September 14, 2011

சிவன் கோவில் பிரான்மலை
சிவனின் திருமண கோலம்
எங்கள் ஊர் பிரான்மலை இது முனொரு காலத்தில் வள்ளல் பாரி ஆண்ட ஊராகும் இங்கு உள்ள சிவன் கோவில் மூன்றடுக்கு கோயில் ஒருசமயம் வாயுபகவானுக்கும், ஆதிசேஷனுக்கும் தங்களில் யார் பலசாலி என போட்டி எழுந்தது. ஆதிசேஷன் மேரு மலையைச் சுற்றிக்கொள்ள வேண்டும், அதை வாயு பகவான் தனது பலத்தால் பெயர்க்க வேண்டும் என்பதே போட்டி. ஆதிசேஷன், தன் பலத்தால் மலையை இறுகப் பற்றிக்கொண்டார். வாயு பகவான் எவ்வளவோ முயன்றும், மலையை அசைக்க முடியவில்லை. இந்த போட்டியின்போது, மேரு மலையிலிருந்து துண்டுகள் பெயர்ந்து விழுந்தது. அவ்வாறு விழுந்த குன்றே, இங்கே மலையாக உள்ளது.
இம்மலையில் சிவன் பாதாளம், பூலோகம், கைலாயம் என மூன்று அடுக்குகளில் இருந்து காட்சி தருகிறார்.
பாதாளத்திலுள்ள கோயிலில் சிவன், கொடுங்குன்றநாதர் என்ற பெயரில் அருளுகிறார். இவருக்கான அம்பிகை, குயிலமுதநாயகி தனிச்சன்னதியில் இருக்கிறாள். மத்தியிலுள்ள கோயிலில் விசாலாட்சியுடன் விஸ்வநாதர், மேல் பகுதியில் அம்பிகையுடன் மங்கைபாகராக காட்சி தருகிறார்.
நந்தி இல்லாத சிவன்: கைலாயம் எனப்படும் மேலடுக்கிலுள்ள கோயில் குடவறையாக அமைந்துள்ளது. இந்த சன்னதியில் மங்கைபாகர், அம்பிகையுடன் இணைந்து, அகத்தியருக்கு திருமணக்காட்சி அருளிய கோலத்தில் காட்சி தருகிறார். இதை சிவனின், "அந்நியோன்ய கோலம்' என்கிறார்கள்.
இந்த சன்னதியின் முன்மண்டப மேற்சுவரில் கைலாயத்தில் சிவ,பார்வதி திருமணம் காணச்சென்ற முப்பத்து முக்கோடி தேவர்களும் இருக்கும் சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது.
மங்கைபாகர் சிலை, நவ மூலிகைச் சாற்றால் செய்யப்பட்டதாகும். எனவே, இவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. பவுர்ணமியன்று காலையில் புனுகு, சாம்பிராணி தைலம் மட்டுமே சாத்துகின்றனர். இவரது சன்னதியில் காசிராஜன் கொடுத்த, "உடையவர் லிங்கம்' என்ற சிறிய லிங்கம் இருக்கிறது. மங்கைபாகருக்கு அபிஷேகம் கிடையாது என்பதால், அவருக்குச் செய்ய வேண்டிய அபிஷேகம் அனைத்தும் இந்த லிங்கத்திற்கு செய்கின்றனர்.
குறிஞ்சி நிலத்தில் (குன்றில்) அமைந்த கோயில் என்பதால், இந்நிலத்திற்கு உரிய தேன், தினைமாவு மற்றும் பச்சரிசி மாவில் செய்த தோசையை நைவேத்யமாக படைக்கின்றனர்.
இவரது சன்னதியின் எதிரில் நந்தி கிடையாது. சிவன், அகத்தியருக்கு திருமணக்கோலத்தில் காட்சி கொடுத்தபோது, நந்திதேவர் மத்தளம் வாசித்துக் கொண்டிருந்தார். எனவே, சிவன் இங்கு நந்திதேவர் இல்லாமல் அம்பிகையுடன் காட்சி தந்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இவருக்கு எதிரில் நந்தி இல்லை என்கிறார்கள். மேலும் இவருக்கு கொடிமரம், பலிபீடமும் கிடையாது.
கைலாயத்தில் சிவன், பார்வதி திருமணம் நடந்தபோது தேவர்கள், மகரிஷிகள், முனிவர்கள் என அனைவரும் கைலாயம் சென்றனர். இதனால் வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர்ந்தது. உலகை சமப்படுத்த சிவன், அகத்தியரை தென்திசையில் பொதிகை மலைக்குச் செல்லும்படி கூறினார்.
அகத்தியருக்கோ, சிவனின் திருமணத்தைக் காண வேண்டுமென்ற ஆசை இருந்தது. தனது எண்ணத்தை சிவனிடம் முறையிட்டார். தென்திசையில் அவருக்கு தனது திருமணக்காட்சி கிடைக்கும் என்றார் சிவன். அப்போது அகத்தியர் சிவனிடம், தான் விரும்பும் இடங்களில் எல்லாம் அவரது திருமணக்கோல காட்சி கிடைக்க வேண்டும் என வேண்டினார்.
அதன்படி அகத்தியர் பொதிகை மலைக்குச் செல்லும் வழியில், பல இடங்களில் சிவனின் திருமணக்கோலத்தை தரிசித்தார். அவ்வாறு அவர் தரிசித்த தலங்களில் இத்தலமும் ஒன்று. இக்கோயில் குன்றக்குடி தேவஸ்தானத்தில் கட்டுப்பாட்டில் உள்ளது.

கீழக்கடம்பூர்


கீழக்கடம்பூர் எங்கிருக்கு?
காட்டுமன்னார் கோயில் - எய்யலூர் சாலையில் ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கடம்பூர் பண்டைய வரலாற்று சிறப்புமிக்க தளம். கடம்பூர் பற்றிய தகவல்/வரலாறு பொன்னியின் செல்வன் நூலில் அறியலாம். கடம்பூர் இப்போது இரண்டாக மேற்கில் உள்ள கடம்பூர் மேலகடம்புரகவும் கிழக்கில் உள்ள கடம்பூர் கீழகடம்புரகவும் உள்ளது.
கீழக்கடம்பூர் எல்லைகள்:

கீழகடம்பூரின் மேற்கில் மேலகடம்பூரும் வடக்கில் செட்டிதாங்களும் தெற்கில் வெகு தொலைவில் ஆயங்குடியும் கிழக்கில் விரிந்த வயல்வெளிக்கு ஒரு பகுதியில் கோட்டகம் மறு பகுதி விரிந்து உள்ளது .
கீழக்கடம்பூர் சிறப்புகள் :

அப்படி என்ன ஊரு கீழக்கடம்பூர் - கீழக்கடம்பூர் ராஜ ராஜ சோழன் வளம் வந்த பண்டைய பூமி. அவனால் எழுப்ப பட்ட சிவன் கோயில் ஓர் சிறப்பம்சம். ( தற்போது அது சிதமடைத்து உள்ளது. தமிழக அரசு அதில் தனி கவனம் செலுத்தி செபானிட்டு வருகிறது). சென்னை முதல் மற்ற நகருக்கு குடி தண்ணீர் கொடுக்கும் வீரா நாராயண பெருமாள் ஏரிக்கு காவேரி தண்ணீர் கணவாய் வடவாற்று கரை ஒரு பகுதில் உள்ளது. மக்களின் விவசாய தொனி மறு சிறப்பு .

------- தல வரலாறு தொடரும் --------

பிரதோஷ விரதம்கடைப் பிடிக்கும் முறை


பிரதோஷம் என்னும் இவ்விரதம் சிவமூர்த்திக்கு உரிய விரதங்களால் தலையாயது. விரதம் ஏற்பவர்கள், வளரபிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களாலும் வரும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி நித்திய கடன்களை முடிக்க வேண்டும்.
பிரம்ம  முராரி  ஹுரார்ச்சி  லிங்கம் 

நிர்மல பாஷித சோபித  லிங்கம் 

ஜென்மஜ  துக்க  விநாசன லிங்கம் 
தத்ப்ரணமாமி   சதா சிவ லிங்கம்     

                   
                                            நம்  பாவத்தைப்  போக்கி  குறை  உடைய மனித வாழ்வை நிறை உடையதாய் மற்றவே  நாம்  கடவுளை   வணங்குகின்றோம்.  சிவனுக்கு  செய்யப்படும்  பூஜைகளில் பிரதோஷத்தின்  போது  செய்யப் படும் பூஜை  சிறப்பானதாகும் .

                      பிரதோஷ  தினங்களில்  உபவாச மிருத்தல்  நன்மை  பயக்கும் .பிரதோஷ வழி  பாட்டால்கிட்டும்  பலன்கள் :
                       
                         நோய்   நீங்குதல்  ,கடன்  நீங்கி  தனம்  பெறுதல் ,துன்பம் நீங்கி  இன்பம்  பெறுதல் ,முக்தி அடைதல் ,பாவம்  நீங்கி  புண்ணியம்  பெறுதல் ,மழலை  செல்வம்  கிட்டுதல் ,அறியாமை  நீங்கி  ஞானம்  பெறுதல் ,செல்வச் செழுமை  ஆகியஅனைத்து  நன்மைகளும்  நம்மை  நாடிவரும் .
                       
                                பிரதோசங்களில்  சனிக்கிழமை  வரும்  பிரதோஷ  நாட்களில்  ஆலயம்   சென்று  வழிபட்டால் ,ஒருவருடம்  தினமும்  சென்று  வழிபட்ட  பலன்  கொடுக்கும்   பிரதோஷ   வேளை என்பது  மாலை  மணி  நான்ங்கு முப்பது  முதல் ஆறு மணி  வரையுள்ள  காலமாகும் .
                                    
                                 பிரதோஷ  நேரத்தில்  ஐந்து எழுத்து  மந்திரத்தை  சொல்லிக்கொண்டே   இருக்க  வேண்டும் .               
                                                  ஓம் நம சிவாயபிறகு சிவபுராணம், சிவ நாமாவளாகளை படித்து, முடிந்தவர்கள் மௌன விரதம் இருந்து, மாலையில் கோயில் சென்று, சிவதரிசனம் செய்து, நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய்தீபம் ஏற்றி வணங்கி வருதல் வேண்டும். பிரதோஷ விரதம் முடிந்ததும், வேதம் ஓதும் அந்தணர்களுக்கு தானம் வழங்கி விரதத்தை பூர்த்தி செய்தல் நலம்.

கல்விமடை சிவன் கோயில் சிறப்புக்கள்

பிரார்த்தனை

நன்றாக பணி செய்தும் சரியான மரியாதை கிடைக்காமல் இருப்பவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை. பணி உயர்வு, இடமாற்றம் வேண்டுபவர்களும் சுவாமியை வழிபடலாம்.
நேர்த்திக்கடன்: சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றுதல்.  அம்மனுக்கு புத்திர பாக்கியம் இல்லாத பெண்கள் அம்பாளுக்கு வஸ்திரம் சாத்தி வளையல்கள் அணிவித்து வழிபடுகிறார்கள். இதனால், குழந்தை பேறு கிடைப்பதாக நம்புகிறார்கள்.

திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். பிற நேரங்களில் அர்ச்சகரை அழைத்துக்கொண்டு சுவாமியை தரிசனம் செய்யலாம். 

ஸ்ரீலாயன் சித்தி விநாயகர் ஆலயம்

Sri Layan Vinagar Temple

ஸ்ரீலாயன் சித்தி விநாயகர் ஆலயம்

விநாயகர் வழிபாடு மிகவும் தொன்மையானது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னமே பரவியிருந்தது என்பது வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். விநாயகர் ஆனந்தமானவர்; பெருமையுடையவர், சச்சிதானந்த செரூபி, குணங் கடந்தவர்; தேகங்கடந்தவர்; காலங்கடந்தவர்; என்று விக்கினங்களை தீர்ப்பவர், எக்காரியம் தொடங்கும் முன்பு இவரின் ஆசியும் வேண்டும் என்பது விநாயகரைப்பற்றி கூறும் சாராம்சாகும். காட்சிக்கு எளிமையானவரான இவருக்கு தமிழ் நாட்டில் கோயில்� இல்லாத ஊர்� இஇல்லை. மூலை முடுக்குகளிலும்,சாலை சந்துகளிலும், ஆற்றங்கரை குளக்கரைகளிலும், ஆலமரத்தடியிலும், அரச மரத்தடியிலும் காட்சிக்கு எளியவராக விளங்குபவர் விநாயகப் பெருமான். மெய்யடியார்களுக்கு எளிதாக வந்து அருளும் இயல்புடையவர்.
�விநாயகப் பெருமானுடைய உருவம் விசித்திரமானது; சிரசு யானையைப் போன்றும் கழுத்து முதல் இடைவரை தேவர், மனிதரைப் போன்றும் அதற்கு கீழ்ப்பகுதி பூதங்களைப் போன்றும் அமைந்துள்ளது. அவர் ஆணுமல்லர்; பெண்ணுமல்லர், அலியுமல்லர். அண்டச்சராசங்களுமாக உள்ளார்; அவை அனைத்தும் தம்முள் அடக்கம் என்பதை அவரது பேழை வயிறு குறிக்கும். அடியார்க்கு வேண்டிய சித்திகளையும் அவற்றை அடைதற்கேற்ற புத்தியினையும் அருளுபவர்.

''சித்தி புத்தியோர் புகழும் உத்தம குணாதிபன்''.விநாயகருடைய காது, தலை, துதிக்கை ஆகிய மூன்றும் சேர்ந்து '' ஓம் '' என்னும் பிரணவத்தின் வடிவைக் காட்டும்.
அகரமாகிய எழுத்தைப் போன்று முதன்மையும் சிறப்பும்; அறிவின் திருவுருவம்; சர்வ வியாபி; படைத்தல்,காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களுக்கும் அகரம் - உகரம்-மகரம் என்னும் மூன்றும் சேர்ந்த பிரணவப் பொருள். தம்மை போற்றி வழிபடுபவர்க்கு அறம்,பொருள்,இ இன்பம், வீடு என்னும் நான்கு உறுதி பொருளை அருளிவர். போற்றி வழிபடாதவர்களுக்கு தடுத்தாட் கொண்டு பின் நலம் பலவும் அருளி மறக்கருணை புரியும் இயல்பினர்.


''அகரமென அறிவாகி, உலகம் எங்கும் அமர்ந்து
அகர உகர மகரங்கள் தம்மால் பகரும் ஒரு
முதலாகி பல்வேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகலில் பொருள் நான்கினையும் இடர் தீர்ந்தெய்தல்
போற்றுநருக்கு அறக்கருனை புரிந்து அல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும்
திருமலனைக் கணபதி நினைந்து வாழ்வோம்."


ஆலய வரலாறு

சைவ சிந்தாந்தத்தில் ஈடுபாடுடைய திரு.பொன்னம்பல சுவாமிகள் இந்திய தேசிய படைக்கு, சிங்கப்பூர்க்குபணியாற்ற வரும் போது விநாயகரையும் உட ன் துணையாகக் கொண்டு வந்தார்.வணங்குவதை மறவாதுதினமும் விநாயகரை வழிப்பட்டு வந்தார். பணி முடிந்து இந்தியாவுக்கு திரும்பும்போது தனக்கு துணையாக இருந்த விநாயகரை இங்கேயே விட்டுச் செல்ல விரும்பினார். ஆகையால் இங்குள்ள நகரத்தாரிடம் விநாயகரை ஒப்படைத்து நாடு திரும்பினார். நகரத்தாரும் ஒரு சிறு குடில் அமைத்து விநாயகரை அங்கு வைத்து பூஜைகளும், வழிபாடுகளும் செய்யத் தொடங்கினர். திரு. ச ன்னியாசி என்பார் பூஜைகளுக்கும், வழிபாடுகளுக்கும் பொறுப்பாக இருந்து கவனித்து வந்தார். 1925 ௭ ல் இந்த விநாயகர் அமர்ந்தவிடம் இப்போதும் இருக்கும் சிங்கப்பூர் பொது மருத்துவமனை வளாகம்.அருகில் சிங்கப்பூர் மத்திய சிறைச்சாலை. கோவிலுக்கு செல்ல ஒரு சிறு ஒ ன்றையடி பாதையும் அமைக்கப் பெற்றது. முதலாம் உலக மகா யுத்தம் முடிந்த பிறகு பொது மருத்துவ மனையில் பணிபுரிந்தவர்களும்,மத்திய சிறைச்சாலையில் பணிபுரிந்து வந்த இந்தியர்களும் இந்த விநாயகர் கோவில் வந்து வழிப்பட்டு செ ன்றனர். காலப்போக்கில் கணிசமான அளவில் மக்கள் விநாயகரை நாடி வந்து வழிப்பட்டனர். காலப் போக்கில் விநாயகருட ன் நாகரும் வந்து சேர்ந்தார். பொறுப்பு வகித்து வந்த ச ன்னியாசி தமிழகம் செல்ல வேண்டிய சூழ்நிலை அமையவே, நகரத்தாரிடம்பொறுப்பை ஒப்படைத்து விட்டு ஊருக்கு செ ன்று விட்டார். நகரத்தார் சிங்கப்பூர் இந்து அறக்கட்டளை வாரியத்தை நாடினர். இதில் இந்து அறக்கட்டளை வாரியம் ஆர்வம் காட்டவில்லை.ஆகையால் நகரத்தாரேபொறுப்பினை ஏற்று ஒரு பண்டாரத்தை நியமித்து கோவிலை நடத்தினர்.

புதிய ஆலயம்
கோவில் அமைந்திருந்த இடம் அரசு பொது மருத்துமனைக்குரியது. மருத்துமனை விரிவாக்கததிற்கு இடம் தேவைப்பட்டதால் 1970-ல் அரசாங்கம் அந்த இடத்தை கையப்படுத்தி நிலத்திற்குரிய தொகையை கொடுத்தது. தற்போது அமைந்திருக்கும் இடத்தில் அரசு கொடுத்த தொகையில் புதிய ஆலயம் எழுப்பினர்.பழைய விநாயகருக்கு பதில் தமிழ் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட புதிய கருங்கல் விநாயகரை ஆமக முறைப்படி �ஸ்தாபனம் செய்து மூலவராக வைத்தனர்.பொன்னபலம் கொடுத்து விநாயகரை மூல விக்கிரத்திற்கு எதிரில் வைத்தார்கள்.� முருகனுக்குரிய வேல் ஒன்றினையும் புதியதாக வைத்தனர். �'லாயின் சிட்டி விநாயகர் கோவில்' என்று புதிய கோவிலுக்கு பெயரிட்டார்கள். ஆரம்பக் காலத்தில் இக்கோயில் இந்திய தேசிய ராணுவத்தினர் குடியிருந்தப் பகுதியில் அமைந்திருந்தது. இந்திய சிப்பாய்கள்இருந்த பகுதியைக் கடந்துதான் கோவில் செல்லவேண்டும். கோவிலைக் குறிக்க சிப்பாய் லையின் கோயில்என்று அழைத்தார்கள். பிற்காலத்தில் சிப்பாய் மறைந்து ''லாயின் சிட்டி விநாயகர் கோயில்'' என்ற பெயர் காரணப் பெயராக அமைந்துவிட்டது.
திரு. பிச்சப்பா செட்டியார் என்பார் கிட்டாங்கி பகுதியில் (டேங் ரோடு) வேலை செய்து வந்தார். தெண்டாயுபாணி கோவில் டிரெஸ்டியாக இருந்தவர். திரு.பிச்சப்பா செட்டியார் ஒரு விநாயகர் விக்கிரத்தை வைத்து வழிப்பட்டு வந்தார். சில, பல காரணங்களால் தொடந்து விநாயகரை பூஜிக்க முடியாத காரணத்தால்விநாயகரை இந்த லாயின் சிட்டி விநாயகர் ஆலயத்திற்கு அன்பளிப்பாக கொடுத்துவிட்டார். ஆக தற்போதுஇவ்வாலயத்தில் மூன்று விநாயகர் பெருமான் இருந்து வருகிறார். டேங் ரோடு தெண்டாயுதபாணி கோவில் நகரத்தார் நிறுவாகத்தின் கீழ் இருந்தக் காரணத்தால் லாயின் சிட்டி விநாயகர் கோவிலும் அவர்கள் நிருவாகத்தின் பார்வையில் இருக்கிறது. தைப்பூசத்திற்கு முதல் நாள்வெள்ளி இரதம் டேங் ரோடு தெண்டாயுதபாணி கோவிலிருந்து புறப்பட்டு லாயின் சிட்டி விநாயகர் கோவில் வரை வந்து திரும்பி செல்லும். 1973,1989-ம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடைப்பெற்றுள்ளது. லாயின் சிட்டி விநாயகர் கோவில் சிறிதாகஇருப்பதால் கோவிலின் உட்பகுதியிலேயே பக்தர்கள் வலம் வருகிறார்கள். வேண்டுதல் நிறைவேறியர்கள் கோவில் உட்புறமாக 108 முறை வலம் வந்து வேண்டுதலை நிறைவேற்றி நிறைவுப் பெறுகிறார்கள். முக்கிய விழாக்களாக விநாயகர் சதுர்த்தி, வேல் அபிஷேகம், புத்தாண்டு, தீபாவளி, கார்த்திகை, பொங்கல்போன்ற விழாக்களும், மற்ற சமய விழாக்களும் நடைப்பெறுகிறது.

வள்ளற் பெருமான் இராமலிங்க சுவாமிகளின் உருக்கமான பாட்டு இங்கு கருதத்தக்கது!

'' திருவும், கல்வியும், சீரும், சிறப்பும், உன்
திருவடிப் புகழ்பாடும் திறமும், நல்
உருவும், சீலமும், ஊக்கமும், தாழ்வுறா
உணர்வும், தந்து எனது உள்ளத்து அமர்ந்தவா !
குருவும் தெய்வமும் ஆகி, அனபாளர்தம்
குணப் பெருங் குன்றமே !
வெருவும் சிந்தை விலகக் கஜானனம்விளக்கும்
சித்தி விநாயக வள்ளலே !
-சிங்கை கிருஷ்ணன்.

ஊத்துக்காடு சிவன் கோவில்

ஊத்துக்காடு சிவன் கோவில்

அமைவிடம் கோயிலூர் நகரமாக விளங்கும் காஞ்சியின் கிழக்கு பகுதியில் சுமார் 15 மயில் தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீ பெரும்பூதிலிருந்து வாலாஜாபாத்துக்கு செல்லும் சாலையில் வாலாஜாபாதிலிருந்து சுமார் 3 கல் தொலைவில் ஊத்துக்காடு என்கின்ற சிற்றூர் அமைந்துள்ளது.

கோவிலின் பழமையும் கல்வெட்டுக்கள் சான்றும் சுமார் 1200 வருடங்களுக்கு முன்பு பல்லவ வேந்தர்கள் தங்களுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியை 18 கோட்டங்களாக பகுத்தனர். அவற்றுள் ஊத்துக்காடும் ஒரு கோட்டமாக விளங்கியது. இவ்வூத்துக்காடு கோட்டத்தில், பல்லவ மன்னர்களின் கலை நுட்ப கோயில்களில் இச்சிவ ஆலயமும் ஒன்றாகும். இதற்க்கு உண்டான கல்வெட்டு சான்றில், இக்கோயில் ஒன்பதாம் நூற்றாண்டில் கம்பவர்மன் மன்னரால் கட்டப்பட்டது ஆகும். கம்பவர்மன், கோயில் சிவகார்யம் செய்து வந்த திருநாமக்கிழவர்களுக்கு ஒரு ஒப்பந்தம் செய்து கொடுத்தார்.இக்கோயிலில் பிரதி ஞாயிற்றுக் கிழமைகளில் மூன்று பெரிய நந்தா விளக்குகள் ஏற்றி அவை அர்த்த சாமம் வரை எரிவிக்க செய்பவர்களுக்கு பொன்னும் பொருளும் நிலமும் வழங்கினார். அப்படி வழங்கிய நிலத்துக்கு திருநாமக்காணி என்று பெயர். இது கல்வெட்டு சான்றாகும்.

இக்கோயில்நந்தி மண்டபம், மஹா மண்டபம், அர்தமண்டபம், சுவாமி சன்னதி, அம்பாள் சன்னதி, சண்டிகேஸ்வரரின் சன்னதி, மிகப்பெரிய விமானமும், கலை நுட்பங்களுடன் கூடிய அழகிய தூண்களும், மணிமண்டபமும் தன்னகத்தே கொண்டு ஒரு பெரிய கோவிலாக விளங்கியிருக்கிறது.

இன்றைய நிலை
இவ்வாறு எழில் மிகுந்து இருந்த இத்திருத்தலம் சிதிலமடைந்து இறைவன் திருமேனி மண்ணில் மறைந்து இருந்தது. ஒரு நாள் 1.08.08 அன்று விளையாடி கொண்டு இருந்த விடலைகளின் நெஞ்சில் ஈசன் ஊன்றி அவர்கள் மூலமாக மண்ணில் இருந்து இறைவன் திருமேனி கண்டறியப்பட்டது. இவை அனைத்தும் ஈசன் சித்தமாகும்.

புத்தூர்சிவன் கோவில் சிவன்திருவிழா

புத்தூர்சிவன் கோவில் சிவன்திருவிழா இனிதேநிறைவடைந்துள்ளது அதுதொடர்பான புகைப்படங்களை பார்வைஇட


இங்கேஅழுத்தவும்