August 05, 2011

சித்த மருத்துவ நிபுணர் அருண்சின்னையா


29
சித்த மருத்துவ நிபுணர் அருண்சின்னையா

                          மயப் பெரியார் திருநாவுக்கரசர் இவ்வுடம்பே கோவிலென்று சொல்கிறார். கட்டுப்படுத்தி அடக்கி வைக்கப் பட்ட மனமே அக்கோவிலில் வழிபாடுசெய்யும் அடிமை என்கிறார். உண்மை என்னும் வாய்மையால் உடம்பெனும் கோவிலைத்தூய்மை செய்ய வேண்டும். நமது உடம்பின் அகத்தூய்மை நாம் பேசும் உண்மைச்சொற்களால் உணரப்படும். நாம் பேசும் உண்மையே உடம்பெனும் கோவிலைத் தூய்மைசெய்து, உடம்பின் அழுக்கெனும் இருளைப் போக்கி ஒளி செய்து நிற்கும்.

உடம்பெனும் கோவிலில் உயிராய் வீற்றிருப்பவனே எம்பெருமான் சிவன். உம்மிலும் என்னிலும் புல்லிலும் பூண்டிலும் உயிராய் உலவுபவன் அவனின்றி வேறில்லை. அவன் சர்வவியாபி.

ஒரு முறை, பிரம்மா சாபத்தால் பீடிக்கப்பட்டு தனது பதவியை இழந்தார்.மீண்டும் தன் நிலை உயர சிவபிரானை வேண்டிக் கடுந்தவம் புரிந்தார்.அப்பொழுது சிவபெருமான் பிரம்மாவுக்கு ஆயிரம் கண்களுடன் காட்சியளித்தார்.

கண்மூடிக் காட்சியளித்தலே சிவனுக்கு அழகு. அதுமட்டுமல்ல; உலகில் உள்ளஜீவன்களுக்கும் அழகு. எம்பெருமான் சிவபிரான் ஒரு கண் திறந்தாலே இந்தஉலகில் பிரளயம் உண்டாகும். அப்படியிருக்க ஆயிரம் கண்கள் திறந்தால் கேட்கவாவேண்டும்! உலகில் பெரும் பிரளயங்கள் உண்டா கின. அப்பொழுது தேவர்கள் அன்னைபார்வதியை வேண்டிட, அன்னை சிவ பிரானை வேண்டி அவரை சாந்தப் படுத்தினாள்.

இதையெல்லாம் கண்ட பிரம்மா, ""நீங்கள் இங்கு ஆயிரம் கண்களுடன்காட்சியளித்ததால், இங்கு வரும் பக்தர்களுக்கு ஆயிரம் பிரச்சினைகள்இருந்தாலும் தீர்த்து வைக்க வேண்டும். அதாவது குணப்படுத்த வேண்டும்''என்று வேண்டினார். ஈசனும் அதை ஏற்பதாக வரமருளினார்.

ஒருமுறை திருவாரூர் அருகிலுள்ள திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் கோவிலுக்குச் சென்று எம்பெருமானைத் தரிசித்து வாருங்கள். உங்கள் பிரச்சினைகள்எல்லாம் பறந்தோடிவிடும்.

கோவிலின் பிரசாதமாக பொன்னாங் கண்ணி, கரிசலாங்கண்ணி, தேங்காய் எண்ணெய்கலந்த எண்ணெய்யை வழங்குவார்கள். இந்த எண்ணெய்யைத் தேய்த்து 48 நாட்கள்தலைமுழுகி நீராடினால் கண் நோய்கள் மட்டுமல்ல; கழுத்தை நெறிக்கும்பிரச்சினைகளும் காணாமல் போகும்.

எம்பிரானின் அருள் பெற்ற பொன்னாங் கண்ணி, இப்பூவுலகில் பூத உடலைத்தேற்றிக் கோவிலாக்க வந்த சிவாம்சம் என்பதை மறந்து விடாதீர்கள்.வாருங்கள்... பொன்னாங்கண்ணி கொண்டு உடலோம்பும் கலையை அறிவோம்.

குடற்புண் குணமாக...

பொன்னாங்கண்ணி கீரைச்சாறு, கரிசலாங் கண்ணி கீரைச்சாறு வகைக்கு 100 மி.லி.அளவு எடுத்து ஒன்றாய் கலந்து கொள்ளவும். இதில் 50 கிராம் அதிமதுரத்தை பால்விட்டரைத்து விழுதாக்கி, மேற்படி சாறுடன் கலந்து கொள்ளவும். பின்னர் இதனைமெழுகுப் பதமாய்க் காய்ச்சி வைத்துக் கொள்ளுங்கள். இதை தினமும் காலை, மாலைஇருவேளையும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர வாய்ப்புண், வயிற்றுப்புண்போன்றவை குணமாகும்.

நரம்புத் தளர்ச்சி நீங்க...

பொன்னாங்கண்ணிக் கீரை, செம்பருத்திப்பூ, ஆவாரம்பூ, ரோஜாப்பூ, கொன்றைப்பூஆகியவற்றை வகைக்கு 50 கிராம் எடுத்து ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும்.இதில் ஐந்து கிராம் அளவு தினசரி உணவுக்குப்பின் இரவில் மட்டும் சாப்பிட்டுவர வேண்டும். இத்துடன் மறக்காமல் ஒரு டம்ளர் பாலும் சாப்பிட்டு வர, இரண்டுமாதங்களில் நரம்புத் தளர்ச்சி பூரணமாய் குணமாகும். மேலும் ஆண்மைக்குறைபாடுகளும் தீரும்.

அபார நினைவாற்றல் பெற...

பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, சீந்தில், வல்லாரை ஆகியவற்றை வகைக்கு 100கிராம் எடுத்து ஒன்று கலந்து தூள் செய்து கொள்ளவும். இதில் மூன்று கிராம்அளவு, ஒரு டம்ளர் பசும்பாலுடன் சேர்த்து காலை- மாலை சாப்பிட்டு வர, அபாரநினைவாற்றல் உண்டாகும். மேலும் சோர்வு, பட படப்பு, தூக்கமின்மை, ரத்தஅழுத்தம், மன அழுத்தம், மன உளைச்சல் போன்ற கோளாறுகளும் தீரும்.

வெள்ளைப்படுதல் குணமாக...

பொன்னாங்கண்ணிச்சாறு, கரிசலாங் கண்ணிச்சாறு, பசு நெய், பசும்பால் எனஒவ்வொன்றிலும் வகைக்கு 60 மி.லி. அளவுக்கு எடுத்து ஒன்றாகக் கலக்கிக்காய்ச்சி, மெழுகு பதத்தில் இறக்கி வைத்துக் கொள்ளவும். இதில் தினமும்காலை- மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் (ஐந்து கிராம்) அளவுக்குச்சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் ஒரே வாரத்தில் குணமடையும். கை- கால்எரிச்சல், பித்த மயக்கம் போன்ற பாதிப்புகளும் குணமாகும்.

கண் நோய்கள் விலக...

பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சிறிது மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள்,பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து சூப் செய்து தொடர்ந்து 48 நாட்கள் (ஒருமண்டலம்) சாப்பிட்டு வர, கண் தொடர்பான அனைத்து வியாதிகளும் தீரும்.

மேனியழகு உண்டாக...

100 கிராம் பொன்னாங்கண்ணி (காய்ந்தது), 100 கிராம் பிஸ்தா பருப்புஇரண்டையும் ஒன்றாக்கி அரைத்துத் தூள் செய்து சலித்து வைத்துக் கொள்ளவும்.இதில் ஒரு ஸ்பூன் அளவு காலையும் மாலையும் சாப்பிட்டு வர, உடலுக்கு அழகும்பொன்னிறமும் ஒருசேர உண்டாகும்.

முகப்பரு, தேமல், படர்தாமரை விலக...

முந்திரிப் பருப்பு, முள்ளங்கி விதை சம அளவு எடுத்து, பொன்னாங்கண்ணிச் சாறு விட்டரைத்து பரு, தேமல், படர்தாமரை யின்மீது போட்டுவர, ஒரே வாரத்தில் குணமாகும்.

உஷ்ணம் தீர...

பொன்னாங்கண்ணிக் கீரையை விழுதாய் அரைத்து தலையில் தேய்த்துக் குளிக்க, உடல் உஷ்ணம், கண்நோய்கள் போன்றவை விலகும்.

நீண்ட கூந்தல் வளர்ச்சிக்கு...

இங்கு நான் உங்களுக்காக சித்தர்களால் அருளப்பட்ட ஒரு மிகச் சிறந்த கூந்தல்தைலத்தைப் பற்றிய குறிப்பை சொல்கிறேன். கவனமாய் குறிப்பெடுத்து, கருமையானகூந்தலுக்கு அச்சாரம் போடுங்கள்.

தேவதாருக்கட்டை- 50 கிராம்

கோஷ்டம்- 50 கிராம்

ஏலக்காய்- 50 கிராம்

வெள்ளைக் குண்டுமணிப் பருப்பு- 50 கிராம்

ஏலரிசி- 50 கிராம்

பொன்னாங்கண்ணிச் சாறு- அரை லிட்டர்

முதலில், வெள்ளைக் குண்டுமணியை பசும்பாலில் 12 மணி நேரம் ஊறவைத்து அதன்தோலை அகற்றிவிடவும். பின்னர் ஏலக்காயை உடைத்து உள்ளிருக்கும் விதையைமட்டும் 50 கிராம் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும். தேவதாரு, கோஷ்டம்இரண்டையும் நன்றாகத் தூள் செய்து, அத்துடன் வெள்ளைக் குண்டு மணிப்பருப்பு, ஏலரிசி ஆகியவற்றைச் சேர்த்து, சிறிது பொன்னாங்கண்ணிச் சாறுவிட்டரைத்து விழுதாக்கவும். அரைத்த விழுதை மீதமுள்ள பொன்னாங்கண்ணிச்சாற்றுடன் கலந்து மறுபடியும் 12 மணி நேரம் ஊற வைக்கவும்.

இனி, இரண்டு லிட்டர் நல்லெண்ணெயை அடுப்பிலேற்றி, ஏற்கெனவே தயாரித்துவைக்கப்பட்டுள்ள பொன்னாங்கண்ணி விழுதையும் சேர்த்து, பதமுறக் காய்ச்சவும்.தைலம், கடுகு பதத்தில் திரளும்போது இறக்கவும். சூடு ஆறியபின் தைலத்தைவடிகட்டி பத்திரப்படுத்தவும்.

இந்தத் தைலத்தைப் பயன்படுத்தினால் தலைமுடி நன்றாக வளரும். குறிப்பாகப்பெண்களுக்கு அவர்களே அதிசயிக்கத்தக்க அளவில் கூந்தல் மிக நீளமாகவும் கறுமையாகவும் வளரும். வழுக்கைத் தலையில்கூட முடி முளைக்கும். மேலும் உஷ்ணநோய்கள், கண்ணெரிச்சல், பித்த மயக்கம் போன்றவைகூட இருந்த இடம் தெரியாமல்மறைந்து விடும்.

இளநரை நீங்க...

பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, கொட்டைக் கரந்தை, குப்பைமேனி, சிறுசெருப்படை ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் சேர்த்து தூள் செய்து கொள்ளவும்.இதில் ஒரு ஸ்பூன் அளவு காலை- மாலை சாப்பிட்டு பசும்பால் அருந்தி வர இளநரைமறையும். மேலும் நரை வருவதும் நின்றுவிடும்.

நூறாண்டு வாழ...

பொன்னாங்கண்ணியில் தங்கத்தின் சத்து அடங்கியுள்ளது. பொன்னாங்கண்ணியைத்தவறாது நமது உணவில் சேர்த்து வர வேண்டும். பொன்னாங்கண்ணித் தைலம் கடைகளில்வெகு சாதாரணமாய்க் கிடைக்கிறது. அதனை வாங்கி வாரம் ஒரு முறையேனும் தலைமுழுகி வர வேண்டும். பொன்னாங்கண்ணி சித்தர்கள் நமக்கு அருளிய வரம்.பொன்னாங்கண்ணியால் இந்த உடலைப் பண்படுத்தி, ஆத்ம சுகம் பெறுவோம்.

சிவ வாக்கியர் சிந்தனைகள்


சிவ வாக்கியர் சிந்தனைகள்


சித்தர் சிவ வாக்கியர்

சிந்தனைச் செல்வர் சித்தர் சிவ வாக்கியரின் சில பாடல் வரிகளைக் கொண்டு அவர் நாத்திகர் என்ற கருத்து பரவலாகச் சிலரால் கூறப்படுகிறது. குறிப்பாக,
நட்டகல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து முணுமுணேன்று சொல்லுமந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன்உள் இருக்கையில்…
- என்ற வரிகளைச் சுட்டுகிறார்கள். வசதியாக பாடலின் இறுதி வரியான “ சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ” என்பதை எளிதில் மறந்து விடுகிறார்கள்.
இந்தப் பாடல் வரிகளில் எங்கே நாத்திக் கருத்துக்கள் உள்ளது?. அவர் சமயச் சடங்குகளைக் கண்டிக்கிறார். உண்மைதான். ஆனால் நாதன் உனக்கு உள்ளேயே இருக்கும் போது வெளியில் போய் இறைவனைத் தேடிக் கொண்டிருக்கிறாயே! மூடா. போலியான சடங்குகள் எதற்கு? உனக்குள் இருக்கும் ஜோதியைத் தேடு. அதை விடுத்து வெளியில் இறைவனைத் தேடிக் கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை. கறி சமைக்கப் பயன் படும் பாத்திரம் – வெறும் பாத்திரம் மட்டுமே. அதனால் அதன் சுவையை உணர்ந்து கூற இயலுமா? முடியாது. அது போல உருவ வழிபாடும், பூஜை, ஆராதனைகளும் இறைவனை உணர்வதற்கான பாவனையேயன்றி அவையே இறைவனாக மாட்டா. அதன் மூலம் இறைவனை உணர்ந்து அடைய வேண்டுமே தவிர, அதுவே முழுமையானதல்ல என்பதைத்தான் அவர் தனது பாடல் வரிகள் மூலம் சுட்டுகிறார்.
அதுபோல
கோயிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா?
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே!
- என்ற வரிகளைச் சொல்வார்கள்.
ஆனால் அதன் தொடர்ச்சியான
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே!
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே.
என்ற வரிகளை வழக்கம் போல மறந்து விடுவார்கள். இந்தப் பாடலுக்கு விளக்கமே தேவையில்லை. மனதுக்குள்ளேயே அனைத்தும் உள்ளது என்பதை மிக அழகாகச் சொல்கிறாரே சிவ வாக்கியர்.
உள்ளத்தில் உள்ளத்தைக் கடந்து செல்ல ’கடவுளை’ அடையலாம் என்கிறார் சிவ வாக்கியர். உள் கட உள் கட கடவுளை அடையலாம் என்பதே அவரது கருத்து.
இதனை
ஆடுகின்ற எம்பிரானை அங்குமிங்கும் என்றுநீர்
தேடுகின்ற பாவிகாள் தெளிந்ததொன்றை ஓர்கிலீர்
காடு நாடு வீடு வீண் கலந்து நின்ற கள்வனை
நாடிஓடி உம்முளே நயந்துணர்ந்து பாருமே.
என்று மிக அழகாக விளக்குகிறார்.
மேலும்
”உற்றிந்து பாரடா உள் ஒளிக்கு மேல் ஒளி
அத்தனார் அமர்ந்திடம் அறிந்தவன் அனாதியே”
என்றும் அவர் கூறும் பாங்கு வியக்கத்தக்கது.
நீண்ட காலம் உடலைப் பாதுகாப்பது என்ற சூட்சுமத்தினை
ஈராறு கால் கொண்டெழுந்த புரவியைப்
போராமற் கட்டிப் பெரிதுண்ண வல்லிரேல்
நீராயிரமும் நிலமாயிரத்தாண்டும்
போராது காயம் பிரான் நந்தி ஆணையே
என்று அவர் கூறுவதையே திருமந்திரமும் பலவிதங்களில் விதந்தோதுகிறது.
ஞானம் எய்துவது எப்படி என்பதை சிவ வாக்கியர்,
உருத்தரித்த நாடியில் ஓடுகின்ற வாயுவை
கருத்திலே இருத்தியே கபாலமேற்ற வல்லிரேல்
விருத்தரும் பாலனாவார்மேனியும் சிவந்திடும்
அருள் தரித்த நாதர் ஆணை அம்மை ஆணை உண்மையே
என்கிறார்.
மேலும் அவர் சொல்கிறார்,
ஓடியோடி யோடி யுட்கலந்த சோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி யெண்ணிறந்த கோடியே
என்கிறார். இதயத்துள்ளே இருக்கும் இறைவனைக் காணாமல் வெளியே தேடியலைந்து, இறுதியில் எங்கும் காண இயலாமல், இறைவனை, அந்த அருட்பெருஞ்சோதியை உணரவும் முடியாமல் மாண்டுபோனவர்கள் கோடி கோடிப் பேர் என்கிறார்.
பிரம்ம ஞான தத்துவத்தைச் சிவ வாக்கியர் தனது பல பாடல்களில் சுட்டுகிறார்.
அரியும்அல்ல அயனும்அல்ல அப்புறத்தில் அப்புறம்
கருமை செம்மை வெண்மையைக் கடந்துநின்ற காரணம்
பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்
துரியமும் கடந்துநின்ற தூரதூர தூரமே.
- என்கிறார். அதாவது விஷ்ணு அல்ல. பிரம்மாவும் அல்ல. அதற்கு அப்பாலுக்கும் அப்பால் இருக்கிறார். அவர் கருமை செம்மை வெண்மை என பல நிறங்களைக் கடந்து அந்த அனைத்து நிறங்களுக்கும் காரணமாய் இருக்கிறார். அவர் தன்மை பெரியதும் அல்ல. சிறியதும் அல்ல. அதையும் கடந்தது. பற்ற முடிந்தவர்கள் பற்றிக் கொள்ளுங்கள் என்கிறார்.
அது மட்டுமல்ல; எந்த நாமத்தை இடைவிடாது சொன்னால் உயர்நிலையை அடையலாம் என்பதையும் அவர் தனது பாடல்களில் சொல்லுகிறார்.
……………………………………………………………..
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே…
……………………………………………………………..
ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே…
என்றும்
கார கார கார கார காவலூழி காவலன்
போர போர போர போர போரினின்ற புண்ணியன்
மார மார மார மார மரங்களேழு மெய்தஸ்ரீ
ராம ராம ராம ராம ராமவென்னு நாமமே
என்றும்
நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புரம்
ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே!
என்றும் சொல்கிறார்.
மட்டுமல்ல;
போததாய் எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாததாய்ப் புகுந்ததும் தணலதாய் விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றதான அக்கரம்
ஓதடாநீ இராமராம ராமவென்னும் நாமமே.
என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் சிவ வாக்கியர் கூறும் மறை ஞான இறைவன் யார் என்பதை நாம் உணரலாம்.
இனிமேலாவது வெட்டி மன்றத்தில் பேசுபவர்கள் அல்லது கட்டுரைகளில் எழுதுபவர்கள் “சிவ வாக்கியர்” பாடல்களை முழுமையாகப் படித்து உணர்ந்தும், அவரது ஆன்மீகப் பார்வை என்ன என்பது குறித்த புரிதலும் தெளிவும் பெற்றுப் பேசுதல், எழுதுதல் சிறப்பு. அதனை விடுத்து ”சிவவாக்கியர் ஒரு நாத்திகர்” என்றெல்லாம் உளறினால், அவர்களைப் பார்த்து நகைப்பதைத் தவிர வேறு வழியில்லை.

சிவவாக்கியம்

சிவவாக்கியம்

மிவ்வை - நற்குணம்

ஆதியான அஞ்சிலும் அனாதியான நாலிலும்
சோதியான மூன்றிலும் சொரூபம்அற்ற ரெண்டிலும்
நீதியான தொன்றிலே நிறைந்துநின்ற வத்துவை
ஆதியான தொன்றுமே அற்றதஞ் செழுத்துமே. 227
வானிலாதது ஒன்றுமில்லை வானுமில்லை வானிடில்
ஊனிலாதது ஒன்றுமில்லை ஊனுமில்லை ஊனிடில்
நானிலாதது ஒன்றுமில்லை நானுமில்லை நண்ணிடில்
தானிலாதது ஒன்றுமில்லை தயங்கி ஆடுகின்றதே! 228
சுழித்ததோர் எழுத்தைஉன்னி சொல்லுமுகத்து இருத்தியே
துன்ப்இன்ப முங்கடந்து சொல்லும்நாடி யூடுபோய்
அழுத்தமான அக்கிரத்தின் அங்கியை எழுப்பியே
ஆறுபங்க யம்கடந்து அப்புறத்து வெளியிலே. 229
விழுத்தகண் குவித்தபோ தடைந்துபோய் எழுத்தெலாம்
விளைந்துவிட்ட இந்திரசால வீடதான வெளியிலே
அழுத்தினாலு மதிமயங்கி அனுபவிக்கும் வேளையில்
அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை ஆனதே. 230
நல்லமஞ் சனங்கள்தேடி நாடிநாடி ஓடுறீர்
நல்லமஞ் சனங்களுண்டு நாதன்உண்டு நம்முளே
எல்லைமஞ் சனங்கள்தேடி ஏகபூசை பண்ணினால்
தில்லைமேவும் சீவனும் சிவபதத்துள் ஆடுமே. 231
உயிர்அகத்தில் நின்றிடும் உடம்பெடுத்த தற்குமுன்
உயிர்அகாரம் ஆயிடும் உடல்உகாரம் ஆயிடும்
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது அச்சிவம்
உயிரினால் உடம்புதான் எடுத்தவாறு உரைக்கினேன். 232
அண்டம்ஏழும் உழலவே அனந்தயோனி உழலவே
பண்டைமால், அயனுடன் பரந்துநின்று உழலவே
எண்திசை கடந்துநின்ற இருண்டசத்தி உழலவே
அண்டரண்டம் ஒன்றதாய் ஆதிநட்டம் ஆடுமே. 233
உருவநீர் உறுப்புகொண்டு உருத்தரித்து வைத்திடும்
பெரியபாதை பேசுமோ பிசாசைஒத்த மூடரே,
கரியமாலம் அயனுமாக காணொணாத கடவுளை
உரிமையாக உம்முளே உணர்ந்துணர்ந்து கொள்ளுமே. 234
பண்ணிவைத்த கல்லையும் பழம்பொருள் அதென்றுநீர்
எண்ணமுற்றும் என்னபேர் உரைக்கிறீர்கள் ஏழைகாள்
பண்ணவும் படைக்கவும் படைத்துவைத்து அளிக்கவும்
ஒண்ணுமாகி உலகளித்த ஒன்றைநெஞ்சில் உண்ணுமே. 235
நாலதான போனியும் நவின்றவிந்தும் ஒன்றதாய்
ஆலதான வித்துளே அமர்ந்தொடுங்கு மாறுபோல்
சூலதான உற்பனம் சொல்வதான மந்திரம்
மேலதான ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே. 236
அருவமாய் இருந்தபோது அன்னைஅங்கு அறிந்திலை
உருவமாய் இருந்தபோது உன்னைநான் அறிந்தனன்
குருவினான் தெளிந்துகொண்டு கோதிலாத ஞானமாம்
பருவமான போதலோ பரப்பிரமம் ஆனதே. 237
பிறப்பதும் இறப்பதும் பிறந்திடாது இருப்பதும்
மறப்பதும் நினைப்பதும் மறைந்ததைத் தெளிந்ததும்
துறப்பதும் கொடுப்பதும் சுகித்துவாரி உண்பதும்
பிறப்பதும் இறப்பதும் பிறந்தவீடு அடங்குமே. 238
கண்ணிலே இருப்பனே கருங்கடல் கடைந்தமால்
விண்ணிலே இருப்பனே மேவிஅங்கு நிற்பனே
தன்னுளே இருப்பனே தராதலம் படைத்தவன்
என்னுளே இருப்பனே எங்குமாகி நிற்பனே. 239
ஆடுநாடு தேடினும் ஆனைசேனை தேடினும்
கோடிவாசி தேடினும் குறுக்கேவந்து நிற்குமோ?
ஓடிஇட்ட பிச்சையும் உகந்துசெய்த தர்மமும்
சாடிவிட்ட குதிரைபோல் தர்மம்வந்து நிற்குமே. 240
எள்இரும்பு கம்பளி இடும்பருத்தி வெண்கலம்
அள்ளிஉண்ட நாதனுக்கோர் ஆடைமாடை வத்திரம்
உள்ளிருக்கும் வேதியர்க்கு உற்றதானம் ஈதிரால்
மெள்ளவந்து நோய் அனைத்தும் மீண்டிடும் சிவாயமே. 241
ஊரிலுள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே
தேரிலே வடத்தைவிட்டு செம்பைவைத்து இழுக்கிறீர்
ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை
போரிலான மனிதர்பண்ணும் புரளிபாரும் பாருமே. 242
மருள்புகுந்த சிந்தையால் மயங்குகின்ற மாந்தரே
குருக்கொடுத்த மந்திரம் கொண்டுநீந்த வல்லீரேல்
குருக்கொடுத்த தொண்டரும் முகனொடித்த பிள்ளையும்
பருத்திபட்ட பன்னிரண்டு பாடுதான் படுவரே. 243
அன்னைகர்ப்ப அறைஅதற்குள் அங்கியின்பிர காசமாய்
அந்தறைக்குள் வந்திருந்து அரியவந்து ரூபமாய்
தன்னைஒத்து நின்றபோது தடையறுத்து வெளியதாய்
தங்கநற் பெருமைதந்து தலைவனாய் வளர்ந்ததே. 244
உன்னையற்ப நேரமும் மறந்திருக்க லாகுமோ
உள்ளமீது உறைந்தெனை மறைப்பிலாத சோதியைப்
பொன்னவென்ற பேரொளிப் பொருவில்லாத ஈசனே
பொன்னடிப் பிறப்பில்லாமை என்றுநல்க வேணுமே. 245
பிடித்ததண்டும் உம்மதோ பிரமமான பித்தர்காள்
தடித்தகோலம் அத்தைவிட்டு சாதிபேதங் கொண்மினோ,
வடித்திருந்த தோர்சிவத்தை வாய்மைகூற வல்லீரேல்
திடுக்கமுற்ற ஈசனைச் சென்றுகூட லாகுமே. 246
சத்திநீ தயவுநீ தயங்குசங்கின் ஓசைநீ
சித்திநீ சிவனும்நீ சிவாயமாம் எழுத்துநீ
முத்திநீ முதலும்நீ மூவரான தேவர்நீ
அத்திபூரம் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே. 247
சட்டையிட்டு மணிதுலங்கும் சாத்திரச் சழக்கரே
பொத்தகத்தை மெத்தவைத்துப் போதமோதும் பொய்யரே
நிட்டைஏது ஞானமேது? நீரிருந்த அட்சரம்
பட்டைஏது? சொல்லீரே பாதகக் கபடரே? 248
உண்மையான சுக்கிலம் உபாயமாய் இருந்ததும்
வெண்மையாகி நீரிலே விரைந்துநீர தானதும்
தண்மையான காயமே தரித்துஉருவம் ஆனதும்
தெண்மையான ஞானிகாள் தெளிந்துரைக்க வேணுமே. 249
வஞ்சகப் பிறவியை மனத்துளே விரும்பியே
அஞ்செழுத்தின் உண்மையை அறிகிலாத மாந்தர்காள்
வஞ்சகப் பிறவியை வதைத்திடவும் வல்லீரேல்
அஞ்செழுத்தின் உண்மையை அறிந்துகொள்ள லாகுமே. 250
காயிலாத சோலையில் கனியுகந்த வண்டுகள்
ஈயிலாத தேனையுண்டு இராப்பகல் உறங்குறீர்
பாயிலாத கப்பலேறி அக்கரைப் படுமுனே
வாயினால் உரைப்பதாகு மோமவுன ஞானமே. 251
பேய்கள்பேய்கள் என்கிறீர் பிதற்குகின்ற பேயர்காள்,
பேய்கள்பூசை கொள்ளுமோ பிடாரிபூசை கொள்ளுமோ
ஆதிபூசை கொள்ளுமோ அனாதி பூசை கொள்ளுமோ
காயமான பேயலோ கணக்கறிந்து கொண்டதே. 252
மூலமண்ட லத்திலே முச்சதுரம் ஆதியாய்
நாலுவாசல் எம்பிரான் நடுஉதித்த மந்திரம்
கோலிஎட்டு இதழுமாய் குளிர்ந்தலர்ந்த தீட்டமாய்
மேலும்வேறு காண்கிலேன் விளைந்ததே சிவாயமே. 253
ஆதிநாடி நாடிஓடிக் காலைமாலை நீரிலே
சோதிமூல மானநாடி சொல்லிறந்த தூவெளி
ஆதிகூடி நெற்பறித்தது அகாரமாதி ஆகமம்
பேதபேதம் ஆகியே பிறந்துடல் இறந்ததே. 254
பாங்கினோடு இருந்துகொண்டு பரமன்அஞ் செழுத்துளே
ஓங்கிநாடி மேல்இருந்து உச்சரித்த மந்திரம்
மூங்கில்வெட்டி நார்உரித்து முச்சில்செய் விதத்தினில்
ஆய்ந்தநூலில் தோன்றுமே அரிந்துணர்ந்து கொள்ளுமே. 255
புண்டரீக மத்தியில் உதித்தெழந்த சோதியை
மண்டலங்கள் மூன்றினோடு மன்னுகின்ற மாயனை
அண்டரண்டம் ஊடறுத்து அறிந்துணர வல்லீரேல்
கண்டகோயில் தெய்வம்என்று கையெடுப்ப தில்லையே. 256

புண்டரீகம் - தாமரை

அம்பலங்கள் சந்தியில் ஆடுகின்ற வம்பனே
அன்பனுக்குள் அன்பனாய் நிற்பதுஆதி வீரனே
அன்பருக்குள் அன்பராய் நின்றஆதி நாதனே
உம்பருக்கு உண்மையாய் நின்றஉண்மை உண்மையே. 257
அண்ணலாவது ஏதடா? அறிந்துரைத்த மந்திரம்
தண்ணலாக வந்தவன் சகலபுராணம் கற்றவன்
கண்ணனாக வந்ததன் காரணத் துதித்தவன்
ஒண்ணதாவது ஏதடா? உண்மையான மந்திரம்? 258
உள்ளதோ புறம்பதோ உயிர்ஒடுங்கி நின்றிடம்
மெள்ளவந்து கிட்டிநீர் வினவவேணும் என்கிறீர்?
உள்ளதும் புறம்பதும் ஒத்தபோது நாதமாம்
கள்ளவாச லைத்திறந்து காணவேணும் மந்திரம். 259
ஆரலைந்து பூதமாய் அளவிடாத யோனியும்
பாரமான தேவரும் பழுதிலாத பாசமும்
ஓரொணாத அண்டமும் உலோகலோக லோகமும்
சேரவெந்து போயிருந்த தேகம்ஏது செப்புமே? 260
என்னகத்துள் என்னைநான் எங்குநாடி ஓடினேன்?
என்னகத்துள் என்னைநான் அறிந்திலாத தாகையால்
என்னகத்துள் என்னைநான் அறிந்துமே தெரிந்தபின்
என்னகத்துள் என்னைஅன்றி யாதுமொன்று மில்லையே. 261
விண்ணினின்று மின்னெழுந்து மின்னொடுங்கு மாறுபோல்
என்னுள்நின்றும் எண்ணும்ஈசன் என்னகத்திருக் கையால்
கண்ணினின்று கண்ணில்தோன்றும் கண்ணிறி விலாமையால்
என்னுள்நின்ற என்னையும் யானறிந்தது இல்லையே. 262
அடக்கினும் அடக்கொணாத அம்பலத்தின் ஊடுபோய்
அடக்கினும் அடக்கொணாத அன்பிருக்கும் என்னுளே
கிடக்கினும் இருக்கினும் கிலேசம்வந்து இருக்கினும்
நடக்கினும் இடைவிடாத நாதசங் கொலிக்குமே. 263
மட்டுலாவு தண்துழாய் அலங்கலாய் புனற்கழல்
வீட்டுவீழில் தாகபோக விண்ணில்மண்ணில் வெளியினும்
எட்டினோடு இரண்டினும் இதத்தினால் மனந்தனைக்
கட்டிவீடி லாதுவைத்த காதலின்பம் ஆகுமே. 264
ஏகமுத்தி மூன்றுமுத்தி நாலுமுத்தி நன்மைசேர்
போகமுற்றி புண்ணியத்தில் முத்திஅன்றி முத்தியாய்
நாகமுற்றி சயனமாய் நலங்கடல் கடந்ததீ
யாகமுற்றி ஆகிநின்ற தென்கொலாதி தேவனே. 265
மூன்றுமுப்பது ஆறினோடு மூன்றுமூன்று மாயமாய்
மூன்றுமுத்தி ஆகிமூன்று மூன்றுமூன்று மூன்றுமாய்த்
தோன்றுசோதி மூன்றுதாய் துலக்கமில் விளக்கதாய்
ஏன்றெனாவின் உள்புகுந்த தென்கோலோ நம்ஈசனே. 266
ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் அல்லவற்றுள் ஆயுமாய்
ஐந்துமூன்றும் ஒன்றுமாகி நின்றஆதி தேவனே
ஐந்தும்ஐந்தும் ஐந்துமாய் அமைந்தனைத்து நின்றநீ
ஐந்தும்ஐந்தும் ஆயநின்னை யாவர்காண வல்லரே. 267
ஆறும்ஆறும் ஆறுமாய் ஓர்ஐந்தும்ஐந்தும் ஐந்துமாய்
ஏறுசீர் இரண்டுமூன்றும் ஏழும்ஆறும் எட்டுமாய்
வேறுவேறு ஞானமாகி மெய்யினோடு பொய்யுமாய்
ஊறும்ஓசை யாய்அமர்ந்த மாயமாம் மாயனே. 268
எட்டும்எட்டும் எட்டுமாய் ஓர்ஏழும் ஏழுமாய்
எட்டும் ஒன்றும் மூன்றுமாகி நின்றஆதி தேவனே
எட்டுமாய பாதமோடு இறைஞ்சி நின்றவண்ணமே
எட்டெழுத்தும் ஓதுவார்கள் அல்லல்நீங்கி நிற்பரே. 269
பத்தினோடு பத்துமாய் ஓர்ஏழினோடு ஒன்பதாய்
பத்துநாற் திசைக்குள்நின்ற நாடுபெற்ற நன்மையால்
பத்துமாய கொத்தமோடும் அத்தலமிக் காதிமால்
பத்தர்கட் கலாதுமுத்தி முத்திமுத்தி யாகுமே. 270
வாசியாகி நேசம்ஒன்றி வந்தெதிர்த்த தென்னுக
நேசமாக நாளுலாவ நன்மைசேர் பாவங்களில்
வீசிமேல் நிமிர்ந்ததோளி யில்லையாக்கி னாய்கழல்
ஆசையாய் மறக்கலாது அமரர்ஆகல் ஆகுமே. 271
எளியதாக காயமீதில் எம்பிரான் இருப்பிடம்
அளிவுறாது நின்றதே அகாரமும் உகாரமும்
கொளுகையான சோதியும் குலாவிநின்றது அவ்விடம்
வெளியதாகும் ஒன்றிலே விளைந்ததே சிவாயமே. 272
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்காள்
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அல்லகாணும் அப்பொருள்
அஞ்செழுத்தை நெஞ்சழுத்தி அவ்வெழுத்தை அறிந்தபின்
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அவ்வுமாம் சிவாயமே. 273
பொய்யுரைக்க போகமென்று பொய்யருக் கிருக்கையால்
மெய்யுரைக்க வேண்டுதில்லை மெய்யர்மெய்க் கிலாமையால்
வையகத்தில் உண்மைதன்னை வாய்திறக்க அஞ்சினேன்
நையவைத்தது என்கொலோ நமசிவாய நாதனே! 274
ஒன்றைஒன்று கொன்றுகூட உணவுசெய்து இருக்கினும்
மன்றினூடு பொய்களவு மாறுவேறு செய்யினும்
பன்றிதேடும் ஈசனைப் பரிந்துகூட வல்லீரேல்
அன்றுதேவர் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே. 275

மன்று - கடை

மச்சகத் துளேஇவர்ந்து மாயைபேசும் வாயூவை
அச்சகத்துளே இருந்து அறிவுணர்த்திக் கொள்விரேல்
இச்சைஅற்ற எம்பிரான் எங்கும்ஆகி நிற்பனே
அச்சகத் துளேயிருந்து அறுவுணர்த்திக் கொண்டபின். 276
வயலிலே முலைத்தநெல் களையதான வாறுபோல்
உலகினோரும் உண்மைகூறில் உய்யுமாறது எங்ஙனே
விரகிலே முளைத்தெழுந்த மெய்யலாது பொய்யதாய்
நரகிலே பிறந்திருந்து நாடுபட்ட பாடதே. 277

விரகு - விரகதாபம்

ஆடுகின்ற எம்பிரானை அங்குமிங்கும் என்றுநீர்
தேடுகின்ற பாவிகாள், தெளிந்தஒன்றை ஓர்கிலீர்;
காடுநாடு வீடுவீண் கலந்துநின்ற கள்வனை
நாடிஓடி உம்முளே நயந்துணர்ந்து பாருமே. 278
ஆடுகின்ற அண்டர்கூடும் அப்புறம திப்புறம்
தேடுநாலு வேதமும் தேவரான மூவரும்
நீடுவாழி பூதமும் நின்பதோர் நிலைகளும்
ஆடுவாழின் ஒழியலா தனைத்துமில்லை இல்லையே. 279
ஆவதும் பரத்துளே அழிவதும் பரத்துளே
போவதும் பரத்துளே புகுவதும் பரத்துளே
தேவரும் பரத்துளே திசைகளும் பரத்துளே
யாவரும் பரத்துளே யானும் அப்பரத்துளே. 280
ஏழுபார் எழுகடல் இடங்கள்எட்டு வெற்புடன்
சூழுவான் கிரிகடந்து சொல்லும் ஏழுலகமும்
ஆழிமால் விசும்புகொள் பிரமாண்டரண்ட அண்டமும்
ஊழியான் ஒளிக்குளே உதித்துடன் ஒடுங்குமே. 281
கயத்துநீர் இறைக்குறீர் கைகள்சோர்ந்து நிற்பதேன்?
மனத்துள்ஈரம் ஒன்றிலாத மதிஇலாத மாந்தர்காள்;
மனத்துள்ஈரம் கொண்டுநீர் அழுக்கறுக்க வல்லீரேல்
நினைத்திருந்த சோதியும் நீயும்நானும் ஒன்றலோ? 282
நீரிலே பிறந்திருந்து நீர்சடங்கு செய்கிறீர்
ஆரைஉன்னி நீரெலாம் அவத்திலே இறைக்கிறீர்
வேரைஉன்னி வித்தைஉன்னி வித்திலே முளைத்தெழும்
சீரைஉன்ன வல்லீரேல் சிவபதம் அடைவிரே. 283
பத்தொடொத்த வாசலில் பரந்துமூல வக்கரம்
முத்திசித்தி தொந்தமென்று இயங்குகின்ற மூலமே
மத்தசித்த ஐம்புலன் மாகரமான கூத்தையே
அத்தியூரர் தம்முளே அமைந்ததே சிவாயமே. 284
அணுவினோடும் அண்டமாய் அளவிடாத சோதியைக்
குணமதாகி உம்முளே குறித்திருக்கில் முத்தியாம்
முணமுணென்று உம்முளே விரலைஒன்றி மீளவும்
தினந்தினம் மயக்குவீர் செம்புபூசை பண்ணியே. 285
மூலமான அக்கரம் முகப்பதற்கு முன்னெலாம்
மூடமாக மூடுகின்ற மூடமேது *முடரே
காலனான அஞ்சுபூதம் அஞ்சிலே ஒடுங்கினால்
ஆலயோடு கூடுமோ அனாதியோடு கூடுமோ? 286
முச்சதுர மூலமாகி முடிவுமாகி ஏகமாய்
அச்சதுரம் ஆகியே அடங்கியோர் எழுத்துமாய்
மெய்ச்சதுர மெய்யுளே விளங்குஞான தீபமாய்
உச்சரிக்கும் மந்திரத்தின் உண்மையே சிவாயமே. 287
வண்டுலங்கள் போலும்நீர் மனத்துமாசு அறுக்கிலீர்
குண்டலங்கள் போலுநீர் குளத்திலே முழுகுறீர்
பண்டும் உங்கள் நான்முகன் பறந்துதேடி காண்கிலான்,
கண்டிருக்கும் உம்முளே கலந்திருப்பர் காணுமே. 288
நின்றதன்று இருந்ததன்று நேரிதன்று கூறிதன்று
பந்தமன்று வீடுமன்று பாவகங்கள் அற்றது.
கெந்தமன்று கேள்வியன்று கேடிலாத வானிலே
அந்தமின்றி நின்றதொன்றை எங்ஙனே உரைப்பதே. 289
பொருந்துநீரும் உம்முளே புகுந்துநின்ற காரணம்
எருதிரண்டு கன்றைஈன்ற ஏகமொன்றை ஓர்கிலிர்
அருகிருந்து சாவுகின்ற ஆவையும் அறிந்திலீர்
குருவிருந்து உலாவுகின்ற கோலம்என்ன கோலமே? 290
அம்பரத்துள் ஆடுகின்ற அஞ்செழுத்து நீயலோ?
சிம்புகளாய்ப் பரந்துநின்ற சிற்பரமும் நீயலோ?
எம்பிரானும் எவ்வுயிர்க்கும் ஏகபோகம் ஆதலால்
எம்பிரானும் நானுமாய் இருந்ததே சிவாயமே. 291
ஈரொளிய திங்களே இயங்கிநின்றது தற்பரம்
ஏரொளீய திங்களே அஃது யாவரும் அறிகிலீர்
காரொளிப் படலமும் கடந்துபோன தற்பரம்
தாரொளிப் பெரும்பதம் ஏகநாத பாதமே. 292
கொள்ளொணாது மெல்லொணாது கோதாறக் குதட்டடா
தள்ளொணாது அணுகொணாது ஆகலான் மனத்துளே
தெள்ளொணாது தெளியொணாது சிற்பரத்தின் உட்பயன்
விள்ளொணாது பொருளைநான் விளம்புமாறது எங்ஙனே? 293
வாக்கினால் மனத்தினால் மதித்தகார ணத்தினால்
நோக்கொணாத நோக்கையுன்னி நோக்கையாவர் நோக்குவார்
நோக்கொணாத நோக்குவந்து நோக்கநோக்க நோக்கிடில்
நோக்கொணாத நோக்குவந்து நோக்கைஎங்கண் நோக்குமே. 294
உள்ளினும் புறம்பினும் உலகமெங்கணும் பரந்து
எள்ளில்எண்ணெய் போலநின்று இயங்குகின்ற எம்பிரான்
மெள்ளவந்து என்னுட்புகுந்து மெய்த்தவம் புரிந்தபின்
வள்ளலென்ன வள்ளலுக்கு வண்ணமென்ன வண்ணமே? 295
வேதமொன்று கண்டிலேன் வெம்பிறப்பு இலாமையால்
போதம்நின்ற வடிவதாய்ப் புவனமெங்கும் ஆயினாய்,
சோதியுள் ஒளியுமாய்த் துரியமோடு அதீதமாய்
ஆதிமூலம் ஆதியாய் அமைந்ததே சிவாயமே. 296
சாண்இரு மடங்கினால் சரிந்தகொண்டை தன்னுளே
பேணிஅப் பதிக்குளே பிறந்திறந்து உழலுவீர்,
தோணியான ஐவரைத் துறந்தறுக்க வல்லீரேல்
காணிகண்டு கோடியாய்க் கலந்ததே சிவாயமே. 297
அஞ்சுகோடி மந்திரம் அஞ்சுளே அடங்கினால்
நெஞ்சுகூற உம்முளே நினைப்பதோர் எழுத்துளே
அஞ்சுநாலு மூன்றதாகி உம்முளே அடங்கினால்
அஞ்சும்ஓர் எழுத்ததாய் அமைந்ததே சிவாயமே. 298
அக்கரந்த அக்கரத்தில் உட்கரந்த அக்கரம்
சக்கரத்து சிவ்வைருண்டு சம்புளத் திருந்ததும்
எள்கரந்த எண்ணெய்போல் எவ்வெழுத்தும் எம்பிரான்
உள்கரந்து நின்றநேர்மை யாவர்காண வல்லரே. 299
ஆகமத்தின் உட்பொருள் அகண்டமூலம் ஆதலால்
தாகபோக மின்றியே தரித்ததற் பரமும்நீ
ஏகபாதம் வைத்தனை உணர்த்தும் அஞ்செழுத்துளே
ஏகபோகம் ஆகியே இருந்ததே சிவாயமே. 300
மூலவாசல் மீதுளேஓர் முச்சரம் ஆகியே
நாலுவாசல் எண்விரல் நடுஉதித்த மந்திரம்
கோலம்ஒன்றும் அஞ்சுமாகும் இங்கலைந்து நின்றநீ
வேறுவேறு கண்டிலேன் விளைந்ததே சிவாயமே. 301
சுக்கிலத் தடியுளே சுழித்ததோர் எழுத்துளே
அக்கரத் தடியுளே அமர்ந்தஆதி சோதிநீ
உக்கரத் தடியுளே உணர்ந்த அஞ்செழுத்துளே
அக்கரம் அதாகியே அமர்ந்ததே சிவாயமே. 302
குண்டலத்து ளேயுளே அறுத்தகத்து நாயகன்
கண்டவந்த மண்டலம் கருத்தழித்த கூத்தனை
விண்டலர்ந்த சந்திரன் விளங்குகின்ற மெய்ப்பொருள்
கண்டுகொண்ட மண்டலம் சிவாயமல்லது இல்லையே. 303
சுற்றும்ஐந்து கூடமொன்று சொல்லிறந்த தோர்வெளி
சத்தியும் சிவனுமாக நின்றதன்மை ஓர்கிலீர்
சத்தியாவு தும்முடல், தயங்குசீவ னுட்சிவம்
பித்தர்காள் அறிந்திலீர் பிரான்இருந்த கோலமே. 304
மூலம்என்ற மந்திரம் முளைத்த அஞ்செழுத்துளே
நாலுவேதம் நாவுளே நவின்றஞான மெய்யுளே
ஆலம்உண்ட கண்டனும் அரிஅயனும் ஆதலால்
ஓலம்என்ற மந்திரம் சிவாயமல்லது இல்லையே. 305
தத்துவங்கள் என்றுநீர் தமைக்கடிந்து போவீர்காள்
தத்துவம் சிவமதாகில் தற்பரமும் நீரல்லோ?
முத்திசீவன் நாதமே மூலபாதம் வைத்தப்பின்
அத்தனாரும் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே. 306
மூன்றுபத்து மூன்றையும் மூன்றுசொன்ன மூலனே
தோன்றுசேர ஞானிகாள் துய்யபாதம் என்தலை
என்றுவைத்த வைத்தபின் இயல்பும் அஞ்செழுத்தையும்
தோன்றஓத வல்லீரேல் துய்யசோதி காணுமே. 307
உம்பர் வானகத்தினும் உலகபாரம் ஏழினும்
நம்பர்நாடு தன்னிலும் நாவலென்ற தீவினும்
செம்பொன் மாடம் மல்குதில்லை அம்பலத்துள் ஆடுவான்
எம்பிரான் அலாதுதெய்வம் இல்லைஇல்லை இல்லையே. 308
பூவலாய் ஐந்துமாய் புனலில்நின்ற நான்குமாய்
தீயிலாய மூன்றுமாய்ச் சிறந்தகால் இரண்டுமாய்
வேயிலாய தொன்றுமாய் வேறுவேறு தன்மையாய்
நீயலாமல் நின்றநேர்மை யாவர்காண வல்லரே? 309
அந்தரத்தில் ஒன்றுமாய் அசைவுகால் இரண்டுமாய்
செந்தழலில் மூன்றுமாய்ச் சிறந்தஅப்பு நான்குமாய்
ஐந்துபாரில் ஐந்துமாய் அமர்ந்திருந்த நாதனைச்
சிந்ததையில் தெளிந்தமாயை யாவர்காண வல்லரே. 310
மனவிகாரம் அற்றுநீர் மதித்திருக்க வல்லீரேல்
நினைவிலாத மணிவிளக்கு நித்தமாகி நின்றிடும்;
அனைவர் ஓதும் வேதமும் அகம்பிதற்ற வேணுமேல்
கனவுகண்டது உண்மைநீர் தெளிந்ததே சிவாயமே. 311
இட்டகுண்டம் ஏதடா? இருக்கு வேதம் ஏதடா?
சுட்டமண் கலத்திலே சுற்றுநூல்கள் ஏதடா?
முட்டிநின்ற தூணிலே முளைத்தெழுந்த சோதியைப்
பற்றிநின்றது ஏதடா பட்டநாத பட்டரே. 312
நீரிலே முளைத்தெழுந்த தாமரையின் ஓரிலை
நீரினோடு கூடிநின்றும் நீரிலாத வாறுபோல்
பாரிலே முளைத்தெழுந்த பண்டிதப் பராபரம்
பாரினோடு கூடிநின்ற பண்புகண்டு இருப்பீரே. 313
உறக்கிலென், விழிக்கிலென், உணர்வுசென்று ஒடுங்கிலென்
சிறந்த ஐம்புலன்களும் திசைத்திசைகள் ஒன்றிலென்?
புறமும்உள்ளும் எங்ஙனம் பொருந்திருந்த தேகமாய்
நிறைந்திருந்த ஞானிகாள் நினைப்பது ஏதும் இல்லையே. 314
ஓதுவார்கள் ஓதுகின்ற ஓர்எழுத்தும் ஒன்றதே
வேதம் என்ற தேகமாய் விளம்புகின்றது அன்றிது,
நாதம்ஒன்று நான்முகன் மாலும்நானும் ஒன்றதே!
ஏதுமின்றி நின்றதொன்றை யான்உணர்ந்த நேர்மையே 315
பொங்கியே தரித்தஅச்சுப் புண்டரீக வெளியிலே
தங்கியே தரித்தபோது தாதுமா துளையதாம்
அங்கியுள் சரித்தபோது வடிவுகள் ஒளியுமாய்க்
கொம்புமேல் வடிவுகொண்டு குருஇருந்த கோலமே. 316
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறது எங்கெனில்
மண்ணினோடு சோதிபோல் கலந்தநாத விந்துவும்
அண்ணலோடு சத்தியும் அஞ்சுபஞ்சு பூதமும்
மண்ணினோடு கொடுத்தழிப் பாரொடேழும் இன்றுமே. 317
ஒடுக்குகின்ற சோதியும் உந்திநின்ற ஒருவனும்
நடுத்தலத்தில் ஒருவனும் நடந்துகாலில் ஏறியே
விடுத்துநின்ற இருவரோடு மெய்யினோடு பொய்யுமாய்
அடுத்துநின்ற அறிமினோ அனாதிநின்ற ஆதியே. 318
உதித்தமந் திரத்தினும் ஒடுங்கும் அக்கரத்தினும்
மதித்தமண் டலத்தினும் மறைந்துநின்ற சோதிநீ,
மதித்தமண் டலத்துளே மரித்துநீ இருந்தபின்
சிரித்தமண் டலத்துளே சிறந்ததே சிவாயமே. 319
திருத்திவைத்த சற்குருவைச் சீர்பெற வணங்கிலீர்
குருக்கொடுக்கும் பித்தரே கொண்டுநீந்த வல்லீரோ?
குருக்கொடுக்கும் பித்தரும் குருக்கொள்வந்த சீடனும்
பருத்திபட்ட பாடுதான் பன்னிரண்டும் பட்டதே. 320
விழித்தகண் துதிக்கவும் விந்துநாத ஓசையும்,
மேருவும் கடந்தஅண்ட கோளமும் கடந்துபோய்
எழுத்தெலாம் அழிந்துவிட்ட இந்திரசால வெளியிலே
யானும்நீயு மேகலந்த தென்னதன்மை ஈசனே. 321
ஓம்நமோ என்றுமுளே பாவையென்று அறிந்தபின்,
பானுடல் கருத்துளே பாவையென்று அறிந்தபின்,
நானும்நீயும் உண்டடா நலங்குலம் அதுஉண்டடா,
ஊணும்ஊணும் ஒன்றுமே உணர்ந்திடாய் உனக்குளே. 322
ஐம்புலனை வென்றவர்க்கு அன்னதானம் ஈவதால்
நன்புலன்க ளாகிநின்ற நாதருக்கது ஏறுமோ
ஐம்புலனை வென்றிடாது அவத்துமே உழன்றிடும்
வம்பருக்கும் ஈவதும் கொடுப்பதும் அவத்தமே. 323
ஆணியான ஐம்புலன்கள் அவையும்மொக்குகள் ஒக்குமோ?
யோனியில் பிறந்திருந்த துன்பமிக்கு மொக்குமோ?
வீணர்காள் பிதற்றுவீர் மெய்மையே உணர்திரேல்
ஊண்உறக்க போகமும் உமக்கெனக்கும் ஒக்குமே. 324
ஓடுகின்ற ஐம்புலன் ஒடுங்கஅஞ் செழுத்துளே
நாடுகின்ற நான்மறை நவிலுகின்ற ஞானிகாள்
கூடுகின்ற பண்டித குணங்கள்மூன்று எழுத்துளே
ஆடுகின்ற பாவையாய் அமைந்ததே சிவாயமே. 325
புவனசக்க ரத்துளே பூதநாத வெளியிலே,
பொங்குதீப அங்கியுள் பொதிந்தெழுந்த வாயுவைத்
தவனசோமர் இருவரும் தாம்இயங்கும் வாசலில்
தண்டுமாறி ஏறிநின்ற சரசமான வெளியிலே. 326
மவுனஅஞ் செழுத்திலே வாசிஏறி மெள்ளவே
வானளாய் நிறைந்தசோதி மண்டலம் புகுந்தபின்
அவனும்நானும் மெய்கலந்து அனுபவித்த அளவிலே
அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை யானதே. 327
வாளுறையில் வாளடக்கம் வாயுறையில் வாய்வடக்கம்
ஆளுறையில் ஆளடக்கம் அருமைஎன்ன வித்தைகாண்!
தாளுறையில் தாளடக்கம் தன்மையான தன்மையும்
நாளுறையில் நாளடக்கம் நானும் நீயும் கண்டதே. 328
வழுத்திடான் அழித்திடான் மாயரூபம் ஆகிடான்
கழன்றிடான் வெகுண்டிடான் காலகால காலமும்
துவண்டிடான் அசைந்திடான் தூயதூபம் ஆகிடான்
சுவன்றிடான் உரைத்திடான் சூட்சசூட்ச சூட்சமே. 329
ஆகிகூவென் றேஉரைத்த அட்சரத்தின் ஆனந்தம்
யோகியோகி என்பர்கோடி உற்றறிந்து கண்டிடார்
பூகமாய் மனக்குரங்கு பொங்கும்மங்கும் இங்குமாய்
ஏகம்ஏக மாகவே இருப்பர்கோடி கோடியே. 330
கோடிகோடி கோடிகோடி குவலயத்தோர் ஆதியை
நாடிநாடி நாடிநாடி நாளகன்று வீணதாய்த்
தேடிதேடி தேடிதேடித் தேகமும் கசங்கியே
கூடிகூடி கூடிகூடி நிற்பர்கோடி கோடியே. 331
கருத்திலான் வெளுத்திலான் பரன்இருந்த காரணம்
இருத்திலான் ஒளித்திலான் ஒன்றும்இரண்டும் ஆகிலான்
ஒருத்திலான் மரித்திலான் ஒழிந்திடான் அழிந்திடான்
கருத்தில்கீயும் கூவும்உற்றோன் கண்டறிந்த ஆதியே. 332
வாதிவாதி வாதிவாதி வண்டலை அறிந்திடான்
ஊதிஊதி ஊதிஊதி ஒளிமழுங்கி உளறுவான்
வீதிவீதி வீதிவீதி விடைஎருப் பொறுக்குவான்
சாதிசாதி சாதிசாதி சகாரத்தைக் கண்டிடான். 333
ஆண்மைஆண்மை ஆண்மைஆண்மை ஆண்மைகூறும் அசடரே
காண்மையான வாதிரூபம் காலகால காலமும்
பாண்மையாகி மோனமான பாசமாகி நின்றிடும்
நாண்மையாகி நரலைவாயில் நங்குமிங்கும் அங்குமே. 334
மிங்குஎன்ற அட்சரத்தின் மீட்டுவாகிக் கூவுடன்
தூங்கமாகச் சோமனோடு சோமன்மாறி நின்றிடும்
அங்கமா முனைச்சுழியில் ஆகும்ஏகம் ஆகையால்
கங்குலற்றுக் கியானமுற்றுக் காணவாய் சுடரொளி. 335
சுடரெழும்பும் சூட்சமும் கழிமுனையின் சூட்சமும்
அடரெழும்பி ஏகமாக அமர்ந்துநின்ற சூட்சமும்
திடரதான சூட்சமும் திரியின்வாலை சூட்சமும்
கடலெழும்பு சூட்சமும் கண்டறிந்தோன் ஞானியே. 336
ஞானிஞானி என்றுரைத்த நாய்கள் கோடிகோடியே
வானிலாத மழைநாளென்ற வாதிகோடி கோடியே
தானிலா சாகரத்தின் தன்மைகாணா மூடர்கள்
மூனிலாமல் கோடிகோடி முன்னறிந்த தென்பரே. 337
சூட்சமான கொம்பிலே சுழிமுனைச் சுடரிலே
வீச்சமான வீயிலே விபுலைதங்கும் வாயிலே
கூச்சமான கொம்பிலே குடிஇருந்த கோவிலே
தீட்சையான தீவிலே சிறந்ததே சிவாயமே. 338
பொங்கிநின்ற மோனமும் பொதிந்துநின்ற மோனமும்
தங்கிநின்ற மோனமும் தயங்கிநின்ற மோனமும்
கங்கையான மோனமும் கதித்துநின்ற மோனமும்
திங்களான மோனமும் சிவனிருந்த மோனமே. 339
மோனமான வீதியில் முனைச்சுழியின் வாலையில்
பானமான வீதியில் பசைந்தசெஞ் சுடரினில்
ஞானமான மூலையில் நரலைதங்கும் வாயிலில்,
ஓனமான செஞ்சுடர் உதித்ததே சிவாயமே. 340
உதித்தெழுந்த வாலையும் உயங்கிநின்ற வாலையும்
கதித்தெழுந்த வாலையும் காலையான வாலையும்
மதித்தெழுந்த வாலையும் மறைந்துநின்ற ஞானமும்
கொதித்தெழுந்து கும்பலாகி கூவும்கீயும் ஆனதே. 341
கூவும்கீயும் மோனமாகி கொள்கையான கொள்கையை
மூவிலே உதித்தெழுந்த முச்சுடர் விரிவிலே
பூவிலே நறைகள்போலப் பொருந்திநின்ற பூரணம்
ஆவிஆவி ஆவிஆவி அன்பருள்ளம் உற்றதே. 342
ஆண்மைகூறும் மாந்தரே அருக்கனோடும் வீதியை
காண்மையாகக் காண்பீரே கசடறுக்க வல்லீரே
தூண்மையான வாதிசூட்சம் சோபமாகும் ஆகுமே
நாண்மையான வாயிலில் நடித்துநின்ற நாதமே. 343
நாதமான வாயிலில் நடித்துநின்ற சாயலில்
வேதமான வீதியில் விரிந்தமுச் சுடரிலே
கீதமான கீயிலே கிளர்ந்துநின்ற கூவிலே
பூதமான வாயிலைப் புகலறிவன் ஆதியே. 344
ஆவிஆவி ஆவிஆவி ஐந்துகொம்பின் ஆவியே
மேவிமேவி மேவிமேவி மேதினியில் மானிடர்
வாவிவாவி வாவிவாவி வண்டர்கள் அறிந்திடார்
பாவிபாவி பாவிபாவி படியிலுற்ற மாந்தரே. 345
வித்திலே முளைத்தசோதி வில்வளையின் மத்தியில்
முத்திலே ஒளிவதாகி மோனமான தீபமே
நத்திலே திரட்சிபோன்ற நாதனை அறிந்திடார்
வத்திலே கிடந்துழன்ற வாலையான சூட்சமே. 346
மாலையோடு காலையும் வடிந்துபொங்கும் மோனமே
மாலையோடு காலையான வாறறிந்த மாந்தரே
மூலையான கோணமின் முளைத்தெழுந்த செஞ்சுடர்
தாலையோடு பானகன்று தங்கி நின்ற மோனமே. 347
மோனமான வீதியில் முடுகிநின்ற நாதமே
ஈனமின்றி வேகமான வேகம்என்ன வேகமே
கானமான மூலையில் கனிந்திருந்த வாலையில்
ஞானமான செஞ்சுடர் நடந்ததே சிவாயமே. 348
உச்சிமத்தி வீதியில் ஒழிந்திருந்த சாதியில்
பச்சியுற்ற சோமனும் பரந்துநின்று லாவவே
செச்சியான தீபமே, தியானமான மோனமே,
கச்சியான மோனமே, கடந்ததே சிவாயமே. 349
அஞ்சுகொம்பில் நின்றுநாதம் ஆலைபோல் எழும்பியே
பிஞ்சினோடு பூமலர்ந்து பெற்றியுற்ற சுத்தமே
செஞ்சுடர் உதித்தபோது தேசிகன் கழன்றுடன்
பஞ்சபூதம் ஆனதே பறந்துநின்ற மோனமே. 350
சடுதியான கொம்பிலே தத்துவத்தின் இயலிலே
அடுதியான ஆவிலே அரன்இருந்த ஊவிலே
இடுதிஎன்ற சோலையில் இருந்தமுச் சுடரிலே
நடுதிஎன்று நாதம்ஓடி நன்குற அமைந்ததே. 351
அமையுமாலின் மோனமும் அரன்இருந்த மோனமும்
சமையும்பூத மோனமும் தரித்திருந்த மோனமும்
இமையும்கொண்ட வேகமும் இலங்கும்உச்சி மோனமும்
தமையறிந்த மாந்தரே சடத்தைஉற்று நோக்கிலார். 352
பாய்ச்சலூர் வழியிலே பரன்இருந்த சுழியிலே
காய்ச்சகொம்பின் நுனியிலே கனியிருந்த மலையிலே
வீச்சமானது ஏதடா? விரிவுதங்கும் இங்குமே
மூச்சினோடு மூச்சைவாங்கு முட்டிநின்ற சோதியே. 353
சோதிசோதி என்றுநாடித் தோற்பவர் சிலவரே
ஆதிஆதி என்றுநாடும் ஆடவர் சிலவரே
வாதிவாதி என்றுசொல்லும் வம்பரும் சிலவரே
நீதிநீதி நீதிநீதி நின்றிடும் முழுச்சுடர். 354
சுடரதாகி எழும்பியங்குத் தூபமான காலமே
இடரதாய்ப் புவியும்விண்ணும் ஏகமாய் அமைக்கமுன்
படரதாக நின்றஆதி பஞ்சபூதம் ஆகியே
அடரதாக அண்டம்எங்கும் ஆண்மையாக நின்றதே. 355
நின்றிருந்த சோதியை நிலத்தில்உற்ற மானிடர்
கண்டறிந்து கண்குளிர்ந்து காதலுற்று உலாவுவோர்
கண்டமுற்ற மேன்முனையில் காட்சிதன்னைக் காணுவார்
கன்றிஅற்று நாலைபொங்கி நாதமும் மகிழ்ந்திடும். 356
வயங்குமோனச் செஞ்சுடர் வடிந்தசோதி நாதமும்
கயங்கள்போலக் கதறியே கருவூரற்ற வெளியிலே
பயங்கொடின்றி இன்றியே படர்ந்துநின்ற பான்மையை
நயங்கள்கோவென் றேநடுங்கி நங்கையான தீபமே. 357
தீபஉச்சி முனையிலே திவாகரத்தின் கழியிலே
கோபமாறு கூவிலே கொதித்துநின்ற தீயிலே
தாபமான மூலையில் சமைந்துநின்ற சூட்சமும்
சாபமான மோட்சமும் தடிந்துநின்று இலங்குமே. 358

சித்தர் சிவவாக்கியர் சிந்தனைகள்

சித்தர் சிவவாக்கியர் சிந்தனைகள்



சிந்தனை 07



மை அடர்ந்த கண்ணினார் மயக்கிடும் மயக்கிலே
ஐ இறந்து கொண்டு நீங்கள் அல்லல் உற்றிருப்பீர்கள்
மெய் அறிந்த சிந்தையால் விளங்கு ஞானம் எய்தினால்
உய்யரிந்து கொண்டு நீங்கள் ஊழிகாலம் வாழ்விரே.

மைத் தீட்டிய அழகிய கண்களை உடைய இளம் பெண்கள் ஆடவரை காம வலை வீசி வீழ்த்தி மயக்கிடும் பாழ்வாழ்வெனும் இம்மையையில் அகப்பட்டு வீணான சந்தேகங்களிலும், எம வேதனை பயத்தினாலும் பிடிக்கப்பட்டு நீங்கள் துன்பப்பட்டு வாழ்ந்து உழன்று வருகின்றீர்கள். உங்கள் உடம்பிலேயே உள்ள உயிரை அறிந்து அதில் விளங்கும் மெய்ப்பொருளை உணர்ந்து அதையே சிந்தையில் நினைந்து தியானியுங்கள். இதுவே இப்பிறவி உய்வடையும் வழி என்பத அறிந்து ஞானத்தினால் நீங்கள் தவம் புரிந்து வந்தால் மரணமிலாப் பேரு வாழ்வைப் பெற்று இறைவனோடு எக்காலமும் நித்தியமாய் வாழ்வீர்கள்

சிந்தனை 06

கைவடங்கள் கொண்டு நீர் கண்சிமிட்டி நிற்கிறீர்
எவ்விடங்கள் கண்டு நீர் எண்ணி எண்ணிப் பார்க்கிறீர்
பொய் இறந்த சிந்தையை பொருந்தி நோக்க வல்லிரேல்
மெய் கடந்து உம்முளே  விரைந்து கூடல் ஆகுமே.

எவ்வளவோ கை முறைகள் கொண்டு யோக ஞானம் கற்றாலும் நம் மெய்யில் மெய்யான இடம் எதுவென அறியாமல் கண்களை சிமிட்டி நிற்கிறீர்கள். ஈசன் இருக்கும் இடம் எங்கே என்று தெரிந்து கொள்ளாமல் எவ்விடத்தில் மனதை இறுத்தி தியானம் செய்கிறீர்கள். பொய்யாயின யாவையும் ஒழித்து மெய்ப் பொருளை நன்கு உணர்ந்து, அங்கேயே சிந்தையைப் பொருத்தி அதையே நோக்கி தியானிக்க வல்லவர்கலானால் மெய்ப்பொருளில் சோதியாக விளங்கி எல்லாவற்றையும் கடந்து நின்ற ஈசனை உங்களுக்குள்ளேயே கண்டு விரைவில் சேர்ந்து கூடி இறவா நிலையைப் பெறுங்கள்.



சிந்தனை 05
பறைச்சி யாவது ஏதடா பணத்தியாவது ஏதடா
இறைச்சி தோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ
பறைச்சி போகம் வேறதோ மனத்தி போகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுத்து பாரும் உம்முள்ளே
 பறைச்சி என்பதும் பார்ப்பனத்தி என்பதும் ஏனாடா? அவர்கள் அனைவரும் பெண்கள்தானே. யாவருக்கும் தசை, தோல், எலும்பு யாவும் ஒரே மாதிரிதானே அமைந்துள்ளது. அதில் எதிலாவது இவள் தாழ்ந்த சாதி, அவள் உயர்ந்த சாதி என்று எழுதப்பட்டா  இருக்கிறது?  பெண்கள் பால் கிடைக்கும் சிற்றின்பம் யாவருக்கும் ஒன்றாகவே அனுபவம் கிடைக்கிறது. இவை யாவையும் நன்கு பகுத்தறிந்து உனக்குள்ளே இருக்கும் இறையை உணர்ந்து தியானம் செய்து பாருங்கள்.

சிந்தனை 04
அண்டர்கோன் இருப்பிடம் அறிந்து உணர்ந்த ஞானிகள்
பண்டறிந்த பான்மை தன்னை யார் அறிய வல்லரோ?
விண்ட வேதப் பொருளை அன்றி வேறு கூற வகையிலா
கண்டகோயில் தெய்வமென்று கையெடுப்பது இல்லையே.
அண்டங்கள் யாவினுக்கும் அரசனான ஈசனை, அவன் கோனாக அமர்ந்து தனக்குள் ஆட்சி செய்யும் இடம் இதுவென அறிந்து, உணர்ந்த ஞானிகள் அவனையே தியானித்து இருப்பார். அவர்கள் இந்த உண்மையை அறிவதற்காக பட்ட பாட்டினையும், இழந்த பொருளையும், யாராவது அறிய முடியுமா? வேதங்கள் வெளிப்படுத்தும் மெய்ப்பொருளை ஈசனாக அறிந்தவர்கள் தனக்குள்ளே இறைவனை, கண்டு கண்ட அதே தெய்வம் என உணர்ந்தவர்கள், காணுகின்ற கோயில்களிலெல்லாம் தெய்வம் இருப்பதாக எண்ணி கைதொழ மாட்டார்கள்.



சிந்தனை 03

அண்ணலே அனாதியே அனாதிமுன் அனாதியே
பெண்ணும் ஆணும் ஒன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம்
கண்ணில் ஆணின் சுக்கிலம் கருவில் ஓங்கும் நாளிலே
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு எங்ஙனே.
 நம் ஆருயிரில் ஆதி, அனாதி, அந்தமாக உள்ளவன் சிவனே. அவனே அனாதிக்குமுன் தோன்றிய அனாதியாக என்றும் நம் ஆன்மாவில் உறைகின்றான். பிறப்பதற்கு முன் எல்லா ஆன்மாக்களும் ஒரேழுத்தாக ஒன்றாகவே இருந்தது. அவைகளுக்கு ஆண், பெண் என்ற பேதம் ஏதும் கிடையாது. அது கண்ணில் நினைவாகத் தோன்றி ஆணிடம் சுக்கிலமாக உற்பத்தியாகி உருவாகின்றது. அப்போதே ஆன்மாவில் ஆண்டவன் நுழைந்து விடுகின்றான். பின்னரே உருவாகி ஆன்மா வளர்கின்றது. இப்படித்தான் மண்ணில் வாழும் மனிதர்களாகவும், விண்ணில் சேரும் தேவர்களாகவும், அனைவரும் வந்தனர் அன்பத அறிந்து கொள்ளுங்கள்.

சிந்தனை 02  ஓடம் உள்ள போதலோ ஓடியே உலாவலாம்
ஓடம் உள்ள போதலோ உறுதி பண்ணிக் கொள்ளலாம்
ஓடமும் உடைந்த போது ஒப்பிலாத வெளியிலே
ஆடுமில்லைகோலுமில்லை யாருமில்லையானதே.
ஓடமாகிய இவ்வுடம்பு இருந்தால்தான் அங்கும் இங்கும் ஓடி உலாவலாம். இந்த உடம்பில்தான் உயிர் உள்ளது என்பதையும் அதிலேதான் இறைவன் இருக்கிறான் என்பதையும் அறிந்து பிராணாயாமம், வாசியோகம், தியானம், தவம் போன்றவைகளை அறிந்து புரிந்து இவ்வுடம்பை உறுதியான கல்பதேகமாக மாற்றிக் கொள்ளலாம். இதை உணராது இவ்வுடலை விட்டு உயிர் போய் ஆகாயத்தில் மறைந்துவிட்டால், அப்போது இவ்வுடலில் ஆடிக்கொண்டிருந்த உயிரும் இல்லை, அதனை மேய்த்துக் கொண்டிருந்த ஈசனுமில்லை, என்றாகி தம் மனைவி மக்களோ, சொந்த பந்தஙகளோ, யாரும் இல்லாது போய்விடும். ஆகவே இவ்வுடம்பில் உயிர் இருக்கும் போதே இறைவனை அறிந்து தியானம் செய்யுங்கள், பிறவிப் பெருக்கடலை கடந்து கரை சேரலாம்.

சிந்தனை 01 


சங்கிரண்டு தாரை ஒன்று சன்னல் பின்னல் ஆகையால்
மங்கி மாளுதே உலகில் மானிடங்கள் எத்தனை
சங்கிரன்டையும் தவிர்த்து தாரையூத வல்லிரேல்
கொங்கை மங்கை பங்கரோடு கூடி வாழல் ஆகுமே.
 நமது மூக்கு ஒன்று, வாசல்கள் இரண்டு. அவைகளில் நம் காற்றானது இடகலை, பிங்கலை, சுழுமுனை எனும் நாடிகளில் சன்னல் பின்னலாக ஓடி நடந்துக் கொண்டிருக்கிறது. இப்படியாக ஒவ்வொரு சுவாசத்திலும் பிராணனில் இருந்து நாலு அங்குலம் நஷ்டமடைகிறது. அதனால் பிணி மூப்பு ஏற்பட்டு ஆயுளும் மங்கி, மாண்டு போகும் மனிதர்கள் கோடானு கோடி. இப்படியாக ஓடிக் கொண்டிருக்கும் மூச்சை சந்திரகலை, சூரியக்கலை, வழியாக கட்டுப்படுத்தி பிரனாயமத்தினால் பிராண வாயுவைப் பெருக்கி ரேசகம், பூரகம், கும்பகம், செய்து உடம்பையும், உயிரையும் வளர்க்கவேண்டும். இதனை நன்கு அப்பியாசித்து இடபிங்களைகளை ஒழுங்குபடுத்தி சுழுமுனை எனும் வாசலைத் திறந்தது வாசியினால் தாரை ஊதுவதைப் போல் ஊதி மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை மேலேற்றி அனலுடன் கூட்டி சோதியில் சேர்க்க வல்லவர்கள் ஆனால் அழகில் சிறந்த அம்மையை இடபாகம் கொண்ட ஈசருடன் கூடி வாழலாம்.

August 03, 2011

சிவனின் மகிமை

சிவனின் மகிமை


Siva Lingam


இந்தியாவில் பல சிவன் கோவில்கள் இருந்தாலும், குறிப்பாக பாடல் பெற்ற சிவஸ்தலம் என்று போற்றப்படும் 274 ஆலயங்களில் 264 கோவில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. தமிழ்நாட்டில் நிறைய

சிவாலயங்களும், விஷ்ணு ஆலயங்களும் உள்ளன. அதில் 108 திருப்பதிகள் அல்லது 108 வைஷ்ணவ திவ்ய தேசங்கள் என்று போற்றப்படும் விஷ்ணு ஆலயங்களில் 84 ஆலயங்கள் தமிழ்நாட்டில்

தான் உள்ளது மிகப் பெருமையாகும். இவைகளில் ஒவ்வொரு கோவிலுக்கும் தனிச்சிறப்பும், பழைமையும், பெருமையும் வாய்ந்தது.

மகாபாரதத்தில் வேதவியாசர் அர்ஜுனனை பார்த்து "எவன் ஒருவன் வைகறைத் துயிலெழுந்து மனத்தூய்மையோடு "ருத்ர ஜபம்" செய்கின்றானோ அவனுக்கு இவ்வுலகில் அடைய முடியாத மகிழ்ச்சி

என்று எதுவும் இல்லை" என்று சொல்கிறார்.

"ஓம் நமோசிவாய" என்ற மந்திரத்தை தினமும் உச்சரித்து வந்தால் வாழ்வில் எல்லா துன்பங்களும் நீங்கிவிடும். சிவஸ்தலத்துக்கு சிறிதளவு பணி செய்தாலும் மிகப்பெரிய பலன் கிடைக்கும்.

சிவலிங்கத்திற்கு வலை கட்டி பாதுகாத்த சிலந்தி மறு பிறவியில் கோட்செங்கட் சோழனாகப் பிறந்து தமிழகத்தில் பல பெரிய கோவில்களைக் கட்டி சிவன் திருப்பணி செய்து புகழ் பெற்றான். சிவன்

கோவில் விளக்கு எரிய திரியை தூண்டி விட்ட எலி மறு பிறவியில் சிவன் அருளால் மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தான். சிவ நாமத்திற்கு அப்படியொரு மகிமை. சிவசிவ என்று தினமும் மனதால்

நினைத்து உச்சரித்தாலே போதும், துன்பங்களும் பாவங்கள் நீங்கும், மனம் தூய்மை அடையும்.

இவ்வுலகத்தில் பிறவி எடுத்தோர் நல்ல மார்க்கத்தைப் பெறுவதற்குத் துணையாக இருப்பது சிவ மந்திரம், சிவ தரிசனம், சிவ வழிபாடு முதலியனவாகும். இவை மூன்றும் வாழ்வில்

இன்றியமையாதவை. சிவனே அனைத்து உலகத்த்திற்கும், எல்லா உயிர்களுக்கும் முதன்மையானவன். எல்லாம் சிவமயம்! எங்கும் சிவமயம்! எதிலும் சிவமயம்.

சிவன் - காயத்ரி மந்திரங்கள்

சிவ மூல மந்திரம்

சிவ மூல மந்திரம்
 
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்
சிவ சிவ என்னச் சிவகதி தானே!  
 
-திருமூலர்   இந்த சிவ மந்திரம் திருமூலர் அருளியது.
 
இந்த மந்திரத்தை தினமும் மற்றும் சிவ வழிபாடு செய்யும் பொழுதும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சிவபுராணம்

சிவபுராணம்


முன்னுரை:

தமிழ் பேசும் சிவனடியார்கள் வாயெல்லாம் மணக்கின்ற பதிகம் சிவபுராணம். கல்லையும் கனிய வைக்கும் எனப் புகழ் பெற்ற திருவாசகத்தின் முதற் பதிகமாக அமைந்த சிறப்புப் பெற்றது. திருஐந்தெழுத்தை முதலாகக் கொண்டே துவங்கும் இப்பதிகம் அடியார் தொழுகையில் சிறப்பிடம் பெற்றது இதன் பெருமையைப் பறை சாற்றும்.
சிவபுராணம் என்று பெயர் கொண்ட இப்பதிகம் சீவ புராணமல்லவா பேசுகின்றது ? ஏன் சிவபுராணம் எனப் பெயர் பெற்றது ? மாணிக்க வாசகப் பெருமான் பரம்பொருளாகிய சிவபெருமானைப் பலவாறெல்லாம் விளித்து அவர் பூவார் திருவடிகளுக்குத் தம்முடைய உளமார்ந்த வணக்கங்களைக் கூறித் துவங்குகிறார். சீவனான உயிர் மும்மலச் சேற்றில் அகப்பட்டுத் திகைத்து நிற்கும் காலமும், அச்சீவனுக்கு சிவபெருமான் திருவருளால் ஏற்படும் மேம்பாடுகளையும் கூறி இறுதியாக அச்சிவபெருமானின் திருவடிக்குச் செல்லும் பெருநிலையை நமக்குக் காட்டுகின்றார். சீவன் மலச்சுழியில் சிக்குண்டு இருக்கும் தாழ்நிலையிலிருந்து, சிவனார் பெருங்கருணையால் சிவகதி அடையும் தன்னிகரற்ற பெருநிலை பற்றிக் கூறுவதால் இது சிவபுராணமே.
திருவாசகம் பெரிதும் எளிய நடையைக் கொண்டதாக இருப்பது காரணமாக உரையின் துணையின்றியே அன்பர்கள் படித்துப் பயன்பெறுவது. எனினும் சந்தி பிரித்து தினமும் பேசும் மொழியில் வழக்கத்தில் இப்போது இல்லாத சில சொற்களுக்குப் பொருளும், அங்கங்கே தொடர்புடைய சில கருத்துக்கள் குறிப்பதுவும் அன்பர்களுக்கு பயன்படக்கூடும் என்ற கருத்துடன் இவ்வுரை வரையப்பட்டுள்ளது. நேயத்தே நின்ற நிமலனார் பிழைகளை மன்னித்தும் தவிர்த்தும் அருள அவர்தம் செம்மலரடிகளுக்குப் போற்றுதல்கள்.

பதிகமும் உரையும்.

திருச்சிற்றம்பலம்
நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5 பொருள்: நமச்சிவாய வாழ்க. நாதன் திருவடி வாழ்க. கண்ணிமைக்கும் நேரமும் என் நெஞ்சம் பிரியாதவனுடைய திருவடி வாழ்க. திருவாவடுதுறை ஆண்டருளும் குருவாகிய மாணிக்கத்தின் திருவடி வாழ்க. தானே ஆகமமாகி நின்று நமக்கு அருகில் வருபவனுடைய திருவடி வாழ்க. ஒருவனாகியும் பலவுருக்கொண்டும் இருக்கும் இறைவனின் திருவடி வாழ்க. குறிப்பு: 1. மாணிக்க வாசகர் தம்முடைய திருவாசகத்தின் முதல் ஒலியாக நமச்சிவாய என்ற திருஐந்தெழுத்தை சொன்னது மிகவும் இனியது. சிவம் வாழ்க என்று கூடத் துவங்காமல் வணக்கத்திற்குரிய நம முதலில் கூறி இறைவனின் சிவ என்ற திருநாமத்தைச் சொல்வது அவருடைய பணிவன்பின் வெளிப்படை. 2. திருவாசகத்தில் சிறப்பிடம் பெறுவது ஆகமம். இம்முதற் பதிகத்திலேயே அதனைப் போற்றி நிற்பது அவருக்கு ஆகமங்கள் பால் உள்ள பெருமதிப்பைக் காட்டுவன. வேதங்கள் இறைவனுடைய இயல்பு கூறுகின்ற போது, ஆகமங்கள் அப்பெருமானை எவ்வகை அடையலாம் என்பது பற்றி நமக்குக் காட்டுகின்றன. வேதங்கள் அறிவானால் ஆகமங்கள் அந்த அறிவின் பயன்பாடு. இவ்வாறு ஆகமங்கள் நமக்கு இறைவனின் அருகில் செல்லும் வழி காட்டுவதாலும், ஆகமங்கள் இறைவனால் அருளிச்செய்யப்பட்டதாலும் இறைவனை, "ஆகம நெறி தந்து அருகில் வரச் செய்கின்ற வள்ளல்" எனப் போற்றுகின்றார். 3. இறைவன் ஒருவனே. (ஏகம் சத் - வேதம், ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் - திருமந்திரம்). அவ்விறைவன் பசுக்களாகிய நாம் உய்வுறும் பொருட்டு பலபல வேடங்கள் தாங்கி நம்மை ஆட்கொள்கிறான்.
வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10 பொருள்: என்னுடைய வேகத்தைப் போக்கி ஆண்டுகொண்ட மன்னனின் திருவடி வெல்லட்டும். பிறப்பினை நீக்குபவனாகிய தலைக்கோலமுடைய பெருமான் அணி சேர் கழல்கள் வெல்லட்டும். தன்னை விடுத்து நிற்பவர்களுக்கு வெகு தூரத்தில் உள்ள (அரிய பொருளாக உள்ள) பெருமானின் பூப்போன்ற மென்மையான கழல்கள் வெல்லட்டும். கைகளைக் கூப்பி வழிபடுவார் உள்ளத்தில் மகிழ்ந்து இருக்கும் மன்னனுடைய கழல்கள் வெல்லட்டும். தலை தாழ்ந்து வணங்குவார்களை மிக உயர்ந்த நிலைக்கு ஓங்கச் செய்யும் பெருங்குணம் வாய்ந்தவனுடைய கழல்கள் வெல்லட்டும். குறிப்பு: 1. வேகம் கெடுத்தல் - துயரம் நீக்குதலைக் குறிக்கும். மனத்தின் வேகத்தையும் (நிலையில்லாமல் அலைபாய்தல்) அதனால் வரும் கேட்டின் வேகத்தையும் குறைத்து தன் பால் மனத்தை நிலைபெறச்செய்யும் ஈசனின் கருணையையும் குறிக்கும். 2. பிஞ்ஞகன் - பீலி அணிந்தவன் எனவும் பொருள் கொள்ளலாம். (இறைவன் குரண்டாசுரனின் பீலியை அணிந்த விபரம் கந்த புராணம் ததீசி முனிவர் வாக்கில் காண்க.) 3. சேயோன் - சேய்மையில் (தூரத்தில்) இருப்பவன். ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15 பொருள்: எல்லாவற்றையும் உடைமையாகக் கொண்டவனின் திருவடி போற்றி. எம் தந்தை என நின்று அருளுபவனின் திருவடி போற்றி. ஒளி வடிவானவனின் திருவடி போற்றி. சிவன் எனப்பெறும் செம்பொருளின் சிவந்த திருவடி போற்றி. அன்பினில் நிற்பவனான தூயவனின் திருவடி போற்றி. மாயப் பிறப்பினை நீக்கும் உயர்ந்தோனின் திருவடி போற்றி. அமைப்பு சிறந்து விளங்கும் திருப்பெருந்துறையில் இருக்கும் நம் தேவனின் திருவடி போற்றி. குறிப்பு: 1. தேசு - ஒளி (சிபிவிஷ்டாய நம: - சிவ அஷ்டோத்தரம் ) ஆராத இன்பம் அருளும் மலை போற்றி சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் 20 பொருள்: அடங்காத இன்பம் அருளும் கருணையின் மலை போன்றவனுக்கு போற்றுதல்கள். சிவபெருமான் என்னுடைய சிந்தையில் பெருங்கருணையால் வந்திருக்கின்ற காரணத்தால் அவனுடைய திருவருளே துணையாகக் கொண்டு அவனுடைய திருவடியை வணக்கம் செய்து உள்ளம் மகிழும் வண்ணம் சிவபுராணமாகிய இதனை முன் செய்த வினைகள் எல்லாம் தீரச் சொல்லுகின்றேன். குறிப்பு: 1. "சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்ற இவ்வரிகள் அன்பினால் நிறை நிற்கின்ற அடியவர்க்கு மட்டுமல்லாது தத்துவம் விரும்புவோருக்கும் பெரும்பொருள் வாய்ந்தது. திருவாசகத்தில் திரும்பத் திரும்பச் சொல்லப்படும் கருத்து, "இறைவன் தானே வந்து ஆட்கொள்கிறான்." கட்டுண்டு தவிக்கும் பசுக்களாகிய நம் எல்லா உயிர்களின் பொருட்டு அரியவனாகிய இறைவன் எளிமையாக நிற்பது சித்தாந்தத்தில் காண்க. அவ்வாறு எளிமையாக வந்திருக்கும் இறைவனைத் தொழுவதற்கும் அப்பெருமானுடைய அருளையே துணையாகக் கொண்டாலேயே அது முடியும். (அருளே துணையாக ... அப்பர் சோற்றுத்துறை சென்று அடைவோமே - சம்பந்தர்) கண் நுதலான் தன் கருணைக்கண் காட்ட வந்து எய்தி எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய், எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர் பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன் 25 பொருள்: நெற்றியிலே ஒரு கண்ணுடைய பெருமான் தன்னுடைய கருணைக்கண் காட்டியதால் இங்கு வந்தேன். சிந்தனைக்கு எட்டாத பேரழகு மிக்க கழல்பூண்ட திருவடிகளை தொழுது நின்று, வானம், பூமி மற்றும் இவை தவிர மீதி உள்ளன யாவையுமாய், ஒளிமிக்கதாயும், அளவிடும் எல்லைகள் எல்லாம் கடந்து உள்ள பெருமானே ! - உன் பெரிய பெரிய தன்மைகளை மோசமான வினைகளில் கிடக்கும் நான் புகழ்ந்து போற்றும் வகை தெரியாது இருக்கிறேன். குறிப்பு: 1. பாசத்தால் கட்டுண்ட பசுக்களின் உய்வின் பொருட்டு இறைவனால் நுண்ணுடலும் (சூக்ஷ்ம சரீரம்) அவற்றின் வினைக்கேற்ற (பரு) உடல்கள் பின்னும் அருளப்பட்டன என்பது சித்தாந்தம் கூறும் உலகின் துவக்கம். 2. நுதல் - நெற்றி; இறைஞ்சி - வணங்கி; இறந்து - கடந்து; புகழும் ஆறு - புகழும் வகை. புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30 எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் பொருள்: புல்லாகவும், சிறு செடிகளாகவும், புழுவாகவும், மரமாகவும், பலவகை மிருகங்களாகவும், பறவைகளாகவும், பாம்பாகவும், கல்லில் வாழும் உயிராகவும், மனிதராகவும், உடல் நீங்கிய பேய்களாகவும், பலதரப்பட்ட கணக்கூட்டங்களாகவும், வலிமை மிகுந்த அசுரர்களாகவும், முனிவராகவும், தேவராகவும் இந்த அசையும் மற்றும் அசையாதவற்றால் ஆன (அண்டம்) முழுதும் சென்று எல்லாப் பிறப்பும் பிறந்து களைத்துவிட்டேன், எம்பெருமானே ! குறிப்பு: 1. விருகம் - மிருகம்; தாவர சங்கமம் - (ஸ்தாவர ஜங்கமம்) சராசரம். மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35 பொருள்: உன்னுடைய தங்கத் திருவடிகளைக் கண்டு இன்று உண்மையாகவே வீடு பேறடைந்தேன். நான் உய்யும் பொருட்டு எனது உள்ளத்துள் ஓம் எனும் ஒலியாய் எழுந்த உண்மைப் பொருளே ! காளையை ஓட்டி வருபவனே ! வேதங்கள் "ஐயா !" எனப் பெரிதும் வியந்து கூறி ஆழமாகவும் பலபல தன்மைகளைப் பெருகி ஆராய்ந்தும் காண முயலுகின்ற மிகச்சிறிய பொருளுமாக இருப்பவனே ! குறிப்பு: 1. இறைவனுடைய பெருமையை அறிந்து அவருடைய திருநாமகளில் மூழ்கியிருப்போருக்கு இங்கேயே வீடுபேறு - வேதம். 2. வேதங்கள் பலவாறெல்லாம் ஆழ்ந்து ஆராய்ந்தும், பலபல கோணங்களில் கூறியும் அவர் தம் பெருமையைக் கூறச் சொற்கள் இல்லாமையை உணர்த்துகின்றன. அத்தகு பெரிய அவரோ மிகச்சிறியவற்றிலும் நிறைந்துள்ளார். என்ன விந்தை இது ?! வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40 பொருள்: வெப்பமாகச் சுடுகின்றவரும், குளுமையாக இருக்கின்றவரும் நீரே. என் உரிமையாளனாக உள்ள மாசற்றவனே ! பொய்மைகள் எல்லாம் அகலும் வண்ணம் வந்து அருள்செய்து, உண்மை அறிவாக ஒளிவிடும் மெய்ச்சுடரே ! எந்த அறிவும் இல்லாத எனக்கும் இன்பமாம் பெருமானே ! அறிவின்மையைப் போக்கும் நல்லறிவே ! குறிப்பு: 1. சுடர் மிகுவதால் இருளுக்குக் கேடு - பசவண்ணர். உள்ளத்தில் மெய்ச்சுடரான இறைவன் வர பொய்யிருளுக்குக் கேடு. 2. வெய்ய - காய்கின்ற/ சூடான; தணிய - குளுமையான. ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45 பொருள்: தோற்றம், குறித்த வயது, முடிவு இல்லாதவனே ! நீ உலகங்களையெல்லாம் தோற்றுவிக்கின்றாய், தொடர்ந்து (அழியாது) இருக்கச் செய்கின்றாய், (இறுதியில்) அழிக்கின்றாய், அருள் தந்து உய்யக் கொள்கின்றாய், உயிர்களை மாயைக்குள் போக்குவாய் ! நீ என்னை உன்னுடைய அடியார் கூட்டத்தில் புகவைப்பாய். மணத்தினும் (வாசனை) நுண்மையான (சூக்ஷ்மமான) பொருளே ! வெகு தொலைவாகியும், மிக அருகில் இருப்பவனே ! சொல்லிற்கும் சிந்தனைக்கும் எட்டாது நிற்கும் மறை நாயகனே ! குறிப்பு: 1. இறைவனுக்கு பிறவற்றைப் போலத் தோற்றம், வாழ்வு, முடிவு இல்லாமையைக் குறிப்பிட்டு, அப்பெருமானே மற்ற எல்லாப் பொருள்களுக்கும் ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில்கள் மூலம் இயங்கச்செய்கிறார் என்னும் திறத்தை வெளிப்படுத்துகிறார். 2. ஒப். உன்றன் அடியார் நடுவுற்றிருக்கும் அருளைப் புரிவாய். 3. மணமானது காண இயலாத நுண்பொருள்களாகப் பரவுகின்றது. இறைவன் அந்த நுண்மையினும் நுண்மையாக இருக்கிறார். 4. சேய்மை - தொலைவு; நணியது - அருகில் இருப்பது; மாற்றம் - சொல். கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்து அடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய், எம்பெருமான் ...... பொருள்: அப்போது கறந்த பாலோடு கரும்பின் சாறும் நெய்யும் கலந்தால் எவ்வாறு இனிக்குமோ அவ்வாறு சிறந்து, அடியவர்கள் மனத்தில் தேன் ஊற்றெடுத்தாற் போல நின்று, இப்பிறவியை முற்றுப் பெறச்செய்யும் எங்களுடைய பெருமானே ! ஐந்நிறமும் நீயே ஆனாய் ! வானவர்கள் போற்றி நிற்க அவர்களுக்கு அரியவனாக மறைந்திருந்தாய், எம்பெருமானே ! குறிப்பு: 1. வினை நிறைந்த பிறப்பினால் அவதிப்படும் ஆன்மாக்களில் அன்பினால் இறைவன் திருவடி பற்றுபவர்களுக்குக் கடினமான முறைகளினால் அல்ல, மிகவும் எளிதாகவும் தேனினும் இனிய ஊற்றாக அவர்கள் உள்ளத்தில் தோன்றி அவர்களுடைய பாச மலம் அறுக்கிறார் சிவபெருமான். ....... வல்வினையேன் தன்னை 50 மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி, மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55 பொருள்: கொடிய வினையில் சிக்குண்டிருக்கும் என்னை மறைத்து மூடிய மாயையாகிய இருளினை செய்யத்தகுந்தது, செய்யத் தகாதது என்னும் விதிகளால் கட்டி, மேலே ஒரு தோலும் சுற்றி, கெட்டுப் போவதாகவும், அழுக்கினை உடையதாகவும் உள்ள திசுக்கள் நிறைந்து, மலத்தினை வெளியேற்றும் ஒன்பது துளைகள் உள்ள வீடான இவ்வுடலை வைத்துக்கொண்டு மயங்கிநிற்க, ஐந்து புலன்களும் ஏமாற்ற, குறிப்பு: 1. உடலின் கட்டுமானம் விவரிக்கப் படுகிறது. விலங்கும் மனத்தால், விமலா உனக்கு கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி, நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60 தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே பொருள்: ஒருமைப்படாமல் சிதறுகின்ற சிந்தனைகளை உடைய மனத்தால், மாசிலாதவனே, உன்னிடம் கலந்து நிற்கின்ற அன்பு நிறைந்து, அந்நிறைவால் கசிந்தும், உள்ளம் உருகி நிற்கின்ற நல்ல தன்மை இல்லாத சிறுமையுடையவனாகிய என்க்கும் அருள்செய்து, இந்த உலகில் உணரத்தக்க வண்ணம் கருணையால் வந்து, உன்னுடைய நீண்டு அழகிய கழலணிந்த திருவடிகள் காட்டி, நாயினும் கேவலமான நிலையில் கிடந்த அடியேனுக்குப் பெற்ற தாயினும் அதிகமான அன்பு உடையவனான தத்துவப் பொருளே ! குறிப்பு: 1. கேவலமான நிலையில் நாம் இருப்பினும் இறைவன் திருவருள் நம்முடைய இழிவு கண்டு புறம் தள்ளாது, அளத்தலுக்கு இயலாத கருணையினால் நம்மை ஆண்டு கொண்டருளும் வண்ணம் இங்கு தொழப் படுகின்றது. மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65 பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே பொருள்: குற்றமற்ற தூய ஒளி மலர்கின்ற மலர் போன்று இனிய சுடரே ! ஒளியுருவினனே ! தேன் நிறைந்த அமுதமே ! சிவபுரத்தை உடையவனே ! பாசமாகிய கட்டினை அறுத்துத் திருவருள் புரியும் அறிவிற் சிறந்தோனே ! இனிய அறக்கருணை புரிந்து, அதனால் என்னுடைய நெஞ்சில் வஞ்சனை ஒழிய, என் உள்ளம் நீங்காது நின்று பெருங்கருணை பெருக்கெடுக்கும் பெருவெள்ளமே ! குறிப்பு: 1. இறைவன் உயிர்கள் பால் அவரவர் தன்மைக்கு ஏற்ப அறக்கருணை, மறக்கருணை காட்டி நல் வழிப்படுத்துகிறார். மணிவாசகப் பெருமான், சிவபெருமான் தமக்கு அறக்கருணை புரிவதன் மூலமே நெஞ்சின் வஞ்சமெல்லாம் அகல வழிவகை செய்துவிட்ட வகையைப் போற்றுகின்றார். ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70 பொருள்: தெவிட்டாத அமுதமே ! அளவுகள் கடந்து நிற்கின்ற பெருமானே ! ஆர்வம் / முயற்சி இல்லாதவர் உள்ளத்தில் வெளிப்பாடின்றி மறைந்திருக்கும் ஒளியானே ! (என் உள்ளத்தை) நீரென உருகச்செய்து, என்னுடைய இன்னுயிராக நிற்பவனே ! இன்ப துன்பங்களுக்கு அப்பாற்பட்டவனே ! உள் நிற்பவனே ! குறிப்பு: 1. இறைவன் எல்லாருடைய உள்ளத்திலும் உள்ளார். எங்கும் நிறைந்தும் அதே நேரத்தில் எல்லாம் கடந்தும் இருப்பதால் அவரைக் கடவுள் என்கிறோம். ஆயினும் ஆர்வமும் முயற்சியும் உடையவர்கள் சிவபெருமான் திருவருளினால் அவரை உணர்கின்றார்கள். மற்றவர்கள் அலைவரிசை ஒன்றியையாத ஒலிப்பெட்டி போல அவர் மிக அருகில் இருந்தும், பேரொளியாக இருந்தும் காண இயலாதவர்களாக உள்ளனர். (ஒ. பணிந்தபின் கூடிய நெஞ்சத்துக் கோயிலாகக் கொள்வானே - திருமூலர்) 2. இறைவனுடைய எண்குணங்களில் ஒன்று வரம்பில் இன்பமுடைமை. அவ்வாறு இருக்க "இன்பமும் துன்பமும் இல்லானே" எனக் கூறுவது பொருந்துமா எனக் கேட்டால், இறைவனுக்குப் பிறவற்றால் எவ்வித இன்பமோ துன்பமோ இல்லை. செம்பொருளாக உள்ள அது தன்னுடைய வற்றாத இன்பத்தில் தானே என்றும் மகிழ்ந்து இருக்கும். அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் 75 நோக்கரிய நோக்கே நுணுக்கு அரிய நுண் உணர்வே பொருள்: அன்பினால் தன்னைத் தொழும் அடியார்களுக்கு அன்பே உருவாயவனே ! எல்லாமும் தானே ஆகி, எதுவும் தானாக இல்லாது இருக்கின்றவனே ! சுடருருக்கொண்டவனே ! அடர்ந்த இருளாகவும் இருப்பவனே ! பிறப்பு என்பதே இல்லாத பெருமை உடையவனே ! முதலாக இருப்பவனே ! இறுதியாகவும் இடைப்பட்ட நிலையாகவும் ஆகி இத்தத்துவங்கள் எல்லாம் கடந்தவனே ! (காந்தம் போல) என்னை ஈர்த்து என்னை ஆளாக - அடியவனாகக் கொண்டு அருளிய என் தந்தைக்கும் தலைவனே ! உன்னைத் தமது கூர்மையான மெய்யறிவின் துணையாகக் உணர்கின்ற பெரியோர்களுடைய சிந்தையின் பார்வை வியத்தற்கு உரிய பார்வை ! அவர்களுடைய ஆராயும் திறன் வியத்தற்கு உரிய ஆய்வுணர்வே ! குறிப்பு: 1. சிவபெருமான் எல்லாப் பொருள்களுடனும் கலந்து தோன்றினும் இவை எதுவும் அவரல்ல. அவர் கலந்து இருப்பது போலவே எல்லாம் கடந்தும் உள்ளார். 2. சிவபெருமானுக்கு அவதாரம் இல்லை. அவர் பிறப்பது இல்லை. 3. இறைவன் அன்பர்களுக்கு எளியவனாகக் காட்சி அளித்த போதிலும், அவருடைய பேரியல்பு யாராலும் முழுதும் ஆய்வது பற்றி எண்ணியும் பார்க்க இயலாதது. எனவே தான் அவருடைய இயல்பினை சற்றேனும் காண முயல்கின்ற ஞானிகளின் திறனை வியந்து கூறுகின்றார் மாணிக்க வாசகர். (ஒ. பேரறியாத பெருஞ்சுடர் ஒன்றதின் வேரறியாமை விளம்புகின்றேனே - திருமந்திரம்) போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80 பொருள்: நீங்குவதும், புதிதாக வருவதும், கலப்பதும் இல்லாத புண்ணிய மூர்த்தியே ! என்னைக் காக்கின்ற காவல் தெய்வமே ! காண்பதற்கு அரியதாக ஒளி மிகுந்து இருப்பவனே ! தொடர்ச்சியாகவும் முறையாகவும் வருகின்ற இன்ப வெள்ளமே ! தந்தையே ! மிகுதியாக நின்ற ஒளி வீசும் சுடரான தோற்றத்தினனாய், சொல்லப்படாத பூடகமான நுண் உணர்வாக இருந்து குறிப்பு: 1. இறைவன் எங்கும் நிறைந்து இருக்கும் பொழுது அவர் எதனை நீங்குவார், புதிதாக வருவதற்கு அவர் இல்லாத்தது என்ன உள்ளது, அவர் கலந்து இல்லாத பொருள் தான் ஏது - புதிதாகக் கலப்பதற்கு ? இவ்வாறு எல்லாப் பொருளிலும் இருந்த போதிலும், பொருளின் தன்மையால் குறைபடாமல் தான் என்றும் தூயவனான புண்ணிய மூர்த்தியாகவே உள்ளார். 2. இறைவன் சொற்களால் சொல்லி முடியாதவர். நுண் உணர்வால் அறியப் படுபவர். (ஒ. அவனருளே கண் கொண்டு காணின் அல்லால் இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதிக் காட்டொணாதே - தேவாரம் ) மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85 பொருள்: இவ்வுலகில் பல்வேறு விதங்களில் கூறப்பட்டு, மெய்யறிவாக ஆகும் (ஆய்வின் இறுதியில் சாறாகத் தேறும்) தேற்றமே ! அந்தத் தேற்றத்தின் பயனான தெளிவே ! என்னுடைய சிந்தனையினுள் உண்பதற்க்கு மிகவும் அரியதும் விரும்பத்தக்கதும் ஆன அமுத ஊற்றே ! என்னை உடைமையாக ஆள்பவனே ! பலவேறு விகாரங்களை உடைய ஊனால் (சதையால்) ஆன இவ்வுடம்பின் உள்ளே கட்டுண்டு கிடக்க இயலவில்லை, எம் தலைவா ! அரனே ! ஓ ! என்று பலவாறு குறிப்பு: 1. ஒ. ஏகம் சத் விப்ரா பஹ¤தா வதந்தி - வேதம். போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90 பொருள்: போற்றுதல்கள் செய்து, புகழ் கூறித் தம்முடைய பொய்கள் ஒழிய உண்மையே ஆன அடியவர்கள் மீண்டும் இவ்வுலகுக்கு வந்து வினை நிறைந்த பிறவியில் சிக்குறாது மாயையால் ஆன இவ்வுடலின் கட்டுமானத்தை அழிக்க வல்லானே ! வேறு எதுவுமற்றதாகிய இருளில் கூத்து ஆடுகின்ற நாதனே ! தில்லை என்னும் சிதம்பரத்தில் ஆடுபவனே ! தென்பாண்டி நாட்டை உடையவனே ! குறிப்பு: 1. இருள் என்பது (ஒளீ) இன்மையைக் குறிக்கும். உலகங்கள் எல்லாம் ஒடுங்கிய பின்னர் இறைவனைத் தவிர வேறு எதுவும் இல்லாத அந்நிலை ஏதுமற்ற இருள் போன்றது. அவ்விருளில் ஒளியாக இறைவன் ஆடுகின்றார். அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95 பொருள்: அல்லல் நிறைந்த பிறவியை நீக்குவானே ! ஓ ! என்று சொல்லிற்கு அரிய பெருமானைக் அழைத்து, (இறைவன்) திருவடியை பணிந்து அதன் கீழிருந்து சொல்லிய இப்பாடலின் பொருளினை உணர்ந்து சொல்லுபவர்கள் சிவபுரத்தில் இருக்கும் சிவபெருமானின் திருவடி நிழலுக்குச் செல்வார்கள், பலராலும் புகழப்பட்டும், தொழப்பட்டும். குறிப்பு: 1. பொருளினை உணர்ந்து சொல்லுவதன் மூலம் உணர்வினோடு ஒருமைப்பட்டுத் தொழுதலால் அவ்வகை வணக்கத்தின் பெருமை வலியுறுத்தப்படுகின்றது. திருச்சிற்றம்பலம்

THIRUVILAIYADAL PURANAM

THIRUVILAIYADAL PURANAM
THE NATIONAL PURANAM OF PANDYA NADU
BY
PARANJOTHI MUNIVAR




    Hinduism has a very rich body of religious works and literature.
Vedas and their associated works and their branching sciences and fields,
etc.
    There is a body of literature called Puranas and Ithihasas.
They are collection and compilations of stories, history, descriptions,
explanations of rituals, geography, etc.
    The Puranas are 18 in number. They are the major puranas.
Apart from these there are the minor puranas.
    Then there are the sthala puranas. These deal with the
greatness of a particular holy place or religious centre.
    There is one unique purana which is of a different calibre.
    This the ThiruViLaiyaadal PuraNa.
    This purana describes the 64 Divine Sports and Exploits of 
Lord Siva of Madurai known as Chokanatha or Sundaresvara.
    There have been several puranas which dealt with the same theme. There is a Sanskrit version known as Halasya Mahathmiyam.
    The stories which form the corpus of the latest version of the Thiruvilayadal puranam are ancient. Some of the stories go backwards in time to the period of the second Tamil Sangam.
    Many of the 64 stories have been mentioned by Thirugnyanasambandhar and Thirunavukkarasar. That would take them back before the 6th century AD.
    Which would mean that whatever puranas about them that existed, must have vanished.
    The latest version was composed by Parajothi Munivar in the 16th - 17th century.    

    ThiruviLaiyAl puraNam is the national puranam for Pandya nadu.
    The present version was composed by Parajothi Munivar in the 16th century.
    He was a native of Vedaranyam of Tanjavur District. He was Tamil scholar. He wrote the Vedaranya Puranam in Tamil from the original Sanskrit form. After its completeion, he started on an itinery which took him to many Saivite pilgrimage centres. He went to all the important places like Chidambaram, Thiruvanaikkaa, Thiruvannamalai, Thiruvarur and finally reached Madurai. He became very popular with people of Madurai who revered him. He stayed in Madurai and was performing his worships to the Siva of Madurai.
    One day the people of Madurai made a popular request. They wanted Paranjothi Munivar to compose a puranam involving the 64 Divine Sports of Siva which took place in Pandyanadu centred around Madurai.
    While he was cogitating upon this proposal, SriMeenatchi Amman appeared in his dream. She ordered him, "Sing the sporty exploits of My Lord".
    Thereupon, he woke up and started immediately, singing the first hymn which he dedicated to SiddhiVinayaka.

saththiyaay sivamaagi thanipara
muththiyaana mudhalai thuthi seya
siddhiyaagiya soRporuL nalguva
siddhiyaanai than seyya poRpadhamE

It started with sathi - sakthi being the mangala vacaka which denotes the dynamic motivational force which induced him to compose the epical poetry.

    He impregnated the epic with all forms of suvai - finesse and beautiful verses. The epic which he named 'ThiruviLaiyadal Puranam'. He sang a total of 3363 verses of all styles. 
Together with preliminary essential parts of an epic, such as the SiRappu Paayiram, Praise to God, Merits of the Country, Merits of the City, Greatness of Mount Kailas, History of the Purana, etc. He composed it into three major kantams - Madurai kantam, Kudal kantam, Thiruvaalavaay kantam. Madurai, Kudal, and Thiruvaalavay are names of Madurai. Each kantam was constituted of patalam. Each patalam described each of the 64 Divine Sports. Apart from these, the first patalam contained special chapters on the thalam - holy town, thirtham - the holy water springs, and murthi - God of the place and also a decade of 10 songs. It contains 18 of the 64 Holy Sports. The second kandam called the Kudal Kandam contains the ninteenth to the forty-eighth patalas. The third or Thiruvaalavaay Kandam contains the forty-ninth to the sixty-fourth kantams. As an epilogue, he has composed some verses which extoll the virtues the Thiruvilaiyadal and a composition of one hundred verses for Madurai.
    The Thiruvilaiyadal Puranam was the National Purana for the people of Pandya Country.

    When Thirumalai Nayakkar was building the PuduMandapam @ Vasantha Mandapam, Paranjothi was always staying in that Mandapam. He spent his time there watching the progress of the work.
    The Pudhu Mandapam is a pavilion hall of sold stone masonry.
It is beautifully carved with intricate designs.
It is 333 feet by 105 feet. The height is 25 feet.
If you look at the dimensions, you will notice that the Naayakkar's
architect had used the Golden Mean - Fibonacci ratio.
It has 124 beautiful carved and sculpted pillars.
Twelve of the pillars have big statues of all the Naayakkar kings
upto Thirumalai Naayakkar.
    At the eastern end of the hall, is a very ornately carved throne
pavillion - 'kolu mandapam'. This is made of polished granite and woodwork.
    The shrines of Minnatchi Sundareswarar are kept kere on the pattabhishekam day. Thirumalai Naayakkar receives the sceptre of Madurai from the Goddesss Miinaatchi to rule as Her Viceroy.
    Out of the 124 pillars 50 of them contain big statues.
    Rare forms of Siva are to be seen. Out of the sixty four divine sports - Thiru ViLaiyaadal - of Siva, seven of them are depicted
in seven of the pillars.

    The Madurai Miinaatchi Sundareswarar Temple was renovated
extensively by Thirumalai Naayakkar who ruled Madurai country from
1623 - 1659. He lived upto a ripe old age in pomp and glory. He also
made many embellsihments and additions to the temple.
    Among the many structures that he caused to be put up, were
two notable buildings
    Both were built as an additional complex to the Eastern Gopuram.
Just in front of this gopuram, is a splendid building called PudhuMandapam.
    In front of the Pudhu Mandapam the Naayakkar anted to build a very huge and tall tower. If it had been completed, it would have been the tallest structure in South Asia for several centuries. This, however, was not to be.
    Because it was never completed.

    The subject of our discussion is the PudhuMandapam.

    The Pudhu Mandapam is a pavilion hall of sold stone masonry.
It is beautifully carved with intricate designs.
    It is 333 feet by 105 feet. The height is 25 feet.
    If you look at the dimensions, you will notice that the Naayakkar's
architect had used the Golden Mean - Fibonacci ratio.
It has 124 beautiful carved and sculpted pillars.
Twelve of the pillars have big statues of all the Naayakkar kings
upto Thirumalai Naayakkar.
    I have already written an interesting account of the building of
Pudhu Mandapam with reference to the subject of Saamudrikaa Lakshanam and the minister, NiilaKanta Diikshitar.
    At the eastern end of the hall, is a very ornately carved throne
pavillion - 'kolu mandapam'. This is made of polished granite and woodwork.
    The shrines of Minnatchi Sundareswarar are kept kere on the pattabhishekam day. Thirumalai Naayakkar receives the sceptre of Madurai from the Goddesss Miinaatchi to rule as Her Viceroy.
    Out of the 124 pillars 50 of them contain big statues.
    Rare forms of Siva are to be seen. Out of the sixty four
divine sports - Thiru ViLaiyaadal - of Siva, seven of them are depicted
in seven of the pillars.
    The sixty four Thiru ViLaiyaadals have formed the theme of a big
literary work called 'Thiru ViLaiyaadal PuraaNam'. This was composed by ParanjOthi Munivar.
    The sculptors were incorporating scenes from ThiruviLaiyadal Puranam and sculpting them as panels in the pillar faces. According to Dr.A.V.Jeyachandrum,  the great genius and scholar who is an authority on Madurai and Miinaatchi Temple says, in his post doctoral thesis, these panels and works would have acted as further inspirational catalysts to his creative genius. He says:
    "A traditional account relates that Paranjothi was an eye witness to the construction of Pudhu Mandapam by Thirumalai Naayakkar and while it was taking shape, he used to linger around the place, when one day he met an old ascetic who in palm leaves gave the direction for the composition of this literary work on ThiruViLaiyaadal. It is likely that the Pudhu Mandapam, an edifice of such architectural magnitude and sculptural elegance had inspired Parajothi to compose the work of ThiruViLaiyaaadal PuraaNam - a work rich in diction, spiritual outburst and in poetry of superior order".

    Paranjothi was a multifaceted all-round genius of great calibre.
    His sweep of knowledge was very wide. He had mastred many of the branches of knowledge which were extant at his time.
    When he deals with the chapter wherein Siva appears as a Gemstone Merchant, he describes all the classifications of the various gem stones - not only the nine important types but the subclasses which are within those classes. He also explains the types good stones and types of blemishes in them. In another place he deals with everything about gold. He even explains the origins of gold. Mined gold, washed gold, gold nuggets, gold sand. And most surprising of all, gold which was produced from copper or mercury through rasavadham - alchemy, the transmutation of base metals into gold.
    There are some important chapters which deal with the history of Saint Manikavasagar. Manikavasagar was sent by the King Arimardhana Pandya to buy Arabian horses for his cavalry and chariot division.
    In this chapter, Paranjothi describes about various classes of horse in minute and accurate detail. He also describes how the Arab merchants of those days were dressed like.
    We will go into a precise expostion of the Thiruvilayadal Puranam.......

August 02, 2011

சைவம்.........


ஆதிபகவன் – பசுபதி

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு!


சைவம்

திராவிடர்களின் சமயம் -
மொகெஞ்சதாரோ – ஹரப்பா அகழ்வாராய்ச்சிகளிலிருந்து, ஆரியர் வருகைக்கு முன்பே ஒரு நாகரிகம் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்ததென்பதற்கும் அது திராவிட நாகரிகம் என்பதற்கும் சான்றுகள் கிடைத்தன. இதன் அடிப்படையில் ஜி. யு. போப் அவர்கள் ஆரியர் வருகைக்கு முன்பே தென்னிந்தியாவில் நிலவிய வரலாற்றுக்கு முற்பட்ட சமயமே சைவம் என்கிறார்.
வேதத்தையும் சாதியையும் மறுத்த சைவம் -
காஷ்மீர சைவம் என்பது சைவ சமயத்தின் ஒரு பகுதியாகும். இது காஷ்மீர் பகுதியில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு காலத்தில் ஏற்பட்டது. வசுகுப்தர், சோமநந்தர், அபிநவகுப்தர் போன்றோர் அதனின் தலைசிறந்த கோட்பாட்டாளர்கள்.
காஷ்மீர் சைவம் வேதங்களின் அதிகாரத்தையும், அதன் நிலைப்பு தன்மையையும் மறுத்தது. மேலும் சாதி முறையையும் நிராகரித்தது.
தியானக் கடவுள் –
சிந்து சமவெளி நாகரீகத்தில் பசுபதி என்ற சிவ வழிபாடே நிகழ்ந்து வந்திருக்கிறது. தியானத்தின் மகிமையை உணர்ந்தவர்கள் பசுபதியையும் தியான நிலையிலேயே வழிபட்டனர். தன்னை உணர்ந்தவனே தலைவன். தன்நிலை உணர தியானம் அவசியம் என உணர்த்துவதே பசுபதி நாதரின் தத்துவம்.
உயர் நெறி -
பிற உயிர்களுக்கு துன்பம் தராமல் கொல்லாமையை கடைபிடித்த சமயம் சைவம் மட்டுமே. அதனுடைய அன்பின் நெறி உணர்ந்து கொல்லாமைக்கே சைவம் எனப் பெயரிட்டனர் பெரியோர். சைவர்கள் பின்பற்றிய கொல்லாமை நெறி சைவம் என இன்றும் வழங்கப்படுகிறது.
அன்னதானம் -
உலகத்தில் எல்லா உயிர்களாலும் தவிர்க்க இயலாதது பசி. அந்தப் பசியை அடக்கியாலவும், அமைதிபடுத்தவும் எவராலும் இயலாது. எனவே எல்லா உயிர்களுக்கும் உணவளிக்கும் சிவனின் பெயரைச் சொல்லி பல சிவனடியார்கள் அன்னதானம் செய்கின்றார்கள்.
இதனுள் அடக்கம் -
ஒரே கடவுள் என்ற கொள்கையில் இஸ்லாமும், அன்பே கடவுள் என்ற கொள்கையில் கிறித்துவமும், கடவுள் உனக்குள்ளே இருக்கின்றார் என்ற பௌத்தமும், இன்னும் உலகில் கொட்டிக் கிடக்கும் எண்ணற்ற சமயங்களும் சைவத்தின் தத்துவங்களில் அடங்கிப்போகின்றன.