September 17, 2011



சிவ வடிவங்களில், நடராஜர் உருவம் முக்கியமானது. இது உருவான வரலாறைக் கேளுங்கள்:
சோழ மன்னன் ஒருவன், சிவபெருமானின் நடனம் பற்றிய தகவலைப் படித்தான்; அந்தக் காட்சியை, சிலையாக வடிக்க எண்ணம் கொண்டான். தன் நாட்டிலுள்ள சிறந்த சிற்பிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடம் நடராஜர் சிலை யைச் செய்யும்படி வேண்டினான்; அவர்களும், ஒரு நல்ல நாளில் பணியைத் துவங்கினர். சிலைக்கான அச்சை வார்த்து, உலோகக் கலவையை அதில் கொட்டினர்; ஆனால், சிலை சரியாக வரவில்லை. பலமுறை முயற்சி செய்தும், இதே நிலை நீடித்தது. அவர்கள், மன்னனிடம் தங்கள் இயலாமையைத் தெரிவித்தனர். மன்னனுக்கு கோபம் வந்துவிட்டது.
“என்ன செய்வீர்களோ தெரியாது… சிலை செய்தாக வேண்டும். அதுவும் இன்று மாலைக்குள் செய்தாக வேண்டும்; இல்லாவிட்டால், உங்கள் அனைவரையும் கொன்று விடுவேன்…’ என, எச்சரித்து விட்டு போய் விட்டான்.
அவர்கள் எவ்வளவோ முயற்சித்தனர்; சிலை செய்ய முடியவில்லை. தங்கள் வாழ்வு இறுதிக் கட்டத் திற்கு வந்துவிட்டது என்று பயந்து போயிருந்த நிலையில், ஒரு முதியவரும், மூதாட்டியும் அவர்கள் இருந்த இடத்திற்கு வந்தனர். அப்போது, சிற்பிகள் ஐந்து வகை உலோகங்களை கொதிக்க வைத்துக் கொண்டிருந்தனர்.
அந்த பெரியவர்கள், அதைக் கஞ்சி என நினைத்து, தங்களுக்கு பசிப்பதாகவும், கஞ்சியை ஊற்றும்படியும் கேட்டனர். எரிச்சலில் இருந்த சிற்பிகள், “குடியுங்கள்… நிறைய குடியுங்கள். நாங்கள் சாகப் போகிறோம்; போகும் போது, உங்களுக்கு தானம் செய்த புண்ணியத்தைச் சேர்த்துக் கொண்டு போகிறோம்…’ என்று சொல்லி, ஒரு செம்பில், நாலு அகப்பை உலோகக் கலவையை ஊற்றிக் கொடுத்தனர்.
முதியவர்கள் அதை குடித்தனர். உடனே நடராஜ மூர்த்தியும், சிவகாமி அம்மையுமாக மாறி, சிலை வடிவில் காட்சியளித்தனர். தங்கள் உயிரைக் காக்க வந்த முதியவர்கள் சிவனும், பார்வதியும் என்றறிந்த சிற்பிகள், ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். சிலை அமைந்த வரலாற்றை மன்னனுக்கு எடுத்துக் கூறினர். மன்னனும், இறைவனின் திருவருளை வியந்து, சிதம்பரத்தில் கோவில் கட்டி, பிரதிஷ்டை செய்தான்.
அந்நியர் படையெடுப்பின் போது, கோவில்களில் உள்ள சிலைகள் நொறுக்கப்பட்டன. அபூர்வமான நடராஜர் சிலை பாழ்பட்டு விடக் கூடாது என்பதால், தில்லை வாழ் அந்தணர்களும், ஆயிரத்தெட்டு மடாதிபதிகளும் சிலையைஎடுத்துக் கொண்டு, ஊர் ஊராகச் சென்றனர். கடைசியாக, மலையாள தேசத்துக்கு எடுத்துச் சென்று, ஒரு ஆலமரப்பொந்தில் ஒளித்து வைத்தனர்.
இதனால், அந்த ஊருக்கு, “ஆலப்புழை’ என்று பெயர் ஏற்பட்டது. அந்நியர்கள் சென்றதும், அந்தச் சிலையை அவ்வூரிலுள்ள அம்பலத்தில் (கோவிலில்) வைத்து பூஜை செய்தனர். அந்த இடத்துக்கு, “அம்பலப்புழை’ என்று பெயர் ஏற்பட்டது. இவ்வாறு பல்வேறு சிரமங்களைக் கடந்து, நடராஜர் சிலை உருவானது.
சிவாலயங்களில் உள்ள நடராஜர் சன்னதிகளில், ஆண்டில் ஆறு நாட்கள் அபிஷேகம் நடத்தப்படும். அதில், ஆனி உத்திர நாளும் ஒன்று. இந்த நன்னாளில், நடராஜப் பெருமானை வணங்கினால், பிறப்பற்ற நிலை கிடைக்கும்.

திரிபுராந்தக மூர்த்தி




வரலாற்றுக் கதை


தாருகன் என்ற அரக்கனின் புதல்வர்கள் வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்ற மூவர். இவர்கள் பிரம்ம தேவனை நோக்கி கடுந்தவம் புரிந்தார்கள். தவத்தை மெச்சி, தரிசனம் அளித்த நான்முகனிடம், “”நினைத்த இடமெங்கும் செல்லும்படியாக ஆகாய மார்க்கத்தில் பறக்கத் தக்க மூன்று கோட்டைகள் வேண்டும். நாங்கள் மூவரும் ஒன்று சேர்ந்து இருக்கும்போது மட்டுமே ஒரே கணையால்தான் எங்கள் உயிர் பிரிய வேண்டும்” என்ற அரிய வரத்தைப் பெற்றார்கள்.


வரம் பெற்ற பின் இந்திராதி தேவர்களை துன்புறுத்தினார்கள். வானவர்களைக் கடுந்துயருக்கு ஆளாக்கிய இம்மூவரையும் யாராலும் வெல்ல முடியவில்லை. மேலும் அவர்கள் சிவ பக்தர்களாகவும் திகழ்ந்தார்கள். எனவே அவர்களை சிவபெருமான் மட்டுமே அழிக்க முடியும் என்று கருதிய தேவர்கள், பிரம்மனுடனும், திருமாலுடனும் சென்று சிவபெருமானை வேண்டினர்.
உடனே இறைவன் இட்ட ஆணைப்படி தேவதச்சன் விஸ்வகர்மா, ரதம் ஒன்றை தயாரிக்க, வில் அம்பு சகிதமாக (மேருமலை வில்லாகவும், வாசுகி என்ற பாம்பு நாணாகவும் அமர்ந்ததாம்) நான்கு வேதங்கள் நான்கு குதிரைகளாக்கி, பிரம்மா சாரதியாக இயக்க திரிபுரங்களை எதிர்க்கப் புறப்பட்டார் சிவபெருமான்.


“தேவர்களையும் காக்க வேண்டும், சிறந்த சிவ பக்தர்களாகிய அந்த அரக்கர்களையும் வதம் செய்யக் கூடாது’ என்று கருணை கொண்ட இறைவன், வில்லை வளைக்காமல், நாணைப் பூட்டாமல் அண்ட சராசரங்கள் நடுங்கும் வண்ணம் ஒரு புன்னகை செய்தார். அப்போது தோன்றிய அக்னியினால் முப்புரங்களும் எரிந்து சாம்பலாயின. தன்னைப் பூஜித்து வந்த அந்த மூவரில் இருவரை தன் வாயில் காப்போராகவும், ஒருவரை குடமுழா முழுக்குபவராகவும் தமது அருகில் இருக்கும்படி ஆணையிட்டார் அந்த திரிபுராந்தக மூர்த்தி.


தத்துவம்


திரிபுரத்தை எரியுண்ணுமாறு செய்ததற்கு, ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களைத் தன் திருவருள் நோக்கால் சுட்டு எரித்தான் என்று பொருள்.


திருமுறைகளில் திரிபுராந்தக மூர்த்தி


“அப்பு அணி செஞ்சடை ஆதிபுராதனன்
முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புரமாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யார் அறிவாரோ”
- திருமந்திரம்.
“ஐயன் நல்லதிசயன் அயன் விண்ணோர் தொழும்
மையணி கண்டனார் வண்ணம் வண்ணவான்
பையரவு அல்குளாள் பாகம் ஆகவும்
செய்யவன் உறைவிடம் திருவிற் கோலமே!”
- சம்பந்தப் பெருமான்.
இலிங்கோத்பவர் மூர்த்தி மகேஸ்வர வடிவங்களில் ஒன்றாகும்.





வரலாற்றுக் கதை


நான்முகனுக்கும் திருமாலுக்கும் தம்முள் யார் பெரியவர் என்ற வினா எழுந்தது. நான்முகன், “நானே படைக்கிறேன்; ஆகவே நான் தான் பெரியவன்” என்றார். திருமால், “நான் காக்கிறேன்; ஆகவே நான் பெரியவன்” என்றார். இவர்களிடையே வாதம் வலுத்தது.


அப்போது அங்கே பேரொளிப்பிழம்பாகிய ஜோதித்தம்பம் ஒன்று எழுந்தது. அத்தம்பத்தின் அடிமுடி அறிந்தவரே பெரியவர் என்று அசரீரியாக வானொலியும் கேட்டது. நான்முகனாரும் திருமாலும் அத்தம்பத்தைக் கண்டு வியப்புற்றனர். தமக்குள் ஒரு உடன்பாட்டுக்கு வந்தனர்.


நான்முகன் அத்தம்பத்தின் முடியைக் கண்டறிவதெனவும் ஒத்துக் கொண்டனர். தம்பத்தின் முடியைக் காண அன்னமாகி நான்முகன் மேலே பறந்து செல்லலானார். திருமாலும் வராக(பன்றி) வடிவேற்று பூமிக்குள் சென்று அடி தேடலானார். பல காலம் இருவரது முயற்சியும் தொடர்ந்து நடந்தது.
பறந்து சென்ற அன்னமாகிய நான்முகன் தனது வானவழியில் ஒரு தாழம்பூ விழுவதைக் கண்டு அது எங்கிருந்து வருகிறது என வினவ, அத்தாழம்பூ தான் ஜோதித்தம்பத்தின் உச்சியிலிருந்து புறப்பட்டுப் பல காலமாகக் கீழ் நோக்கி வந்து கொண்டிருப்பதாயும் கூறியது. நான்முகன் தாழம்பூவைத் தன்பால் சேர்த்துக் கொண்டு, தம்பத்தின் உச்சியைத் தான் கண்டு விட்டதாகவும் அதற்குத் தாழம்பூவே சாட்சி எனக் கூறினார்.


திருமால் பலகாலும் முயன்றும் தாம் தம்பத்தின் அடியைக் கண்டறிய முடியவில்லை என ஒப்புக் கொண்டார். இருவரும் ஜோதித்தம்பமாக விளங்குபவர் சிவபெருமானே என அறிந்து தம்பேதைமையொழிந்து பணிந்தனர். அவ்விருவர் அகந்தையையும் போக்கிச் சிவபெருமான் உலகிற்குத் தன் பேரொளி வடிவத்தைக் காட்டிய கோலமே இலிங்கோற்பவ மூர்த்தியாகும்.


தத்துவம்


நான்முகன் அறிவு வடிவானவர். திருமால் செல்வத்தின் நாயகர். அறிவும் செல்வமும் இறுமாப்பைத் தரவல்லன. அகந்தை மிகச் செய்வன. ஆனால் அறிவினாலும் செல்வத்தாலும் இறைவனைக் காண முடியாது என்பதே லிங்கோத்பவர் உணர்த்தும் தத்துவம்.


திருமுறைகளில் இலிங்கோற்பவமூர்த்தி


“அலரவனும் மாலவனும் அறியாமே அழலுருவாய்
நிலமுதற் கீழண்டமுற நின்றதுதான் என்னேடி
நிலமுதற்கீழ் அண்டமுற நின்றிலனேல் இருவருந்தம்
சலமுகத்தால் ஆங்காரம் தவிரார்காண் சாழலோ”

- மணிவாசகர்.


“அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட
அங்ஙனே பெரிய நீ சிறிய
என்னையாள விரும்பி என் மனம் புகுந்த
எளிமையை யென்றும் நான் மறக்கேன்
முன்னம்மால் அறியாவொருவனாம் இருவா
முக்கணா நாற்பெருந்தடந்தோள்
கன்னலே தேனே யமுதமே கங்கை
கொண்ட சோளேச் சரத்தானே”

- திருமாளிகைத்தேவர்




சைவம் தளைக்க உலகெல்லாம் இன்றும் நாயன்மார்கள் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். ஆனால் சேக்கிழார் பெருமான் தன்னுடைய திருத்தொண்டர் புராணத்தில் குறிப்பிட்டுள்ள அறுபத்து மூன்று சிவனடியார்களின் பெயர்கள் இங்கே!. வரலாறுகளும் குறிப்புகளும் பின்னே!.




திருத்தொண்டர் புராணத்தின் மகிமையை உணர்ந்து அதை விட பெரிய புராணம் வேறு எங்கும் இருக்க இயலாது என பெரிய புராணம் என்று வழங்கப்படுகிறது.


அறுபத்து மூன்று அடியார்களில் மூவர் பெண்கள் என்பது மேலும் சிறப்பு. அதிலும் காரைக்கால் அம்மையார் இயற்றியுள்ள பாடல்கள் சைவத்தில் தனித்துவமானவை.


1.அதிபத்தர்
2.அப்பூதியடிகள்
3.அமர்நீதியார்
4.அரிவட்டாயர்
5.ஆனாயர்
6.இசைஞானியர்
7.இடங்கழியார்
8.இயற்பகையார்
9.இளையான்குடி மாறன்
10.உருத்திரபசுபதியார்
11.எறிபத்தர்
12.ஏயர்கோன்கலிக்காமர்
13.ஏனாதி நாதர்
14.ஐயடிகள் காடவர் கோன்
15.கணநாதர்
16.கணம் புல்லர்
17.கண்ணப்பர்
18.கலிக்கம்பர்
19.கலியர்
20.கழறிற்றறிவார்
21.கழட்சிங்கர்
22.காரியார்
23.குங்கிலியக்கலயர்
24.காரைக்கால்
25.குலச்சிறையார்
26.கூற்றுவார்
27.கோச்செங்கட்சோழர்
28.போட்புலியார்
29.சடையனார்
30.சண்டேசுரர்
31.சந்தியார்
32.சாக்கியர்
33.சிறுப்புலியார்
34.சிறுத்தொண்டர்
35.சுந்தரர்
36.செருத்துணையார்
37.சோமாசிமாறர்
38.தண்டியடிகள்
39.திருக்குறிப்புத்தொண்டர்
40.திருஞானசம்பந்தர்
41.திருநாவுக்கரசர்
42.திருநாளைபோவார்
43.திருநீலகண்டர்
44.திருநீலகண்டயாழ்பாணர்
45.திருநீலநக்கர்
46.திருமூலர்
47.நமிநந்தியடிகள்
48.நரசிங்கமுனையாரையர்
49.நின்றசீர்நெடுமாறர்
50.நேசர்
51.புகழ்ச்சோழர்
52.புகழ்த்துனையார்
53.பூசலார்
54.பெருமிழவககுரும்பர்
55.மங்கயற்கரசியார்
56.மானக்கஞ்சாறர்
57.முருகர்
58.முனையடவார்
59.மூர்க்கர்
60.மூர்த்தியார்
61.மெய்ப்பொருளார்
62.வாயிலார்
63.விறண்மிண்டர்


ஏன் நீர் தளம்





சிவன் கட்டளைக்காக அம்பிகை, பூலோகத்தில் மானிடப்பெண்ணாக பிறந்தாள். இங்கு காவிரி நீரில் லிங்கம் பிடித்து வழிபட்டாள். சிவன் அந்த லிங்கத்தில் எழுந்தருளி அவளுக்குக் காட்சி தந்தார். அம்பிகையால் நீரில் லிங்கம் உருவாக்கப்பட்ட தலம் என்பதால் இது, பஞ்ச பூத தலங்களில் “நீர்’ தலமானது.


ஜம்புகேஸ்வரர்





இந்த திருவாநைக்காவல் தளத்தில் இறைவன் பெயர் “ஜம்புகேஸ்வரர் “. ஜம்பு என்னும் முனிவர் சிவனை வேண்டி இங்கு தவமிருந்தார்.
சிவன் அவருக்கு காட்சி கொடுத்து, நாவல் பழ பிரசாதம் கொடுத்தார். பழத்தை உண்ட முனிவர், அதன் புனிதம் கருதி விதையையும் விழுங்கி விட்டார். அவர் விழுங்கிய விதை வயிற்றுக்குள் முளைத்து, தலைக்கு மேலாக மரமாக வளர்ந்தது. அவர் சிரசு வெடித்து முக்தி பெற்றார்.
நாவல் மரத்துக்கு “ஜம்பு’ என்றும் பெயருண்டு. அம்பிகையால் அமைக்கப்பட்ட நீர் லிங்கம் இந்த மரத்தின் கீழ் அமைந்தது. பக்தராகிய ஜம்புவுக்கு முக்தி தந்தததால், சுவாமி “ஜம்புகேஸ்வரர்’ என பெயர் பெற்றார்.


அகிலாண்டேஸ்வரி


இங்கிருக்கும் இறைவியின் பெயர் “அகிலாண்டேஸ்வரி “. அகிலம் என்றால் உலகம். அகிலத்தை ஆளுகின்ற சக்தி படைத்தவள் என்பதே இதன் உட்பொருள்.


மாறுவேடம்




பிரம்மா, ஒருமுறை தான் படைத்த பெண்ணையே அடைய விரும்பினார். இதனால் அவருக்கு “ஸ்திரீ தோஷம்’ உண்டானது. தோஷ நிவர்த்தி பெற சிவனை வேண்டினார். அவருக்கு அருள சிவன் கைலாயத்திலிருந்து கிளம்பினார். அப்போது அம்பிகை, தானும் வருவதாக கூறினாள். சிவன் அவளிடம், பிரம்மா பெண்கள் மீது மோகம் கொள்பவர் என்று சொல்லி அவளை உடன் அழைத்துச் செல்ல மறுத்தார்.


ஆனால், அம்பிகை சிவனிடம், “”நான் உங்களது வேடத்தில் வருகிறேன், நீங்கள் சேலை அணிந்து என் வேடத்தில் வாருங்கள்!” என்றாள். சிவனும் ஏற்றுக்கொள்ள இருவரும் மாறுவேடத்தில் சென்றனர். சிவமும், சக்தியும் ஒன்று என்பதன் அடிப்படையிலும் இந்த திருவிளையாடல் நிகழ்ந்தது. பின்னர் பிரம்மாவுக்கு இருவரும் பாவமன்னிப்பு வழங்கினர்.


கோச்செங்கட்சோழன்




கைலாயத்தில் சிவனுக்கு சேவை செய்த சிவகணங்களான புட்பதந்தன், மாலியவான் என்னும் இருவர் தங்களில் யார் அதிகமாக சேவை செய்கிறார்கள் என்பதில் போட்டி வந்தது.


ஒரு கட்டத்தில் இருவருக்கும் இதுவே பிரச்னையாகி, ஒருவரையொருவர் சிலந்தியாகவும், யானையாகவும் பிறக்கும்படி சபித்துக் கொண்டனர். இதனால் மாலியவான் சிலந்தியாகவும், புட்பதந்தன் யானையாகவும் பிறந்தனர். இவ்விருவரும் இத்தலத்தில் சிவனை வழிபட்டனர். இதிலும் இவர்களிருவருக்கும் போட்டி உண்டானது.


இதில் சிலந்தி, யானையில் தும்பிக்கைக்குள் புகுந்தது. இதில் சிவன், யானைக்கு மட்டும் முக்தி கொடுத்தார். சிலந்தி, யானையைக் கொல்ல முயன்றதற்காக மீண்டும் பிறக்கும்படி செய்தார்.


சிலந்தி, சோழ மன்னர் சுபவேதர், கமலாவதியின் மகனாகப் பிறந்தது. இவரே, கோச்செங்கட்சோழ மன்னர் ஆவார். இம்மன்னரே தனது முற்பிறவிப் பயனால், யானைகள் புக முடியாதபடி சிவனுக்கு மாடக்கோயில்கள் கட்டினார். இக்கோயிலையும் யானை புகாதபடி திருப்பணி செய்தார். இம்மன்னனுக்கு இங்கு சன்னதி இருக்கிறது.


சித்தர்கள்




தியானம்,மருத்துவம்,ஆன்மீகம்,தத்துவம்,விஞ்ஞானம்,ரசாயனம்,சிற்பம், மொழியறிவு என பல்வேறுபட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்கள் நம் சித்தர்கள். செம்பு, கல், மண் என எதுவையும் தங்கமாக்கும் சொர்ண ரகசியம், ஒருவரின் உடலிலிருந்து மறு உடலுக்கு உயிர் மாறும் கூடுவிட்டு கூடு பாயும் முறை, விலங்குகளுடன் பேசுதல், வசிகரித்தல், உயிர் கொடுத்தல், நீரில் நடத்தல், காற்றில் மிதத்தல் என பல்வேறு சித்துகள் எனப்படும் திறன்களையும் பெற்றிருந்தார்கள்.


சாதாரண மக்களாலும், சமய விற்பனையாளர்களாலும் சொல்லப்பட்ட புனைவுக்கதைகளை நான் இங்கு சொல்லப்போவதில்லை. சித்தர்களைப் பற்றி ஆய்வு நடத்தும் சித்தரியல் நூல்களையும், விங்கிபீடியா, அக்னி சிறகு போன்ற சிறந்த வலைப்பூக்களையும், சித்தர்களைப் பற்றி அறிந்தவர்களின் வார்த்தைகளை கேட்டும் இங்கு எழுதுகிறேன்.


சிவனை வணங்குவதால் மட்டும் எனக்கும் சித்தர்களுக்கும் ஒரு தொடர்பு ஏற்பட்டது. அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள எனக்கு கொஞ்சம் காலமும் தேவைப்பட்டது. நான் படித்து, பார்த்து, கேட்டு தெரிந்து கொண்டவைகளை ஒரு குட்டி தொடராகவே எழுதுவது என தீர்மானித்தேன்.அந்த தொடரின் முதல் பகுதியாக சித்தர் பாடல்கள் வெளிவந்தன. இப்போது அந்த சித்தர்களின் மகிமைகளைப் பற்றியும் எழுதுகிறேன். இந்த தொடர் வெற்றிகரமாக அமைய உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.


உண்மைச் செய்தி


பொதுவாக எல்லோறும் கூறுவது போல சித்தர்கள் வெறும் 18 பேர்கள் இல்லை.கொஞ்ச நாள் முன்பு வரை எனக்கும் இந்த செய்தி தெரியாது. சித்தர்களின் பெயர்களை பல்வேறு புத்தகங்கள் வெவ்வேறு விதமாக அச்சிட்டு இருக்கின்றன. பொதுவாக இவைகள் புனைப்பெயர்களாக இருக்கும் என நான் நம்பினேன். ஆனால் சித்தர்கள் நூற்றுக்கும் மேர்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்த போது வியப்பு ஏற்பட்டது. அந்த வியப்புடனே சித்தர்களைப் பற்றிய ஓர் சின்ன பார்வை.


பதினென் சித்தர்கள் அல்லது பதினெட்டு சித்தர்கள் என பிரித்தவர்கள் யார் என தெரியவில்லை. இந்த தொகுப்பு முறை காரணமாக இரண்டு வேறுபட்ட பட்டியல் காணப்படுகின்றது. இது மட்டும் அல்ல இன்னும் பிற தொகுப்புகளும் காணப்படலாம்.ஏன் இந்த மாறுபட்ட பட்டியல்கள் என நீங்கள் கேட்டால் அதற்கு ஒரே விளக்கம் தான் என்னிடம் இருக்கிறது. வள்ளல்களை எப்படி ஏழு ஏழாக பிரித்தனரோ, அதைப்போல ஒரு பாகுபாடுதான் சித்தர்களை பிரித்தமைக்கும் இருக்கும் என நினைக்கிறேன்.


ஒரு 18 சித்தர்களின் பெயர் பட்டியல்


1. திருமூலர்
2. இராமதேவர்
3. கும்பமுனி
4. இடைக்காடர்
5. தன்வந்திரி
6. வால்மீகி
7. கமலமுனி
8. போக நாதர்
9. மச்ச முனி
10. கொய்கணர்
11. பதஞ்சலி
12. நந்தி தேவர்
13. போதகுரு
14. பாம்பாட்டி
15. சட்டைமுனி
16. சுந்தரானந்த தேவர்
17. குதம்பைச் சித்தர்
18. கோரக்கர்

அடுத்த 18 சித்தர்களின் பெயர் பட்டியல்

1. கௌதமர்
2. அகத்தியர்
3. சங்கரர்
4. வைரவர்
5. மார்க்கண்டர்,
6. வன்மிகர்,
7. உரோமர்
8. புசண்டர்
9. சட்டைமுனி
10. நந்தீசர்
11. திருமூலர்
12. பாலாங்கிநாதர்
13. மச்சமுனி
14. புலத்தியர்
15. கருவூரார்
16. கொங்கணர்
17. போகர்
18. புலிப்பாணி

வேறுபாடுகள் அற்றவர்கள்

இனம், மதம், மொழி, நாடு என்ற நம்முடைய பிரிவினைகளுக்கெல்லாம் கட்டுப்படாதவர்கள் சித்தர்கள். காற்று, நீர், நிலம், நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆண்டவர்களுக்கு சமூகத்தின் பிரிவுகள் பாதிக்கவே இல்லை. பல நாடுகளில் பயணம் செய்து, பல மொழிகளில் புத்தகங்கள் எழுதியுளார்கள். உதாரணமாக ராமதேவராகிய யாக்கோபு என்ற சித்தர் இஸ்லாமிய மதத்தின் புனித இடமான மெக்காவில் தங்கி தான் கற்றவற்றை, இங்கு வந்து தமிழிலும் எழுதியுள்ளார்.


அந்தந்த நாடுகளுக்கு தக்கபடி பெயர்கள் இருப்பதால் சில சித்தர்களுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட பெயர்களும் இருக்கின்றன.அதுமட்டுமல்லாமல் பல மொழித் திறமையால் பல நாடுகளில் அவர்களின் புத்தகங்கள் இருக்கின்றன. சித்தரியல் என்னும் ஒரு இயலே இதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. சித்தர்களின் நூல்களை ஆராந்து பார்த்து பல நாடுகளிலும் நவீன மருத்துவத்தில் அதனை சேர்க்க தொடங்கியுள்ளனர்.


இவர்களின் கண்டுபிடிப்பான மனநிலையை ஒழுங்கு செய்யும் யோகா, இன்று மிகப்பெரிய அளவில் மக்களை சென்றடைந்துள்ளது. ஜக்கிவாசுதேவ், பரமஹம்ஸ நித்தியானந்தர் , வேதாந்திர மகரிசி போன்றவர்கள் தங்களது வாழ்க்கையை மக்கள் நல்வாழ்வுக்காக தந்து யோக நிலைகளை கற்று தருகிறார்கள். அத்துடன் நல்ல தமிழில் சித்தர்களைப் போல புத்தகங்களும் எழுதுகிறார்கள். ஒரு மதம் என்று இவர்கள் கட்டுக்குள் அடங்குவதில்லை, மதம்,இனம் கடந்து தங்கள் சேவையை செய்து கொண்டிருக்கிறார்கள். என்னைப் பொருத்தவரை இவர்களும் சித்தர்களே.


108 சித்தர்களின் பெயர்கள்


நான் முன்பு கூறியபடியே நூற்றுக்கும் மேற்பட்ட சித்தர்கள் இந்த உலகில் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றி விரிவாக பார்க்கும் முன்பு 108 சித்த மாமுனிகளின் பெயர்களை படித்து பாருங்கள். உங்களுக்கு தெரிந்த பழக்கமான பல சித்தர்கள் இருப்பார்கள்.


1. திருமூலர்.
2. போகர்.
3. கருவூர்சித்தர்.
4. புலிப்பாணி.
5. கொங்கணர்.
6. மச்சமுனி.
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர்.
8. சட்டைமுனி சித்தர்.
9. அகத்தியர்.
10. தேரையர்.
11. கோரக்கர்.
12. பாம்பாட்டி சித்தர்.
13. சிவவாக்கியர்.
14. உரோமரிசி.
15. காகபுசுண்டர்.
16. இடைக்காட்டுச் சித்தர்.
17. குதம்ப்பைச் சித்தர்.
18. பதஞ்சலி சித்தர்.
19. புலத்தியர்.
20. திருமூலம் நோக்க சித்தர்.
21. அழகண்ண சித்தர்.
22. நாரதர்.
23. இராமதேவ சித்தர்.
24. மார்க்கண்டேயர்.
25. புண்ணாக்கீசர்.
26. காசிபர்.
27. வரதர்.
28. கன்னிச் சித்தர்.
29. தன்வந்தரி.
30. நந்தி சித்தர்
31. காடுவெளி சித்தர்.
32. விசுவாமித்திரர்
33. கௌதமர்
34. கமல முனி
35. சந்திரானந்தர்
36. சுந்தரர்.
37. காளங்கி நாதர்
38. வான்மீகி
39. அகப்பேய் சித்தர்
40. பட்டினத்தார்
41. வள்ளலார்
42. சென்னிமலை சித்தர்
43. சதாசிவப் பிரம்மேந்திரர்
44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார்
45. ராகவேந்திரர்
46. ரமண மகரிஷி.
47. குமரகுருபரர்
48. நடன கோபால நாயகி சுவாமிகள்
49. ஞானானந்த சுவாமிகள்
50. ஷீரடி சாயிபாபா
51. சேக்கிழார் பெருமான்
52. ராமானுஜர்
53. பரமஹம்ச யோகானந்தர்
54. யுக்தேஸ்வரர்
55. ஜட்ஜ் சுவாமிகள்
56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57. கண்ணப்ப நாயனார்.
58. சிவப்பிரகாச அடிகள்.
59. குரு பாபா ராம்தேவ்
60. ராணி சென்னம்மாள்.
61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி
62. குழந்தையானந்த சுவாமிகள்.
63. முத்து வடுகநாதர்.
64. இராமதேவர்
65. அருணகிரிநாதர்.
66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள்
67. மௌன சாமி சித்தர்
68. சிறுதொண்டை நாயனார்.
69. ஒடுக்கத்தூர் சுவாமிகள்.
70. வல்லநாட்டு மகாசித்தர்.
71. சுப்பிரமணிய சித்தர்.
72. சிவஞான பாலசித்தர்.
73. கம்பர்.
74. நாகலிங்க சுவாமிகள்.
75. அழகர் சுவாமிகள்.
76. சிவஞான பாலைய சுவாமிகள்
77. சித்தானந்த சுவாமிகள்.
78. சக்திவேல் பரமானந்த குரு
79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள்
80. அக்கா சுவாமிகள்
81. மகான் படே சுவாமிகள்
82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள்
83. பகவந்த சுவாமிகள்.
84. கதிர்வேல் சுவாமிகள்.
85. சாந்த நந்த சுவாமிகள்
86. தயானந்த சுவாமிகள்
87. தஷிணாமூர்த்தி சுவாமிகள்.
88. ஞானகுரு குள்ளச்சாமிகள்.
89. வேதாந்த சுவாமிகள்
90. லஷ்மண சுவாமிகள்.
91. மண்ணுருட்டி சுவாமிகள்.
92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள்.
93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்).
94. கோட்டூர் சுவாமிகள்.
95. தகப்பன் மகன் சமாதி
96. நாராயண சாமி அய்யா சமாதி
97. போதேந்திர சுவாமிகள்
98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள்.
99. வன்மீக நாதர்.
100. தம்பிக்கலையான் சித்தர்
101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள்
102. குகை நாச்சியார் மகான்.
103. வாலைகுருசாமி.
104. பாம்பன் சுவாமிகள்.
105. குமாரசாமி சித்தர் சுவாமிகள்.
106. பெரியாழ்வார் சுவாமிகள்
107. மாயம்மா
108. பரமாச்சாரியார்.
ராணி சென்னம்மாள், மாயம்மா என்ற பெயர்கள் பெண் சித்தர்களை குறிக்கின்றன. அதனால் பெண் சித்தர்களும் உலகில் மகிமை புரிந்திருக்கின்றனர்.


உலகின் முதல் நாகரீகமான சிந்து சமவெளி நாகரீகத்திற்கு முன்பிருந்தே சிவ வழிபாடு நிகழ்ந்திருக்கிறது.
அருவம், உருவம், அருவுருவம் என மூன்றுவகையான வழிபாடே உலகத்தில் காணப்படுகிறது. லிங்க வழிபாடு அருவுருவ வகையைச் சார்ந்தது.

லிங்கம் என்பதன் பொருள்




லிங்கம் என்பது சமஸ்கிருதச் சொல்லாகும். இதற்கு பல அர்த்தங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் மனித ஆண்குறி. மேலே உள்ள படத்தில் மனித ஆண்குறியின் வடிவம் தெளிவாக செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.




இது லிங்கத்துடன் ஆவுடையாரும் உள்ள உருவம். லிங்கம் எப்படி ஆண்குறியைக் குறிக்கின்றதோ அப்படியே ஆவுடையாரும் பெண்க்குறியைக் குறிக்கின்றது. மக்கள் ஆண் பெண் குறிகளின் இணைப்பை கடவுளாக வழிபடுகின்றனர். ஏன்.

உடலுறவு

ஒரு புது உயிர் பெண்ணின் கருவறையில் உருவாக வேண்டும் என்றால் ஆணின் பிறப்புறுப்புகள் சரியாக இருப்பதுடன், அதன் செயல்பாடுகளும் நன்றாக இருக்க வேண்டும். அதிலிருந்து போதுமான விந்து வெளியேறி, பெண்ணின் பிறப்புறுப்பில் சேரவேண்டும். இதற்கு பெண்ணின் பிறப்புறுப்பும் சரியாக அமைந்து, அதன் செயல்பாடும் நன்கு அமைந்திருக்க வேண்டும். அப்போதுதான், விந்திலிருந்து வெளியேறும் உயிரணு, கருவாக உருமாற வாய்ப்பு ஏற்படும்.


இந்த உடலுறவைப் பற்றி அறியாத பலர் இன்னும் இருக்கத்தான் செய்கின்றார்கள். எதையும் வெளிப்படையாக பேசிப் போகும் இந்தக் காலக் கட்டத்தில் கூட இப்படி சிலர் இருக்கையில், பண்டையக் காலத்தை நினைத்துப் பாருங்கள். (பல்லாயிரம் ஆண்டுகளாக ‘ஆணும் பெண்ணும் செக்ஸில் ஈடுபட்டு, ஆணின் விந்தணு பெண்ணின் கருமுட்டையை சந்தித்துக் கரு உருவாகிறது’ என்பது தெரியாமலே இருந்தது என்பதே உண்மை! – டாக்டர் நாராயண ரெட்டி.) இதை தீர்ப்பதற்காக ஆண் பெண் சங்கமம் கடவுளாக மாற்றப்பட்டிருக்கலாம்.

தமிழர் வழிபாடு

ஒரு புறம் உடலுறவு என்பதே தெரியாதவர்களுக்காக லிங்கம் உருவாக்கப்பட்டது என்று சொன்னாலும். இந்து மதம் பற்றிய வெகு காலம் ஆய்வில் ஈடுபட்டிருந்த வேதங்களின் பொருள் உணர்ந்த அக்னி ஹோத்திரம் தாத்தாச்சாரியார், லிங்க வழிப்பாட்டை தமிழர் வழிபாடு என்று சொல்லுகிறார்.

சிவ லிங்க உருவங்கள்




சிவன் முகமுள்ள லிங்கம்


தியான லிங்கம்


நன்றி!

அமர்நீதி நாயனார் – அறுபத்து மூவர் புராணம்


அமர்நீதி நாயனர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். அமர்நீதியார் சோழநாட்டிலே பழையாறை என்னும் பழமையான (தொன்மையான) பகுதியிலே பிறந்தார். 7ம் நூற்றாண்டுக்கும் முற்பட்ட காலத்தவர்.




வரலாறு


வணிகத்தால் பெரும் பொருள் தேடிச் செல்வந்தராய் விளங்கிய இவர் சிவனடியார்க்குப் பணிசெய்வதையே தனது நாளாந்த தொண்டாகக் கொண்டிருந்தார். சிவனடியார்க்கு திருவமுது (உணவு), ஆடை, கீழ்கோவணம் அளித்தல் ஆகிய திருத்தொண்டுகளைச் செய்துவந்தார். சிவனடியார்களுக்குத் திருவமுது கொடுப்பதற்காகத் திருநல்லூரில் மடம் கட்டினார். திருவிழாக்காலங்களில் தம் சுற்றத்தவரோடு தங்கியிருந்து அடியார்களுக்கு திருவமுது, உடை, கோவணம் என்பன அளித்து மகிழ்ந்தார்.
அன்பர் பணி செய்யும் அமர்நீதியாருக்குச் சிவபெருமான் அருள் புரியத் திருவுளங்கொண்டார். அவர் ஒரு நாள் அந்தணர் குலத்து பிரம்மச்சாரியாக கோலங்கொண்டார். கையில் இருகோவணம் முடிந்த ஒரு தண்டுடன் கோவண ஆடையுடன் திருநல்லூரில் உள்ள அமர்நீதியார் மடத்தை அடைந்தார். அவரைக் கண்டு அமர்நீதியார் மிக முகமலர்ச்சியோடு வரவேற்று உபசரித்தார். அமர்நீதியார் அவரை உணவுண்ண அழைத்தார். பிரம்மச்சாரியார் அவ்வேண்டுகோளிற்கிசைந்து காவிரியில் நீராடச் சென்றார். செல்லும் பொழுது மழை வரினும் வரும் எனக்கூறித் தமது தண்டில் கட்டி இருந்த கோவணம் ஒன்றை அவிழ்த்து அமர்நீதியாரிடம் கொடுத்து அதனைப் பக்குவமாக வைத்திருக்கும்படி கூறினார். அமர்நீதியார் அதனைத் தனியாக ஓர் இடத்தில் சேமித்து வைத்தார்.


சிவனடியார் கோவணத்தை மறையும்படி செய்து மழையில் நனைந்தவராய் வந்தார். வைத்த கோவணத்தை கொண்டு வருமாறு கூறினார். கோவணம் கொண்டுவரச் சென்ற தொண்டர் வைத்த இடத்தில் காணாது திகைத்தார். பிற இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. பின்னர் பிறிதொரு கோவணத்தை எடுத்துக்கொண்டு பிரமச்சாரியிடம் வந்தார். அடிகளே!, தாங்கள் தந்த கோவணத்தை வைத்த இடத்தில் காணவில்லை. அது மறைந்ததோ பெரும் மாயமாக உள்ளது. இது வேறு ஒரு நல்ல கோவணம்; இது ஆடையிற் கிழிக்கப்பட்டதல்ல. கோவணமாகவே நெய்யப்பட்டது. நனைந்த கோவணத்தை களைந்து (அகற்றி) இதனை அணிந்து அடியேனது குற்றத்தைப் பொறுத்து அருளுங்கள் என வேண்டினார்.


இதனைக் கேட்ட சிவனடியார் சீறிச் சினந்தார். அமர்நீதியாரே!, நாம் உம்மிடம் தந்த கோவணத்திற்கு ஒத்தது தண்டில் உள்ள இந்தக் கோவணம். இந்தக் கோவணத்திற்கு எடையான கோவணத்தைக் கொடுப்பீராக என்று கூறினார். அதனை ஏற்றுக்கொண்ட அமர்நீதியார், தராசின் ஒரு தட்டில் அடியார் தந்த கோவணத்தை வைத்து, அதற்கு ஈடாகத் தம்மில் [2] உள்ள நெய்த கோவணத்தை மற்றொரு தட்டில் வைத்தபோழுது அது நிறை போதாமையால் மேலெழுந்தது. அது கண்ட அமர்நீதியார், தாம் அடியார்களுக்குக் கொடுத்தற் பொருட்டு வைத்திருந்த கோவணங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக இட்டார். அப்பொழுதும் அன்பரது தட்டு மேற்பட அடியாரது கோவணத்தட்டு நிறையால் கீழே தாழ்ந்தது. அந்நிலையில் அமர்நீதியார், தம்மிடம் உள்ள பொன், வெள்ளி, நவமணித் திரள் முதலிய அரும்பொருள்களையும், பின்பு தம் மனைவி, புதல்வன் ஆகியோரையும் தட்டில் அமர்த்தினார். அப்பொழுது கூட தட்டு நேர் நிற்கவில்லை. நாயனார் ‘நாங்கள் இழைத்த அன்பில் இறை திருநீற்று மெய்யடிமை பிழைத்திலோம் என்றால் இத்தராசின் தட்டு சமமாக நிற்பதாகுக’ என்று திருவைந்தெழுத்து ஓதித் தாமும் அதன் மேல் ஏறி அமர்ந்தார். அந்நிலையில் அத்தாராசுத் தட்டுக்கள் இரண்டும் சமமாய் நேர் நின்றன.


அடியாராக வந்த இறைவர், திருநல்லூரிற் பொருந்திய அம்மையப்பராகிய திருக்கோலத்தை அமர்நீதியாருக்குக் காட்டியருளினார். அமர்நீதியாரும் மனைவியாரும் மைந்தரும் சிவலோகவாழ்வினைப் பெற்று இன்புற்றார்கள்.

நீதி
சிவனும் சிவனடியாரும் ஒன்றே!

ஆனாய நாயனார் – அறுபத்து மூவர் புராணம்




முதல் முதலில் குழல் ஊதி உயிர்களுக்கு இன்பம் தந்தவர் முருகப்பெருமான். இதைத் திருமுருகாற்றுப்படை எடுத்துக்கூறுகின்றது. பின் முருகனின் தாய் மாமனாகிய கண்ணன் குழல் ஊதி நம் துன்பம் துடைத்தார். மூன்றாவதாக ஆனாய நாயனார் குழல் ஊதி சிவபெருமானையே கவர்ந்து இழுத்தவர். சிவனைக் கவர்ந்ததால் என்றென்றும் சிவன் அருகிலிருந்து குழல் ஊதும் பாக்கியம் பெற்றவர்.

சோழ நாட்டில் உள்ள ஊர் திருமங்களம். அந்த ஊரில் ஆயர் குலத்தில் அவதரித்தார் ஆனாயர். தினம் ஈசனை வணங்கி திருநீறு இட்டு, தன்னுடைய குலத் தொழிலான மாடுகளை மேய்க்க செல்வார். அப்போது வகை வகையாக மாடுகளை பிரித்து மேய விட்டுவிட்டு புலலாங்குழல் வாசிப்பார். இசையில் ஓம் நமச்சிவாய எனும் திருநாமம் கமலும்.

இறைவனை வணங்குவதற்கு பல வழிகள் உண்டு. இங்கு தமது குழல் இசையால் இறைவனை கவர்ந்த ஆனாய நாயனார் பற்றி அறிவோம்.
லால்குடி ரயில் நிலையத்திலிருந்து, பூவாலுர் வழியே வடமேற்க்கில், சுமார் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருமங்கலம் என்ற திருத்தலம். பரசுராமர் சிவபெருமானை இங்குதான் வழிப்பட்டு பரசு என்ற ஆயுதத்தைப் பெற்றார். ஆனாய நாயனார் இத்தலத்தில் ஆயர் குலத்தில் அவதரித்தார். ஏராளமான பசு மந்தைகள் இவரிடம் இருந்தன. ஆ என்றால் பசு என்று பொருள்படும். பசுக்களை மேய்க்கும் தொழிலை கொண்ட இவர், ஆனாயர் என்ற பெயர் பெற்றார். இவர் சிவனைத் தனது முழுமுதற்கடவுளாக கொண்டிருந்தார்.
ஆனாயர் குழல் ஊதுவதில் சிறந்தவராக திகழ்ந்தார். பசுக்கூட்டத்துடன் சென்று அவை மேயும் பொழுது இவர் குழல் ஊதுவார்.

ஒருநாள் திருநீறு அணிந்துகொண்டு பசுக்களுடன் முல்லை நிலத்திற்கு செல்கிறார். அப்பொழுது கார் காலம் முல்லை மலர் பூத்து நறுமணம் வீசுகின்றது. அங்கு பூத்துக் குழுங்கும் கொன்றை மலர்களை எல்லாம் பார்த்து அதனுள்ளே சிவபெருமானை காணுகின்றார். எடுக்கின்றார் குழலை, ஐந்தெழுத்து மந்திரத்தை நமச்சிவாய என்று குழலோசையில் தருகின்றார். எங்கும் எதிர்ரொலிக்கின்றது. குழல்ஓசையைக் கேட்டு பசுக்கள் அருகில் வந்து நிற்க்கின்றன. இளம் கன்றுகள் தாய்மடியில் பால் குடிப்பதை நிறுத்திவிட்டு அப்படியே நிற்க்கின்றன. ஆங்கே காணப்பட்ட எருதுகளும் மான் போன்ற விலங்குகளும் அப்படியே அசையாமல் நிற்கின்றன. ஆடுகின்ற மயில்கள் அப்படியே ஆடாமல் நிற்க்கின்றன. காற்று நிற்க்கின்றது. மலர்கள் அசையாமல் நிற்க்கின்றன. நமச்சிவாய நமச்சிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரம் மண்ணிலும் விண்ணிலும் ஒலிக்கின்றது.

தேவர்களும் அங்கே வந்துவிட்டனர். தில்லை நடராசப்பெருமான் வராமல் இருப்பாரா. அப்பனும் அம்மையும் விசுவ வாகனத்தில் காட்சியளiக்கின்றனர். உன் குழல் இசையை கேட்டேன். என்றும் இந்த இசையின் பத்தை எனக்குத் தரவேண்டும். என்று இறைவன் கேட்க, உடனே இறைவனடி சேர்ந்தார் ஆனாய நாயனார்.



இயற்கை அன்னையின் அழகை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து கொண்ட மலை அழகிகளில் கொல்லிமலை சிறப்பு பெற்றது. தன் அழகை 17 மைல் தூரத்திற்கு விரித்திருக்கும் இந்த மலை ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையும், வரலாற்று சிறப்பும் உடையது.
கொல்லிமலையின் புகழுக்கு வசந்த முலாம் பூசியது “கொல்லிப்பாவை’ தான். அசுரர்கள் வருகையை தடுத்து நிறுத்த மாயன் என்ற தெய்வ சிற்பி, பார்ப்போரை தன் அழகால் காமம் உண்டாக செய்து, மயக்கி கொல்லும் தன்மை உடைய பெண் படிமத்தை உருவாக்கியதால் இதற்கு “கொல்லிப்பாவை’ என்ற பெயர் அமைந்தது.
இந்த கொல்லிமலை சேர வேந்தர்களால் ஆளப்பெற்ற பெருமையும், பழமையும் கொண்டதாகும். சேர மன்னர்களில் வள்ளலாக விளங்கியவன் வல்வில் ஓரி. ஒரே அம்பில் காட்டு யானை, புலி, புள்ளிமான், காட்டுப்பன்றி, உடும்பு போன்றவற்றை வீழ்த்திய வலிமை பெற்ற இவன், ஆட்சிபுரிந்த கொல்லிமலையின் ஒரு பகுதிக்கு அறப்பள்ளி என்று பெயர்.
இந்த அறப்பள்ளியில் ஈஸ்வரர் எழுந்தருளியதால் அங்கு அறப்பளீஸ்வரர் கோயில் தோன்றியது. இதனால் இங்கு வல்வில் ஓரிக்கு சிலை எழுப்பப்பட்டுள்ளது.

“கொல்லி குளிர் அறைப்பள்ளி’ என்றும், “கள்ளால் கமழ் கொல்லி அறைப்பள்ளி’ என்றும் திருநாவுக்கரசர் இந்த கோயிலை தனது பாடல்களில் குறிப்பிட்டுள்ளார். திருஞான சம்பந்தர் தனது திருத்தல கோவையில் அறைப்பள்ளியை போற்றியுள்ளார்.
கோயிலின் அருகில் பஞ்சநதியில் மீன்களுக்கு பக்தர்கள் உணவு பொருட்களை வழங்கியும், மீனை பிடித்து மூக்கு குத்தியும் மகிழ்வது வழக்கம். ஒரு சமயம், பக்தர் ஒருவர் அறியாமையால் மீனைப்பிடித்து அறுத்து சமைக்க ஆரம்பித்தார். மீன் குழம்பு கொதிக்க ஆரம்பித்தது. அப்போது கொதிக்கும் குழம்பில் இருந்து மீன்கள் தாவிக்குதித்து ஓட ஆரம்பித்தன. எனவே, இந்த கோயில் ஈஸ்வரனுக்கு, “”அறுத்த மீனை பொருத்தி உயிர்ப்பித்த அறப்பளீஸ்வர்” என்ற பெயர் வழங்கலானது.
இத்தனை சிறப்பு மிக்க அறப்பளீஸ்வரர் கோயில் கொல்லிமலையின் வளப்பூர் நாடு என்னும் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் அறப்பளீஸ்வரர், தாயம்மை எனும் அறம் வளர்த்த நாயகியுடன் எழுந்தருளியுள்ளார். இவர்களுடன் வினை தீர்க்கும் விநாயகரும், முருகனும் சன்னதி கொண்டுள்ளனர். ஒரே இடத்தில் நின்று ஒரே நேரத்தில் அறப்பளீஸ்வரர், தாயம்மை, விநாயகர், முருகன் ஆகிய நான்கு தெய்வங்களையும் ஒரு சேர தரிசித்து மகிழும் அரிய அமைப்பு இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.
தஞ்சை பெரிய கோயிலை தந்த, ராஜராஜசோழனின் பெரிய பாட்டியும், சிவஞான கண்டராதித்த சோழ தேவரின் மனைவியுமாகிய மாதேவி, இந்த கோயிலுக்கு வந்து தரிசித்தும், விலையுயர்ந்த அணிகலன்களை அணிவித்தும் சென்றுள்ளது போன்ற ஏராளமான கல்வெட்டுக்கள் கோயிலில் உள்ளன.
இந்த கோயிலுக்கு சென்று வணங்கி, அருவியில் குளித்து உடலும் உள்ளமும் சிலிர்க்க இறைவனின் அருளையும், இயற்கையின் வனப்பையும் ஒருங்கே அனுபவிக்கலாம்.
கோயிலின் வடபுறத்தில் வற்றாத ஐந்து ஜீவநதிகள் ஒன்றாக கலந்து வந்து 150 அடி உயரத்தில் இருந்து பூத்தூவலாய் விழுகின்றன. கொல்லிமலையின் ஆயிரமாயிரம் அபூர்வ மருத்துவ குணங்களை எல்லாம் அள்ளி வந்து கொட்டும் நீர் அருவியாகி பின் ஆறாக ஓடுகிறது. இந்த ஆற்றில் ஏராளமான மீன்கள் உள்ளன.

அறப்பளீஸ்வரர் மீன் வடிவில் இருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். இதனால் கோயிலுக்கு செல்வதற்கு முன்னரே பக்தர்கள் ஆற்றில் உள்ள மீன்களுக்கு சாதம், பலவகை தின்பண்டங்களை அளித்து வழிபாடு செய்கின்றனர். அதன்பின்பே அவர்கள் கோயிலுக்கு சென்று வணங்குகின்றனர்.
மழையில்லாத காலங்களிலும் ஆற்றில் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும். ஆடிமாதம் 18ம் பெருக்கு இந்த கோயிலின் விசேஷமாகும். ஆண்டு தோறும் ஆடி 17, 18, 19 ஆகிய மூன்று நாட்களுக்கு இந்த விழா சிறப்பாக நடந்து வருகிறது.
பக்தர்களோடு பழங்குடியின மக்களும், தங்களின் பாரம்பரிய சிறப்புடன் விழாவை கொண்டாடுகின்றனர். அவர்கள் ஆற்றில் உள்ள பெரிய மீன்களை பிடித்து அதற்கு மூக்குத்தி அணிவித்து வழிபட்டு பின்னர் அந்த மீனை மீண்டும் ஆற்றில் விடுகின்றனர். இந்த புனித தன்மை பெற்ற ஆறு, கொல்லிமலையில் இருந்து இறங்கி, துறையூர், முசிறி வழியாக சென்று காவிரியில் ஐக்கியமாகிறது.



‘திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது பழமொழி. மாணிக்கவாசகரின் மணிமொழிகள் திருவாசகத்தின் தேன் துளிகள். விண்ணோரும், மண்ணோரும், தென்னாட்டவரும், இந்நாட்டவரும், வெளிநாட்டவரும் எப்படி இவ்வெளிய நடையில், அழகு தமிழில் திருவாசகத்தைப் படைத்தார் என எண்ணி எண்ணி மனமுருகி, வாய்பிளந்த வண்ணம் இருக்கின்றனர்.
பேரருட்பெரியவர்
சைவத்திருமுறைகள் பன்னிரண்டு. அதில் திருவாசகம் எட்டாம் திருமுறையாகும். சிவனடியார்களில் நாயன்மார்கள் 63 பேர். சமயக்குரவர் நால்வர்-அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் ஆவர். திருவாசகம் செந்தமிழுக்கு அன்பு மறையாகவும், உயிர்ப்பிணிக்கு மருந்தாகவும் உள்ளது. அப்பர் சரியைக்கும், சம்பந்தர் கிரியைக்கும், சுந்தரர் யோகத்திற்கும், மாணிக்கவாசகர் ஞானத்திற்கும் உரியவராக எண்ணப்படுவர்.
‘தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’
மாணிக்கவாசகர் மதுரைக்காரர். பெயர் வாதவூரர். மாணிக்கவாசகர் ஏறத்தாழ 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர். இவர் ஐப்பசி விசாகத்தில் பிறந்தாரென கீழ்க்கண்ட செய்யுள் மூலம் தெரியவருகிறது.
சித்திரையில் ஆதிரையில் திருஞானசம்பந்தர்
பக்திமிகும் அப்பர்பிரான் பங்குனி ரோகிணி
வித்துரிய ஐப்பசி விசாகத்தில் வாசகனார்
உத்திரத்தில் ஆவணியில் உதித்தார் நம்சுந்தரரே.
ஆதி சங்கரரைப் போல 32 ஆண்டுகளே வாழ்ந்தார் மாணிக்கவாசகர்.
அப்பருக்கெண் பத்தொன் றருள்வாத வூரர்க்குச்
செப்பிய நாலெட்டிற் றெய்வீகம்-இப்புவியிற்
சுந்தரர்க்கு மூவாறு தொன்ஞான சம்பந்தர்க்
கந்தம் பதினா றறி. – (மாணிக்கவாசகர் அகவல்)
அப்பருக்கு 81, வாதவூரர்க்கு 32, சுந்தரருக்கு 18, ஞான சம்பந்தருக்கு 16 வயதில் முக்தி.
வைகைகரையில் திருவாதவூரில் அமாத்தியர் எனும் அந்தணர் மரபில் சம்புபாதசிருதர், சிவஞானவதிக்குப் புதல்வராகத் தோன்றியவர். மன்னன் அரிமர்த்தன பாண்டியனின் முதல் அமைச்சர். தென்னவன் பிரமராயர் என்ற பட்டம் பெற்றவர்.
சோழநாட்டுக் கடற்கரையில் குதிரைகள் வந்துள்ள செய்தி கேட்ட மன்னன், வாதவூரரிடம் பணம் கொடுத்து வாங்கி வரச்சொன்னான். வாதவூரர் வழியில் திருப்பெருந்துறையில் தங்கினார். சோலை ஒன்றில் சிவாகமங்கள், வேதங்கள் ஒலிப்பதைக் கேட்ட வாதவூரர் அங்கே சென்று, சிவனே குருநாதர் தோற்றத்தில் மரத்தடியில் வீற்றிருக்க, கீழே அடியார்கள் கூடியிருக்கும் காட்சியைக் கண்டு, பசுவைத் தேடிய கன்று போல் விரைந்து சென்று காலடியில் வீழ்ந்து வணங்கி, அருள் தர வேண்டினார்.
”அறை கூவி ஆட்கொண்டருளி
மறையோர் கோலம் காட்டி அருளலும்
உளையா அன்பென்பு உருக ஓலமிட்டு” என்பார் மாணிக்கவாசகர்.
விண்ணவர் தேவர் மற்றவரிருக்க, குதிரை வாங்க வந்த வாதவூரரைத் திருப்பெருந்துறையில் சிவபெருமான் குருவாய்த் தோன்றி குருந்த மரத்தினடியில் அமர்ந்து தடுத்தாட்கொண்டு, தன் நீள் கழல்களைக் காட்டி ஸ்பர்ச, நயன, மந்திர தீட்சைகளை அளித்து மறைந்தார். வாதவூரரரை இறைவன் ‘மாணிக்கவாசக’ என அன்புடன் அழைத்தார்.
ஆண்டவனால் ஆட்கொள்ளப்பட்ட, வாதவூரர், பாடிய முதல் அடி
“நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க” .
அவ்விடத்தில், மதுரை மன்னன் குதிரை வாங்கக் கொடுத்த பணத்தில் இறைவனுக்கு ஆலயத்தைக் கட்டினார். பணத்தைத் திருப்பணிகளுக்கும், சிவனடியார்களுக்கும், மனத்தை சிவ வழிபாட்டிலும் கொடுத்த செய்தி கேட்ட மன்னன், மாணிக்கவாசகரைத் திரும்பி வருமாறு பணித்தான். மாணிக்கவாசகர் சிவன் கொடுத்த மதிப்பில்லா மாணிக்கமொன்றை அரசனிடம் அளித்து, “ஆவணித் திங்கள் மூல நாளில் குதிரைகள் வரும்” என்றார்.
பின்னர் அது பொய்யென்றறிந்த மன்னன், அவரைச் சிறையிலடைத்தான். சிவபெருமான் குதிரை வணிகனாகச் சென்று, நரிகளைப் பரிகளாக்கி அரசனிடம் கொடுத்தார். அவை, இரவில் மீண்டும் நரிகளாகி, மற்ற குதிரைகளையும் கடித்தன. இதனால் கோபம் கொண்ட மன்னன், மாணிக்கவாசகரை சுடுமணலில் கல்லேற்றி நிறுத்தினான்.
ஆண்டவன் வாங்கிய பிரம்படி
இதையறிந்த இறைவன் வைகையைப் பெருக்கி, மதுரையை வெள்ளத்தில் அமிழ்த்தி அச்சுறுத்த, அரசன் கரையை அடைக்க மக்களை ஏவினான். சிவபெருமான் கூலியாளாக, வந்தி எனும் பிட்டு வாணிச்சிக்கு உதவ வந்து, பிட்டை வாங்கிக் கொண்டு, கரையை அடைக்காமல், உறங்கியதால் அரசனிடம் பிரம்படி பட்டார். அடித்த அடி, அண்ட சராசரங்கள் மற்றும் அனைத்து உயிர்களின் மீதும் பட்டது. அடியாருக்காக அடி வாங்கிய இறைவன் வெள்ளத்தைக் குறைத்து மாணிக்கவாசகரின் பெருமையை உணர்த்தி, மறைந்தருளினார்.
உண்மையை உணர்ந்த மன்னனிடம் விடைபெற்ற அடிகள், மதுரையிலிருந்து புறப்பட்டு, பல திருத்தலங்களைத் தரிசித்து, மனம் கசிய திருப்பதிகங்கள் பல பாடினார். திருவாசகத்தில் 51 பகுதிகள் உள்ளன. இவற்றுள் 20 பகுதிகள், திருப்பெருந்துறையில் பாடப் பட்டன. இலங்கையிலிருந்து வந்த புத்தர்களை வாதில் வென்று, இலங்கை மன்னனின் ஊமை மகளைப் பேசச் செய்தார். அவள் வாயிலாகப் புத்தன் கேள்விகளுக்குப் பதில் சொல்லவைத்தார்.
ஆன்மிக வரலாற்றுச் சிறப்புகள்
* இறைவன் மனிதனுக்குச் சொன்னது ‘பகவத்கீதை’ – பகவான் கிருஷ்ணன் அருச்சுனனுக்கு அருளியது.
* மனிதன் இறைவனுக்குச் சொன்னது ’திருவாசகம்’ – மாணிக்கவாசகரிடம் சிவபெருமான் வேண்டி எழுதியது.
* மனிதன் மனிதனுக்குச் சொன்னது – திருக்குறள் – திருவள்ளுவர் படைத்தது.
இத்தருணத்தில் வேழமுகத்தோன் விநாயகப்பெருமான், தன்னுடைய தந்தத்தை உடைத்து வேத வியாசருக்காக, மகாபாரதத்தை எழுதியதையும் நினைவு கொள்க.
கைச்சாத்து
திருவாசகப் பாடல்கள் அதுவரை ஏட்டில் எழுதப்படாமலிருந்தன. திருவாசகத்தின் தேனினுமினிய தீந்தமிப் பாக்களைக் கேட்டு சொக்கிய மதுரைக் கடவுள் சொக்கநாதர், இப்புண்ணிய பூமியில் அந்தணனாய் உருக்கொண்டு மணிவாசகரைக்கண்டு, பாடல்களை எழுதிக்கொள்ள வேண்டினார். மாணிக்கவாசகர் இசைந்தருள, அட்சர லட்சம் பெறும் ஒவ்வொரு பாக்களையும் தம் அருள்புரியும் திருக்கரங்களால் ஓலைச்சுவடியில் எழுதினார். பாவை பாடிய வாயால் கோவை பாடுமாறு மீண்டும் இறைவன் வேண்ட, அவரும் பாடினார். இறைவன் விடைபெற்று, ’மாணிக்கவாசகர் சொற்படி அழகிய சிற்றம்பலவன் எழுதியது’ எனக் கையொப்பமிட்டு, ஓலைச்சுவடிகளைத் தில்லைப் பொன்னம்பலத்தின் கருவறையில் பஞ்சாட்சரப்படியில் வைத்தார். மறுநாள் அடியார்கள் ஏட்டைக்கண்டு மாணிக்கவாசகரை அழைத்து பொருள் விளக்க வேண்ட, ”அம்பலவாணரே இதன் பொருள்” என்றருளினார். இறைவன் அருட்பேரொளியாகத் தோன்றி, அத்தாட்சி அளித்து மாணிக்கவாசகரைத் தம்மோடு சோதியில் இணைத்துக்கொண்டார். அன்று ஆனி மாமக நன்னாள்.
எவ்வுலகிலும், எக்காலத்திலும், எவருக்கும் இறைவன், தில்லைக்கூத்தன், இதுவரை கைச்சாத்து அளித்ததில்லை. சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நிற்கும் திருவாசகத்தைக் கறந்த பால் கன்னலொடு, நெய் கலந்தாற்போல நமக்களித்த மாணிக்கவாசகர் ஒருவர் மட்டுமே, தாயிற்சிறந்த இறைவனால் கைச்சாத்துடன் நற்சான்றிதழ் பெற்ற மகாத்மா.


திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோவில்
இறைவன் அமர்ந்த இடம் குருந்த மரத்தடி. குருந்த மரத்தின் இலைகள் ஒவ்வொரு கொத்திலும் மூன்று வகை இலைகளுடன் காணப்படும். அவ்விடமே, கோவிலாகியது. இறைவன் திரு உருவச்சிலைகள் இங்கு இல்லையே தவிர, இக்கோவில், சிற்பக்கலையின் உன்னத சிகரமாக இருக்கின்றது. பூத கணங்களே இக்கோவிலைக் கட்டினர் என்பர். சிற்பிகள் தங்களது பணி ஒப்பந்தங்களில் “தாரமங்கலம் தூணும், திருவலஞ்சுழி பலகணியும், ஆவுடையார் கோவில் கொடுங்கையும் நீங்கலாக” என்று எழுதுவர் எனக் கேள்வி. கோவில் கணக்குகளில், ஆளுடையார் கோவில் என்று காணப்படுகின்றது. இலக்கியங்களில், அநாதி மூர்த்தித் தலம், சதுர்வேதபுரம், யோகபீடபுரம் என்றும், கல்வெட்டுகளில் சதுர்வேதமங்கலம் என்றும், திருவாசகத்தில், சிவபுரம் என்றும் வழங்கப் பெற்றுள்ளது. தற்போது கோவிலின் பெயராலேயே, ஊரும் அழைக்கப்பட்டுவருகிறது.
கோவிலின் சிறப்பு
தலம்: திருப்பெருந்துறை
மூர்த்திகள்: ஆத்மநாதர், யோகாம்பிகை
தீர்த்தம்: ஒன்பது- சிவ தீர்த்தம், அக்கினி தீர்த்தம், தேவ தீர்த்தம், முனிவர் தீர்த்தம், அசுர தீர்த்தம், வாயு தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், நாராயண தீர்த்தம், பிரம தீர்த்தம்
புனித மரம்: குருந்த மரம்
கோவிலின் மூலவர் ஆத்மநாதர் ஸ்வாமி ஆவார். சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. சிவபெருமானுக்கு ஆவுடையாரும் (சக்தி பீடப்பகுதி) எதிரில் ஒரு மேடையும் (அமுத மண்டபம்) மட்டுமே உள்ளன. ஆவுடையாருக்குப் பின் சுவரில் 27 நட்சத்திரத் தீபங்களும், அதற்கு மேல் சூரிய, சந்திர, அக்கினி தீபங்களும் ஒளிர்கின்றன. அம்மன் யோகாம்பிகை சந்நிதியில் யோக பீடமும், அதன் மேல் அம்மன் பாதங்களும் மட்டும் உள்ளன. அதுவும் பலகணி வழியே மனத்தை ஒருமுகப்படுத்தினால் மட்டும் தரிசிக்க முடியும். மாணிக்கவாசகருக்கு தனிச் சந்நிதி இருக்கிறது. கோவிலில் கொடிமரம், நந்திக்கடவுள், சண்டேசர் ஆலயம் கிடையாது. இங்கே நடராஜர், விநாயகர், முருகர் தவிர பரிவார மூர்த்திகள் இல்லை. தீபாராதனை கருவறையை விட்டு, வெளியே வராது. புழுங்கல் சோறு, கீரை, பாகற்காய் ஆகியவற்றின் ஆவியே நிவேதனம். அடியார் மாணிக்கவாசகருக்காக மட்டும், வருடந்தோறும் ஆனித்திருமஞ்சனத் திருவிழா நடக்கிறது.
ஏனைய கோவில்கள் சரியை, கிரியை வழிபாட்டிற்கும், இக்கோவில் மட்டும் யோக, ஞான மார்க்க வழிபாட்டிற்கும் உரியதாக உள்ளது. அதனால் இக்கோவில் அமைப்பு மற்ற கோவில்களிலிருந்து பெரிதும் மாறுபட்டுள்ளது. மூலாதாரம் முதலாக ஆறு ஆதாரங்களின் வடிவாகவும், சிவனை அரூபமாகவும் நிர்மாணித்து, யோகிகளும், ஞானிகளும் வழிபடும் வகையில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது என்பர்.
பஞ்சாட்சர மண்டபம்
மூன்றாம் பிராகாரத்தில், இரண்டாம் கோபுர வாசலை ஒட்டி, பஞ்சாட்சர மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தின் மேல் தளத்தில் மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை எனும் ஆறு அத்துவாக்கள் கட்டங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
கற்சிலை ஓவியங்கள்
சிற்ப வேலைகளைப் பற்றிச் சொல்லி மாளாது. நேரில் கண்டால் பிரமிப்பு அடங்காது. வல்லப கணபதி, உக்கிர நரசிம்மர், பத்திரகாளி, ஊர்த்துவ தாண்டவர், பிட்சாடனர், வில் பிடித்த முருகன், ரிஷபாரூடர், சங்கரநாராயணர், குதிரைச்சாமி, குறவன், குறத்தி, வீரபத்திரர்கள், குதிரைக்காரர்கள், நடன மங்கைகள், விலங்குகள், உயிரோட்டத்துடன் ரத்த நாளங்கள் தெரிய மிளிர்கின்றன. தவிர டுண்டி விநாயகர், உடும்பும் குரங்கும், இரண்டே தூண்களில் ஓராயிரம் கால்கள், 1008 சிவாலய இறைவன், இறைவியின் உருவங்கள், பல நாட்டுக் குதிரைகள், நடனக்கலை முத்திரைகள், சப்தஸ்வரக் கற்தூண்கள், போன்ற அற்புதங்கள் மற்றும் நட்சத்திர மண்டலம், பச்சிலை ஓவியங்கள், கூரையிலிருந்து தொங்கும் கற்சங்கிலிகள் ஆகியன நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. மேற்கூரையான கொடுங்கை மிகச்சன்னமாக இழைக்கப்படுள்ளது. மரச்சட்டங்களில் குமிழ் ஆணி அடித்தது போல நுட்பமான வேலைகள் கல்லில் அடிக்கப்பட்டுள்ளன. அதில் நிஜக் கம்பிகள் போன்ற அமைப்பு உள்ளது. இதை நம்பாத ஒரு ஆங்கிலேயன் துப்பாக்கியால் சுட்டதால் ஏற்பட்ட ஓர் ஓட்டையும் கொடுங்கையில் உள்ளது. மொத்தத்தில் சிற்ப வேலைப்பாடுகள், கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி மிக மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன.
இக்கோவில், திருவாவடுதுறை ஆதீனத்தால் சிறப்பாகப் பராமரிக்கப்படுகிறது. புதுக்கோட்டையிலிருந்து, 45 கி.மீ தொலைவில் உள்ளது. அறந்தாங்கியிலிருந்து, 14 கி.மீ தூரம்.
மாணிக்கவாசகர் தீந்தமிழைத் தேனில் தோய்த்தெடுத்து, பக்தியால் உருக்கி, அன்பினால் வார்த்து, எளிய நடையெனும் உளியால் பதமுடன் பக்குவமாய்ச் செதுக்கி, என்றென்றென்றும் நிலைத்திருக்கும் சிலைபோல் திருவாசகத்தைப் படைத்தார். ஆவுடையார் கோவிலைக் கட்டிய சிற்பிகளோ, தமது கலைத்திறமையால் இக்கோவிலைக் கட்டிச் சிலைகளை உருவாக்கிக் காலத்தால் அழியாத ஒரு பெரும் காவியமாகப் படைத்தார்கள்.
நூலின் மகிமை
மற்றெந்த நூலையும் படித்து, சிந்தித்து அவ்வாசிரியரின் மனத்தைப் படம் பிடித்து ஒரு கட்டுரை எழுதிவிடலாம். திருவாசகத்தை மட்டும் படித்துக் கொண்டே இருக்கத்தான் மனம் விழைகிறது. திருவாசகத்தைப் படித்தலும் கேட்டலும் எப்போதுமே ஒரு இனிய அனுபவமாக இருந்துவருகிறது. திருவாசகத்தைப் பற்றி ஆழ்ந்து அனுபவித்து எழுதினால் பல புத்தகங்களாக நிரம்பிவிடும். பானை சோற்றுக்கு ஒரு சோறுதான் இக்கட்டுரை.
“வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே” -
-வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளின் ஆளுடைய அடிகள் அருள்மாலை
மாணிக்கவாசகரின் உயர்ந்த பக்குவம்
மாணிக்கவாசகர் எவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்தாலும், தன்னை மிகவும் தாழ்த்திக் கொண்டார். பணிவு, தன்னடக்கம், எளிமை ஆகியவற்றின் மறு உருவமாக இருந்தார். தன்னை நாயினும் கீழாகக் காட்டிக் கொண்டார்.
உதாரணங்கள்:
‘நாயினேனை நலமலி தில்லையுட்’
‘நாய்ச்சிவிகை ஏற்றினார்ப் போல’
“பிழைப்பு வாய்ப்பொன்று அறியா நாயேன்
குழைத்தசொல் மாலை கொண்டருள் போற்றி”
மேலும் ஒரு சாதாரண மனிதனுக்குரிய ஆசாபாசங்களைப் வெளிக்காட்டி, பசி, தூக்கம், பெண் மயக்கம், ஆகியவற்றிலிருந்து தன்னை எப்படி இறைவன் காத்து, அருளினார் என்பதையும், மாயையிலிருந்து தன்னை விடுவிக்கும் படியும் மனமுருகி வேண்டிக் கொண்டார்.
“நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து நானடுவே”
“அரவன் ஆண்டுதன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டோமே.”
“மண்ணி லேபிறந்(து) இறந்துமண் ஆவதற்(கு)
ஒருப்படு கின்றேனை
அண்ணல் ஆண்டுதன் அடியரில் கூட்டிய
அதிசயம் கண்டாமே”
அதேபோல், மறுபிறவியைக் கொடுத்து விடாதே எனவும் மறவாமல் கேட்டுக்கொண்டார். ஞானத்தைக் கொடுக்கும்படி கெஞ்சினார்.
கற்பனைக்கெட்டா வர்ணனை வளம் பெற்றவர் மாணிக்கவாசகர். இறைவனின் கருணையை வாழ்த்தும் அவருடைய பிரபலமான பாடல்:
“வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே”
பொதுவாக, கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பர். மாணிக்கவாசகர், அதற்கு மாறாக, ஞானம் கிடைத்தவுடன் அப்பேரின்பத்தை அனைவருடனும் பகிர்ந்து கொண்டார்.
“அருளதறிய தறியேன் பருகியும் ஆரேன்
விழுங்கியும் ஒல்ல கில்லேன்
செழுந்தண் பாற்கடல் திரை புரை வித்து
உவாக்கடல் நள்ளுநீர் உள்ளகம் ததும்ப
வாக்கிறந்து அமுதம் மயிர்க்கால் தோறும்
தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊந்தழை
குரம்பை தோறும் நாயுடல் அகத்தே
குரம்பைகொண்டு இன்தேன் பாய்ந்து நிரம்பிய
அற்புத மான அமுத தாரைகள்
எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவது”
வீட்டுக்கொரு திருவாசகம் இருக்க வேண்டும். அன்பர்கள், மெய்யுருக்கும் திருவாசகத்தைப் படித்தின்புற்று மனம்கசிந்து மெய்ஞானப்பாதையில் முன்னேற தில்லைக்கூத்தன் அருள்புரிவாராக.
நன்றி -
அம்மன் தரிசனம்.

நாலு மண்டை பிரம்மனின் மகனான நாரைவாய் நாரதருக்கு ஆளுங்கட்சி மாநாட்டுக்கு சென்றபோது ரெண்டு குவார்டர் ஒத்தைக் கண்ணன் (ஓல்ட் காஸ்க்) சரக்கு கிடைத்தது ! ஒன்றை விழாப் பந்தலிலேயே பிரியாணி சகிதமாக குடித்த நாரதர் உபரியாக இருந்த சரக்கை நைசாக பட்டாப் பட்டியில் ஒளித்துக் கொண்டார் ! யார் குடியைக் கெடுக்கலாம் என்று யோசித்தவாறே மேல் லோகத்தை சுற்றி ஒரு ரவுண்ட் வந்தார் ! வைகுண்டத்தில் ஜலக் கிரீடை போரடித்து சர்ப்ப கிரீடை நடந்தேறிக் கொண்டிருந்தது. இதற்க கிடையில் புகுந்தால் நாராயணன் மெர்சிலாகி நாகப் பாம்பை தூக்கி தன் மீது ஏவிவிட்டால் என்னாவது என்று பயந்த நாரதர் முன்னும் பின்னும் மூடிக் கொண்டு அடுத்த தெருவுக்குள் நுழைந்தார் . அங்கு வீட்டில் தன் தந்தை நாலு தலையன் சரசுவை கிதார் வாசிக்கவிட்டு ஜாக்சனின் "மூன் வால்க்" நடனத்தை பயிற்சி செய்து கொண்டிருந்ததைக் கண்டு குமட்டலும் , வாந்தியும் ஏற்பட்டதால் குடும்பமே குதூகலமாய் சிரித்து கும்மாளமிட்டுக் கொண்டிருந்த கைலாசத்துக்குள் காலடி எடுத்து வைத்தார் .
 
அங்கு மானாட மயிலாட பார்ட் 9 ன் பிரமாண்டமான இறுதிப் போட்டி சிவா பெருமான் தலையில் சாரி தலைமையில் நடந்து கொண்டிருந்தது . தொடர்ந்து ஆறாவது பாட்டுக்கும் போட்டியாளர்களை ஆடவிடாமல் தானே கலா (மாஸ்டர் ) ஆடிக் கொடிருக்க சிவ பெருமான் மைக்கில் சந்தியா தாண்டவத்தையும் ஊர்த்தவ தாண்டவத்தையும் சேர்த்து ஒரு குத்து போடுமாறு கோரிக்கை வைத்துக் கொண்டிருந்தார். குஷ்பூ ஆடுவதைப் பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த முருகனும் புள்ளையாரும் கடுப்பின் உச்சத்துக்கே சென்றனர் ! ஒரு கட்டத்தில் பொறுமைஇழந்த புள்ளையார் அந்த நடனக்குழுவை ஆட்ட மேடையுடன் அலேக்காக தூக்கி பூலோகத்தில் வீசி எறிந்துவிட்டார் !

சிவ பெருமான் மூனாங்கண்ணில் பூவிழுந்து பார்வை மங்கலாகிவிட்ட படியால் , நெருப்பெல்லாம் வருவதில்லை எனவே தன் கோவத்தை அடக்கிக் கொண்டு நின்றார்.

சூழ்நிலையை உணர்ந்த நாரதர் நல்லா ஊதிவிட்டா குடும்பத்துல கும்மி கொட்டிட்டு ஓடிடலாம்னு பிளான் பண்ணினாரு !

 


சிவ பெருமான் : டேய் மாப்ள என்னடா இந்த பக்கம் ? லைட்டா மப்புல இருப்ப போல !

நாரதர் : மகா தேவா ! நீர் நாயினும் கூரிய மூக்கினர் !

சிவ பெருமான் : நான்லாம் மூடிய ஓடைக்காமலே மொத்த சரக்கையும் மூக்குல உறிஞ்சற பய ! எனக்கேவா ? ஹா ஹா ஹா

பார்வதி : யோவ் ! அந்தாளு உன்ன நாய் மாரின்னு சொல்றான் , நீ இன்னாடான்னா கெத்தா இளிச்சுகினு கீற ! த்த்த் த் த் த் தூ .......

புள்ளையார் : மே ! துப்பரதுன்னா அந்தாளு மேல மட்டும் துப்பு . இப்ப இன்னாத்துக்கு எம்மூஞ்சில சாரலடிக்கற ?

முருகன் : டேய் ! அதுக்குதாண்டா அளவா வளரணும்னு சொல்றது ! ஆனா மண்டையா ! ஊடு உம்மூஞ்சிதாண்டா நெறஞ்சு இருக்குது .

நாரதர் : சரி சரி சண்டை போடாதீர்கள் குழந்தைகளே !

முருகன் : டேய் ! இன்னாது இவனப் பாத்தா உனுக்கு கொளந்த மாரீ தெர்தா . தட்னன்னா தாராந்துருவ ! கோழிக்கண்ணா ஓடிப் போயிரு !

நாரதர் : போங்கடா ................... ளா , பாவம் புள்ளைகன்னு சரக்கு வாங்கியாந்தா என்னையே ஓட்டறீங்களா ? சரக்குமில்ல ஒரு மயிருமில்ல போங்கடான்னு,

வாசல் பக்கம் எஸ்கேப் ஆக டிரை பண்ணினாரு . ஒடனே தும்பிக்கைய நீட்டி நாரதரின் டவுசரோடு பாட்டிலைப் பிடுங்கி எடுத்தார் புள்ளையார் . டவுசர் கிழிஞ்ச கடுப்பில் நாரதர் வண்டை வண்டையாய் திட்டிவிட்டு ஓடி விட்டார் .
அதை பற்றி கவலை படாமல் புழுதில் பிரண்டு சண்டையிட்டனர் மகேசன் மகன்கள்.

பார்வதி : யோவ் ! புள்ளைங்க ரெண்டும் அடிச்சுகினு சாவுது . சும்மா உக்காந்து பீடி வழிக்கரையே உன்னையெல்லாம் கம்முனாட்டின்னு சொல்லாத வேற இன்னா சொல்றது

கடுப்பேறிய சிவன் குறுக்கே பூந்து பாட்டிலை பிடுங்கினார்

சிவ பெருமான் : டேய் ! அடங்குங்கடா ! உங்க ரெண்டு பேருக்கும் ஒரு போட்டி வெக்கப் போறேன் அதுல எவன் ஜெயிக்கறானோ அவனுக்குதான் சரக்கு ~!

முருகன் : இன்னா போட்டி நைனா !

சிவ பெருமான் : ரெண்டு பேத்துல போயி எவன் நல்ல பிகர் மடிச்சுட்டு வரானோ அவன்தான் கில்லி ! அவனுக்குதான் மில்லி !

ஒடனே பூலோகத்துக்கு கெளம்பினான் முருகன் ! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஆடிகிட்டு இருந்த குண்டு அக்காவ கூட்டியாந்தா ஜொள்ளு விட்டுக்கினே சரக்க குடுத்துருவாருன்னு கால்குலேசன் போட்டான் !

புள்ளையாருக்கு தொந்திய தூக்கிகினு எங்கயும் போக முடியல ஒடனே தும்பிச்சாங்கைய கொண்டு போயி சிவனோட கொண்டைல தடவினாரு ! மவன் எதோ பாசத்துல நெரவரான்னு கண்டுக்காத விட்டாரு சிவ பெருமான் .

ஆனா இவுரு தடவின தடவுல சிவன் கொண்டைல இருந்த கங்கை மயங்கி எறங்கி வந்து கட்டி புடிச்சு உம்மா குடுக்க ஆரமிச்சிருச்சு !

சிவ பெருமான் : டேய் ஆழ வாயா ! உங்கொப்பன் சின்ன வூடு ஒனக்கு சித்தி மாதிரி இல்ல ! அதப் போயி கரெக்ட் பண்ண பாக்கறையேடா"ன்னு சூலத்த எடுத்து புள்ளையாரு வாய்க்குள்ள சொருவிட்டாரு!
வலி பொறுக்காத புள்ளையாரு வந்த கடுப்புல சிவன சிலுக்கா மாத்தி சாபம் குடுத்துட்டாரு !

திரும்பி வந்த முருகன் சிவனைப் பாத்து ஷாக் ஆயிட்டாரு !

அப்பறம் பஞ்சாயத்து பேசி சிலுக்க நாரதருக்கு கட்டி வெச்சுட்டாங்க ! கலாக்காவ முருகன் மூனாவதா கட்டிகிட்டாரு !

புள்ளையாரு கண்ணாலமே வேணாம்னு சொல்லிட்டாரு !


கதையின் நீதி : ஓசி சரக்குக்காக உயிரையும் கொடுப்பவனே கடவுள் !  


திகம்பரர் = திக் + அம்பரம், திக்-திசை,அம்பரம்-ஆடை திகம்பரர் என்றால் ஆடை அணியாதவர் என்று பொருள்.

நான்காம் திருமரை

கொக்கரை தாளம் வீணை பாணிசெய் குழகர் போலும்
அக்கரை யணிவர் போலும் ஐந்தலை யரவர் போலும்
வக்கரை யமர்வர் போலும் மாதரை மையல் செய்யும்
நக்கரை யுருவர் போலும் நாகவீச் சரவ னாரே.

பொருள்

திருநாகேச்சுரத்துப் பெருமான் கொக்கரை, தாளம், வீணை எனும் இவற்றின் தாளத்திற்கு ஏற்பக் கூத்து நிகழ்த்தும் இளைய ராய், சங்கு மணியை இடையில் அணிபவராய், ஐந்து தலைகளை உடைய பாம்பினை ஆட்டுபவராய், திருவக்கரைத் திருத்தலத்தில் உகந்தருளியிருப்பவராய், பெண்களை மயக்கும் திகம்பரவடிவினராய் உள்ளார்.

கதை

 
திகம்பர் காலில் விழும் முனி பத்தினிகள்
 
தவம் செய்த முனிவர்கள் கடவுளைப் பற்றிய சிந்தனையில்லாமல் என்று எண்ணி வாழ்ந்தனர். இதனால் அவர்களுக்கு அகந்தை ஏற்பட்டது. இந்த முனிவர்களின் ஆணவத்தை தடுத்து நிறுத்த முயன்ற சிவபெருமான் பிச்சை ஏற்கும் பிச்சாடணார் கோலத்தில் உருவெடுத்து முனிவர்கள் வீட்டு வாசலில் வந்து நின்றார். பிச்சாடணார் உருவத்தில் வந்திருப்பது இறைவன் என்று அறியாமல் முனிவர்கள் இருந்தனர்.

முனிவர்களின் மனைவிகள் இறைவனுடைய பிச்சாடணார் கோலத்தில் மயங்கினர். தங்களை மறந்து பிச்சாடணார் பின்னால் செல்ல தொடங்கினர். இதனை கண்ட முனிவர்கள் பிச்சாடண முர்த்தியை அழிக்க அபிசார வேள்வி என்ற யாகத்தை செய்தனர். யாகத்தில் தோன்றிய புலியை இறைவன் மேல் ஏவினர். இறைவன் புலியை கொன்று புலித்தோலை ஆடையாக கட்டிக்கொண்டார்.

அதன் பிறகு முனிவர்கள் மானை ஏவினார்கள். இறைவன் அதை அடக்கி இடக்கரத்தில் ஏந்திக்கொண்டார்.

அதன் பிறகும் ஆத்திரம் கொண்ட முனிவர்கள் பாம்புகளை ஏவினர். சிவபெருமான் அவற்றை தனக்குரிய அணிகலன்களாக மாற்றி இடுப்பிலும், கழுத்திலும் அமைத்துக்கொண்டார்.
அதன் பிறகு முனிவர்கள் பூத கனங்களை ஏவினர். அவற்றை சிவபெருமான் தன்னுடைய படையில் சேர்த்துக் கொண்டார்.

இறுதியாக மிகப் பெரிய யானைகளை ஏவி விட… இறைவன் இந்த யானைகளின் தோலை உரித்து அதை தன்மீது போர்த்திக்கொண்டார்.
இதன் பிறகுதான் முனிவர்களின் ஆணவம் அடங்கியது. அவர்கள் பக்தி கண்களால் இறைவனைத் தேடினர். இறைவன் முனிவர்களுக்கு தாருகாவனேஸ்வரராக காட்சியளித்து அவர்களின் செருக்கை அடக்கினார்.

நன்றி

Surkanda Devi TempleIntroduction
Surrounded by thick deciduous forests of Uttarakhand region, the Surkanda Devi temple is quite a holy place of worship for the Hindus. It was built in the name of Indian Goddess of Power, Durga and is one of the many Shaktipeeths situated in India. This temple is built in the Tehri district of Garhwal region in Uttarakhand at an altitude of 9500 ft (about 2757 meters) above sea level close to the hill stations like Dhanaulti and Chamba. There are many more holy places and famous temples you can find during your India Tours to enjoy a lot.

 
History
As per the Hindu Mythology and various other stories, Goddess Durga was believed to be reincarnated in the form of Sati as a daughter to Daksh Prajapati, who was the son of Lord Bramha, and Prasuti. Sati wanted to marry Lord Shiva for which she worshipped him for a lot of years. Daksh, her father did not approved Shiva and never wanted to give away her daughter to Shiva in marriage. He called Shiva, a foul, wandering ascetic yogi. Once upon a time, after Shiva got married to Goddess Sati, Daksh planned a holy Yagnya for which he invited all the gods and goddesses except for his daughter Goddess Sati and his son-in-law Lord Shiva. When Goddess Sati came to know that her father had organized a yagnya she asked Lord Shiva about it and insisted on visiting the yagnya that was organized by her father. Lord Shiva, on her insistence allowed her to visit her father. But, when Sati reached at her father’s place, her father and the remaining family not just insulted Sati but also did the same for her husband Lord Shiva. Sati could not bear the insult of her husband and jumped in to the fire of holy Yagnya and died. When Lord Shiva came to know about her death through his disciples he became very angry and cut off the head of Daksh Prajapati and took the dead body of Sati with him to the Kailash. After observing the anger of Lord Shiva for Sati’s death, Lord Vishnu decided to part away the dead body of Sati from Shiva and thus cut her body part by part with the help of Sudarshan Chakra. The various body parts of Sati fell on earth and the places where they fell are, these days, well recognized as the Shaktipeeths. The temple of Surkanda Devi is one among many such temples. Actually Surkanda Devi temple is the very place where the head of Goddess Sati fell.
Location
The temple of Surkanda Devi is located at around 8 kilometers from Dhanaulti, a hill station in Tehri District of Uttarakhand and 22 kilometers from Chamba at an altitude of 9500ft or 2757 meters on the way from Chamba to Mussoorie. One can reach there by a trek of 2.5 kilometers from Kaddukhal, a small market on the road side.
Famous for
The Surkanda Devi temple is quite popular for an annual ten day long festival of Ganga Dussehra organized every year during the months of May and June. It is one amongst the major attraction of this place for thousands of people and devotees coming here.
Reaching there
The holy temple can be, most effortlessly, reached from the southwest region of Uttarakhand via Dehradun. However it is a usual trip which generally takes a whole day for tourists and devotees visiting the hill stations Mussoorie and Landour. It is situated on a hill and one is able to reach there after an almost vertical trek of 2.5 km from village Kaddukhal, on the Dhanaulti Chamba road.
Places of interest around the temple
There are a range of places of tourist interests around the temple which tourists can visit during their visit to the temple. Chief among them are Barehipani and Joranda Falls, Dashavtar Temple, Deogarh Fort, Matatila Dam and Iain temples. If your wish is to visit many more Places, then you should Golden Triangle Tours in which you can visit most renowned place of India Delhi, Agra, and Jaipur (Rajasthan).
Author Bio-
Jenny Franklin is an eminent analyst & writer for India Tours related topics. Get all possible information about North India Tours, Golden Triangle Tours and Rajasthan Tour at here only.

Lord Shiva

 Hindu God ShivaShiva is regarded as one of the most important Hindu God and one of the ones in the holy Hindu trinity that makes up Brahma, Vishnu and Shiva. Whereas, in the holy trinity, Brahma is considered to be the creator and Vishnu the preserver, Lord Shiva wears the mantle of the destroyer.
Lord Shiva was considered by the people of the Indus civilization to be a tribal God, the way before people had heard about the presence of Brahma and Vishnu. Shiva is considered to be a God that is full of uncountable amounts of energy that never deserts him and is not only infinite but also permanent.
The other word for Lord Shiva is Maheshwar and is known to live in the funeral grounds with the ashes all over his body. The way Shiva is portrayed is wearing a tiger hide with a snake twirled around his neck, and perched on a branch. Whenever, Shiva comes across any injustice or evil, then the third eye opens on his forehead and that is supposed to be the end of the evil. The most powerful of Gods, such as Kamadeva have been reduced to ashes when faced with Shiva’s fury.
The abode of Lord Shiva is the Kailash Parvat which is way in the interiors of the Himalayas. The Kailash Parvat is located in the highest of mountains that are cladding by snow most of the time and difficult to reach. Shiva’s consort is Parvati and they have two sons, Lord Ganesh and Subramanya. Shiva has another son called Lord Ayyappa, who is from his liaison with Mohini, who is actually Lord Vishnu in the form of a woman.
Although Lord Shiva lives the way in the Kailash Parvat he has several Hindus, who worship him diligently. The shivlinga is found in the Kailash Parvat and the phallic emblem that resembles creative energy that is infinite. The Shivlinga is worshiped in the form of Shiva.
Shiva has more disciples and worshippers than any other Hindu God. People also worship Shiva in the form of the supreme energy in the form of Natraj. Lord Shiva is known by several different names such as Ganagdhar, Rudra, Neelkanth, Shankar, Gaurishankar, Mahadev to name a few.
Although he is called the God of destruction in the Hindu Gods list, he is also associated with the change that comes about due to life and death. The destruction that is denoted is in the form of a positive energy that brings about change in old habits and one adopts new habits that are going to be beneficial to one in the long run. The abode of Kailash Parvat represents the embedded goodness that exists in every human being.
Shiva lives in Kailash Parvat in the Himalayas the life of an ascetic which is full of control, celibacy and discipline. At the same time, he portrays great love for his spouse who represents Shakti or universal energy. His first wife was Sati and Parvati his second wife. The Lord stands for great energy and positive characteristics. The symbols that are associated with him are the trident which is symbolic of the three faults or gunas and the snake wound around his neck shows the power that he has over the worst of things even death and the ever consuming energy that lies within him. The vehicle on which he uses at the Kailash Parvat is a white bull called the Nandi and this represents everlasting joy.
He is often enough shown seated at the Kailash Parvat with a tiger skin that symbolizes the mind. Belief goes that when Ganga was born on earth and wanted to flood the earth; Shiva caught it in his hand and avoided this gross destruction.
The staunchest of yogis and ascetics worship Shiva in India. They are found near the Kailash Parvat near the Himalayas, dressed in orange robes and with cornrows in their hair, rudrakshashas on them and ash smear on them just like Shiva.