August 30, 2011

மோகினியோடு பரம சிவன் கூடியது கள்ள உறவா, கடமை உறவா?

நமது அன்பு சகோதரர் திரு.  எபி அவர்கள், நமது தளத்தில் இட்ட பின்னூட்டத்தில் கீழ்க் கண்டவாறு குறிப்பிட்டு இருந்தார். //செக்ஸ் கணவன் மனைவி உறவிற்குள் தப்பில்லை, அசிங்கமில்லை. ஆனால் கடவுள் என்று சொல்லப்படும் ஒருவர் தான் கட்டின மனைவி இருக்கும் போது இன்னொரு பெண்ணின் அழகில் மயங்கி அவளை விடாமல் துரத்தி உறவு கொண்ட விசயம் தான் நெருடுகிறது. சாதாரண மனிதனும் அந்த நிலையில் தானே உள்ளான். சாதாரண மனிதனின் இந்த செய்கையே (பெண்ணின் சம்மதத்துடன் என்றால்) கள்ள உறவு என்றும்,(பெண்ணின் சம்மதம் இல்லையென்றால் ) பாலியல் பலாத்காரம் எனவும் சொல்லப்படுகிறது. அப்படியென்றால் கடவுள் என்று சொல்லப்படுபவர் செய்தால் அது சரியா? அதற்கு என்ன பெயர்? கடவுள் என்பவர் பரிசுத்தக் குலைச்சலோடு இருக்கலாமா?பின்னர் கடவுளுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?// திரு. எபி இப்படி கருதக் காரணம் அநேகமாக அவருக்கு இந்திய தத்துவ சிந்தனைகளின் கோட்பாடுகள் அறியாப் பட்டிராததால் எனக் கருதலாம்.எபி போன்ற சகோதரர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டுமானால் நாம் அவருக்கு இந்திய தத்துவங்களைப் பற்றி சொல்ல  வேண்டியுள்ளது. இந்திய நாடு உலக்குக்கு நான்கு முக்கிய மதங்களை தந்துள்ளது. இந்து , சமண, பவுத்த, சீக்கிய மதங்களே அவை. இந்த நான்கு மதங்களும் மனித உயிர் பல பிறவிகளை எடுக்கிறது என்கிற தத்துவத்தை, அதாவது பிறப்பு இறப்பு, மீண்டும் பிறப்பு… என்கிற சுழற்சி சக்கரத்தில் இருப்பதாகவும், ஆசையை வென்று, தன் நிலையை உயர்த்தி, தன் உண்மை உணர்வை அறிபவன் விடுதலை  அல்லது மோட்ச நிலையை அடைகிறான்,  பிறவிகளும் அதனால் வருகிற துன்பங்களும் இருக்காது என்கின்றன. பிறவி என்பது உயிருக்கு ஒரு உடை போன்றது, எப்படி மனிதன் பழைய  உடையை களைந்து புதிய உடையை அணிகிறானோ அதைப் போல உயிர் ஒரு உடலை  விட்டு இன்னொரு உடலை அடைகிறது என்கிறார் கிருஷ்ணர். இதை நம்ப சொல்லி நாம் யாரையும் கட்டாயப் படுத்தவில்லை, இது இந்திய மதங்களின்  அடிப்படைக் கோட்பாடு என்பதையே நாம் சொல்கிறோம். இந்தக் கோட்பாட்டுக்கு நான் சாட்சி கொடுக்கவில்லை. இப் பிறவியில் ஒரு மனிதனுக்கு மனைவி யாக இருப்பவர் அடுத்த பிறவியிலும் மனைவியாக இருப்பாரா என்று சொல்ல முடியாது. இப்பிறவியில் மனைவியாக இருந்த உயிர் அடுத்த பிறவியில் ஆணாக  கூட இருக்கலாம், அவர் முற்பிறவியில் நல்ல செயல் செய்து இருந்தால் அடுத்த பிறவியில் ஒரு நாட்டின் அதிபராகவோ, அல்லது பெரிய செல்வந்தராகவோ இருக்க கூடும். அவருக்கு கணவனாக இருந்தவர் இழிவான செயல்களில் ஈடுபட்டால் அந்த உயிர் அடுத்த பிறவியில் நாயாக கூட பிறக்கலாம். எனவே உயிர் கணவனாகஇருப்பதும், மனைவியாக இருப்பதும், நாடகத்தில் நடிக்கப் படும் வேஷங்களைப் போன்றதே என்கிறது இந்திய தத்துவம். இதையே நாடகமே உலகம் என்பார்கள். இந்த தத்துவப் பின்னணியில் நாம் பரமசிவன் மோகினியுடன் கூடிய நிகழ்வை ஆராய்வோம். சுவாமி ஐயப்பன் பற்றிய குறிப்புகளில் நம் கீழ்க்கண்ட வாறு  காண்கிறோம். //Lord Dharma Shasta is born out of the union of Supreme Lord Shiva and Mohini( Vishnu Maya) thus carries both the power of Shiva (destruction) and Vishnu (sustenance). The Lord was born on Uttram Nakshatram in the month of Dhanu on last Saturday and resides in Kailash. The purpose of his Avatar is to kill the demon Mahishi and save the Devas from her atrocities. Lord Dharma Shasta then took the avatar of Manikantha with the blessings from Shiva and Vishnu and left Kailash. The Lord took the form of a child and lie on the banks of Pampa and later was found by the King of Pandalam. When Ayappan turned into 12 years old, the Queen of Pandalam pretended to have a severe headache and instructed the physician to prescribe tigress’s milk as the remedy. Manikantha, upon hearing the news agreed to go the jungle and get the milk. During the Lord’s expedition in jungle, he killed the demon Mahishi and returned to Pandalam with herd of tigers. After seeing the actual form of Manikanda (Vishwarupa), the King of Pandalam realized the Supreme Lord’s vision to the earth and requested to construct a temple for the Lord.// எனவே பரம சிவம் மோகினியுடன் கூடியது தாங்கள் செய்ய வேண்டிய கடமையை செய்ததாகவே கருத வாய்ப்பு இருக்கிறது. மோகினி என்கிற புதிய உடலை விஷ்ணு எடுத்து இருக்கிறார், அவருடைய அந்தப் பிறவிக்கு கணவனாக கடை யாற்றும் பொறுப்பு பரமசிவனுக்கு இருந்திருக்கிறது. அதை அவர் செய்து இருக்கிறார். இதை கள்ள உறவு என்று கருத முடியாது. ஏனெனில் மோகினிக்கு சிவனைத் தவிர வேறு கணவன் இல்லை. எனவே இது எப்படி கள்ள உறவாகும்? மேலும் இது தேவர்கள்  எல்லோரும் அறியும்படியாக செய்யப் பட்டுள்ளது. இந்த நிலையில் இது எப்படிக் கள்ள உறவாகும்? மேலும் மோகினியை பார்த்து சிவன் விரட்டி விரட்டி துரத்தினார் என்பது நகைப்புக்குரிய புனைவாக இருக்கக் கூடும். ஏனெனில் பல்வேறு காரணங்களுக்காக விஷ்ணு அவ்வப் போது மோகினி வடிவம் எடுக்கிறார். பாற்கடலில்  அமிர்தம் கிடைத்தவுடன், மோகினி வடிவம் எடுத்து அரக்கர் முன் நடனமாடியதாக உள்ளது. பின்னர் பஸ்மாசுரனுக்கு சிவன் வரம் கொடுத்தார், யார் தலையில் கை வைத்தாலும், அவர்கள் பஸ்பமாவர்கள்  என்று சிவன் வரம் கொடுத்ததாகவும், பஸ்மாசுரன் தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பது போல சிவன் தலையிலே கையை வைக்க முனைந்த போது சிவன் அங்கிருந்து விலகி விட்டார். இந்த நேரத்திலும் விஷ்ணு மோகினி வடிவம் எடுத்து, அரக்கன் முன் ஆடியதாகவும், அரக்கன் மோகினி யைப் போலவே டான்ஸ் ஸ்டெப்புகள் போட்டு ஈடு கொடுத்து ஆடியதாகவும் , நடன ஆட்டத்தின் ஒரு பகுதியாக மோகினி தன தலையில் கையை வைத்து ஆடியதாகவும் தன் வரத்தை மறந்த பசமாசுரன் தானும் தலையில் கை வைத்து ஆடியதாகவும் ,தானே பஸ்பமாகி போனதாகவும், இவ்வாறு விஷ்ணு சிவனை ரெஸ்கியூ செய்ததாகவும் புராணங்கள்  சொல்லுகின்றன. பாற்கடல் அமிர்தம் கடைந்த நிகழ்வின் போது கூட விஷ்ணு uமோகினி வடிவம் எடுத்து இருக்கிறார். அப்போது பரமசிவன் அவரை விரட்டி விரட்டி துரத்தவில்லை. பிறகு பஸ்மா சுரனிடம் இருந்து மீள உதவி செய்து இருக்கிறார். இப்படி இருக்கும் போது சுவாமி ஐயப்பன் பிறப்புக்காக விஷ்ணு மோகினி வடிவம் எடுத்து, அந்த நேரத்திலே தன்னுடைய கடமையாக சிவன் கணவனாக இருந்த போது விரட்டி விரட்டி வயலென்ஸ் செய்ததாக சொல்வது பில்ட் அப் கொடுக்கப் பட்ட வெர்சனாகவே கருதப் பட முடியும். இந்துக் கடவுள்கள் ஒவ்வொருவரன் மீதும் ஒவ்வொரு குற்றச் சாட்டை வைத்து, யாருமே கும்பிடத் தகுதி இல்லாதவர்கள், நாங்கள் சொல்லுகிற கடவுளை மட்டுமே கும்பிடுங்க, என்று சொல்வதற்கான முயற்சியின் ஒரு பகுதியே   இந்த விரட்டி விரட்டி துரத்தும் வெர்சனை எடுத்து பிரச்சாரம் செய்வது, என்று மக்கள் கருதுகின்றனர். ஏனெனில் இந்து மதம் இந்தியாவின் பெரும்பான்மை யோர் பின்பற்றும் மதமாக இருக்கும் வரை , இந்திய சமுதாயத்தின் சகிப்புத் தன்மையை அழிப்பதோ, மத வெறியை திணிப்பதோ இயலாத காரியம் என்பதை மத வெறி பரப்பு பிரச்சாகர்கள் அறிந்து உள்ளனர். திரு. எபியைப் போன்றவர்கள் இதைப் புரிந்து கொண்டு எல்லா மதங்களையும் ஆக்கபூர்வமாக அணுகி அவற்றில் உள்ள நல்ல கருத்துக்களைப் பாராட்டி வரவேற்கும் இந்திய பண்பாட்டில் இருப்பார் என்று நாம் நம்புவோமாகுக.

No comments:

Post a Comment