"சுந்தரேஸ்வரர் -மீனாட்சி திருக்கோவில்"
* அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோவில் *
.
மூலவர் : மீனாட்சி சுந்தரேஸ்வரர், சொக்கநாதர்
அம்மன்/தாயார் : மீனாட்சி, அங்கயற்கண்ணி
தல விருட்சம் : கடம்ப மரம்
தீர்த்தம் : பொற்றாமரைக்குளம், வைகை, கிருதமாலை, தெப்பக்குளம், புறத்தொட்டி
ஆகமம்/பூஜை : காரண
பழமை : 2000-3000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : ஆலவாய், கூடல், நான்மாடக்கூடல், கடம்பவனம்
ஊர் : மதுரை
மாவட்டம் : மதுரை
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்: -
சம்பந்தர், திருநாவுக்கரசர்
அம்மன்/தாயார் : மீனாட்சி, அங்கயற்கண்ணி
தல விருட்சம் : கடம்ப மரம்
தீர்த்தம் : பொற்றாமரைக்குளம், வைகை, கிருதமாலை, தெப்பக்குளம், புறத்தொட்டி
ஆகமம்/பூஜை : காரண
பழமை : 2000-3000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : ஆலவாய், கூடல், நான்மாடக்கூடல், கடம்பவனம்
ஊர் : மதுரை
மாவட்டம் : மதுரை
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்: -
சம்பந்தர், திருநாவுக்கரசர்
தேவாரப்பதிகம்,
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
செந்துவர்வாய் உமை பங்கன் திருஆலவாயான் திருநீறே.
திருஞானசம்பந்தர்,
தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டுதலங்களில் இது முதலாவது தலம்.
தல சிறப்பு:-
சுந்தரேஸ்வரருக்கு மேல் உள்ள விமானம் இந்திரனால் அமைக்கப்பட்டது. இந்திரன் தனக்கு நேர்ந்த கொலைப்பாவத்தை போக்க பல தலங்களுக்கு சென்று வந்தான். அப்படி வரும்போது சிவனின் திருவிளையாடலால் கடம்பவனமாகிய இத்தலத்தில் ஓர் அழுகிய சுயம்புலிங்கத்தை கண்டு பூசித்து வழிபட பாவம் நீங்கியது. எனவே இந்திர விமானத்துடன் கூடிய இந்த பெருங்கோயிலை கட்டினான் என்பர். எனவே இது இந்திர விமானம் என அழைக்கப்படுகிறது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இத்தலம் மிகவும் முக்கியமானது.இந்த சக்தி பீடத்திற்கு ராஜமாதங்கி சியாமள பீடம் என்று பெயர். இங்குள்ள மீனாட்சி அம்மன் சிலை முழுவதும் மரகதக்கல்லால் ஆனது. 18 சித்தர்களில் சுந்தரானந்தர் அடங்கிய தலங்களுள் ஒன்று. தழிழ்நாட்டில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்ற பெயருடைய 366 கோயில்களில் முதன்மையானது. இத்தலத்தினை பூலோக கைலாசம் என்றும், தலத்தின் பெயரை படித்தாலோ, கேட்டாலோ முக்தி கிடைக்கும் என்றும் கூறுவர். பொற்றாமரைக்குளம் : நந்தி மற்றும் பிற தேவர்களின் வேண்டுகோளின்படி சிவன் தமது சூலத்தால் பூமியில் ஊன்றி உண்டாக்கியதே இந்தக் குளம் . கோயிலுக்குரிய தீர்த்தங்களில் முதன்மையானது. சிவகங்கை என்றும் பெயர். இந்திரன் தான் பூஜிப்பதற்கு பொன் தாமரையைப் பெற்ற இடம். இந்தக்குளத்தில் அமாவாசை, மாதப் பிறப்பு, கிரகணகாலம், வியதிபாதம் ஆகிய புண்ணிய காலங்களில் நீராடி இறைவனைப் பூஜித்தால் வேண்டும் சித்திகளைப்பெறலாம் என்பது ஐதீகம். இக்குளத்தை சுற்றி சிவனின் 64 திருவிளையாடல்களும் சித்தரிக்கப்பட்டுள்ளன. திருக்குறளின் பெருமையை நிலை நாட்டி சங்கப்பலகை தோன்றிய இடம்.
மீனாட்சி அங்கயற்கண்ணி:-
இங்குள்ள அம்மனின் பெயர் மீனாட்சி. தமிழில் அங்கயற்கண்ணி. மீன் போன்ற விழிகளை உடையவள் என்பது பொருள். மீன் தனது முட்டைகளைத் தன் பார்வையினாலேயே தன்மயமாக்குவதைப்போல அன்னை மீனாட்சியும் தன்னை தரிசிக்க வரும் அடியவர்களை தன் அருட்கண்ணால் நோக்கி மகிழ்விக்கிறார்.
மீன் கண்ணுக்கு இமையில்லாமல் இரவும் பகலும் விழித்துக் கொண்டிருப்பது போல தேவியும் கண் இமையால் உயிர்களை எப்போதும் காத்து வருகிறார்.
அன்னை மீனாட்சிக்கு பச்சைத்தேவி, மரகதவல்லி, தடாதகை, அபிடேகவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித்துறையவள், கோமகள், சுந்தரவல்லி, பாண்டிப்பிராட்டி, மதுராபுரித்தலைவி, மாணிக்கவல்லி, மும்முலைத் திருவழுமகள் போன்ற பெயர்களுடன் இன்னும் பல பெயர்களும் உள்ளன.
இந்த பூமியில் புகழ்பெற்ற நாயனார் நீண்ட நாள் ஆட்சி செய்து பின் சிவனின் திருவடியை சேர்ந்தார்.
முத்தமிழ் கோயில் :-
கோயிலுக்குள் உள்ள சிலைகளும், பொற்றாமரைக்குளமும், விமானங்களும் சிற்பத்திறனில் சிறந்து விளங்குகின்றன. மூர்த்திகளின் உருவங்களும் பேசாத பேச்சில் பேசும், சில துõண்களும் சிலைகளும் இசை பாடும். இலக்கியப் பாடல்களும், சுதைகளும், சித்திரங்களும் ஆங்காங்கு தீட்டப்பெற்றுள்ள திருவிளையாடல்களை நடித்துக்காட்டும். நாடகச் சிற்பங்களும் நடனச் சிலைகளும்
உள்ளன. எனவே முத்தமிழுக்குரிய இயல், இசை, நாடகங்களைக் காட்டும் கலைக்கோயிலாகவும், சிலைக்கோயிலாகவும் மதுரைக்கோயில் திகழ்கிறது.
பொற்றாமரைக் குளம்
இந்திரன் தான் பூஜிப்பதற்குப் பொன் தாமரை மலரைப் பெற்ற இடம். திருக்குறளின் பெருமையை நிலைநாட்டிய சங்கப்பலகை தோன்றிய தலம். ஒரு நாரைக்கு பெருமான் அருளிய வரத்தின்படி இக்குளத்தில் மீன்களும், நீர்வாழ் உயிரினங்களும் இல்லாதிருப்பது இன்றும் ஓர் அதிசயம்
வெளி ஆவரணமும் உள் ஆவரணமும்:-
மதுரையில் கோயிலுக்கு வெளியில்நான்கு திசைகளிலும் நான்கு புகழ் பெற்ற ஆலயங்கள் உள்ளன. இவை நகருக்கு உள்ளே இருப்பதால் உள் ஆவரணம் எனப்படும். மதுரைத்தலத்திற்கு வெளியில் உள்ள நான்கு திருத்தலங்கள் வெளி ஆவரணம் எனப்படும். மதுரைக்குத் தெற்கில் திருப்பரங்குன்றமும் மேற்கில் திருவேடகமும் வடக்கில் திருவாப்பனுõரும் கிழக்கில் திருப்புவனமும் உள்ளன. இவை வெளி ஆவரணமாகும்.
இதுபோல மதுரைத் தலத்திற்குள்ளாக உள்ள திருக்கோயில்கள் உள் ஆவரணம் ஆகும். வடக்கு திசையில் குபேரன் வழிபட்ட பழைய சொக்கநாதர் கோயில், மேற்கு திசையில் சிவபெருமானே தன்னைத்தான் அர்ச்சித்த மூர்த்தியாக வழிபட்ட இம்மையில் நன்மை தருவார் கோயில், கிழக்கு திசையில் வெள்ளை யானை வழிபட்ட ஐராவத நல்லுர் முக்தீசுவரர் கோயில், தெற்கில் எமன் வழிபட்ட தென்திருவாலவாய்க் கோயில் ஆகியவை நகருக்கு உள்ளே அமைந்த உள்ஆவரணக்கோயில்களாகும்.
தலபெருமை:-
உலகப்புகழ் பெற்ற சிவாலயம்:-
பாண்டிய மன்னனாக அங்கயற்கண்ணியாம் அன்னை மீனாட்சி அம்பிகை பிறந்து நல்லாட்சி செய்யும் பதி.சிவபெருமான் 64 திருவிளையாடல்கள் நிகழ்த்திய தலம். கால் மாறி ஆடிய தலமும் இதுவே.
சிவனே எல்லாம் வல்ல சித்தராக எழுந்தருளியிருக்கும் அதி அற்புத தலம்.
தென்னாடுடைய சிவனே போற்றி என சிவபக்தர்களால் மனமுருக கூறும் சுலோகம் அமைய காரணமான சிவத்தலம்.
இந்திரன் வருணன் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்ற தலம்.
இது சிவதலம் என்றாலும் கூட 64 சக்தி பீடங்களுள் மீனாட்சி பீடம் முதல் பீடத்தைப் பெற்றுள்ளதால் எல்லா பூஜைகளும் அன்னை மீனாட்சிக்கு முடிந்த பிறகே சிவபெருமானுக்கு நடைபெறுகின்றன.
இந்திரன் வருணன் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்ற தலம்.
இது சிவதலம் என்றாலும் கூட 64 சக்தி பீடங்களுள் மீனாட்சி பீடம் முதல் பீடத்தைப் பெற்றுள்ளதால் எல்லா பூஜைகளும் அன்னை மீனாட்சிக்கு முடிந்த பிறகே சிவபெருமானுக்கு நடைபெறுகின்றன.
ஈசனே தருமி என்ற புலவருக்காக இறையனாராக வந்து தமிழை ஆராய்ந்த இடம்.
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதிட்டதலம்.
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதிட்டதலம்.
நக்கீரர் வாழ்ந்த இடம் .
முருகன் திருவருளால் ஊமைத் தன்மை நீங்கிய குமரகுருபரர் மீனாட்சி பிள்ளை தமிழ் அரங்கேற்றியதும்,
திருவாதவூராருக்கு மாணிக்கவாசகர் என்ற பெயரை கொடுத்ததும், இத்தலத்தில் தான்
திருவாதவூராருக்கு மாணிக்கவாசகர் என்ற பெயரை கொடுத்ததும், இத்தலத்தில் தான்
நான்மாடக்கூடல்:-
மதுரையை அழிக்க வருணன் ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் பொருட்டுப் பெருமான் தம் சடையினின்றும் விடுத்த நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகக் கூடிக்காத்ததால் நான்மாடக்கூடல் எனப் பெயர் ஏற்பட்டது.
இத்தலம் குறித்த பதிகங்கள் :
மாணிக்கவாசகர் - திருவாசகம்
மாணிக்கவாசகர் - திருவாசகம்
அருணகிரிநாதர்- திருப்புகழ்
பாணபத்திரர்- திருமுகப்பாசுரம்
பாணபத்திரர்- திருமுகப்பாசுரம்
பரஞ்சோதி முனிவர் -
திருவிளையாடற்புராணம்
மதுரைக்காஞ்சி- மாங்குடி
மருதனார்மீனாட்சி
பிள்ளைத்தமிழ் - குமரகுருபர
சுவாமிகள்
இவை தவிரகணக்கிலடங்கா புராண இதிகாச இலக்கியங்களில் இத்திருத்தலம் இடம்பெற்றுள்ளது
சிறப்பு தகவல்:-
மூன்று கோடி சிற்பம்:-
அம்மனின் சக்தி பீடங்களில் முதன் மையானது என போற்றப்படுவது மதுரை மீனாட்சி அம்மன் கோயில். இந்த பீடத்திற்கு "ராஜமாதங்கி சியா மள பீடம்' என்று பெயர். மீனாட்சி அம்மன் சிலை மரகதக்கல்லால் ஆனது. சுந்தரானந்தர் என்ற சித்தர் அடங்கிய தலம். இத்தலத்தினை "பூலோக கைலாசம்' என்றும், இத்தலத்தின் பெயரைக் கேட்டாலோ, சொன்னாலோ முக்தி கிடைக்கும் என்கிறது புராணம். அத்துடன் உலகத்திலேயே சிலை களும், சிற்பங்களும் மூன்றுகோடி உள்ள ஒரே திருக்கோயில் இதுதான். இந்திரன் உருவாக்கியது. சிவபெருமான் மதுரை நகரில் தனது 64 திருவிளையாடல்களையும் நிகழ்த் தினார். அதில் முதல் திருவிளையாடல் தான் "இந்திரன் சாபம் தீர்த்த படலம்'. இந்திரன் தனக்கு ஏற்பட்ட பிரம்ம ஹத்தி (கொலைப்பாவம்) தோஷம் நீங்க பல தலங்களுக்கு சென்று வந் தான். அப்படி வரும் போது மதுரையில், ஒரு சுயம்புலிங்கத்தை கண்டு அதை பூஜித்து தன் தோஷம் நீங்கப் பெற்றான். அங்கு இந்திர விமானத் துடன் கூடிய கோயிலை கட்டினான்.
பெண்மைக்கு முக்கியத்துவம்
அன்னை மீனாட்சி மூலஸ்தானத்தில் நின்ற கோலத்தில் இடைநெளித்து கையில் கிளி ஏந்தி அழகே உருவாக மரகத மேனியாக அருள்பாலிக்கிறார்.
சுவாமி சுந்தரேஸ்வரர் கருவறை யில் சுயம்புலிங்கமாக வீற்றிருக்கிறார். கடம்பம், வில்வம் இரண்டும் தல விருட்சங்களாக உள்ளன. பொற்றா மரை, வைகை ஆகிய தீர்த்தங்கள் இத்தலத்திற்கு சிறப்பு சேர்க்கின்றன. இத்தலத்தை பொறுத்தவரை பெண் மைக்கு முக்கியத்துவம் தரும் வகை யில், அம்மனின் இடப்பக்கம் சுவாமி வீற்றிருக்கிறார்.
சுவாமி சுந்தரேஸ்வரர் கருவறை யில் சுயம்புலிங்கமாக வீற்றிருக்கிறார். கடம்பம், வில்வம் இரண்டும் தல விருட்சங்களாக உள்ளன. பொற்றா மரை, வைகை ஆகிய தீர்த்தங்கள் இத்தலத்திற்கு சிறப்பு சேர்க்கின்றன. இத்தலத்தை பொறுத்தவரை பெண் மைக்கு முக்கியத்துவம் தரும் வகை யில், அம்மனின் இடப்பக்கம் சுவாமி வீற்றிருக்கிறார்.
திருவிழா
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திரு விழா காணும் இக்கோயிலில் சித்திரை யில் நடக்கும் விழா தான் மிகவும் சிறப்பானதாகும். இது தவிர ஆவணி மூல திருவிழா, தெப்பத்திருவிழா, ஆடிப்பூரம் போன்றவையும் முக்கிய விழாக்கள் ஆகும்.
சித்திரை திருவிழா: சித்திரை மாதம் வளர்பிறையில் நடக்கும் 12 நாள் விழாவில் முதல் நாள் கொடியேற்றம், பின் ஒவ்வொரு நாளும் அம்மனும் சுவாமியும் வாகனங்களில் வீதி உலா வருவர். 8ம் நாள் மீனாட்சி பட்டாபி ஷேகம், செங்கோல் வழங்கும் வைப வம், 9ம் நாள் மீனாட்சி திக்விஜயம், 10ம் நாள் மீனாட்சி திருக்கல்யாணம், 11ம் நாள் தேர்த்திருவிழா, 12ம் நாள் தீர்த்த விழா, வைகையில் அழகர் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி தருவதுடன் சித்திரை திருவிழா முடி வடையும்
கோயில் அமைப்பு
பொதுவாக எல்லா கோயில்களிலும் ஒன்று அல்லது நான்கு வாசல்கள் இருக்கும். ஆனால், இத்தலத்தில் ஐந்து வாசல்கள் உள்ளன. அதாவது கிழக்கு பகுதியில் சுவாமி சன்னதிக்கு ஒரு வாசலும், அம்மன் சன்னதிக்கு ஒரு வாசலும் உள்ளன. இத்தகைய அமைப்பு வேறெங்கும் இல்லை. மீனாட்சிக்கும், சுந்தரேஸ்வரருக் கும் தங்கத்தாலான கோபுரங்களும், நான்கு வாசல் பக்கங்களிலும் ராஜ கோபுரங்களும் உள்ளன. இதில் தெற்கு கோபுரம் தான் மிகவும் உயரமானது. உயரம் 160 அடி. இதில் 1511 சுதையால் ஆன சிலைகள் உள் ளன. இதை 1559ல் சிராமலை செவ் வந்தி மூர்த்தி செட்டியார் கட்டினார். மேற்கு கோபுரம் 154 அடி உயரம். 1124 சிலைகள் உள்ள இந்த கோபுரம் பராக்கிரம பாண்டியனால் (1315- 1347) கட்டப்பட்டது. வடக்கு கோபுரம் 152 அடி உயரம். இதனை மொட்டைக்கோபுரம் என்பார்கள். இந்த கோபுரம் கிருஷ்ண வீரப்ப நாயக்கரால் (1564-1572) கட்டப்பட் டது. பொற்றாமரைக்குளத்தின் வட புறம் 7 நிலை சித்திரக்கோபுரம். இத்து டன் வேம்பத்தூரார் கோபுரம், நடுக் கட்டு கோபுரம், இடபக்குறியிட்ட கோபுரம் என மொத்தம் 14 கோபுரங்கள் உள்ளன
சிறப்பம்சம்
- அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவபெருமான் நடனம் ஆடிய பஞ்ச சபைகளுள் இத்தலம் ரஜத (வெள்ளி) சபையாகும். இத்தலத்தில் மட்டும் தான் பாண்டிய மன்னனுக்காக நடராஜர் கால் மாறி இடது கால் துõக்கி சந்தியா தாண்டவம் ஆடியுள்ளார். மாரியம்மன் தெப்பக்குளத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் 7 அடி உயர முக்குறுணி விநாயகர் இங்கு அருள் பாலித்து வருகிறார். ஒரு நாரைக்கு பெருமான் அருளிய வரத்தின்படி பொற்றாமரைக் குளத்தில் மீன்களும், நீர்வாழ் உயிரினங்களும் இல்லாதிருப்பது இன்றும் ஓர் அதிசயம். விஞ்ஞானம் அடிப்படையில்: ஆயிரங்கால் மண்டபம் : வடகோபுரத்திற்குப் பக்கத்தில் 5 இசைத் துõண்களும், ஆயிரங்கால் மண்டபத்தில் பல ஒலிகளைத்தரும் சிலைகளும் உள்ளன. இந்த ஆயிரங்கால் மண்டபம் இங்குள்ள மண்டபங்களில் மிகவும் பெரியது. இங்கு 985 தூண்கள் உள்ளன. நடுவில் பெரிய நடராஜர் திருவுருவம் உள்ளது