சிவனுக்காகக் கோவில் கட்டிய செட்டியார் சமூகம்: சுமார் 200-300 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு செட்டியார் இந்த கோவிலைக் கட்டியுள்ளார்
[1]. அது அவர்களது குடும்பத்தின் பராமரிப்பிலேயே ஆண்டாண்டுகளாக இருந்து வந்துள்ளது. அதற்கு நிலங்களும் தானமாக அளிக்கப் பட்டுள்ளன. காலப்போக்கில், வியாபாரம், குடும்பவிரிவு, படிப்பு, உறவுமுறை பாதிப்பு முதலிய பல்வேறு காரணங்களுக்காக, அவர்கள் சென்னை மற்ற இதர ஊர்களுக்கு இடம் பெயர்ந்து சென்றுவிட்டதாகத் தெரிகிறது. இன்று அந்த கோவிலைச் சுற்றியுள்ள தெருக்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.
சீனாவிலும் சிவன் கோவில் கட்டிய செட்டியார் சமூகம்: திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடிய சமூகம் செட்டியார் சமூகம். இன்று கூட இலங்கை, தென்னமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, மொரிஸியஸ், சிஸெல்ஸ், முதலிய நாடுகளில் “செட்டித் தெரு / வீதி” என்றுள்ளதை காணலாம். அதே மாதிரி அவர்கள் சந்ததியினரும் உள்ளனர். அவ்வாறு எல்லா அயல்நாடுகளிலும் அவர்களது “இருந்த வாசம்” உணரப்பட்டு வருகிறது
[2]. செக்கைக் கானிடம் அனுமதி பெற்று குவான்சூய் என்ற தென்மேற்குப் பகுதி சீனாவில், சம்பந்த பெருமாள் செட்டி, கோவில் கட்டியுள்ளார்
[3]. அவ்வாறு சீனாவிலேயே சிவன் கோவிலைக் கட்டியச் செட்டியார்கள் தமிழ்நாட்டில் கட்டுவது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. இடைக்காலத்தில் வரை (ஐரோப்பியக் கம்பெனிகள் வியாபாரத்தில் நுழையும் வரை) அவர்களது ஆதிக்கம் இருந்தது. மணிகிராமங்கள் எல்லாமே இவர்களால் வளர்ந்தன, செழித்தன.
இன்றைய பரிபாலனத்தின் நிலை: இன்று அதே சமூகத்தைச் சேர்ந்த ஒரு பரம்பரை தர்மகர்த்தாவினால் இக்கோவில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இப்போழுதும் 45 ஏக்கர் நிலம் கோவிலுக்குச் சொந்தமாக உள்ளதாக, ஊரிலுள்ளவர்கள் கூறுகிறார்கள்
[4]. ஆனால், நிலத்தை உபயோகித்து வருபவர்கள், கோவிலுக்கு சிறிதே பதிலுக்குக் கொடுத்து வருகின்றனராம்! தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும், கோவில் சொத்தை தமது இஷ்டத்திற்கு உபயோகப்படுத்தும் வழிமுறையை, அரசே மக்களுக்குக் காட்டியுள்ளது. அதிலும், திராவிடக் கட்சிகள் நாத்திகம் பேசிக்கொண்டு, கோவில் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், வழிமுறை முதலியவற்றை அழிப்பதில் அதிக அளவில் வெற்றிக் கொண்டுள்ளன. அதனால், யாரும் “சிவன் சொத்து குலநாசம்” என்றெல்லாம் நினைத்தோ, அறிந்தோ அஞ்சுவதில்லை
[5].
நாத்திகத் திராவிடம் கோவில்களை அழித்த விதம்: ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகளில் ஆழ்வார்கள், நாயன்மார்கள், தமிழரசர்கள் கோவில் கட்டி சாதித்ததை, இவர்கள் 60 ஆண்டு காலத்திலேயே, அழித்தொழித்து விட்டார்கள். ஆகவே “அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி” என்பதை இவர்கள் காலத்திலும் பொறுந்திதான் வந்துள்ளது. அன்று தலைவன் “மக்கள் சேவையே மகேசன் சேவை” என்று சொன்னதை, சொன்னதின் மகத்துவத்தினை, அந்த சித்தாந்தம் என்ன என்பதனை பகுத்தறிவு கொண்ட மக்கள் நன்றாகவே புரிந்து கொண்டு, மக்கள் தங்களுக்காகவே சேவை செய்துக் கொண்டு இருந்து வருகிறார்கள், இருக்கிறார்கள். அதற்கேற்றப்படித்தான் “நமக்கு நாமே” போன்ற திட்டங்கள் வேறு அறிமுகப்பட்டுத்தியுள்ளார்கள். நகரப்புறத்தில், கிராமப் புறத்தில் உள்ள மக்கள் இவற்றையெல்லாம் நன்றாகவேப் புரிந்து கொண்டு இருக்கிறார்கள். ஆகவே அத்தகைய திட்டங்களில் மற்றவர்கள் வரமுடியாது, பங்கு கொள்ள முடியாது.
சக்தி வாய்ந்த கடவுளும், குறைவாகவே நடக்கும் பூஜைகளும்: மாதம் ரூ.500/-ரே கொடுத்து வந்ததால், குருக்களும் சென்று விட்டாராம்! பாவம், அங்குள்ளவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். அங்கேயே, அதாவது கிராமம் எனப்படுகின்ற, நவீனங்கள் இருக்கும் இடத்திலேயே, ஒருவர் வாழ மாதம் ரூ.3,000/- ஆகிறதாம்! வழக்கம் போல இப்பிரச்சினைகள் இருந்தாலும், இக்கோவில் விஷேசமானது, விக்கிரகம் சக்தி வாய்ந்தது, நினைத்து வேண்டிக் கொண்டால் காரியம் கைக்கூடும் என்றேல்லாம், ஒருவர் கூறுகிறார். சுற்றியுள்ள கிராமத்தவர்களும், அவ்வாறு வேண்டுதல்களுக்கு வந்து செல்கின்றனராம்.
நாகப்பாம்புகள் காத்துவரும் விக்கிரங்கள்: கோவிலுக்கென்று உலோக விக்கிரங்கள் செய்யப் பட்டு, ஒரு அறையில் வைக்கப் பட்டுள்ளது என்றும், அவற்றை இரு நாகப் பாம்புகள் காத்து வருவதாகவும் அவர் கூறுகிறார். பூஜைக்கு, விஷேசத்திற்கு வேண்டும் என்றால் எடுத்துக் கொள்வார்களாம். அப்பொழுது, குருக்கள் கற்பூரம் காட்டி வேண்டிக் கொண்டால், அப்பாம்புகள் வழிவிடுமாம், விக்கிரங்கள் எடுத்துக் கொள்ளாலாம்
[6]. பூஜைக்குப் பிறகு, அங்கு வைக்கப் பட்டுவிடும். இதுவரை, அப்பாம்புகள் யாருக்கும் தீங்கு விளைவித்ததுக் கிடையாதாம். பிரதோஷம் முதலிய பூஜைகள் நடத்த ஊர் மக்களுக்கு ஆசை அதிகமாகவே உள்ளது, ஆனால் செட்டியார் பால் ஊற்றின கதை மாதிரிதான் நிலைமை இருக்கிறது.
கிருத்துவர்கள் சதியை முறியடித்த கிராம மக்கள்: அருகிலுள்ள சிறு குன்றின் மீது பெருமாளின் கால்கள் பதிந்துள்ளதாக சுற்றியுள்ள மக்களுக்கு நம்பிக்கையுள்ளது. அதன்படியே, ஆண்டாண்டுகளாக, பெருமாள் உற்சவ விக்கிரத்தை ஊர்வலமாக எடுத்து வரும்போது, அங்கு கொண்ண்டு சென்று, ஒரு சுற்று சுற்றித் திரும்பி வருகிறார்கள். இந்த இடத்தை ஆக்கிரமிக்க, சில கிருத்துவர்கள், ஒரு சிலுவையை கொண்டு வந்து நட்டார்களாம்! உடனே, கிராம மக்கள் திரண்டு சென்று அதனை பிடுங்கி எரிந்து, அத்தகைய வேலைகளை அங்கு செய்ய வேண்டாம் என்று, கிருத்துவர்களுக்கு எச்ச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனராம். அருகில் அச்சிறுப்பாக்கத்தில், கிருத்துவர்கள் எப்படி ஒரு சிலுவையை நட்டு, அந்த குன்றையே இன்று ஆக்கிரமித்துள்ளார்கள் என்பதனைக் காணலாம்! இனி உழவாரப்பணி நடந்தது விளக்கப் படுகிறது.
584 – ஏரிக்கரையிலிருந்து கோவிலின் தோற்றம். இக்கோவில் சூமார் 150 x 200 சதுர அடிகளில் உள்ள ஒரு செவ்வக வடிவ நிலத்தில் அமைந்துள்ளது. சிறிய கோவிலாகவே உள்ளது. கிழக்கில் வெற்றிடமுள்ளது. அங்கே ஒரு அம்மன் கோவிலும் உள்ளது. கோவில் சுவரையொட்டிடப்படி, தெற்கில் ஒரு வீடு உள்ளது. கோவில் குருக்கள் இங்கு தங்கியிருப்பதாகத் தெரிகிறது. இப்பொழுது காலியாக உள்ளது. வடக்கில் ஏரிப்பகுதியாக உள்ளது. மேலும் கோவிலுக்கருகிலுள்ள பகுதி பாறை பூமியாக இருப்பதனால் அங்கு கட்டிடங்கள் எதுவும் இல்லாதிருக்கிறது. தெற்கில் தெரு இருக்கிறது.
585 – கோவிலுக்கு எதிர்புறத்தில் உள்ள தெரு இது. 1960-70களில் இங்கிருந்த வீடுகளில் செட்டியார், ரெட்டியார், நாயக்கர் முதலிய சமூகத்தினர் இங்கு வசித்து வந்துள்ளனர். இப்பொழுது இடது பக்கத்தில் மூன்று வீடுகள் மற்றும் வலது பக்கத்தில் ஒரு வீடு, இவற்றில் வசிக்கிறார்கள், மற்ற வீடுகள் திறந்து கிடக்கின்றன அல்லது இடிந்த நிலையில் இருக்கின்றன. இவற்றின் சொந்தக்காரர்கள், சென்னையில் இருப்பதாகச் சொல்லப் படுகிறது.
586 – வலது பக்கத்தில் இருக்கும் இந்த வீடு திறந்தே கிடக்கிறது. உள்ளே சென்று பார்த்தால், ஒரு குடும்பம் வசித்தற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. சமைலறையில் தொங்கின்ற ஒரு கம்பியில், பொருட்கள் வாங்கியதற்கான சீட்டுகள் இன்றும் தொங்குகின்றன.
587 – இது மேலே குறிப்பிடப்பட்ட கோவில் சுவரையொட்டிடப்படி, தெற்கில் உள்ள கோவில் குருக்கள் தங்கியிருந்த வீடு.
557 – கோவில் நுழைவு வாயில். உழவாரப் பணி செய்ய இரண்டு-மூன்று குழுக்கள் வருகின்றன. எங்களது குழு தாமதமாக வரநேர்ந்ததால், ஏற்கெனவே, உழவாரப் பணியாளர்கள் கோவிலுக்குள் மண்டிகிடந்த செடி-கொடிகளை அப்புறப்படுத்திவிட்டு, வெள்ளையடிக்க ஆரம்பித்துவிட்டனர். சாலவாக்கம் கூட்ரோடு வந்தவுடன், நேராக பள்ளியகரம் நோக்கிச் செல்வதற்குப் பதிலாக, வலது பக்கம் திரும்பி சுமார் 10 கி.மீ வெறேங்கோ சென்று, மறுபடியும் திரும்பி வந்து பள்ளியகரத்தை அடைந்ததில் ஒரு மணி நேரம் விரயமாயிற்று!
558 – கோவிலின் இடது புறத்தில் உழவாரப்பணி நடந்து கொண்டிருக்கிறது. இடது பக்கத்தில் காணப்படும் சிறிய கட்டிடம், 19970ல் திறந்து வைக்கப் பட்ட வானொலி அறைக் கட்டிடம். இப்பொழுது உள்ளே ஒன்றும் இல்லை, இரண்டு டிராட்டர் டயர்கள் வைக்கப் பட்டுள்ளன.
571 – குறிப்பிடப்பட்ட அந்த வானொலி அறைக் கட்டிடத்தின் சுவற்றில் காணப்படும் கல்வெட்டு.
மதுராந்தகம் ஊராட்சிய ஒன்றியம் கருணாகரச்சேரி மன்றம் பள்ளியகரம் வானொலி மன்ற கட்டிடத் திறப்பு தலைமை: திரு. ரங்கபாஷ்யம் நாயக்கர், திறப்பாளர்: திரு ஆர்.சி.ராஜா, நாள்: 17-07-1970; பெருந்தலைவர்: பி. ஜானகிராம்; மா.கு. கருணாநிதி, ஆணையர், திரு. பி.டி. வெங்கட்ராம நாயக்கர்; ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் அங்கத்தினர்கள், பள்ளியகரம். |
572 – வானொலி அறைக் கட்டிடத்தின் முன்பக்கத் தோற்றம்.
559 – கோவிலின் இடது பக்கத்துப் பின்புறம். குருக்கள் தங்கியிருந்த வீடு ஒட்டியிருப்பதைக் காணலாம்.
560 – கோவிலின் வலது பக்க மூலை.
561 – கோவிலின் வலது பக்கத்து நடுப்பகுதி.
562 – கோவிலின் வலது பக்க பின் மூலை. செடி-கொடிகள் மண்டிக் கிடக்கின்றன. குருக்கள் வீட்டின் பின்பகுதி.
563 – நவக்கிரக சந்நிதிக்கு வெள்ளையடிக்கிறார்கள். 2006ல் இது கட்டப்பட்டது.
582 – அருகில் காணப்படும் சிலைகள் – பைரவர், சூரியன், ஒரு சக்கிரம்.
564 – கோவிலின் இடது பக்க உள்-மூலை.
565 – கோவிலுக்குள் இடதுபுறம் சுவற்றில் வைக்கப் பட்டுள்ள பல்கை – அதில் – “
ஶ்ரீ பரமபுரி ஈஸ்வரர் ஆலயம், பள்ளியகரம் பரம்பரை தர்மகர்த்தா பி. வி. தயாள செட்டியார்”, என்றுள்ளது.
566 – விநாயகர் சன்னிதி.
567 – மேற்குப்பகுதி சுவர் – கோவிலின் உட்புறம்.
568 – கோவிலின் உட்புறம். கோவிலின் வலது பக்க பின் மூலை. சுப்ரமணியர் சந்நிதிக்கு வெள்ளையடிக்கப் படுகிறது.
569 – சிறிய கோவில் – அதிகமான உழவாரப் பணியாளர்கள்!
570 – வழக்கம் போல திரு. சரவணன் அழகாக படம் வரைந்து, சிவ-சிவ மற்றும் தேவாரப் பதிகங்களை வரைய-எழுத ஆரம்பித்துவிட்டார்.
578 – “அருள்மிகு பர்வவர்த்தினி அம்பாள் உடனாய பர்வதபுரீஸ்வரர் திருக்கோவில், பள்ளியகரம்” என்று எழுதப் பட்டது.
579 – படம் முடிந்து, தேவாரமும் எழுதப் பட்டுவிட்டது.
580 – பூஜைப் பாத்திரங்கள் சுத்தம் செய்யப் படுகின்றன.
581 – சுத்தம் செய்யப் பட்டு வைக்கப் பட்டுள்ள பூஜைப் பாத்திரங்கள்.
573 – “மீட்டிங்” நடக்கிறது! வலது காலை உயர்த்தி அதன் மீது வலது கையை வைத்துக் கொண்டு, காவி வேட்டிக் கட்டிக் கொண்டு, கண்ணாடி போட்டுக் கொண்டு, படிக்கட்டில் உட்கார்ந்திருக்கும் நபர் தான் – “
ஶ்ரீ பரமபுரி ஈஸ்வரர் ஆலயம், பள்ளியகரம் பரம்பரை தர்மகர்த்தா பி. வி. தயாள செட்டியார்”.
574 – பி. வி. தயாள செட்டியார், தமது அங்கத்தினர்களை அறிமுகப் படுத்துகிறார்.
575 – பி. வி. தயாள செட்டியார், தமது மற்ற அங்கத்தினர்களை அறிமுகப் படுத்துகிறார்.
583 – மாலை மறுபடியும் மீட்டிங் – கூட்டுப் பிரார்த்தனை, அறிப்புகள் முதலியன.
576 – எல்லா வேலைகளும் நடந்த பிறகு. கோவிலின் முன்புறம்.
577 – எல்லா வேலைகளும் நடந்த பிறகு. கோவிலின் வலதுபக்க மூலைப்பகுதி.
பிற்குறிப்பு: 2002லிருந்து நடைப்பெற்றுவரும்
[7], 111வது உழவாரப்பணி நடந்த அன்று, கீழ்கண்ட சுற்றறிக்கைக் கொடுக்கப்பட்டது!
உழவாரப்பணி அடியார்களுக்கு அன்பான வேண்டுகோள்! Y உழவாரப்பணி செய்தவுடன் தாங்கள் உபயோகப்படுத்திய கருவிகளை தாங்களே உரிய இடத்தில் திருப்பி ஒப்படைக்க வேண்டுகிறோம்.
Y தயவு செய்து சாப்பிட்டப் பிறகு இலையையும் மீதம் உள்ள உணவு பொருட்களையும் அதற்குரிய பிளாஸ்டிக் கவரிலோ அல்லது குப்பைத்தொட்டியிலோ போடுமாறு வேண்டுகிறோம்.
Y உழவாரப்பணி முடிந்தவுடன் திருக்கோவில் மற்றும் அதை சார்ந்த பகுதிகள் அனைத்தும் தூய்மையாக இருக்க ஒத்துழைப்புத் தந்து உதவ வேண்டுகிறோம் |
வேதபிரகாஷ்
26-04-2011.
[1] இச்செய்திகள் அக்கிராமத்தில் உள்ள பெரியவர்கள் மற்றும் கோவில் நற்காரியங்களில் ஈடுபச்ட்டுள்ளவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள்.
[2] இதிலிருந்தே, இந்துக்கள் கடல் கடந்து செல்லக்கூடாது என்பதெல்லாம், அபத்தமான பிரச்சாரங்கள் என்பதனை அறிந்து கொள்ளலாம். ஒருவேளை தமக்குப் போட்டியாக வந்துவிடக் கூடாது என்று அவ்வாறு பிரச்சாரத்தை பரப்பி விட்டிருக்கலாம்.
[3] செங்கிஸ்கான் அனுமதியுடன் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட, இந்த சிவன் கோவிலில், சோழர்காலச் சிற்பங்கள் இருந்தன.
[4] சட்டரீதியாக, கோவில்களுக்கு அளிக்கப் பட்ட அசையும் மற்ற அசையா சொத்துக்கள் கோவில்களுக்குத்தான் சொந்தமானது. விடுதலை அடைந்த பிறகும், அந்நிலை மாறாது. ஆகவே, அக்கிரமிப்பில் உள்ள அனைத்து கோவில் சொத்துக்களும், சட்டப்படி, ஆக்கிரமிப்பாளர்களை விரட்டிவிட்டு கோவில்களுக்குத் திரும்பி அளிக்கவேண்டும்.
[5] திருமூலர் பற்றி பேசுபவர்கள், அவர் சொல்லியதைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. அதாவது, சிவன் கோவிலின் மதிற்சுவரிலிருந்து, ஒரு கல் கீழே விழுந்தால் என்னாகும் என்று விளக்கியுள்ளார்.
[6]இதனால்தான் பெரியார் பாப்பனையும் பாம்பையும் பார்த்தால் முதலில் பாப்பானை அடித்துக் கொல் என்று சொன்னார் போலும்.
[7] 100-வது உழவாரப்பணி திருமுறை வழிபாட்டு மலர், இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைப்பணி மன்றம், சென்னை.