August 12, 2011

sathuragiri

sathuragiri - sivan malai

ஓம் நமசிவாய ! ஓம் சக்தி !

நமசிவாய வாழ்க ! நாதன்தாள் வாழ்க ! இமைபொழுதும் என் நெஞ்சில்
நீங்காதான் தாள் வாழ்க !

வணக்கம். எனது பெயர் சரவணன். சதுரகிரிக்கு  ஒரு முறை மட்டுமே சென்று வந்துள்ளேன். அந்த மலை என்னை என்னவோ செய்கிறது, நினைக்க நினைக்க சிலிர்க்க வைக்கிறது. நான் எந்த சித்தரையும் சந்திக்கவில்லை. ஆனாலும் மனம் நிறைந்த தரிசனத்தால் சிலிர்க்கிறேன். மனம்  அந்த அனுபவம் மீண்டும் மீண்டும் வேண்டும் என்று கேட்கிறது. இந்த சதுரகிரி பற்றி உலகுக்கு எடுத்து சொல்ல இந்த blog இல் எழுதுகிறேன். இதை படிக்கும் ஒவ்வொருவரும் ஒருமுறையாவது சதுரகிரிக்கு சென்று வர வேண்டுகிறேன்.  

        சதுரகிரி மலை என்பது மலை மட்டுமல்ல. அது ஒரு உணர்வு, உயிருள்ள இடம். இது வெறும் மலை என்பவர்களுக்கு வெறும் மலை, சாகசபயணம் என்பவர்களுக்கு இது ஒரு சாகசபயணம் செய்யுமிடம், ஆனால் அமைதியாக ஆன்மிகத்தை உணர்ந்து செல்பவர்களுக்கு   இந்த மலை உயிரோட்டமுள்ள இடம். இதை எப்படி உணர்வது?. 4 பேருக்குள் குழுவாக  செல்லுங்கள். ஆனால் ஒருவர் பின் ஒருவராக அமைதியாக  செல்லுங்கள். ஒவ்வொருவருவருக்கும் 5 அடி இடைவெளி இருக்கட்டும்.மலையில் ஏறும் போது கோரக்கர் குகையை தாண்டியதும் ஆண்கள் சட்டையை கழட்டி விட்டு ஏறுங்கள். அந்த மூலிகை காற்று நம் உடலை பக்குவப்படுத்தும். இளைப்பாற உட்காரும்போது 5 நிமிடம் மட்டும் பேசுங்கள். மற்ற நேரம் அமைதியாக மனதுள் "ஓம் நமசிவாய" என்ற மந்திரத்தை மட்டுமே சொல்லுங்கள். ஒரு சில இடங்களை கடக்கும் பொது உடல் சிலிர்க்கும் அந்த இடத்தில் சிறிது நேரம் நின்று செல்லுங்கள்.  அப்போது உணர்வீர்கள் இந்த சதுரகிரி மலையை பற்றி. 

              சதுரகிரி செல்வதாக இருந்தால் முதல் நாள் இரவே கிளம்பி காலை 6 மணிக்குள் தாணிபாறையில் ( சதுரகிரி அடிவாரம் ) இருக்குமாறு செல்லுங்கள். 6 மணிக்கு மலையேற ஆரம்பித்தால் 9.30  முதல் 10.00 மணிக்குள் உச்சியை அடைந்து விடலாம். மலை ஏறும் முன் குடிநீர் 2 லிட்டர் பாட்டில் ஒன்று, கடலை மிட்டாய் பாக்கெட் ஒன்று, சிறிய டார்ச் லைட்  ஆகியவற்றை மறக்காமல் எடுத்து செல்லவும். 


                இப்போது இந்த மலையை பற்றியும், இந்த மலையில் எனது அனுபவம் மற்றும் படங்களையும் பார்க்கலாம். 

No comments:

Post a Comment