குச் சிவனார் தந்த சமத்துவத்தை, சைவச் சமூகமும் தர வேண்டும் என்ற அவரின் ஆழ்-மன ஏக்கமோ? என்னவோ?
* இராவணன் செருக்கு அழித்தது,
* முப்புரம் எரித்தல்,
* ஆலகால விடம் உண்ணல்,
* ஈசனின் அடி முடிகளைத் திருமாலும் அயனும் தேடியது
என்று ஆங்காங்கு பாடினாலும், அம்மையார் பெரிதும் பாடுவது, ஈசனின் மயானத் திருக்கோல நடனமே!

சாம்பல் பூசுதல், பேய் வாழ் காட்டகத்தே ஆடுதல் என்று ஈசனைக் கேலி பேசுவது போல், யாரேனும் அம்மையாரையும் கேலி பேசி இருக்கக் கூடும்! அதான் அம்மையார் பேயாகவே, சிவ கணமாகவே மாறி விட்டார் போலும்!
உளவியல் அறிஞர்களுக்கு அம்மையார் வாழ்க்கை ஒரு பெரும் ஆய்வுப் பொக்கிஷம்!

வாங்க, அம்மையார் நகைச்சுவையிலும் எப்படிக் கலக்குகிறார்-ன்னு இன்னிக்கி பார்க்கலாம்! ஆன்மீகத்தில் நகைச்சுவையும் வைத்து,
அதற்குள்ளே பெரும் உளவியல் கருத்தும் வைத்து,
குறியீட்டுக் கவிதை ஆக்குகிறார் தேவாரப் பதிகத்தை!



சிவனார் கழுத்தில் இருக்கும் பாம்புக்கு என்ன பேருங்க? அன்பர்கள் யாரேனும் சொல்லுங்கள்!அந்தப் பாம்புக்குச் சுத்தமா அறிவே இல்லை!

ஹிஹி! இது என்ன தடாலடி? பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது - கருடா செளக்கியமா? என்று கண்ணதாசன் தான் பின்னாளில் பாடினார்! அதற்கு கருடனும் தக்க பதில் கொடுத்துருச்சாம்! ஆனால் அம்மையார் சொல்வதைப் பாருங்கள்!

திருமார்பில் ஏனச் செழு மருப்பைப் பார்க்கும்!
பெருமான் பிறைக் கொழுந்தை நோக்கும்! - ஒருநாள்
இது மதி என்று ஒன்றாகத் தேறா(து)!
அது மதி ஒன்று இல்லா அரா!

ஏனம்=பன்றி; மருப்பு=கொம்பு
பிறைக் கொழுந்து=பிறைச் சந்திரன்; மதி=நிலவு/அறிவு;
அரா=அரவு (பாம்பு)

திருமார்பில் பன்றியின் கொம்பை மாலையாக அணிந்து இருக்கான்.
திருமுடியில் வெண் திங்களைப் பிறை சூடி இருக்கிறான் பெம்மான்!
இந்தப் பாம்பு என்ன செய்யுது? மேலும் கீழும் பார்க்குது!

மேலே பார்த்தால் வெண் பிறைச் சந்திரன்!
கீழே பார்த்தால் வெண் பன்றிக் கொம்பு!
இப்படி மாறி மாறிப் பார்த்து, ஒரு நாளும் எது உண்மையான மதி என்று தேறவே தேறாது!
மதி இல்லாத பாம்பே! மதி பெறாத வரை, நீ தேறவே மாட்டாய்!

இதில் குறியீடு என்னன்னு கேக்கறீங்களா?.....
பாம்பு எதற்குக் குறியீடு? உடல்-உள்ளத்துக்கு!
மனித வேட்கைகளுக்கு! மனித சூட்சுமத்துக்கு!
இன்னும் வெளிப்படையாகச் சொன்னால் பாம்பு = மனிதனின் "காமம்"!

இன்றும் பல மருத்துவக் கல்லூரிகளின் இலச்சினையைப் பாருங்கள்! ஒரு தண்டத்தைச் (கொம்பை) சுற்றிப் பாம்பு இருக்கும்! இந்தியாவில் மட்டும் தானா இது? பல வெளிநாடுகளிலும் கூட இது தான் சின்னம்!
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்தி என்கிறது ஒளவையின் விநாயகர் அகவல்!

இந்தக் காமப் பாம்பு என்ன செய்கிறது? பார்த்துப் பார்த்து மயங்குகிறது!

கீழே இருப்பது சூடான பன்றிக் கொம்பு என்றும் தெரியும்!
மேலே இருப்பது குளிர்ந்த சந்திரன் என்றும் தெரியும்!
இரண்டுமே ஒரே தோற்றம் கொண்டவை, ஆனால் பன்றிக் கொம்பு போலி என்றும் தெரியும்!
இருந்தாலும், இது பார்த்துப் பார்த்து மயங்குகிறது!

பன்றிக் கொம்பு கீழான இச்சை என்றாலும், அதுவும் இந்த மனத்துக்கு வேண்டி இருக்கு!
பிறைச் சந்திரன் மேலான பொருள் என்று தெரிந்தாலும், மேலே செல்ல எண்ணாது, கீழேயும் பார்த்துப் பார்த்து "மயங்கிக்" கொண்டே இருக்கு!
ஒரு நாளும், இது மதி என்று "ஒன்றாகத்" தேறாது!
மதி ஒன்று இல்லாத மனது!

சிவனாரின் அழகான திருக்கோல வர்ணனையில், "முட்டாள் பாம்பே" என்று யாரேனும் சொல்லுவாங்களா? அதான் Icon Poetry! குறியீட்டுக் கவிதை!
* திருக்கோல அழகை வர்ணிப்பது போல் வர்ணிக்கிறார்! ஆனால் முழுமையாக வர்ணிக்காமல், "முட்டாள் பாம்பே" என்று ஒரே அறையாக அறைந்து விடுகிறார்!
* அதே சமயம் மனதின் கீழான இச்சை, மேலான நெறி என்றும் ஒரு வார்த்தை கூட வெளிப்படையாகச் சொல்லவில்லை! "முட்டாள் பாம்பே" என்ற ஒரே சொல்லில், அத்தனை உள்ளுறையும் வைத்து விடுகிறார்!

இதுவே Iconographic Poetry! குறீயீட்டுக் கவிதை! பாடுவது இப்போது அம்மையார் ஆகி விட்ட ஒரு சின்னப் பெண்!

எல்லார்க்கும் பொதுவில் நடம் இடுகின்ற சிவமே!
எங்கள் புனிதவதிக்காக, ஆலங்காட்டில் நடம் இட்டனையோ சிவமே!

காரைக்கால் அம்மா திருவடிகளே சரணம்!
திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!