ஸ்ரீலாயன் சித்தி விநாயகர் ஆலயம்

ஸ்ரீலாயன் சித்தி விநாயகர் ஆலயம்
விநாயகர் வழிபாடு மிகவும் தொன்மையானது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னமே பரவியிருந்தது என்பது வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். விநாயகர் ஆனந்தமானவர்; பெருமையுடையவர், சச்சிதானந்த செரூபி, குணங் கடந்தவர்; தேகங்கடந்தவர்; காலங்கடந்தவர்; என்று விக்கினங்களை தீர்ப்பவர், எக்காரியம் தொடங்கும் முன்பு இவரின் ஆசியும் வேண்டும் என்பது விநாயகரைப்பற்றி கூறும் சாராம்சாகும். காட்சிக்கு எளிமையானவரான இவருக்கு தமிழ் நாட்டில் கோயில்� இல்லாத ஊர்� இஇல்லை. மூலை முடுக்குகளிலும்,சாலை சந்துகளிலும், ஆற்றங்கரை குளக்கரைகளிலும், ஆலமரத்தடியிலும், அரச மரத்தடியிலும் காட்சிக்கு எளியவராக விளங்குபவர் விநாயகப் பெருமான். மெய்யடியார்களுக்கு எளிதாக வந்து அருளும் இயல்புடையவர்.
�விநாயகப் பெருமானுடைய உருவம் விசித்திரமானது; சிரசு யானையைப் போன்றும் கழுத்து முதல் இடைவரை தேவர், மனிதரைப் போன்றும் அதற்கு கீழ்ப்பகுதி பூதங்களைப் போன்றும் அமைந்துள்ளது. அவர் ஆணுமல்லர்; பெண்ணுமல்லர், அலியுமல்லர். அண்டச்சராசங்களுமாக உள்ளார்; அவை அனைத்தும் தம்முள் அடக்கம் என்பதை அவரது பேழை வயிறு குறிக்கும். அடியார்க்கு வேண்டிய சித்திகளையும் அவற்றை அடைதற்கேற்ற புத்தியினையும் அருளுபவர்.

அகரமாகிய எழுத்தைப் போன்று முதன்மையும் சிறப்பும்; அறிவின் திருவுருவம்; சர்வ வியாபி; படைத்தல்,காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களுக்கும் அகரம் - உகரம்-மகரம் என்னும் மூன்றும் சேர்ந்த பிரணவப் பொருள். தம்மை போற்றி வழிபடுபவர்க்கு அறம்,பொருள்,இ இன்பம், வீடு என்னும் நான்கு உறுதி பொருளை அருளிவர். போற்றி வழிபடாதவர்களுக்கு தடுத்தாட் கொண்டு பின் நலம் பலவும் அருளி மறக்கருணை புரியும் இயல்பினர்.
''அகரமென அறிவாகி, உலகம் எங்கும் அமர்ந்து
அகர உகர மகரங்கள் தம்மால் பகரும் ஒரு
முதலாகி பல்வேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகலில் பொருள் நான்கினையும் இடர் தீர்ந்தெய்தல்
போற்றுநருக்கு அறக்கருனை புரிந்து அல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும்
திருமலனைக் கணபதி நினைந்து வாழ்வோம்."
ஆலய வரலாறு
சைவ சிந்தாந்தத்தில் ஈடுபாடுடைய திரு.பொன்னம்பல சுவாமிகள் இந்திய தேசிய படைக்கு, சிங்கப்பூர்க்குபணியாற்ற வரும் போது விநாயகரையும் உட ன் துணையாகக் கொண்டு வந்தார்.வணங்குவதை மறவாதுதினமும் விநாயகரை வழிப்பட்டு வந்தார். பணி முடிந்து இந்தியாவுக்கு திரும்பும்போது தனக்கு துணையாக இருந்த விநாயகரை இங்கேயே விட்டுச் செல்ல விரும்பினார். ஆகையால் இங்குள்ள நகரத்தாரிடம் விநாயகரை ஒப்படைத்து நாடு திரும்பினார். நகரத்தாரும் ஒரு சிறு குடில் அமைத்து விநாயகரை அங்கு வைத்து பூஜைகளும், வழிபாடுகளும் செய்யத் தொடங்கினர். திரு. ச ன்னியாசி என்பார் பூஜைகளுக்கும், வழிபாடுகளுக்கும் பொறுப்பாக இருந்து கவனித்து வந்தார். 1925 ௭ ல் இந்த விநாயகர் அமர்ந்தவிடம் இப்போதும் இருக்கும் சிங்கப்பூர் பொது மருத்துவமனை வளாகம்.அருகில் சிங்கப்பூர் மத்திய சிறைச்சாலை. கோவிலுக்கு செல்ல ஒரு சிறு ஒ ன்றையடி பாதையும் அமைக்கப் பெற்றது. முதலாம் உலக மகா யுத்தம் முடிந்த பிறகு பொது மருத்துவ மனையில் பணிபுரிந்தவர்களும்,மத்திய சிறைச்சாலையில் பணிபுரிந்து வந்த இந்தியர்களும் இந்த விநாயகர் கோவில் வந்து வழிப்பட்டு செ ன்றனர். காலப்போக்கில் கணிசமான அளவில் மக்கள் விநாயகரை நாடி வந்து வழிப்பட்டனர். காலப் போக்கில் விநாயகருட ன் நாகரும் வந்து சேர்ந்தார். பொறுப்பு வகித்து வந்த ச ன்னியாசி தமிழகம் செல்ல வேண்டிய சூழ்நிலை அமையவே, நகரத்தாரிடம்பொறுப்பை ஒப்படைத்து விட்டு ஊருக்கு செ ன்று விட்டார். நகரத்தார் சிங்கப்பூர் இந்து அறக்கட்டளை வாரியத்தை நாடினர். இதில் இந்து அறக்கட்டளை வாரியம் ஆர்வம் காட்டவில்லை.ஆகையால் நகரத்தாரேபொறுப்பினை ஏற்று ஒரு பண்டாரத்தை நியமித்து கோவிலை நடத்தினர்.
புதிய ஆலயம்
கோவில் அமைந்திருந்த இடம் அரசு பொது மருத்துமனைக்குரியது. மருத்துமனை விரிவாக்கததிற்கு இடம் தேவைப்பட்டதால் 1970-ல் அரசாங்கம் அந்த இடத்தை கையப்படுத்தி நிலத்திற்குரிய தொகையை கொடுத்தது. தற்போது அமைந்திருக்கும் இடத்தில் அரசு கொடுத்த தொகையில் புதிய ஆலயம் எழுப்பினர்.பழைய விநாயகருக்கு பதில் தமிழ் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட புதிய கருங்கல் விநாயகரை ஆமக முறைப்படி �ஸ்தாபனம் செய்து மூலவராக வைத்தனர்.பொன்னபலம் கொடுத்து விநாயகரை மூல விக்கிரத்திற்கு எதிரில் வைத்தார்கள்.� முருகனுக்குரிய வேல் ஒன்றினையும் புதியதாக வைத்தனர். �'லாயின் சிட்டி விநாயகர் கோவில்' என்று புதிய கோவிலுக்கு பெயரிட்டார்கள். ஆரம்பக் காலத்தில் இக்கோயில் இந்திய தேசிய ராணுவத்தினர் குடியிருந்தப் பகுதியில் அமைந்திருந்தது. இந்திய சிப்பாய்கள்இருந்த பகுதியைக் கடந்துதான் கோவில் செல்லவேண்டும். கோவிலைக் குறிக்க சிப்பாய் லையின் கோயில்என்று அழைத்தார்கள். பிற்காலத்தில் சிப்பாய் மறைந்து ''லாயின் சிட்டி விநாயகர் கோயில்'' என்ற பெயர் காரணப் பெயராக அமைந்துவிட்டது.

'' திருவும், கல்வியும், சீரும், சிறப்பும், உன்
திருவடிப் புகழ்பாடும் திறமும், நல்
உருவும், சீலமும், ஊக்கமும், தாழ்வுறா
உணர்வும், தந்து எனது உள்ளத்து அமர்ந்தவா !
குருவும் தெய்வமும் ஆகி, அனபாளர்தம்
குணப் பெருங் குன்றமே !
வெருவும் சிந்தை விலகக் கஜானனம்விளக்கும்
சித்தி விநாயக வள்ளலே !
No comments:
Post a Comment