August 30, 2011

பகல் முழுவதும் சிவன் கோவில்களில் பூஜை செய்ய வாய்ப்பு இல்லை! திராவிடம் சொல்கிறது!!


பகல் முழுவதும் சிவன் கோவில்களில் பூஜை செய்ய வாய்ப்பு இல்லை :துணை ஆணையர் கைவிரிப்பு
 

General India news in detail
திண்டுக்கல்:பக்தர்கள் நெரிசலை குறைப்பதற்காக, சிவன் கோவில்களை பகல் முழுவதும் திறந்து பூஜை செய்ய ஆகம விதிகளின்படி வாய்ப்பு இல்லை,” என மதுரை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் கோவிந்தராமன் தெரிவித்தார்.திண்டுக்கலில் அவர் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் கவுமாரியம்மன் கோவில் வெள்ளி, செவ்வாய் கிழமைகளிலும், மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் தினமும் பகல் முழுக்க திறக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மதுரை மீனாட்சியம்மன் கோவில், திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில்களுக்கும் அதிக பக்தர்கள் வருவதால், பகல் முழுக்க திறக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளன.ஒவ்வொரு கோவிலிலும் ஆகம விதிகள், பாரம்பரிய பழக்கம், ஊர் நடைமுறைகளின் படி விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
இதன்படி மாரியம்மன், காளியம்மன், காமாட்சியம்மன் கோவில்களை பகல் முழுக்க திறப்பதில் எந்த தடையும் இல்லை. ஆனால், சிவன் கோவில்களில் ஆகம நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இந்த நடைமுறைப்படி பகலில் நடை சாத்தியே ஆக வேண்டும். எனவே, சிவன் கோவில்களை பகல் முழுவதும் திறப்பது சாத்தியம் இல்லை.இவ்வாறு கோவிந்தராமன் தெரிவித்தார்.
விமர்சனம்:
கருணாநிதி வந்ததிலிருந்து கோவில்களில் பிரச்சினைகள்தாம் வளர்ந்துள்ளது.
நாத்திகம், இந்துமத துவேஷம்,  என்ற இருகிப்போன மனப்பாங்கால், எல்லாவற்றையும் ஒழித்துவிடவேண்டும் என்ற ஔரங்கசீப் செறிதான் உள்ளது.
“ஆகமநெறிகள்” என்று இப்பொழுது பேசுகிறார்களே, அந்த ஆகமநெறிகளை மதித்திருந்தால், இதுவரை நாம் கண்டவை தமிழகத்தில் “சிவனிருக்கும் தென்னாட்டில்”, இவ்வாறெல்லாம் நடந்திருக்குமா?
திருமூலை சொன்னாரே?
கோவில் மதிற்சுவரிலிருந்து ஒரு கல் விழுந்தால், அரசன் அழிவான் என்று!
ஆனால், ஒன்றும் நடக்கவில்லையே என்று திராவிட கருணாநிதி “ஔரங்கசீப்-வேலையில்” பல “ஷேவியர்கள்” மற்றும் “மாலிக்காஃபூர்களின்” துணையோடு இறங்கியுள்ளார்!
இன்று நாத்திகம் பேசும், இத்தகைய கொடுமைகள் பேசும் திராவிடர்களின் தாய்-தந்தையர், சகோதரிகள், மனைவிப்பெண்டுகள் இந்துக்கள்தாம், நம்பிக்கையுள்ளவர்கள்தாம்!
காலம் இப்படியே இருந்து விடாது!!!

No comments:

Post a Comment