29
சித்த மருத்துவ நிபுணர் அருண்சின்னையா
சமயப் பெரியார் திருநாவுக்கரசர் இவ்வுடம்பே கோவிலென்று சொல்கிறார். கட்டுப்படுத்தி அடக்கி வைக்கப் பட்ட மனமே அக்கோவிலில் வழிபாடுசெய்யும் அடிமை என்கிறார். உண்மை என்னும் வாய்மையால் உடம்பெனும் கோவிலைத்தூய்மை செய்ய வேண்டும். நமது உடம்பின் அகத்தூய்மை நாம் பேசும் உண்மைச்சொற்களால் உணரப்படும். நாம் பேசும் உண்மையே உடம்பெனும் கோவிலைத் தூய்மைசெய்து, உடம்பின் அழுக்கெனும் இருளைப் போக்கி ஒளி செய்து நிற்கும்.
உடம்பெனும் கோவிலில் உயிராய் வீற்றிருப்பவனே எம்பெருமான் சிவன். உம்மிலும் என்னிலும் புல்லிலும் பூண்டிலும் உயிராய் உலவுபவன் அவனின்றி வேறில்லை. அவன் சர்வவியாபி.
ஒரு முறை, பிரம்மா சாபத்தால் பீடிக்கப்பட்டு தனது பதவியை இழந்தார்.மீண்டும் தன் நிலை உயர சிவபிரானை வேண்டிக் கடுந்தவம் புரிந்தார்.அப்பொழுது சிவபெருமான் பிரம்மாவுக்கு ஆயிரம் கண்களுடன் காட்சியளித்தார்.
கண்மூடிக் காட்சியளித்தலே சிவனுக்கு அழகு. அதுமட்டுமல்ல; உலகில் உள்ளஜீவன்களுக்கும் அழகு. எம்பெருமான் சிவபிரான் ஒரு கண் திறந்தாலே இந்தஉலகில் பிரளயம் உண்டாகும். அப்படியிருக்க ஆயிரம் கண்கள் திறந்தால் கேட்கவாவேண்டும்! உலகில் பெரும் பிரளயங்கள் உண்டா கின. அப்பொழுது தேவர்கள் அன்னைபார்வதியை வேண்டிட, அன்னை சிவ பிரானை வேண்டி அவரை சாந்தப் படுத்தினாள்.
இதையெல்லாம் கண்ட பிரம்மா, ""நீங்கள் இங்கு ஆயிரம் கண்களுடன்காட்சியளித்ததால், இங்கு வரும் பக்தர்களுக்கு ஆயிரம் பிரச்சினைகள்இருந்தாலும் தீர்த்து வைக்க வேண்டும். அதாவது குணப்படுத்த வேண்டும்''என்று வேண்டினார். ஈசனும் அதை ஏற்பதாக வரமருளினார்.
ஒருமுறை திருவாரூர் அருகிலுள்ள திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் கோவிலுக்குச் சென்று எம்பெருமானைத் தரிசித்து வாருங்கள். உங்கள் பிரச்சினைகள்எல்லாம் பறந்தோடிவிடும்.
கோவிலின் பிரசாதமாக பொன்னாங் கண்ணி, கரிசலாங்கண்ணி, தேங்காய் எண்ணெய்கலந்த எண்ணெய்யை வழங்குவார்கள். இந்த எண்ணெய்யைத் தேய்த்து 48 நாட்கள்தலைமுழுகி நீராடினால் கண் நோய்கள் மட்டுமல்ல; கழுத்தை நெறிக்கும்பிரச்சினைகளும் காணாமல் போகும்.
எம்பிரானின் அருள் பெற்ற பொன்னாங் கண்ணி, இப்பூவுலகில் பூத உடலைத்தேற்றிக் கோவிலாக்க வந்த சிவாம்சம் என்பதை மறந்து விடாதீர்கள்.வாருங்கள்... பொன்னாங்கண்ணி கொண்டு உடலோம்பும் கலையை அறிவோம்.
குடற்புண் குணமாக...
பொன்னாங்கண்ணி கீரைச்சாறு, கரிசலாங் கண்ணி கீரைச்சாறு வகைக்கு 100 மி.லி.அளவு எடுத்து ஒன்றாய் கலந்து கொள்ளவும். இதில் 50 கிராம் அதிமதுரத்தை பால்விட்டரைத்து விழுதாக்கி, மேற்படி சாறுடன் கலந்து கொள்ளவும். பின்னர் இதனைமெழுகுப் பதமாய்க் காய்ச்சி வைத்துக் கொள்ளுங்கள். இதை தினமும் காலை, மாலைஇருவேளையும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர வாய்ப்புண், வயிற்றுப்புண்போன்றவை குணமாகும்.
நரம்புத் தளர்ச்சி நீங்க...
பொன்னாங்கண்ணிக் கீரை, செம்பருத்திப்பூ, ஆவாரம்பூ, ரோஜாப்பூ, கொன்றைப்பூஆகியவற்றை வகைக்கு 50 கிராம் எடுத்து ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும்.இதில் ஐந்து கிராம் அளவு தினசரி உணவுக்குப்பின் இரவில் மட்டும் சாப்பிட்டுவர வேண்டும். இத்துடன் மறக்காமல் ஒரு டம்ளர் பாலும் சாப்பிட்டு வர, இரண்டுமாதங்களில் நரம்புத் தளர்ச்சி பூரணமாய் குணமாகும். மேலும் ஆண்மைக்குறைபாடுகளும் தீரும்.
அபார நினைவாற்றல் பெற...
பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, சீந்தில், வல்லாரை ஆகியவற்றை வகைக்கு 100கிராம் எடுத்து ஒன்று கலந்து தூள் செய்து கொள்ளவும். இதில் மூன்று கிராம்அளவு, ஒரு டம்ளர் பசும்பாலுடன் சேர்த்து காலை- மாலை சாப்பிட்டு வர, அபாரநினைவாற்றல் உண்டாகும். மேலும் சோர்வு, பட படப்பு, தூக்கமின்மை, ரத்தஅழுத்தம், மன அழுத்தம், மன உளைச்சல் போன்ற கோளாறுகளும் தீரும்.
வெள்ளைப்படுதல் குணமாக...
பொன்னாங்கண்ணிச்சாறு, கரிசலாங் கண்ணிச்சாறு, பசு நெய், பசும்பால் எனஒவ்வொன்றிலும் வகைக்கு 60 மி.லி. அளவுக்கு எடுத்து ஒன்றாகக் கலக்கிக்காய்ச்சி, மெழுகு பதத்தில் இறக்கி வைத்துக் கொள்ளவும். இதில் தினமும்காலை- மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் (ஐந்து கிராம்) அளவுக்குச்சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் ஒரே வாரத்தில் குணமடையும். கை- கால்எரிச்சல், பித்த மயக்கம் போன்ற பாதிப்புகளும் குணமாகும்.
கண் நோய்கள் விலக...
பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சிறிது மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள்,பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து சூப் செய்து தொடர்ந்து 48 நாட்கள் (ஒருமண்டலம்) சாப்பிட்டு வர, கண் தொடர்பான அனைத்து வியாதிகளும் தீரும்.
மேனியழகு உண்டாக...
100 கிராம் பொன்னாங்கண்ணி (காய்ந்தது), 100 கிராம் பிஸ்தா பருப்புஇரண்டையும் ஒன்றாக்கி அரைத்துத் தூள் செய்து சலித்து வைத்துக் கொள்ளவும்.இதில் ஒரு ஸ்பூன் அளவு காலையும் மாலையும் சாப்பிட்டு வர, உடலுக்கு அழகும்பொன்னிறமும் ஒருசேர உண்டாகும்.
முகப்பரு, தேமல், படர்தாமரை விலக...
முந்திரிப் பருப்பு, முள்ளங்கி விதை சம அளவு எடுத்து, பொன்னாங்கண்ணிச் சாறு விட்டரைத்து பரு, தேமல், படர்தாமரை யின்மீது போட்டுவர, ஒரே வாரத்தில் குணமாகும்.
உஷ்ணம் தீர...
பொன்னாங்கண்ணிக் கீரையை விழுதாய் அரைத்து தலையில் தேய்த்துக் குளிக்க, உடல் உஷ்ணம், கண்நோய்கள் போன்றவை விலகும்.
நீண்ட கூந்தல் வளர்ச்சிக்கு...
இங்கு நான் உங்களுக்காக சித்தர்களால் அருளப்பட்ட ஒரு மிகச் சிறந்த கூந்தல்தைலத்தைப் பற்றிய குறிப்பை சொல்கிறேன். கவனமாய் குறிப்பெடுத்து, கருமையானகூந்தலுக்கு அச்சாரம் போடுங்கள்.
தேவதாருக்கட்டை- 50 கிராம்
கோஷ்டம்- 50 கிராம்
ஏலக்காய்- 50 கிராம்
வெள்ளைக் குண்டுமணிப் பருப்பு- 50 கிராம்
ஏலரிசி- 50 கிராம்
பொன்னாங்கண்ணிச் சாறு- அரை லிட்டர்
முதலில், வெள்ளைக் குண்டுமணியை பசும்பாலில் 12 மணி நேரம் ஊறவைத்து அதன்தோலை அகற்றிவிடவும். பின்னர் ஏலக்காயை உடைத்து உள்ளிருக்கும் விதையைமட்டும் 50 கிராம் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும். தேவதாரு, கோஷ்டம்இரண்டையும் நன்றாகத் தூள் செய்து, அத்துடன் வெள்ளைக் குண்டு மணிப்பருப்பு, ஏலரிசி ஆகியவற்றைச் சேர்த்து, சிறிது பொன்னாங்கண்ணிச் சாறுவிட்டரைத்து விழுதாக்கவும். அரைத்த விழுதை மீதமுள்ள பொன்னாங்கண்ணிச்சாற்றுடன் கலந்து மறுபடியும் 12 மணி நேரம் ஊற வைக்கவும்.
இனி, இரண்டு லிட்டர் நல்லெண்ணெயை அடுப்பிலேற்றி, ஏற்கெனவே தயாரித்துவைக்கப்பட்டுள்ள பொன்னாங்கண்ணி விழுதையும் சேர்த்து, பதமுறக் காய்ச்சவும்.தைலம், கடுகு பதத்தில் திரளும்போது இறக்கவும். சூடு ஆறியபின் தைலத்தைவடிகட்டி பத்திரப்படுத்தவும்.
இந்தத் தைலத்தைப் பயன்படுத்தினால் தலைமுடி நன்றாக வளரும். குறிப்பாகப்பெண்களுக்கு அவர்களே அதிசயிக்கத்தக்க அளவில் கூந்தல் மிக நீளமாகவும் கறுமையாகவும் வளரும். வழுக்கைத் தலையில்கூட முடி முளைக்கும். மேலும் உஷ்ணநோய்கள், கண்ணெரிச்சல், பித்த மயக்கம் போன்றவைகூட இருந்த இடம் தெரியாமல்மறைந்து விடும்.
இளநரை நீங்க...
பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, கொட்டைக் கரந்தை, குப்பைமேனி, சிறுசெருப்படை ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் சேர்த்து தூள் செய்து கொள்ளவும்.இதில் ஒரு ஸ்பூன் அளவு காலை- மாலை சாப்பிட்டு பசும்பால் அருந்தி வர இளநரைமறையும். மேலும் நரை வருவதும் நின்றுவிடும்.
நூறாண்டு வாழ...
பொன்னாங்கண்ணியில் தங்கத்தின் சத்து அடங்கியுள்ளது. பொன்னாங்கண்ணியைத்தவறாது நமது உணவில் சேர்த்து வர வேண்டும். பொன்னாங்கண்ணித் தைலம் கடைகளில்வெகு சாதாரணமாய்க் கிடைக்கிறது. அதனை வாங்கி வாரம் ஒரு முறையேனும் தலைமுழுகி வர வேண்டும். பொன்னாங்கண்ணி சித்தர்கள் நமக்கு அருளிய வரம்.பொன்னாங்கண்ணியால் இந்த உடலைப் பண்படுத்தி, ஆத்ம சுகம் பெறுவோம்.
No comments:
Post a Comment