கடவுளைக் காண என்ன செய்ய வேண்டும்?
ஒரு மனிதனுக்கு கடவுளைக் காண வேண்டும் என்று ஆசை அவரை எப்படி சந்திப்பது ? கோவிலுக்குப் போ ! என்றார்கள். உடனே புறப்பட்டான். போகும் வழியில் ஒரு ஞானியை சந்தித்தான். அவர் கேட்டார். எங்கே போகிறாய் ? கடவுளைக் காண போகிறேன் ! எங்கே ? கோவிலில் ! அங்கே போய்... ? அவரை வழிபடப் போகிறேன் ! அவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா ? தெரியாது ! எந்த வகையிலும் நீ கடவுளை அறிந்திருக்கவில்லை. அப்படி இருக்கும்போது எப்படி நீ அவரை வழிபட முடியும் ? அப்படியென்றால் ... ? உன்னுடைய வழிபாடு வெறும் சடங்காகத்தான் இருக்க முடியும் ! மனிதன் குழம்பிப் போனான். ஞானி தெளிவுபடுத்தினார். ஏ, மனிதனே... நீ செய்யப் போவது உண்மையான வழிபாடு அல்ல. இன்றைக்கு மனிதர்கள் வழிபாடு என்கிற பெயரில் ஆண்டவனிடம் தங்கள் ஆசைகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தங்களது கோரிக்கைகளைக் குரல் மூலம் பட்டியலிட்டுச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தங்களது புகார்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். நான் கடவுளிடம் அன்பு செலுத்த விரும்புகிறேன். நீ அறியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும் ? அப்படியானால்... ஆண்டவனை சந்திக்க என்னதான் வழி ? அவரை நீ சந்திக்க முடியாது. உணர முடியும் ! அதற்கு வழி ?
தியானம். தியானத்துக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் உண்டா ? இல்லை ! மனிதன் வியப்போடு நிமிர்ந்தான். அவர் சொன்னார் : தியானம் உன் மனத்தோடு சம்பந்தப்பட்டது. அது உனக்குள் ஓர் ஆழ்ந்த மௌனத்தை உண்டு பண்ணும், அப்படிப்பட்ட ஒரு மௌன நிலையில், கடவுள் இருப்பதை நீ உணரத் தொடங்குவாய். உண்மையான தியானத்தின் பின்விளைவே வழிபடுதல் ஆகும். தியானம் செய்பவன் மட்டுமே கடவுளை உணர முடியும். அந்த மனிதனும் ஞானியும் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே, வெளிநாட்டுக்காரர் ஒருவர் அங்கே வந்தார். ஞானியின் முன்னால் வந்து பணிபோடு நின்றார். தன்னுடைய தேவையைச் சொன்னார். நான் விரும்புவது அமைதி , ஞானி சொன்னார்.
முதல் இரண்டு வார்த்தைகளை விட்டு விலகு. மூன்றாவது வார்த்தையை நெருங்கலாம் எனக் கூற, வந்தவர் யோசித்தார். நான் என்கிற அகங்காரத்தை விலக்குங்கள். நான், என்னுடையது என்கிற ஆசைகளை விலக்குங்கள். அமைதி என்கிற இறைநிலையை நீங்கள் நெருங்கிவிடுவீர்கள். வெளிநாட்டுக்காரருக்கு விளக்கம் கிடைத்தது. மனநிறைவோடு திரும்பிச் சென்றார். அந்த அளவுக்கு வேறே யாருக்கும் கிடைச்சிருக்காது!
இறுதியில் மனிதன் எழுந்தான். திரும்பி நடந்தான். ஞானி கேட்டார். எங்கே போகிறாய் ? வீட்டுக்கு ! கோவிலுக்குப் போகவில்லையா ? இல்லை ! அங்கே போக வேண்டும் என்றுதானே புறப்பட்டு வந்தாய் ? ஆண்டவனை உணர்ந்தபிறகுதான் அவரை வழிபட முடியும் என்பதைப் புரிந்து கொண்டேன். நான், என்னிடம் இருந்து விலகினால் இறைவனை நெருங்கலாம் என்கிற உண்மையை தெரிந்து கொண்டேன். ஞானி கைகளை உயர்த்தினார். ஆன்மிகம் என்பது நெருங்குவது அல்ல, விலகுவது ! எவ்வளவு தூரம் நம்மிடமிருந்து விலகியிருக்கிறீர்களோ, அவ்வளவு தூரம் கடவுளை நெருங்கியிருக்கிறீர்கள் என்பது பொருள் !
இறை அருளைப்பெற என்ன செய்ய வேண்டும்?
வாழ்க்கைக்கு ஒழுக்கம் மிக அவசியம். ஒழுக்கமே ஒவ்வொருவரது வாழ்க்கையையும் மேம்படுத்தும். ஒழுக்கமுள்ள வாழ்வு வாழ இறைவனின் அருளும் நமக்குத் தேவை. ஓரிடத்தில் விளக்கு இருப்பது நமக்குத் தெரிந்தால் தானே, அந்த விளக்கை ஏற்றி வைத்து நம்மால் வெளிச்சத்தைப் பெற முடியும். விளக்கு எங்கே இருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ளவும் நமக்கு ஒரு வெளிச்சம் தேவைப்படுவதைப் போல, இறைவனை வணங்கவும், வாழவும் இறைவனின் அருள் நமக்குத் தேவை. இதை மாணிக்கவாசப் பெருமான் தமது சிவபுராணத்தில்,
அவனருளாலே அவன்தாள் வணங்கி
சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
முந்தைவினை முழுதும் ஓய உரைப்பன் யான்
எனப் பாடி பரவசப்படுகிறார். இறைவனை வழிபடவும் இறைவனின் அருள் இருந்தால் தான் முடியும். அப்படிப்பட்ட இறையருளைப் பெற ஒழுக்கம் நிறைந்த வாழ்வு நமக்கு வழிகாட்டுகிறது. அதற்கு நாள்தோறும் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும். நல்லனவற்றையே எண்ணி, நல்லனவற்றையே பேச வேண்டும். அப்படிச் செய்யும் போது மனம் இறைவன் அருள்பெற ஏதுவாகிறது. மனம் பண்பட்டவுடன் இறையருள் அங்கே உதயமாகிறது. பண்பட்ட நிலம் பயிர்த்தொழிலுக்கு ஏற்றதாகிற மாதிரி, பண்பட்ட உள்ளம் வழிபாட்டுக்கு ஏற்றதாகிறது. அப்படி பண்பட்ட உள்ளத்தினை உடையவர்கள் தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, அந்த நேரத்தில் இறைவனை வழிபட வேண்டும். இறைவனிடம் இடைவிடாத பக்தி செலுத்த வேண்டும். நல்ல மனத்தையும் நல்ல சிந்தனையையும் அருளும்படி இறைவனிடம் நாம் வேண்டிக்கொள்ள வேண்டும். ஒழுக்கம் அவரவர் நிலைக்கு ஏற்றபடி மாறும்.
முனிவர்களின் ஒழுக்கம் துறவறம் மேற்கொள்வது; பண்டிதனின் ஒழுக்கம் தான் கற்றதை பிறருக்கு கற்றுக் கொடுப்பது; மாணவர்களின் ஒழுக்கம் குருவின் சொல்படி நடத்தல். இப்படி ஒழுக்கம் மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது. ஒழுக்கமான வாழ்வுக்கு மனம் அடங்கப் பெறல் வேண்டும். இறைவனை நினைக்கும்போது மட்டும் மனம் அடங்குகிறது. மனம் அடங்கினால் நம் அகங்காரத் துடிப்புகள் அடங்கி இறைவனுடன் ஒன்ற முடிகிறது. இறைவன் மட்டுமே இன்ப துன்பங்கள், விருப்பு வெறுப்புகள், லாப நஷ்டங்கள் நல்லது தீயதுகள் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டவன். வேறு உலகப் பொருள்களும், பந்தங்களும் அவற்றின் மீது பிரியம் வைக்கும் மனிதனையும் பந்தப்படுத்தி விடுகின்றன. அதனால் பிறவித் தளையில் சிக்கிக் கொண்டு தவிக்கிறான். எனவே, பற்று அற்றவனாகிய இறைவன் மீதே நாம் பற்று வைக்க வேண்டும். இறைவன் தன்னிடம் வந்து சேர்கின்ற இறையடியார்களைத் தன்னுடைய அருள் என்னும் தீயால் எரித்து, பாவங்களைப் போக்கி, தூய்மைப்படுத்துகிறான். அவனால் மட்டுமே அது முடியும். இறைவனை நினைப்பதால் இறைவனைப் போலவே ஆகிவிட முடியும். இறைவனைப் போன்று பேரானந்தமயமாய் விளங்க முடியும். இறைவன் நித்தியானந்தனாய் விளங்குபவன், அழிவு என்பதே இல்லாதவன்; அழியும் இயல்பு உடைய நம்மை அழியாமல் காக்க அவனால் மட்டுமே முடியும். அவன் தூய்மையே வடிவெடுத்தவன். வினைப்பயனால் விளைந்த பாவங்களைச் சுமந்து கொண்டிருக்கும் நம்மை பரிசுத்தமாக்க அவனால் மட்டுமே முடியும். அவன் மீது பக்தி செலுத்தி அவன் மயமாக மாற வாய்ப்பிருக்கும் போது ஏன் நாம் உலக விவகாரங்களில் சிக்கிக் கொண்டு திணற வேண்டும்? ஒழுக்கம் நிறைந்த வாழ்க்க வாழ்ந்து, மனத்தைத் தூய்மைப்படுத்தி அதனை இறைவன் உறையும் ஆலயமாக ஆக்குவோம்
தங்களது கோரிக்கைகளைக் குரல் மூலம் பட்டியலிட்டுச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தங்களது புகார்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். நான் கடவுளிடம் அன்பு செலுத்த விரும்புகிறேன். நீ அறியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும் ? அப்படியானால்... ஆண்டவனை சந்திக்க என்னதான் வழி ? அவரை நீ சந்திக்க முடியாது. உணர முடியும் ! அதற்கு வழி ?
தியானம். தியானத்துக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் உண்டா ? இல்லை ! மனிதன் வியப்போடு நிமிர்ந்தான். அவர் சொன்னார் : தியானம் உன் மனத்தோடு சம்பந்தப்பட்டது. அது உனக்குள் ஓர் ஆழ்ந்த மௌனத்தை உண்டு பண்ணும், அப்படிப்பட்ட ஒரு மௌன நிலையில், கடவுள் இருப்பதை நீ உணரத் தொடங்குவாய். உண்மையான தியானத்தின் பின்விளைவே வழிபடுதல் ஆகும். தியானம் செய்பவன் மட்டுமே கடவுளை உணர முடியும். அந்த மனிதனும் ஞானியும் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே, வெளிநாட்டுக்காரர் ஒருவர் அங்கே வந்தார். ஞானியின் முன்னால் வந்து பணிபோடு நின்றார். தன்னுடைய தேவையைச் சொன்னார். நான் விரும்புவது அமைதி , ஞானி சொன்னார்.
முதல் இரண்டு வார்த்தைகளை விட்டு விலகு. மூன்றாவது வார்த்தையை நெருங்கலாம் எனக் கூற, வந்தவர் யோசித்தார். நான் என்கிற அகங்காரத்தை விலக்குங்கள். நான், என்னுடையது என்கிற ஆசைகளை விலக்குங்கள். அமைதி என்கிற இறைநிலையை நீங்கள் நெருங்கிவிடுவீர்கள். வெளிநாட்டுக்காரருக்கு விளக்கம் கிடைத்தது. மனநிறைவோடு திரும்பிச் சென்றார். அந்த அளவுக்கு வேறே யாருக்கும் கிடைச்சிருக்காது!
பின் இவனிடம் கேட்டார் கடவுளுக்கு அருகில் இருப்பது போல் உணர்ந்து இருக்கிறாயா , அவன் உணர்ந்து என்ன பக்கத்தில் அமர்ந்தே இருக்கிறேன்
அப்படியா! ஞானி ஆச்சர்யமாய் கேட்க வந்தவன் தொடர்ந்தான் ஆமாம் !
ஸ்பெஷல் தரிசனம் ! 50 ரூபாய் டிக்கெட் ! சுவாமிக்கு நெருக்கமா போய் சந்நிதியிலே கொஞ்சநேரம் உட்கார முடிஞ்சிது ! அவன் முகத்திலே கடவுளை நெருங்கிவிட்ட பெருமிதம் ! ஞானி கேட்டார் : அப்படின்னா உனக்கும் கடவுளுக்கும் எவ்வளவு தூரம் ? ஒரு பத்தடி தூரம் இருக்கும் அவ்வளவுதான் ! உன் அளவுக்கு வேற யாரும் நெருங்கலையா ? இல்லை ! அந்த வகையில் பார்த்தால் உன்னைவிட கடவுளுக்கு நெருக்கமானவர் வேறொருவர் உண்டு ! யார் அவர் ? அங்கே இருக்கிற அர்ச்சகர் ! வந்தவன் முகத்தில் ஒரு சிறு மாற்றம். சரி சுவாமி, நான் வர்றேன் ! சோர்வோடு நடந்து போனான். அதன் பிறகும் விவாதம் தொடர்ந்தது. இறுதியில் மனிதன் எழுந்தான். திரும்பி நடந்தான். ஞானி கேட்டார். எங்கே போகிறாய் ? வீட்டுக்கு ! கோவிலுக்குப் போகவில்லையா ? இல்லை ! அங்கே போக வேண்டும் என்றுதானே புறப்பட்டு வந்தாய் ? ஆண்டவனை உணர்ந்தபிறகுதான் அவரை வழிபட முடியும் என்பதைப் புரிந்து கொண்டேன். நான், என்னிடம் இருந்து விலகினால் இறைவனை நெருங்கலாம் என்கிற உண்மையை தெரிந்து கொண்டேன். ஞானி கைகளை உயர்த்தினார். ஆன்மிகம் என்பது நெருங்குவது அல்ல, விலகுவது ! எவ்வளவு தூரம் நம்மிடமிருந்து விலகியிருக்கிறீர்களோ, அவ்வளவு தூரம் கடவுளை நெருங்கியிருக்கிறீர்கள் என்பது பொருள் !
இறை அருளைப்பெற என்ன செய்ய வேண்டும்?
வாழ்க்கைக்கு ஒழுக்கம் மிக அவசியம். ஒழுக்கமே ஒவ்வொருவரது வாழ்க்கையையும் மேம்படுத்தும். ஒழுக்கமுள்ள வாழ்வு வாழ இறைவனின் அருளும் நமக்குத் தேவை. ஓரிடத்தில் விளக்கு இருப்பது நமக்குத் தெரிந்தால் தானே, அந்த விளக்கை ஏற்றி வைத்து நம்மால் வெளிச்சத்தைப் பெற முடியும். விளக்கு எங்கே இருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ளவும் நமக்கு ஒரு வெளிச்சம் தேவைப்படுவதைப் போல, இறைவனை வணங்கவும், வாழவும் இறைவனின் அருள் நமக்குத் தேவை. இதை மாணிக்கவாசப் பெருமான் தமது சிவபுராணத்தில்,
அவனருளாலே அவன்தாள் வணங்கி
சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
முந்தைவினை முழுதும் ஓய உரைப்பன் யான்
எனப் பாடி பரவசப்படுகிறார். இறைவனை வழிபடவும் இறைவனின் அருள் இருந்தால் தான் முடியும். அப்படிப்பட்ட இறையருளைப் பெற ஒழுக்கம் நிறைந்த வாழ்வு நமக்கு வழிகாட்டுகிறது. அதற்கு நாள்தோறும் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும். நல்லனவற்றையே எண்ணி, நல்லனவற்றையே பேச வேண்டும். அப்படிச் செய்யும் போது மனம் இறைவன் அருள்பெற ஏதுவாகிறது. மனம் பண்பட்டவுடன் இறையருள் அங்கே உதயமாகிறது. பண்பட்ட நிலம் பயிர்த்தொழிலுக்கு ஏற்றதாகிற மாதிரி, பண்பட்ட உள்ளம் வழிபாட்டுக்கு ஏற்றதாகிறது. அப்படி பண்பட்ட உள்ளத்தினை உடையவர்கள் தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, அந்த நேரத்தில் இறைவனை வழிபட வேண்டும். இறைவனிடம் இடைவிடாத பக்தி செலுத்த வேண்டும். நல்ல மனத்தையும் நல்ல சிந்தனையையும் அருளும்படி இறைவனிடம் நாம் வேண்டிக்கொள்ள வேண்டும். ஒழுக்கம் அவரவர் நிலைக்கு ஏற்றபடி மாறும்.
முனிவர்களின் ஒழுக்கம் துறவறம் மேற்கொள்வது; பண்டிதனின் ஒழுக்கம் தான் கற்றதை பிறருக்கு கற்றுக் கொடுப்பது; மாணவர்களின் ஒழுக்கம் குருவின் சொல்படி நடத்தல். இப்படி ஒழுக்கம் மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது. ஒழுக்கமான வாழ்வுக்கு மனம் அடங்கப் பெறல் வேண்டும். இறைவனை நினைக்கும்போது மட்டும் மனம் அடங்குகிறது. மனம் அடங்கினால் நம் அகங்காரத் துடிப்புகள் அடங்கி இறைவனுடன் ஒன்ற முடிகிறது. இறைவன் மட்டுமே இன்ப துன்பங்கள், விருப்பு வெறுப்புகள், லாப நஷ்டங்கள் நல்லது தீயதுகள் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டவன். வேறு உலகப் பொருள்களும், பந்தங்களும் அவற்றின் மீது பிரியம் வைக்கும் மனிதனையும் பந்தப்படுத்தி விடுகின்றன. அதனால் பிறவித் தளையில் சிக்கிக் கொண்டு தவிக்கிறான். எனவே, பற்று அற்றவனாகிய இறைவன் மீதே நாம் பற்று வைக்க வேண்டும். இறைவன் தன்னிடம் வந்து சேர்கின்ற இறையடியார்களைத் தன்னுடைய அருள் என்னும் தீயால் எரித்து, பாவங்களைப் போக்கி, தூய்மைப்படுத்துகிறான். அவனால் மட்டுமே அது முடியும். இறைவனை நினைப்பதால் இறைவனைப் போலவே ஆகிவிட முடியும். இறைவனைப் போன்று பேரானந்தமயமாய் விளங்க முடியும். இறைவன் நித்தியானந்தனாய் விளங்குபவன், அழிவு என்பதே இல்லாதவன்; அழியும் இயல்பு உடைய நம்மை அழியாமல் காக்க அவனால் மட்டுமே முடியும். அவன் தூய்மையே வடிவெடுத்தவன். வினைப்பயனால் விளைந்த பாவங்களைச் சுமந்து கொண்டிருக்கும் நம்மை பரிசுத்தமாக்க அவனால் மட்டுமே முடியும். அவன் மீது பக்தி செலுத்தி அவன் மயமாக மாற வாய்ப்பிருக்கும் போது ஏன் நாம் உலக விவகாரங்களில் சிக்கிக் கொண்டு திணற வேண்டும்? ஒழுக்கம் நிறைந்த வாழ்க்க வாழ்ந்து, மனத்தைத் தூய்மைப்படுத்தி அதனை இறைவன் உறையும் ஆலயமாக ஆக்குவோம்
No comments:
Post a Comment